(Reading time: 39 - 78 minutes)

 

" ஹான்  அப்படின்னா ? என்ன கேட்க வரிங்க ரகு ? "

" இல்ல நீ வீடுலேயே இருக்கியே உனக்கு எப்படி டைம் போகுது ? "

" அது ............ அது  "  ( என்ன சொல்வாள் ? வீட்டில் இல்லாத வேலைகளையும் இழுத்து போட்டு செய்வேன் என்றா ? ஸ்ரீராமின் நினைவுகளில் கண்ணீர் வடிப்பேன் என்றா ?)

அவள் பதில் சொல்ல திணறுகிறாள் என்பதை உணர்ந்தான் ரகுராம் .

" ஜானு இன்னும் எத்தனை நாள் இப்படியே இருப்பே ? "

"............................................"

" நீ பண்றது சரி தப்புன்னு நான் சொல்ல வரலை ஜானகி . அது உன்னுடைய உணர்வுகள் . அதை நான் கண்டிப்பா மதிக்கிறேன் "

" ம்ம்ம் "

" ஆனா இப்படி இருக்குறது ஸ்ரீராமுக்கு நீ தருகின்ற தண்டனை நு உனக்கு தோணலையா? "

" என் ராமுக்கு நான் என்ன தண்டனை தந்தேன் " ( என்றவளின் குரலில் கோபத்தை உணர்ந்த ரகுராம் அவள் " என் ராம் " என்று சொன்னதையும்  மனதில் குறித்து கொண்டான் . அவனுக்குள் பொறாமை வரவில்லை கனிவுதான் வந்தது .

" ஸ்ரீராம் கடைசிய என்ன சொன்னார் ? "

" என்ன ? "

" நீ  வாழனும் எனக்காக வாழனும் ... நான் உன் கூடத்தான் இருப்பேன் " என்று உணர்ச்சி பூர்வமாக சொன்னவன் , " இப்படிதானே சொன்னார் ? "

என்றான் . அன்றைய நினைவுகளில் கண் கலங்கியவளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதி காத்தாள்.

" அவர் சொன்னதின் அர்த்தம் என்ன ஜானகி ? இப்படி எதுவுமே பண்ணாம  நீ இருக்கணும்னு தான் ஆசைபட்டாரா ? நீயும் சாதிக்க வேணாமா? உன் லைப் ல வெற்றியை தேடிக்க வேணாமா ? ராமின் ஆசைக்கு உயிர் தாருற பொறுப்பு உனக்கு இல்லையா? ராமின் நினைவுகளுக்கு உயிர் கொடு ஜானு "

" இனி என்ன இருக்கு ரகு ? "

" இனிதான் எல்லாமே இருக்கு ? சரி  ஈசி ...நீ அவார்ட்ஸ் ஷோ எல்லாம் பார்ப்பியா ? "

" பார்ப்பேனே ஏன் ? "

" அதுல வெற்றி பெற்றவங்கலாம் இந்த அவார்ட் நான் இறந்து போன என்  பேரன்ட்ஸ் கு சமர்பிக்கிறேன் ..என் குருவுக்கு சமர்ப்பிக்கிறேன்னு சொல்றாங்களே ஏன்  ? செத்தவங்க திரும்பி வருவாங்கன்னா? இல்ல ... அவங்க இறந்தாலும் அவங்க உயிரோடு இருந்தப்போ நம்ம கூட செலவிட்ட நினைவுகளுக்கு நாம செலுத்துற அன்பும் மரியாதையும்தான் அது . அந்த மாதிரி நீ ஸ்ரீராமுகாக என்ன செய்ய போற ?"

" ஒரு  சின்ன அவார்ட்ஸ் ஷோ வை பார்த்து கூட இப்படிலாம் கத்துக்க முடியுமா ரகு  ? நான் இந்த அளவுக்கு யோசிச்சதே இல்லை " என்று சின்ன பிள்ளைபோல் அவள் சொல்ல

" இனி யோசி ஜானகி " என்றான் .

" ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ??? "

" சரி நான் ஹெல்ப் பண்றேன். பட்  இப்போ இல்ல... நீயே யோசி .,உனக்கு ஏதும்  தோணலைனா நான் ஐடியா தரேன் ...சரியா பாய் " என்றபடி போனை அணைத்தான்.

