(Reading time: 30 - 59 minutes)

05. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

குவை உடனே பார்த்து பேச வேண்டும் என்று எண்ணி அவன் வீட்டிற்கு சென்றவள் , வீடு பூட்டி   இருக்கவே காலிங் பெல்லை அமுத்த எண்ணி கை எடுத்தவள், தோட்டத்தில் அரவம் கேட்கவே ரகு அங்கு தான் இருக்கிறான் என்று அங்கே சென்று பார்த்தவளுக்கு பேரதிர்ச்சி.

ரகுவை கட்டி பிடித்தவாறு ஒரு பெண் நின்று கொண்டிருந்தாள் !!! சற்று அருகில் என்று யார் என்று பார்த்தால் அது மேகா!! ( பொறுங்க மக்களே அதுக்குள்ள எந்த தப்பான முடிவுக்கும் வராதிங்க)

சில நிமிடங்களுக்கு முன்பு....

அன்னையிடம் பேசி விட்டு அவர்களுக்கு மாத்திரை கொடுத்து படுக்க வைத்து விட்டு தன் அறைக்கு வந்தவன் மது உடன் பேச எண்ணி மொபைலை எடுக்க அந்த நேரம் சரியாக மேகா அவனுக்கு கால் செய்தாள்.

Nenjamellam kathal

குழப்பமும் வெறுப்புமாக அதை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசித்தவன் ஏதோ தோன்ற பேசினான்.

"ஹலோ"

"...."

"ஹலோ ரகு ஹியர்"

"...."

"யாரு நீங்க கால் பண்ணிட்டு பேசாம இருக்கீங்க?"

"......" ( மைண்ட் வாயிஸ் : ' நான் யாருன்னு தெரியாதா? என் நம்பர் கூடவா இல்ல  இவன் கிட்ட கடன்காரன்  பொய் சொல்றான் இரு உன்ன பாத்துக்கறேன் ")

" ஓகே பை"

"ஹலோ, நான் மேகா பேசறேன்"

(அப்படி வாடி வழிக்கு) " எந்த மேகா?"

"உனக்கு நிஜமாவே தெரியாதா? போதும் உன் விளையாட்டு சகிக்கல"

"ஹலோ வாட்ஸ் ராங், யாருன்னு தெளிவா சொன்னா தானே தெரியும்"

"மதுவோட பிரண்டு மேகா"

(பாவி பாவி ஏன் என் பிரண்டு நு மேடம் சொல்ல மாட்டலாமா ?)

"ஒ சொல்லு என்ன விஷயம்"  

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"எத பத்தி பேசணும் பழைய விஷயம் தான் பேச போறன்ன அதுக்கு அவசியம் இல்ல"

"நான் பேசியே ஆகணும், இப்போ கெளம்பி என் ஆபீஸ் பக்கத்துல இருக்க காபி ஷாப் வர முடியுமா?"

"ஹே லூச நீ, இந்த டைம் ல அதெல்லாம் வேண்டாம் நாளைக்கு பேசிக்கலாம்"

"இன்னைக்கே எனக்கு பேசணும்"

"அப்போ சரி என் வீடிற்கு வந்திடு, இன்னைக்கு வேலைக்காரங்க லீவ் சோ அம்மாக்கு ஹெல்ப் பண்ண நான் மட்டும் தான் இருக்கேன்"

"உன் வீட்டுக்கா?"

"எஸ் பேசணும்னா வா, யுவர் விஸ்"

"ஓகே 10 மின்ஸ் ல அங்க இருப்பேன்"

"ஓகே பை"

போனை வைத்தவன் சிறிது நேரம் பழைய யோசனையில் மூழ்கி இருந்தான். ( அப்படி என்னனு பாக்கறிங்களா அதாங்க அவங்க வரலாறு நீங்களும் கேட்டு தான் ஆகணும் வேற வழி)

து, மேகா, ரகு மூவரும் ஒரே பள்ளி ஒரே கல்லூரியும் கூட.. மேகா பத்தாவது வகுப்பில் தான் இவர்கள் படித்த பள்ளியில் சேர்ந்தாள்.

