(Reading time: 26 - 51 minutes)

ப்போது ஸ்ரீ ராமுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை. எப்படி இவர்கள் எல்லாம் வாய்க்கு வந்ததி பேசி விடுகிறார்கள் என்று.

அந்த வார்த்தைகள் பல நாட்கள் இல்லையில்லை பல வருடங்கள் அவனை துரத்திக் கொண்டிருந்தது.

அவர்களிருவரும் காதலிக்கவில்லை என்பது அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்த போதிலும் சில நேரங்களில் குழப்பமும் ஏற்பட்டது.

அத்தனை நாட்கள் அவர்கள் நட்பை எண்ணி பெருமை அடைந்திருந்த அவனால் இந்த படங்களில் வருவது போல இவர்களின் நட்பு காதாலாக மாறுவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எல்லா குழப்பங்களுக்கும் ஒரு முடிவு வந்தது. முதலில் எல்லோரும் படிப்பு முடித்து விட்டு ஒவ்வொரு இடத்தில் பணிப் புரிந்துக் கொண்டு தான் இருந்தார்கள். எப்படியும் மாதத்தில் ஒரு முறை மீட் செய்து விடுவார்கள்.

அப்படி ஒரு முறை மீட் செய்யும் போது ஜமுனா ஒரே குழப்பமாக இருந்தாள். என்னவென்று கேட்டதற்கு வீட்டில் திருமணம் செய்து கொள்ள சொல்கிறார்கள் என்று சோகமாக சொன்னாள்.

ஸ்ரீ ராமிற்கு ஏனோ உள்ளுக்குள் பயமாக இருந்தது. இப்போது திடீரென்று அவள் கௌஷிக்கை காதலிப்பதாக கூறினால், முதலில் அவர்கள் நட்பை பார்த்து ஏதேதோ கூறியவர்கள் கூட இத்தனை வருடம் நண்பர்களாக இருப்பதை பார்த்து பாரட்டியதெல்லாமே தவறு என்றாகி விடும்.

“கல்யாணம் தானே பண்ணிக்கோ” என்றான் கௌஷிக்.

அவள் ஏதும் கூறவில்லை.

“என்ன ஜமுனா. எப்படியும் ஒரு நாள் கல்யாணம் பண்ணிக்கிட்டு தானே ஆகணும்” என்றான் ஸ்ரீ ராம்.

அதற்கும் அவள் ஏதும் கூறவில்லை.

“என்னடா”

“இல்ல ராம். எனக்கு நம்மளோட ப்ரண்ட்ஷிப் ரொம்ப முக்கியம். எந்த ஒரு விசயத்துக்காகவும் நம்மளோட ப்ரண்ட்ஷிப்பை என்னால சாக்ரிபைஸ் பண்ண முடியாது” என்றாள்.

ஸ்ரீ ராமிற்கு யாரோ தன்னை பளார் என்று அறைந்ததை போல இருந்தது.

யாரோ பேசியதை வைத்து தானும் தன் நட்பை சந்தேகித்து விட்டோமே என்று வருத்தப்பட்டு போனான்.

பின்பு எப்படியோ அவளை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்தனர் மூவரும்.

அப்படியும் வரப் போகும் மாப்பிள்ளையிடம் அவர்களது நட்பை பற்றி தெளிவாக பேசி வைத்துக் கொண்டு தான் திருமணத்திற்கு சம்மதம் சொல்வேன் என்று அடம் பிடித்தாள் ஜமுனா.

முனாவை பெண் பார்க்க சுதர்சன் வந்திருந்தான்.

எல்லா பொண்ணுங்களுக்கும் அவங்களோட ப்ரண்ட்ஸ்ன்னு கேர்ள்ஸ் கூட வருவாங்கன்னா, இங்க இந்த மூணு பேரும் அங்க போயிருந்தாங்க. (என்ன கொடுமை சார்னு நீங்க எல்லாம் கேட்கறது எனக்கு கேட்குது)

சுதர்சனுக்கு ஜமுனாவை பார்த்தவுடனே பிடித்து விட்டது. ஆனால் அவளோ அவனை நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அதில் அவனுக்கு ஏமாற்றம் தான்.

ஜமுனா அவனிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறுவதற்கு முன்பு, அவனே பேச வேண்டும் என்றான்.

அவர்கள் சென்று பத்து நிமிடம் ஆகியும் அவர்கள் வரவில்லை, எல்லோரும் இவர்களை சென்று பார்த்து வர சொல்ல, இந்த மூவரும் அங்கே சென்றனர்.

சுதர்சன் ஆர்வத்துடன் அவளை பார்த்துக் கொண்டிருக்க அவளோ தலையை குனிந்தவாறு இருந்தாள்.

இவங்க மூணு பேரும் அங்கு போனதை பார்த்து சுதர்சன் கொஞ்சம் ஷாக் தான் ஆகிட்டாரு.

“உங்களை கீழே கூப்பிடறாங்க” என்று கௌஷிக் சொல்ல,

அவனோ தயக்கத்துடன் “இல்ல. இவங்களுக்கு என்னை பிடிச்சிருக்கான்னே தெரியலை. எதுவுமே பேசலை” என்றான்.

