(Reading time: 26 - 51 minutes)

04. சிறகுகள் - பாலா

ன்று வகுப்பு முடிந்து ஆபிஸ் ரூமினுள் நுழையும் போதே சுரேஷ் கௌஷிக்கிடம் ஏதோ கத்திக் கொண்டிருந்தது கேட்டது தேன்மொழிக்கு.

இவள் நுழைந்ததை கவனித்தவன் கோபமாக முகத்தை திருப்பிக் கொண்டு போய் விட்டான்.

“என்ன ப்ராப்ளம் சார்” என்று கௌஷிக்கிடம் வினவினாள் தேன்மொழி.

Siragugal

சிறிது தயங்கி பின்பு “இல்லை எல்லா ஸ்டுடென்ட்ஸையும் ஒவ்வொரு ஸ்டாப்க்குன்னு அலகேட் செஞ்சி பேட்ச் பிரிப்போம். அடிக்கடி அவங்களுக்குள்ளே மீட்டிங்க்ஸ் எல்லாம் நடக்கும், அவங்களுக்கு காமனா இருக்கற ப்ராப்ளம்ஸ், டவுட்ஸ் எல்லாம் கிளியர் செஞ்சிக்கரதுக்கு அண்ட் தென் அவங்களை மோட்டிவேட் செய்யறதுக்காக”

“ஆமா ஸ்டுடென்ட்ஸ் எல்லாம் கூட அதை சொல்லி ஹாப்பியா இருந்தாங்களே”

“ம்ம்ம். இந்த சுரேஷ் உங்க பேட்ச்ல வறான். அதான் சார்க்கு கோபம். ஏதேதோ சொல்லிட்டு போறான்”

“ஓ. ஏன் சார் அவனை பேட்ச் சேன்ஜ் செய்ய முடியாதா”

“ஏன் தேன்மொழி. உங்களுக்கு ஏதும் ப்ராப்ளமா”

“நோ நோ. அப்படி எல்லாம் இல்லை. அவனுக்கு அது பிடிக்கலைன்ற போது ஏன் சேன்ஜ் பண்ணக் கூடாதுன்னு தான் கேட்டேன்”

“இல்லை. முதல்ல எல்லாம் அவங்கவங்களுக்கு பிடிச்ச ஸ்டாப்சை அவங்களே மென்டரா சூஸ் பண்ணிக்க சொல்லி இருந்தோம், அப்படி செஞ்சப்ப ஒவ்வொருத்தவங்களுக்கு நிறைய ஸ்டுடென்ட்ஸ் அவங்க மேனேஜ் செய்ய முடியாத அளவுக்கும், சில பேருக்கு கம்மியான ஸ்டுடென்ட்ஸும் இருந்தாங்க. அதனால தான் இப்படி நாங்களே சூஸ் செய்ய ஆரம்பிச்சோம், அதுவும் ரேண்டமா தான் சூஸ் பண்ணுவோம், ஆளை பார்த்து எல்லாம் செய்யறதில்லை. இப்ப இப்படி ஒருத்தரை சேன்ஜ் செஞ்சா மத்தவங்களும் கேட்பாங்கன்னு நாங்க அப்படி யாரையும் சேன்ஜ் செய்யறதில்லை. அப்படி பண்ணணும்ன்னா ராமை தான் கேட்கணும். மோஸ்ட்லி அவனும் இதுக்கு ஒத்துக்க மாட்டான். ஒரு வேளை நீங்க அன்கம்பர்டபிலா பீல் பண்ணீங்கன்னா நான் ராம் கிட்ட கேட்கறேன்” என்றான்.

“இல்லல்ல வேண்டாம் சார். எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்லை. அவனுக்கு பிடிக்கலையே, அப்படி என் கிட்டனா அவன் என்னை எதுவும் கேட்கவே மாட்டான். வேற யாராச்சும் இருந்தா அவங்களை யூஸ் பண்ணிப்பான். அதான் கேட்டேன். இட்’ஸ் ஓகே. பார்க்கலாம்”

தேன்மொழி ஸ்டாப் ரூமிற்குள் நுழைய, அங்கு தௌலத்திடம் பேசி விட்டு கிளம்பிக் கொண்டிருந்தான் ஸ்ரீ ராம்.

தேன்மொழி அவனுக்கு குட் ஆப்டர்னூன் சார் என்று கூற அவனும் திரும்ப கூறினான்.

பிறகு தேன்மொழி சென்று அமர்ந்தவாறு ஜமுனா, தௌலத்திடம் பேச ஆரம்பித்தாள்.

ஜமுனா மட்டும் பேசிக் கொண்டே ஸ்ரீ ராமை கவனித்துக் கொண்டிருந்தாள்.

வெளியே செல்ல நடந்தவன் மெதுவாக நடந்துக் கொண்டே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்.

பின்பு வெளியே சென்று விட்டு திரும்ப வந்து தௌலத்திடம் “அக்கா அந்த கொஸ்டீன் பேப்பர்ஸ் எடுத்துட்டு வர சொல்லி இருக்கேன், இப்பவே அதுல இருக்கற மிஸ்டேக்ஸ் எல்லாம் சொல்றீங்களா, இப்பவே சொன்னா அதை கரெக்ட் பண்ணி பிரிண்ட் கொடுக்கறதுக்கு சரியா இருக்கும்” என்றான்.

தௌலத்தும் “சரிப்பா” என்றார்.

கிருஷ்ணா அந்த கொஸ்டீன் பேப்பரை கொண்டு வர அதை வைத்துக் கொண்டு தௌலத்தின் பக்கத்தில் அமர்ந்தான்.