 ஜானகி ரகுராம் மீது நல்ல மதிப்பை எப்போதும் வைத்திருப்பவள்தான். தான் ஆண் என்ற கர்வம் எதுவும் இல்லாமல் இயல்பாக பழகும் ரகுராமை அவளுக்கு பிடிக்கும்தான். அதிலும் அனுமதி இல்லாமலே உரிமை எடுத்துகொண்டு அவளை நல்வழி படுத்த அவன் முயற்சிப்பதை அவளும் உணர்ந்துதான் இருந்தாள். தினமும் அவன் வாட்ஸ் அப்பில்  அனுப்பும் பாடல்கள் அனைத்துமே பொதுவாக சந்தோஷத்தையும், வாழ்கையில் நம்பிக்கையூட்டும் விதமாகவும்தான் இருக்கும். இதை அனைத்தும் கடந்து அவன் ஏன் இவ்வளவு அக்கறை காட்டுகிறான் என்று அவள் குழம்பியதும் உண்டு. ஆனால் அவன் வீட்டிற்கு சென்ற ஜானகிக்கு  அந்த சந்தேகம் வீண் என்று தோன்றியது. அன்பே சகளுமுமாய்  நிறைந்த  அந்த இல்லத்தில் புன்னகைக்கு பஞ்சம்  இல்லை . சந்தோஷமான  சூழ்நிலையில் வாழ்பவன் தன்னை சுற்றி இருப்பவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்று விரும்புகிறான்  என்று அவளே ஒரு  காரணம் கண்டுப்பிடித்தாள். இந்த ஒரு மாத நட்பில் ரகுராம் சொல்லிய எதையும் அவள் நிராகரித்தது இல்லை தான் . இருப்பினும் அதை ஒரு ஆயுதாமாக வைத்து கொண்டு தன்னை மீது அவனின் கட்டளையை புகுத்தாமல் " நீ யோசி ... ஏதும் தோணலைனா நான் ஹெல்ப் பண்றேன் " என்று சொன்னது அவளை வெகுவும் கவர்ந்தது. அதை விட அவன் வார்த்தைகளில் இருந்த உண்மை அவளை  சுட்டது . " something is better than nothing   " நு சொல்வாங்க . அப்படி இருக்க தான் இதுவரை எதுவுமே செய்யவில்லையே என்று கொஞ்சம் குறுகிப்போனாள்.   ரகுவின் வார்த்தைக்கு மதிப்பு தந்து  ' என்ன செய்யலாம் ' என்று யோசிக்க ஆரம்பித்தவள் கொஞ்ச நேரத்தில் பானுவின் முன் வந்து நின்றாள்.

தன் அத்தையிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தெரியாமல் குறுக்கும் நெடுக்கும் நடந்தாள் ஜானகி.

" ஜானகி "

"......................."

" ஜானகி "

".........................."

அவளிடமிருந்து பதில் வராமல் போக, கொஞ்சம் குரல் உயர்த்தி

" ஜானு என்னம்மா ? " என்றார் பானு.

" அத்தை உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும் ஆனா எப்படி ஆரம்பிக்க தெரில "

" என் கிட்ட பேசுறதுக்கு உனக்கென்ன ஜானகி தயக்கம் ? புதுசா இருக்கே ? "

" இல்ல அத்தை நீங்க என்ன சொல்விங்க தெரில "

" நீ என்ன சொன்னாலும் எனக்கு சம்மதம் தான் போதுமாடா? "

அவர் சொன்ன விதத்தில் நம்பிக்கை பெற்றவளாய்,

" அத்தை நான் ஏதாவது  வேலைக்கு போகட்டுமா? "

" ஹான்ன்ன் என்னடா? "

" அர்ஜுன் மாமா மாதிரி நானும் வேலைக்கு போகவா? "

" என்னம்மா திடீர்னு இப்படி சொல்லுறே? ஏன் ? என்னாச்சு ? யாரு உன்னை என்ன சொன்னது? "

" யாரும் ஏதும் தப்பா சொல்லல அத்தை ! " என்றவளின் குரலில் தொனித்த அவசரம் பானுவிற்கு சிரிப்பை மூட்டியது.

" அப்போ யாரோ என்னமோ சொல்லிருக்காங்க . யாருன்னு சொல்லு இன்னைக்கு ரெண்டுல ஒன்னு பார்த்திடலாம் " என்றபடி அவர் செல்போனை எடுக்க,

உடனே அவர் அருகில் வந்து போனை வாங்கி கொண்டு ஜானு தனக்கே உரிய குழந்தைத்தனமான பாணியில்  பேச ஆரம்பித்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.