மேகா வடநாட்டை சேர்ந்தவள் அவள் தந்தையின் தொழில் நிமித்தமாக கோவை வர அவள் அங்கு சேர வேண்டி இருந்தது. என்ன தான் தமிழ் படிக்க பேச கற்று கொண்டாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் திண்டாடி தான் போனாள்.

முதலில் அவளை பார்த்த ரகு அவளை கேலி செய்ய மது தான் பாவம் என்று தோழமையுடன்  உதவி கரம் நீட்டினாள். ஏற்கனவே தன் தோழிகளை பிரிந்து இங்கே வந்தவளுக்கு மதுவை பிடித்து போக இருவரும் உயிர் தோழிகள் ஆனார்கள். ரகுவிற்கு மது மேல் இருந்த பிரியத்தில் மேகா மேல் கொஞ்சம் கோபாம் வந்தது.

ஆனால் அடுத்த ஆறு மாதத்திலே மேகாவின் தந்தைக்கு மீண்டும் டிரான்ஸ்பர் கிடைக்க பரிட்சையை காரணம் காட்டி டிசி தர பள்ளியில் மறுக்க, வேறு வழியில்லாமல் அவளை அங்கேயே விட்டு சென்றனர்.

ஆனால் அதன் பின் ரகுவும் அவளுக்கு துணையாக இருக்கவே இதே பள்ளியில் மீண்டும் படிப்பதாக சொல்லி அங்கேயே இருந்து விட்டாள்.

அதன் பின் இரண்டு வருடத்தில் அவள் அக்காவும் திருமணம் ஆகி சென்னைக்கு வர மேகா  கல்லூரி வாழ்வையும்  மது ரகுவுடன் தொடர நினைத்து மூவரும் சென்னையிலே சேர்ந்தனர். மதுவும்,மேகாவும் ஹாஸ்ட்டலில் தங்கி கொள்ள, ரகு முதன் முறையாக தனிமையை உணர்ந்தான்.  

இருவரும் நேரம் அதிகமாக செலவழிப்பது போன்று ரகுவிற்கு தோன்ற, அதை முதலில் மதுவிடம் தான் சொன்னான்.

"மது"

"சொல்லு டா"

"மேகா எங்க?"

"அவ லைப்ரரி வரைக்கும் போயிருக்கா ஏன் டா?"

"உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"ஹேய் என்ன இது பார்மலா சொல்லு டா"

"இப்போ எல்லாம் நீ என்ன கண்டுக்கறதே இல்ல அம்மு, இதெல்லாம் அந்த மேகா வந்ததுக்கு அப்புறம் தான் அவ கூட தான் நீ நெறைய டைம் ஸ்பென்ட் பண்ற போடீ"

ரகு சீரியசாக பேசிக் கொண்டிருக்க மது அடக்க முடியாமல் சிரித்துக் கொண்டிருந்தாள்.

"என்னடி சிரிக்கற?"

"பின்னே என்ன டா பண்ண சொல்ற இட்ஸ் எ சில்லி மேட்டர் இதை போய் இப்படி பேசிட்டு இருக்க, நாங்க கேர்ல்ஸ் டா எங்களுக்குன்னு சில மேட்டர்ஸ் இருக்கும் அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியுமா அதும் இல்லாம மேகா என்னமோ எனக்கு மட்டும் தான் பிரண்டு உனக்கு இல்லைங்கற மாதிரி பேசற லூசு"

"......"

ரகுவின் கண்களில் எரிச்சலும் வருத்தமும் கண்டவள் அவன் அருகில் சென்று அவன் மூக்கை பிடித்து ஆட்டி,

"சார்க்கு ரொம்ப கோவமோ, ஹேய் இங்க பாரு எப்பவும் யார் வந்தாலும் நீ தான் எனக்கு பர்ஸ்ட் அண்ட் ரொம்ப முக்கியம் உன் ப்லேஸ்ஸ எப்பவும் யாரும் பிடிக்க முடியாது டா லூசு மேகா நம்ம பிரண்டு இனி அவளை அப்படி நினைக்காத டா"

"ம்ம்ம் சரி டீ” என்று உற்சாகமா சென்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.