(Reading time: 30 - 59 minutes)

 

2 காரும் ஒரு கட்டிடத்தின் முன் நிற்க, எல்லாரும் இறங்கினர். இறங்கியவுடன் தான் "மிதா டேன்ஸ் ஸ்கூல்" என்ற பலகையை பார்த்தாள் அவள்.

கண்கள் விரிய ஆவலுடன் சென்றவள் திரும்பி அனைவரையும் பார்க்க, மூர்த்தியும் லலித்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்,

"இது தான் டா உன் கிப்ட்"

"தேங்க்ஸ் அப்பா"

"ஹ்ம்ம் இல்ல டா உங்க அம்மா தான் அடம் பிடிச்சா எனக்கும் சரின்னு பட்டுது"

"ரொம்ப தேங்க்ஸ் ம்மா" என்று அன்னையை கட்டி கொண்டவள் அவள் கன்னத்திலும் முத்தமிட்டாள்.

"இல்ல மிதா ரகு தான் ஐடியா கொடுத்தது"

வாஞ்சையுடன் அவனை பார்க்க அவனோ நான் இல்லை என்பது போல சைகை செய்தான்.

"ஹேய் என்ன எல்லாரும் நான் இல்லை நு என்ன விளையாடறிங்களா?"

"இல்ல அம்மு நிஜமாவே திவா தான் இத யோசிச்சு இடம் பார்க்கறதுல இருந்து ஸ்டாப்ஸ் அப்பாயின்ட் பண்ற வரைக்கும் எல்லாமே பார்த்தது"

(நம்ம திவா கூட பாசக்கார அண்ணன் தாங்க)

"ரொம்ப தேங்க்ஸ் அண்ணா"

"ஐயையோ போதும் டீ நீ தேங்க்ஸ் சொல்லி முடிகரதுகுள்ள நல்ல நேரம் போய்டும் வ வந்து ரிப்பன் கட் பண்ணு"

ரிப்பன் கட் செய்து உள்ளே சென்று விளக்கேற்றி விட்டு இடத்தை சுற்றி பார்த்தவளுக்கு அளவில்லாத ஆனந்தம்... சிறிது நேரத்தில் அனைவரும் புறப்பட்டு ஒரு புதிய வீட்டிற்கு சென்றார்கள்.

"அம்மு நம்ம இனிமேல் இங்க தான் இருக்க போறோம்" என்று வீட்டினுள் நுழையும் பொது ரகு சொல்ல, மது புரியாமல் பார்த்தாள்.

"நம்மநா?"

"நான், அம்மா, நீ, மேகா"

"ஓஹோ" என்ற படி மேகாவை ஒர கண்ணால் பார்த்து சிரித்து விட்டு

"ஆனா நான் அண்ணா வீட்டில தான இருப்பேன்"

"அது தான் இல்லையே, நேத்தே நான் அங்கிள் ஆன்டி கிட்ட பேசிட்டேன் அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க எப்புடி" என்று அவன் காலரை தூக்கி விட்டுக் கொள்ள, மதுவும் மேகாவும் "ஐயே" என்று விட்டு உள்ளே சென்று விட்டார்கள்.

வீடு மிகவும் அழகாக இருந்தது.. எல்லாரும் ஓய்வெடுக்க செல்ல.. திவாவும், ரகுவும் எங்கோ கிளம்பி சென்று விட்டனர்... மதியம் 3 மணி அளவில் எல்லாரும் திவா வீட்டிற்கு செல்வதென முடிவெடுத்து அங்கே செல்ல ரகு மது இங்கயே இருக்கட்டும் என்று கூறவும், அவர்களும் புன்னகையுடன் சென்று விட்டனர். நம்ம மேகா மட்டும் போவாளா என்ன? அவளும் மதுவுடனே இருந்தாள்.

"எங்கடா கிளம்பற?"

"ஆபீஸ் வரைக்கும் டீ, ஒரு சின்ன வொர்க்"

"இப்போ கூடவா இவனிங் எங்காவுது போலாம்ன்னு நினைச்சேன்"

"அதுக்கென்ன போயிட்டு வா மேகா இருக்காளே" என்று விட்டு கிளம்பி விட்டான்.

