" அத்தை. சொன்னவங்க என் மேல உள்ள அக்கறையில தான் சொன்னங்க. நியாயப்படி இதை நீங்களோ இல்ல அர்ஜுன் மாமாவோ சொல்லிருக்கலாம் " என்றவள் அவரை ஒரு கணம் பார்த்து விட்டு தொடர்ந்தாள்.
" எனக்கும் தெரியும் அத்தை என் மனசு கஷ்டப்பட்ட கூடாதுன்னு நீங்க ரெண்டு பெரும் எந்த விஷயத்துலயும் என்னை கட்டாயப்படுத்தல! இப்போ கூட என்னை யாரோ கஷ்டபடுத்திருபாங்களோன்னு தான் நீங்க கவலை படுறிங்க... ஆனா ஆனா நானும் இப்பிட் இருக்குறது தப்புதானே அத்தை. யோசிச்சு பார்த்தா அர்ஜுன் மாமா, சுபி, ரகு, கிருஷ்ணா சார் இப்படி எல்லாருமே தங்களுக்குள்ள ஒரு குறிக்கோள் வெச்சுகிட்டு அதுக்காக முயற்சி செய்றாங்க. ஆனா நான்தான் இப்படி வெட்டியா இருக்கேன் "
" ஏன் இப்படிலாம் பேசற ஜானு ? "
" பட் அதை நிஜம் இல்லன்னு சொல்ல முடியாதே அத்தை "
" சரிம்மா என்ன செய்யலாம்னு இருக்கே ? "
" அதை யோசிக்கிறேன் அத்தை.. ஏதும் கோர்ஸ் எடுத்து படிக்கவா ? இல்ல வேலை பார்க்கவா? "
" வேலை பார்குறதுன்னா நாம் ஆர்ஜுன் கூட ஆபீஸ் போயேன் " ( ஆஹா , இப்படி ஒரு வார்த்தையை பானு சொல்லுவாங்க நு நீங்க யோசிக்கலையே ரகு ? என்ன பண்ண போறீங்க பாஸ் ? )
" தேங்க்ஸ் அத்தை நான் என்ன பண்ணலாம்னு யோசிச்சு சொல்றேன் " என்றாள் ஜானகி. அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தவளுக்கு,
" சரி நான் ஹெல்ப் பண்றேன். பட் இப்போ இல்ல... நீயே யோசி .,உனக்கு ஏதும் தோணலைனா நான் ஐடியா தரேன் ...சரியா பாய் " என்று சொன்ன ரகுவின் வார்த்தைகளே ஞாபகம் வந்தது. ( நமக்காக ரகு இவ்வளோ யோசிக்கிறாங்களே. ஏன் ? திடீர்னு இதை பத்தி பேசுறாங்கன்னா ஒரு வேளை ஏற்கனவே எதாவது நமக்குன்னு முடிவு பண்ணிருப்பாங்களோ? அப்படின்னா கேள்வி கேட்டவங்களே அதற்கு பதில் சொல்லட்டுமே என்று தனக்குள்ளேயே பேசி கொண்டாள் ஜானகி . ஆஹா ரகு சார் ஜானகி உஷார் ஆகுறதுக்கு முன்னாடி உங்க மனசை சொல்றது பெட்டர் . )
தந்தையுடன் பேசி முடித்த ரகு உடனே ஜானகிக்கு போன் பண்ணினான்.
" ஜானு "
" சொல்லுங்க ரகு "
" இன்னைக்கு வீட்டுல என்ன சமையல் ?"
" ஹ்ம்ம் இனிதான் முடிவு பண்ணனும் "
" சரி அப்போ நாம லஞ்ச் கு வெளில போகலாம் "
" அப்போ அத்தை ? "
" மக்கு அவங்களையும் கூட்டிட்டு போலாம் "
" சரி நான் அத்தைகிட்ட பேசுறேன் ..பட் என்ன திடீர்னு ரகு ? இதுக்கு நீங்க நாம் வீட்டுல சாப்பிடலாம் ல . "
" சரி ஓகே நான் மதியம் வந்து பிக் அப் பண்ணிக்கிறேன் ரெடியா இருங்க " என்றபடி போனை துண்டித்தான் ரகுராம்.