மூவருக்கும் கொஞ்சம் இல்ல நிறையவே ஷாக் தான். (ஜமுனா பேசலையாமே!)

அப்புறம் கௌஷிக் தான் பேசினான்.

“ஹாய் சுதர்சன் நாங்க மூணு பேரும் ஜமுனாவோட கிளாஸ்மேட்ஸ். நாங்க நாலு பேரும் ரொம்ப க்ளோஸ். எங்களுக்குள்ளே பாய்ஸ் கேர்ள்ஸ்னு எந்த டிபரன்ஸும் இல்லை. காலேஜ் பர்ஸ்ட் இயர்ல இருந்து இத்தனை வருஷமா நாங்க எல்லாம் ப்ரண்ட்ஸ். காலேஜ் முடிஞ்ச பிறகு கூட நாங்க எல்லாம் அட்லீஸ்ட் மன்த்லி ஒன்ஸ் மீட் பண்ணிப்போம். எங்களுக்கு என்னன்னா எங்க மூணு பேருக்கும் வர போற வொய்ப்பும் சரி, ஜமுனாக்கு வரப் போற ஹஸ்பன்ட்டும் சரி, எங்களோட ப்ரண்ட்ஷிப்பை சரியா புரிஞ்சிக்கணும். அதை யாரும் தப்பா எடுத்துக்க கூடாது. எல்லாரோட மேரேஜ்க்கு அப்புறமும் நாம எல்லோருமே பாமிலி ப்ரண்ட்டா இருக்கணும்ன்னு ஆசை”

“ஜமுனா இதை தான் உங்க கிட்ட சொல்ல நினைச்சா. ஐ தின்க் அவளுக்கு உங்களை ரொம்ப பிடிச்சி போச்சி. முதல்லயே கண்டிஷன் போடற மாதிரி இதை எப்படி சொல்றதுன்னு தான் யோசிச்சிருப்பா. நீங்க என்ன சொல்றீங்க”

“ஹே ப்ரண்ட்ஸ். நானும் உங்க ஏஜ் தான். எதுக்கு எனக்கு இவ்வளவு லென்த்தா சொல்றீங்க. எனக்கு புரியுது. பட் மேடமை என் கிட்ட நேரா பிடிச்சிருக்குன்னு சொல்ல சொல்லுங்க” என்றான் சுதர்சன்.

எல்லோரும் ஜமுனாவை பார்க்க, படப்படக்கும் விழிகளுடன் அவன் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு சந்தோசத்தில் கண் கலங்கி இருக்க வாயில் இருந்து வார்த்தைகளே வரவில்லை. அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்.

இவர்கள் எல்லோரும் கீழே செல்ல, ஜமுனாவின் தந்தை “எங்க பொண்ணுக்கு பிடிச்சிருக்காம். மாப்பிள்ளை என்ன சொல்றாருன்னு கேளுங்க” என்றார்.

சுதர்சனும் பிடிச்சிருக்கு என்று சொல்ல அவர்கள் திருமணம் நடந்தேறியது.

தை எல்லாம் நினைத்துக் கொண்டவன் அன்று யாரோ தங்கள் நட்பை சந்தேகித்தற்கு மட்டும் தனக்கு கோபம் வந்ததே, இன்று நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று நினைத்தான். (எல்லாருமே இப்படி நினைச்சா பரவால்ல)

ஆனால் தான் ஏன் இவ்வளவு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறோம்? தனக்கு அவளை பிடித்திருக்கிறதா? ஆனால் அவள் தன்னை திரும்பி கூட பார்ப்பதில்லையே. அப்படியுமா அவளை எனக்கு பிடித்திருக்கிறது.

ஒரு வேளை அவள் என்னிடம் நார்மலாக பேசி விட்டால் இந்த விசித்திர எண்ணங்கள் எல்லாம் போய் விடுமோ என்று எண்ணிக் கொண்டான்.

இப்படி ஏதேதோ யோசித்தவன் மணியை பார்த்தால் அது இரண்டு நாற்பது என்றது.

‘ஐயோ இவ்வளவு நேரமா இதையே யோசிச்சிட்டு இருந்தோம்? ஹேய் ராம். நீ ஒன்னும் டீன் ஏஜ் பையன் இல்லை. எதுவா இருந்தாலும் தீர்க்கமா யோசிச்சி முடிவு எடு’ என்று அவனுக்கே அறிவுரை சொல்லிக் கொண்டான். (ஆமா ராம். ஒழுங்கான முடிவெடு. உன்னை இந்த உலகமே நம்புது.)

டுத்த நாள் தௌலத் இன்ஸ்டிடியூட்டில் நுழையும் போது ஸ்டாப் ரூமில் ஜமுனா, தேன்மொழி, கௌஷிக், ஸ்ரீ ராம், கௌதம் என எல்லோரும் இருந்தனர்.

எல்லோரும் சிரித்துக் கொண்டிருக்க, ஜமுனா மட்டும் அமைதியாக இருந்தாள்.

தேன்மொழி கூட சிரித்துக் கொண்டிருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.