(Reading time: 30 - 59 minutes)

 

"ன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச உன்ன தேடுன அதுக்குள்ள கிளம்பிட்டியே"

"சாரி சார்"

"இட்ஸ் ஓகே, மதுக்கு மட்டும் இல்ல உனக்கு கூட டிரான்ச்பர் கிடைச்சுருக்கு மதுக்காக பேசும் போதே ரகு உனக்கும் சொல்லிட்டார், அதை சொல்ல தான் உன்ன தேடுனேன்"

"ரொம்ப தேங்க்ஸ் சார் நான் உங்க கிட்ட அப்புறமா பேசறேன்" என்று துண்டித்தவள் கண்களில் நீர் கோர்க்க, அதை எதிர் பார்த்திருந்த ரகு எங்கேயோ பார்த்தபடி நிற்க, மது தான் பேசினாள்.

"ஹேய் என்னடா ஆச்சு யார் போன்ல நம்ம மேனேஜரா? என்ன சொன்னாரு"

மேகா ஒன்றும் பேசாமல் நடந்தவை தெரியாமல் ரகுவை திட்டி விட்டோமே அவனுக்கு என் மீதும் அன்பு உள்ளது என்று குற்ற உணர்வில் நிற்க, ரகு

"என்ன சொல்லி இருப்பாரு, மதுக்கு மட்டும் இல்ல உனக்கும் தா டிரன்ச்பார் அதும் சென்னைக்கு தான்னு சொல்லிருப்பாரு"

"டேய் என்ன சொல்ற நிஜமாவ கலக்கிட்ட டா, சூப்பர், அப்போ இனி மறுபடியும் மூணு பெரும் ஒண்ணா இருப்போமா? ஐ ஜாலி"

"ம்ம்ம் அம்மு இனி எப்பவும் ஒன்னாவே தான் இருப்போம்" என்ற படி மேகாவை பார்க்க மேகா அழுக தொடங்கி இருந்தாள்.

மது அவளை சமாதானம் செய்ய முயன்று தோற்று போக, ரகு அவள் கரங்களை பற்றி

"சாரி டா நான் பண்ண எல்லாமே தப்பு தான் இனி அப்படி நடக்காது" என்று கூற அவள் இன்னமும் பெரிதாக அழ தொடங்கினாள். மூன்று வருட தவிப்பு அல்லவோ?

அவள் அழுது முடிக்கும் வரை அவளை மென்மையாக அணைத்து கொண்டான். மது அவள் கைகளை வருடி கொடுத்தாள்.ஒருவாறு அவள் அமைதி ஆனதும் நடந்த அனைத்தையும் இருவரும் மாறி மாறி கூற

"அட பாவிகளா இவ்வளவு நடந்துருக்கா, அப்போ நான் தா அவுட்டா?"

"சாரி அம்மு உன்கிட்ட சொல்ல கூடாதுன்னு எல்லாம் இல்ல எனக்கே கோபம் இப்போ தான் புரிய ஆரம்பிச்சுது"

"சாரி டீ"

"நீ பேசாதடி துரோகி”

பண்றதெல்லாம் பண்ணிட்டு இந்த பூனையும் பீர் அடிக்குமான்னு எவ்ளோ நாள் இருந்த, அதும் சும்மா இல்ல எப்போ பாத்தாலும் அவன திட்டிகிட்டே, நான் கூட அவன் நம்மள விட்டுட்டு லண்டன் போனதுக்கு தான் திட்றனு இவ்ளோ நாள் உலகம் புரியாத அப்பாவியா இருந்துட்டேன், இங்க என்னடான்னா ஒரு ரோமியோ ஜூலியட் கதையே ஓடிருக்கு" என்று அதிசயிப்பதை போல் அவள் கூறவும் இருவரும் ஒருவருக்கொருவர் மெல்லிய புன்னகையுடன் பார்த்து கொண்டனர்.

"ஓஹோ அப்படி போகுதா கதை அது சரி இதுக்கு மேல இங்க இருந்தா நெடு நாள்க்கு அப்புறம் சேர்ந்த காதல் ஜோடிக்கு இடைஞ்சலா இருந்தேன்னு உலகம் மதுமிதாவ தப்ப பேசும் நான் அப்பீட் ஆயிடறேன் யூ கண்டின்யு என்று நகர் போனவளின் இரு கரங்களையும் இருவரும் பிடித்துக் கொள்ளவும், என்ன என்பது போல் பார்த்தாள்.

இருவரும் அவளை தன்னுடன் அனைத்துக் கொண்டனர்.