“ஹலோ பாஸ் நீங்க பாஸ் தான் அதை நாங்க ஒத்துக்கறோம், ஆனா இப்படி லஞ்ச் ஹவர்ல எல்லாம் எங்களை ஏன் இப்படி டிஸ்டர்ப் பண்றீங்க.” என்றாள் ஜமுனா.

கௌஷிக் அதே நேரம் உள்ளே வர “ஹேய் இப்படி தான் டா நீ ஊர்ல இல்லாத நேரம் எல்லாம் பாஸ் பாஸ்ன்னு உன்னை சொல்லிட்டிருந்தா, என்னன்னு கேளு” என்று ஏற்றி விட்டான்.

“ஆமா ஆமா” என்று கௌதமும் அவன் பங்கிற்கு கூறினான்.

“எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டீங்களா பாத்துக்கறேன்” என்றாள் ஜமுனா.

ஸ்ரீ ராம் எழுந்து “என்ன பார்த்துப்ப. எவ்வளவு திமிர் இருந்தா நீ நான் எதை சொல்ல வேண்டாம்ன்னு சொல்றியோ, அதையே சொல்லுவ” என்று சொல்லிக் கொண்டே அவள் தலையில் கொட்டினான்.

“டேய் லூசு வலிக்குது டா”

“கௌஷிக் பார்த்தியா டா. நான் சும்மா தொட்டேன். அதுக்கு மேடம்க்கு வலிக்குதாம்”

“என்னது தொட்டியா, இரு. நானும் உன்னை அதே மாதிரி தொடறேன். இரு” என்று எழுந்து வந்தாள் ஜமுனா.

ஸ்ரீ ராமோ அவள் கைக்கு சிக்காமல் எல்லோரையும் வட்டமிட்டுக் கொண்டிருந்தான்.

தேன்மொழி இதை எல்லாம் கண்ணை விரித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

கடைசியில் வழக்கம் போல பிரச்சனை நாட்டாமையிடம் செல்ல (அதான் நம்ம தௌலத் மேடம்), அவரோ ஐயோ பாவமாக பார்த்தார்.

“நான் தான் உங்களுக்கு எல்லாம் கிடைச்சேனா” என்றார் அவர்.

இதற்கு மட்டும் எல்லோரும் கோரஸாக “ஆமா” என்று கத்தினர்.

சிரித்துக் கொண்டே “சரி பர்ஸ்ட் சாப்பிடலாம். அப்புறம் உங்க பஞ்சாயத்தை வச்சிக்கலாம்” என்று அவர் கூறவும் எல்லோரும் சரி என்று ஒத்துக் கொண்டனர்.

“வா டா. நாமளும் போய் சாப்பிட்டு வரலாம்” என்று கௌஷிக் ஸ்ரீ ராமிடம் கூற,

ஸ்ரீ ராமோ “ஹேய் ஜமுனாவோட லஞ்ச் ஏதோ வெயிட்டா இருக்க மாதிரி இருக்கு. இரு நாம இங்கேயே சாப்பிடலாம்” என்று கூறவும், மற்ற எல்லோரும் அவர்களை அங்கேயே சாப்பிட சொன்னார்கள்.

கிருஷ்ணா வந்து கௌதமை சாப்பிட அழைத்துக் கொண்டு போக வர, தேன்மொழியோ “அதென்ன எங்க எல்லாரையும் விட்டுட்டு நீங்க ரெண்டு பேர் மட்டும் தனியா போய் சாப்டறீங்க. கௌதம் நான் நேத்தே உங்களுக்கும் சேர்த்து எடுத்துட்டு வரேன்னு சொன்னேன்ல, ஒழுங்கா இங்கேயே சாப்பிடுங்க” என்று ஆணையிட,

கிருஷ்ணா “அதெல்லாம் வேண்டாம்” என்று தயங்க, கௌதமோ “சரி” என்றான்.

பின்பு எல்லோரும் ஒன்றாக சாப்பிட ஆரம்பித்தனர்.

தேன்மொழி அவள் கொண்டு வந்த லஞ்ச்சை எடுத்துக் கொடுக்க கௌதம் வாங்கிக் கொண்டான். ஆனால் கிருஷ்ணாவோ “இல்லை. நான் எங்க ரெண்டு பேருக்குமே தான் கொண்டு வந்திருக்கேன். நானும் சாப்பிடலைன்னா புட் வேஸ்ட் ஆகிடும்” என்றான்.

ஜமுனா அந்த பாக்ஸ்ஸை எடுத்து “நம்ம பாஸ் சாப்பிடட்டும்” என்று ஸ்ரீ ராமிடம் தந்தாள்.

இந்த முறை அவள் பாஸ் என்று கூறியதற்கு அவன் கோபப்படாமல் கண் சிமிட்டினான்.

ஜமுனாவோ ‘நாம ஏதோ டவுட்டா தான் நினைச்சோம். ஆனா இங்க கன்பார்ம் தான் போல’ என்று நினைத்துக் கொண்டாள்.

தேன்மொழி எக் ப்ரைட் ரைஸ் கொண்டு வந்திருந்தாள். அங்கிருக்கும் எல்லோருமே அவள் சாப்பாட்டை டேஸ்ட் செய்து அவள் உணவை பாராட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஸ்ரீ ராம் ஏதோ கேட்பது போல வந்து அமைதியானான். இவ்வாறே இரண்டு முறை செய்து விட,

ஜமுனா “ஏன் தேன்மொழி இதை யார் செஞ்சா, அம்மாவா” என்று வினவ,

“இல்ல. நான் தான் செஞ்சேன். அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை. அவங்களே எல்லா வேலையையும் இழுத்து போட்டு செய்வாங்க. அதான் நான் என்னால முடிஞ்ச வரைக்கும் என் வேலையை நானே செஞ்சிப்பேன்” என்றாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.