(Reading time: 30 - 59 minutes)

 

வை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த மூர்த்தி, லலிதா, கற்பகம் மூவருக்கும் தங்கள் பிள்ளைகள் எப்போதும் இப்படியே இருக்க வேண்டும் என்ற ஒரே வேண்டுதல் தான் கடவுளிடம் இருந்தது.

"சரி சரி வா மிது கேக் வெட்டலாம், உங்கள விட்டா நீங்க அழுதுட்டே இருப்பீங்க உங்க அண்ணனும் இது தான் சென்ஸ்ன்னு போட்டோ எடுத்துட்டே இருப்பார்"  என்று தன்யா கூறவும்,

மது கேக் வெட்ட சென்றால், அவளின் உருவப்படம் கொண்ட அழகான கேக்கை வாங்கி இருந்தனர் ரகுவும் திவாக்கரும்...

"ஹாப்பி பர்த்டே டூ யூ" என்று அனைவரும் பாட, மது கேக்கை வெட்டி அனைவருக்கும் ஊட்டி விட்டா பின்  அவள் முகத்தில் ரகுவும் மேகாவும் கேக்கை அப்பிவிட மதுவும் அதையே திருப்பி செய்ய குழந்தைகள் போல விளையாடினர்.

 ப்ரிஷனும் அவர்களுடன் கலந்து கொள்ள தன்யாவும் அவர்கள் ஜோதியில் ஐக்கியமானாள். திவாக்கார் இவை அனைத்தையும் போட்டோ எடுக்கிறேன் என்ற பெயரில் காமெடி செய்து கொண்டிருந்தான். ( இவரு பெரிய மயக்கம் என்ன தனுஷ் பாருங்க)

 ஒரு வழியாக எல்லாரும் ஓய்ந்து உட்கார்ந்தனர். அப்போது திவாக்கர் மதுவிற்கு ஒரு பரிசு தந்தான்.

"டேய் அண்ணா நிஜமாவே கிப்ட் வாங்கிட்டியா, என்ன இருக்கு?"

அவள் தலையில் செல்லமாக கொட்டியவன்

"பிசாசு எப்பவும் அவசரம் தான் உன் கைல தானடி இருக்கு பிரிச்சு பாரேன்"

"ம்ம்ம்ம்" அவள் அதை பிரிக்கவும் உள்ளே அழகான நெக்லஸ் செட் இருந்தது.

"வாவ், ரொம்ப அழகா இருக்கு ஹேய் உண்மையா சொல்லு அண்ணி தான செலக்ட் பண்ணாங்க இந்த கிப்ட?"

"சொல்லுவடி சொல்லுவா உனக்காக பார்த்து பார்த்து வாங்குனேன் பாரு எருமை"

"டேய் திவா என்ன இது பிறந்தநாள் அதுவுமா அவல திட்டிக்கிட்டு" என்று லலிதா அதட்டவும்.

அவனை பார்த்து கேலியாக சிரித்தாள் மது.

"இந்த மது இது என் கிப்ட்"

"ஐயோ அண்ணி நீங்களுமா அதன் திவாவே வாங்கிட்டான்ல"

"ஒ அப்போ நாங்க குடுத்த எல்லாம் மகராணி வாங்க ,மாட்டிங்களோ"

"அப்படி எல்லாம் இல்லை அண்ணி சாரி"

"வாஆஆஅவ் அழகா இருக்கு அண்ணி பிங்க் கலர் என் பேவரைட் நு உங்களுக்கு எப்படி தெரியும், நிஜமாவே ரொம்ப அழகான புடவை அண்ணி தேங்க்ஸ்"

"இட்ஸ் ஓகே மது"

மேகாவும் அவளது பரிசை நீட்ட, மது அன்போடு அதை வாங்கி கொண்டாள்.

அதை திறந்து பார்த்தவள் அதனுள் இரு சிறுமிகள் கை கோர்த்து இருப்பது போன்ற க்ரிஸ்டல் சிற்பம் இருக்க அதன் கீழே "தேங்க்ஸ் டு காட் பார் கிவிங் யூ" என்று எழுதி இருந்தது.