"நம்ம எப்பவும் ஒன்னு டீ, எங்களுக்கு கல்யாணம் ஆனாலும் உனக்கு ஆனாலும் நம்மள யாராலையும் பிரிக்க முடியாது டீ அம்மு"

"ம்ம்ம்" என்று அவள் கண் கலங்கும் போதே மேகா சொன்னாள்,

"இப்படி ஒரு லைபும் லைப் பார்ட்னரும் கிடைக்க நீ தான் காரணம் டா, நாங்க ரெண்டும் பெரும் ஒருத்தர ஒருத்தர் காதலிக்கறது விட உன்ன தான் அதிகமா நேசிக்கறோம்"

"வி லவ் யூ சோ மச்" என்று இருவரும் ஒரு சேர கூற மது தன்னை கட்டு படுத்திக் கொண்டு விலகி

"ஹேய் போதும் நீங்க வையலின் வாசிச்சது, விட்ட பத்தே பேபிய இப்படியே அழ வைப்பிங்க போல, பொய் டுயட் பாடுங்க போங்க கழுதைங்களா நான் போய் தூங்க போறேன்"  என்று கிளம்பி விட்டாள்.

அதன் பிறகு ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டும் சாரி கேட்டுக் கொண்டும் 3 வருட கதைகளை பேசி முடித்து ஒரு வழியாக உறங்க சென்றனர்.

(ஹீரோயின் பத்தியே சொல்லிட்டு இருக்கியே டி உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லன்னு நீங்க திட்றது காதுல விழுது ஹி ஹி ஹி கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணுங்க)

ன்று காலை மதுவிற்கு அழகாக விடிந்தது. அவள் குளித்து முடித்து வரும் போதே ரகுவும், மேகாவும் தயாராக வந்தனர்.

"ஹே இன்னும்மா டி கிளம்பல கோவில்ல உனக்காக பூஜா இருக்கு டி முட்ட கண்ணி"

"டேய் படவா கொன்றுவேன்"

"ஓகே ஓகே கூல், இந்தா புடி ஹாப்பி பர்த்டே" என்று ஒரு கவரை நீட்டினான் ரகு. "என்னடா இது?"

"திவா சொன்னது தப்பே இல்லடீ"

"ஹி ஹி சாரி" என்று ஓபன் செய்தாள். பச்சை நிற வேலைபாடு கொண்ட அழகான ஸாரி இருந்தது.

"டேய் செம டா நீயே போய் வாங்குனியா, அழகா இருக்கு" 

"ஆமாங்க மகா ராணி"

"ரொம்ப தேங்க்ஸ் டா"

"ம்ம்ம் அதெல்லாம் அப்புறம் சீக்கிரம் ரெடி ஆகு போ போ"

"ம்ம்ம் ஓகே 15 மினிட்ஸ் ல வரேன் பாரு" என்று தன்னறைக்கு சென்றாள்.

மேகா ப்ரிஷனை பார்த்துக் கொள்ள, லலிதாவும் தன்யாவும் காலை உணவிற்கு எல்லாம் மதுவிற்கு பிடித்த அயிட்டமாக செய்து கொண்டிருந்தனர்.

மூர்த்தி பூஜை அறையில் பிசியாக இருக்க கற்பகம் அவருடன் அமர்ந்திருக்க, திவாவும் ரகுவும் பேசி கொண்டிருந்தனர்.

"ஐயம் ரெடி" என்ற படி குரல் கொடுத்தவளை அனைவரும் திரும்பி பார்க்க

அழகான புன்னகையுடன் புடவையில் மெய்யாகவே தேவதை போல இருந்தாள் மது.

"வாவ் மது செம க்யூட் டீ நீ" என்று மேகா சொல்ல மது பெரிதாக சிரித்தாள்.

ரகுவின் கண்களே அவன் மனதை சொல்ல ஒரு கண் சிமிட்டலுடன் வந்து அமர்ந்தாள்.

எல்லாருக்கும் ரகுவின் செலக்சன் பிடித்து போக அனைவரும் அவனையும் பாராட்டினர். திவா தான் கலைத்து கொண்டிருந்தான்.

எல்லாரும் கோவிலுக்கு போய் விடு வந்து உணவருந்திய பின் சென்னைக்கு கிளம்பினர். பெரியவர்கள் திவாவின் காரிலும், மது,மேகா, ப்ரிஷன் ரகுவின் காரிலும் சென்றனர்.

கார் திவாக்கர் வீடிற்கு செல்லாமல் வேறு இடத்திற்கு செல்லவும், மது என்ன என்று கேட்டுக் கொண்டே வந்தாள். 

அவளை சமாளிக்க ரகுவும் மேகாவும் பட்ட பாடு இருக்கே....

"ஹேய் கொஞ்சம் நேரம் அமைதியா வாடீ உனக்கு இந்த குட்டி கூட பரவால போல ச்ச"

"ம்ம் போ"

"அப்பாட வந்தாச்சுங்க மேடம் இறங்குங்க"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.