(Reading time: 30 - 59 minutes)

 

து மதுன்னு எப்படி இருந்தான் கடைசியில லண்டன் ல சீட் கெடச்சதும் போய்ட்டான். அதுக்குள்ள எங்கள யாரும் பிரிக்க முடியாதுன்னு டைலாக் வேற. அதும் அவ எந்த மாதிரி இருந்த நிலைமைல கூட இங்க வராம இருந்தான். ஏதோ நம்ம இருந்தோம் இப்போ மதுவே சொல்வா நான் தா அவ பெஸ்ட் பிரெண்டு நு, என்னென்ன வார்த்தையெல்லாம் கேட்டான் இருக்கட்டும் வெச்சுக்கறேன்' என்று மனதிற்குள் ரகுவிற்கு அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

ரகு தொண்டையை செருமவும், நினைவு கலைந்து திரும்பி பார்த்தாள்.

"உள்ள வா மேகா" அவன் குரலில் இருந்த ஏதோ ஒன்று புதிதாக இருந்தது.

"...."

"ஹலோ இங்க மேகா நீங்க தானே?"

"ஆமா ஆனா உள்ள வேண்டாம், அத்.. அம்மாக்கு டிஷ்டர்பன்சா இருக்கும்"

அவள் அத்தை என்று சொல்ல வந்ததை கவனித்தவனின் மனம் துள்ளி குதித்தது.

'அப்படின்னா இன்னும் மாமாவ தான் லவ் பண்றியா செல்லம், லவ் யூ டூ டீ ' என்று மனதிற்குல் சொல்லி கொண்டான்.

"ம்ம்ம் சரி, அப்போ தோட்டத்துல பேசலாம்" என்று அவள் முகம் பாராமல் சொல்லி முன்னே சென்றான். ( இந்த நடிப்புக்கு ஒன்னும் கொறைச்சல் இல்ல அப்படி தானே திட்டுனிங்க ஹி ஹி)

"சொல்லு மேகா, என்ன அப்படி தல போற விஷயம்"

"என்ன ரகு எதிர் பாக்கற? இதுக்காக தான் லண்டன்ல இருந்து பறந்து வந்தியா உன்னால எனக்கு எப்போவுமே தல வலி தான் ச்சே"

"ஹேய் என்னன்னே சொல்லாம நீ பாட்டுக்கு பேசிட்டே போற ?"

"ஆமா ஆமா சொன்ன புரியரவங்களுக்கு சொல்லலாம் என்ன சொன்னாலும் எதுமே தெரியாத மாதிரி நடிக்கரவங்கள என்ன செய்ய முடியும்" என்று தெளிவாக முனுமுனுத்தாள்.

அவள் சொன்னதின் உள்ளர்த்தம் மட்டுமல்ல அவள் காதலும் புரிந்தது ரகுவிற்கு.

"புதிர் போட தான் இந்த ராத்திரில வந்தியா?"

"நேரா விஷயத்துக்கு வரேன் உனக்கு சென்னைல வேலை கிடைச்சா நீ போக வேண்டிது தானே எதுக்கு மதுவையும் அங்க கூட்டிட்டு போக பார்க்கற அதுவும் என்கிட்டே இருந்து பிரிச்சு?"

"வாட்? உன்கிட்ட இருந்து பிரிச்ச ஹலோ யார் கிட்ட இருந்தும் யாரையும் பிரிக்கரன்னு நான் சபதம் போடல மா, அந்த பழக்கமும் எனக்கு இல்ல"

"இப்போ எதுக்கு பழச பேசற, நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு"

"இவ்வளவு நாள் நான் அவளை பிரிஞ்சு இருந்துட்டேன், இனி முடியாது அதுவும் இல்லாம உனக்கு தெரியாத சில விஷயங்கள் எனக்கு தெரியும் சோ மது என்கூட இருக்கறது தான் இப்போ நல்லது"

இதை கேட்க கேட்க எரிச்சல் வந்தது மேகாவிற்கு,

"எத பத்தியும் கவலை படாம லண்டன் போனவனுக்கு எங்கிருந்து வந்தது இத்தனை அக்கறை திடீர்னு, இல்ல இதெல்லாம் மதுக்கு நான் தான் எல்லாம் நு காட்டிக்கிற நடிப்பா?"

இப்படி கேட்டால் நிச்சயம் அவனுக்கு கோபம் வரும் சண்டை வலுக்கும் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றம் தான். அவளை கூர்ந்து கவனித்தவன்,

"இங்க பாரு மேகா உன்கூட சண்ட போட எனக்கு டைம் இல்ல, எல்லாம் மதுக்கும் எனக்கும் தெரியும் வேணும்னா மது கிட்டே கேளேன்" என்று சிரித்தான்.