அவன் சென்ற சிறிதுநேரத்தில் ரகுவிடம் இருந்து மெகாவிற்கு ஒரு குறுஞ்செய்தி வர அவள் சிரித்து கொண்டே அதற்கு பதில் அனுப்பினாள். மாலை 7 மணி அளவில் மேகா மதுவை கிளம்ப சொல்லி ஒரு இடத்திற்கு அழைத்து சென்றாள்.

மது தன்யா வாங்கி தந்த பிங்க் நிற புடவையில் அனைவரையும் கவர்ந்து இழுத்து கொண்டிருந்தாள்.

து ஒரு மிக பெரிய ஹோட்டல், ஆடம்பரம் பார்த்த இடத்தில் எல்லாம் தெரிந்தது.

"இங்க எதுக்கு டீ கூட்டிட்டு வந்த"

"சும்மா தான் நீ உள்ள வா"

என்று அவள் அழைத்து இல்லை கிட்ட தட்ட மதுவின் கையை பிடித்து இழுத்து செல்ல, மது ஒரு பெண் மேல் மோதிக் கொண்டாள்.

தடுமாறி நின்ற இருவரும் ஒருவரை ஒருவரை பார்த்து அதிசயித்து போனனர்.

மது போல அவளும் பிங்க் நிற புடவையில் மெல்லிய அலங்காரத்துடன் இருந்தாள். இருவருமே மற்றவர் சேலையை பார்த்து சிரித்து கொண்டனர்.

"சாரி" மது

"இட்ஸ் ஓகே, ஐயம் சாரி"

"பரவால விடுங்க"மது

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க"

"நீங்க கூட தான் மிஸ். ?..." மது

"ஸ்வேதா"

"ஒ மிஸ். ஸ்வேதா"

"உங்க பேர் சொல்லவே இல்லையே?"

"மது"

"நைஸ் நேம், இன்னைக்கு என் என்கேஜ்மன்ட் டைம் இருந்த நீங்களும் கலந்துகொங்க மது"

"தேங்க்ஸ் ஸ்வேதா பேட் எனக்கு ஒரு வொர்க் இருக்கு ஐயம் சாரி, ஆள் தி பெஸ்ட்"

"தேங்க்ஸ் மது, சி யூ தென்"

"பை பை"

இவை அனைத்தையும் அமைதியாக பார்த்து கொண்டிருந்த மேகா,

"அடியே உன் பக்கத்துல நான் ஒருத்தி இருக்கேன்"

"தெரியுது டி எங்க போறோம்"

"வா வா" என்று அவளை இழுத்து கொண்டு 69 ஆம் நம்பர் ரூமிற்கு போனாள்.

"இங்கயே வெயிட் பண்ணு எங்கயும் போக கூடாது, நான் வந்துடறேன்"

"ஒன்னும் புரியல டீ, ஓகே"

ந்த ஹோட்டல் முன் ஒரு சார் வேகமாக வந்து நிற்க அதிலிருந்து ஷெர்வானி அணிந்து அழகும் கம்பீரமும் ஒருங்கே நிறைந்த ஆதி இறங்கினான். பிங்க் நிற ஷெர்வானி அவனின் நிறத்திற்கு அழகாக பொருந்தி இருந்தது.

"மாப்பிள்ள சீக்ரம் வாங்க"

"என்ன மாமா என்ன ஏதுன்னே சொல்லாம இப்படி டிரஸ் பண்ணி கூட்டிட்டு வந்துருகீங்களே"

"அட வாங்க மாப்பிள"என்று அவன் தோளில் கை போட்டு கூட்டி போனான் ஸ்ரீகாந்த் (ஆரதனாவின் கணவன்).

ரிசப்சனில் தன் பெயரை சொல்லி கொண்டு ஏதோ அவன் பேச, அங்கிருந்த பெண் ஒரு கார்டை கொடுத்தாள். அதில் ரூம் நம்பர் 96 என்றிருக்க, நம் ஸ்ரீகாந்தோ அதை திருப்பி பிடித்து 69 என்று படித்து விட்டு,

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.