"தேங்க்ஸ் மேகா ரொம்ப அழகா இருக்கு"

"இட்ஸ் ஓகே மது, ஹாப்பி பர்த்டே ஓன்ஸ் அகைன்"

"அப்பா நீங்க எனக்கு ஏதும் வாங்கிட்டு வரலையா?"

"இருக்கு மா நான், உங்க அம்மா, ரகு ஓட அம்மா மூணு பெரும் சேர்ந்து யோசிச்சு உனக்கு ஒரு கிப்ட் வெச்சுருக்கோம், அதை நாளைக்கு தான் தருவோம்" என்று மர்மமாக புன்னகைக்க, கற்பகமும் லலிதாவும் சிரித்த படி அவளை பார்த்தனர்.

"போங்க பா எதுக்கு இந்த சஸ்பென்ஸ் எல்லாம்" என்று சிணுங்கியவள் ப்ரிஷன் அழைக்கவே

"என்னடா செல்லம்" என்று வினவினாள்.

"நானும் ஒன்னு வெச்சுருக்கேன் மத்து"

"என்னடா தங்கம் வெச்சுருக்கீங்க?"

"அங்க பாரு" என்று அவன் வேறு திசையில் கை காட்டவும் அவள் திரும்பி பார்த்தாள்.

"உம்ம்ம்ம்ம்மாஆஅ" இது தான் என்று அழகாக அவளை கட்டி கொண்டு சிரித்தான். அவன் செய்த செயலில் அனைவரும் சிரித்து கொண்டு இருக்க. தன தேவதை மகிழ்ச்சியாக இருப்பதை அமைதியாக ஒரு ஜீவன் ரசித்து கொண்டிருந்தது.

"சரி எல்லாரும் போய் படுங்க" என்று மூர்த்தி சொல்லவே,

"இன்னும் கொஞ்ச நேரம் ரகு மேகா கூட இருந்துட்டு வரேன் பா"

"ம்ம்ம் சரி மா"

ற்ற அனைவரும் மது வீட்டிற்கு செல்ல, ரகு  கற்பகத்தை அறைக்கு அழைத்து போனான்.

"மது"

"ம்ம்ம் சொல்லு டா"

"சந்தோசமா இருக்கியா?"

"ஆமா, இனி பழசு எதையும் யோசிக்க வேண்டாம்னு நினைக்கிறேன், ரகு , நீ , நம்ம குடும்பம் இவ்வளவு இருக்கும் போது எனக்கு என்ன டீ?" என்று சொல்லும் போதே "இவ்வளவு இருந்த போது தானே நீ அவனை தேடி சென்றாய்" என்றது மனது.

 ஏனோ அவனின் நினைவுகள் வந்து அவளை மிகவும் வாட்டின அனாலும் வெளி காட்டாமல் புன்னகையுடன் இருந்தாள்.

"நீ வேலைய விட வேண்டாம், உனக்கு பிடிச்சத செய் மது, நீ சந்தோசமா இருக்க தான் அந்த வேலைய விட சொன்னேன் இப்போ தான் அது நடந்துடுச்சே"

"ம்ம்ம் தேங்க்ஸ் மேகா"

"ம்ம்ம்"

"ஆமா ரகுவு... "

"என்ன என் பேர் அடி படுது"

"ஒன்னுமில்லையே ஹிஹி"

" அப்படியா?"

"ஆமா டா எரும"

"ஓகே மது நான் கிளம்பறேன்"

"சரி டீ என் ஸ்கூட்டி எடுத்துட்டு போ இந்தா சாவி பாத்து போய்டுவா தான?"

"ம்ம்ம்ம் பை" என்று கூறி ரகுவை ஒர கண்ணால் பார்த்து விட்டு திரும்பியவள் அவன் அவளை கவனிக்கமால் யாருக்கோ போன செய்வது கண்டு எரிச்சல் வந்தது.

" மது உன் பிரெண்டுக்கு தான் ஒரு கால் பேசிட்டு போக சொல்லு" என்று அவன் கூறவும் புரியாமல் இருவரும் அவனை பார்த்தனர். அவன் மேகாவிடம் போனை நீட்டவும் அதை வாங்கி பேசினாள்.

"ஹலோ"

"ஹலோ மேகா, திஸ் இஸ் சுதாகர் ( மது மேகாவொட மேனஜர்) "

" சார்,நீங்களா சொல்லுங்க சார்"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.