(என்ன பெரிய வேலைன்னு கேட்கறிங்களா நிஜமாவே பெரிய வேலை தான் பாத்துட்டு இருந்தாருங்க இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிஞ்சுரும்)

அவன் செயலில் கோபம் இன்னும் அதிகரிக்க "ஏன் டா என்ன இப்படி கஷ்ட படுதற முதல்ல என் ..... இப்போ என் பிரெண்டு"

என்று திட்டிக் கொண்டே அவன் சட்டையை பிடிக்க எத்தனித்த வேளையில் கல் இடறி அவன் சட்டையை பற்றியவாறு அப்படியே அவன் மேல் சாய்ந்து விட்டாள்.

விழாமலிருக்க அவனும் அவளை பிடிக்க ஒரு சில வினாடிகள் இருவருமே தடுமாறி திணறி போயினர். மேகாவின் கோபம் ரகுவின் தயக்கம்  இருந்த இடம் தெரியாமல் போக கண்களை மூடி கொண்டனர். (இப்போ தாங்க மது என்ட்ரி) 

ஆள் அரவம் உணர்ந்து சட்டென்று விலகி நின்ற மேகா மதுவை பார்த்தவுடன் திரு திருன்னு முழிக்க, மது ரகுவை கேள்வியுடன் பார்த்தாள்.

அவன் ஆம் என்பது போல் கண்ணசைக்க ஒரு நிமிடம் புருவம் சுளித்து யோசித்தவள் சட்டென்று முகம் மலர்ந்தாள் .'கூடவே இருக்கோம் இவ்வளவு நாள் இது நமக்கு தெரியலையே' என்று வியந்தவள்.

மேகாவிடம் ஏதோ பேச வாயெடுக்க வேண்டாம் என்பது போல் மீண்டும் சைகை செய்தான். அவள் முகமும் குழப்பத்தில் இருக்க அமைதியானாள் மது.

"ப்போ வந்த மது?"

"இப்போ தாண்டீ"

"அது கால் தவறி... "

"ஹேய் இப்போ உன்கிட்ட எதாவது கேட்டனா?"

"இல்ல ஆனாலும்"

" நிறுத்து நிறுத்து, அவன நாலு வயசுல இருந்து பாக்கறேன் உன்ன ஏழு வருஷமா தெரியும் உங்கள பத்தி எனக்கு தெரியாதா டீ" என்று அதை அவள் அழுத்தி இழுத்து சொல்லவும் மேகாவிற்கு குற்ற உணர்வில் முகம் கன்றியது.

(பாவம் அவளுக்கு தெரியுமா நம்ம மது போட்டு வாங்க ட்ரை பண்றான்னு)

அவளை பார்க்க பாவமாக தோன்றவும் பேச்சை மாற்றினாள் மது,

"அது இருக்கட்டும் நீ என்ன இங்க வந்துருக்க ரூமிற்கு போகலையா "

"இல்ல அது வந்து..."

"நான் தாண்டீ அவல கூப்பிட்டேன்"

"என்னது நீ கூப்பிடியா?"

"ஆமா நான் தான்"

"ஆமா அவன் தான் வர சொன்னான்"

அடிபாவி காப்பாதலாம்னு பொய் சொன்ன இவளும் நமக்கு மேல இருக்காளே என்று மனதிற்குள் நினைத்தவன் சட்டென்று ஏதோ நினைவு வர,

"மது, அம்மாக்கு ஒரு டேப்லட் மார்னிங் குடுக்கணும் தீர்ந்து போய்டுச்சு அதை வாங்கனும்னு நினைச்சேன் நீ போய் கொஞ்சம் வாங்கிட்டு வாடி ப்ளீஸ்"

"எரும இதை எல்லாம் முன்னாடியே வாங்கி வைக்க மாட்டியா?"

"சாரி டி இங்கயே வெயிட் பண்ணு நான் போய் சீட் எடுத்துட்டு வரேன்"

"ம்ம்ம் ஓகே"

சிறிது நேரத்தில் கையில் ஒரு சீட்டுடன் வந்தவன், 'ஐயையோ இவள மறந்துட்டோமே இவள எப்படி ஓரங்கற்றது?' என்று நினைக்கும் போதே

"மது தனியா போகாத நானும் உன்குட வரேன்" என்று மேகா சொல்ல

"அப்பாடா" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டான். (அப்படி என்ன தான் திருட்டு தனம் பண்றான் வெயிட் பண்ணி பார்ப்போம், பில்டப் எல்லாம் நல்ல தான் கொடுக்கறீங்க ஆனா பினிஷிங் எப்படின்னு தெரியலையே பாஸ்)

இருவரும் கிளம்பியதும் வீட்டிற்க்குள் சென்று தாளிட்டவன் தன் போனை எடுத்து அவசரமாக யாருடனோ பேச தொடங்கினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.