( " சரியான பிடிவாதக்காரர் இந்த ரகு . சொன்னா சொன்னதுதான். எல்லா நேரமும் ப்ரண்ட்லியா இருக்கார் திடீர் திடீர்னு கறார் பேர்வழியா மாறிடுறாரு... பாவம் இவரை கட்டிக்க போற பொண்ணு " என்று சிரித்து கொண்டாள் ஜானகி ............... ஹா ஹா கவலை வேணாம் ஜானகி ..அந்த பாவபட்ட பொண்ணு சாட்சாத் நீங்களே தான் )
மதிய உணவிற்கு ரகுராம் வெளியே அழைத்த செய்தியை பானுவிடம் சொன்னாள் ஜானகி. பெரிதாய் ஏதும் தடைவிதிக்காத பானு, கொஞ்ச நேரம் கழித்து , தலை வலிக்கிறது என்று ஜானகியை மட்டும் சென்று வர சொன்னாள். முதலில் தயங்கிய ஜானகி, ரகுராமின் பிடிவாத குணம் அறிந்து அவனுக்காக காத்திருந்தாள்.
காரில் ,
" ஆன்ட்டி வரலியா ? "
" இல்ல ரகு. தலை வலிக்கிதுன்னு படுத்துட்டாங்க"
" ஐயோ அப்போ சாப்பாடு ? "
" நான் சமைச்சிடேனே ? "
" அப்பறம் ஏன் முன்னாடியே சொல்லலே ? "
" உங்களுக்கு தான் லாஸ்ட் மினிட் கேன்சல் பண்ண பிடிக்காதே அதான் "
ஏதோ ஒரு வகையில் அந்த பதில் அவனை கவர்ந்தது . பதில் மட்டுமா? ஜானகியின் தோற்றமும் தான். இளம் பச்சை நிற புடவையில், விழிகளை அகல விரித்து அவள் பேசும் அழகு அவன் காதல் மனதை இன்னும் மயக்கியது . ( இருந்தாலும் இப்போதைக்கு ஒன்னும் பண்ண முடியாதே என்று பெருமூச்சு விட்டவன் " என் எண்ணம் புரிந்து கொண்டவளே, என் உள்ளதையும் என்று புரிந்து கொள்வாய் ? " என மானசீகமாக அவளை கேள்வி கேட்டான். )
அந்த அமைதியான சூழ்நிலை மாற்ற அவன் வானொலியை உயிர்பித்தான்.
சொல்லத்தான் நினைக்கிறேன் ,
சொல்லாமல் தவிக்கிறேன் ,
காதல் சுகமானது ,
வாசப்படி ஓரமாய் ,
வந்து வந்து பார்க்கும் ,
தேடல் சுகமானது ,
அந்தி வெயில் கொலைத்து ,
செய்த மருதாணி போல ,
வெட்கங்கள் வர வைக்கிறாய் ,
வெளியே சிரித்து ,
நான் விளையாடினாலும் ,
தனியே அழ வைக்கிறாய் ,
இந்த ஜீவன் இன்னும் கூட ,
ஏன் உயிர் தாங்குது ?
காதல் சுகமானது ,
கைகளில் லேசாக தாளம்போட்டபடி அந்த பாடலை முணுமுணுத்தாள் ஜானகி.
" இந்த பாட்டு உனக்கு ரொம்ப பிடிக்குமோ? "
" ம்ம்ம்ம் ஆமா.... காலேஜ் படிக்கும்போது விரும்பி கேட்பேன் " என்றவளின் குரல் தானாகவே கம்மியது.
" ஈசி ஜானு . பழைய நினைவுகள் ல சந்தோஷமான நினைவுகளும் இருக்கும்ல அதை நெனச்சு சந்தோஷப்படு . அதை ஷேர் பண்ணு .."
" ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம் சாரி ரகு "
" அய்யே உடனே மூஞ்சி ஏன் சுண்டைக்காய் மாதிரி மாறிடுது .........." என்றவன் கொஞ்சம் இடைவெளி விட்டு