(Reading time: 30 - 59 minutes)

 

"தி ரூம் நம்பர் 69 க்கு போ, ஒரு சர்ப்ரைஸ் உனக்காக வெயிடிங்"

"என்ன மாமா சொல்றீங்க? நான் மட்டும் ஏன் போகணும்?"

"ஐயோ மாப்பிளை சொல்றத செய்ங்க சீக்கிரமா போங்க"

"ம்ம்ம் ப்ளீஸ் க்ளூ ஆச்சும் கொடுங்களேன்"

"ம்ம்ம்ம் இங்கி பின்கி பான்கி பின்கி பின்கி பின்கி" என்று அவன் டிரெஸ்ஸை சுட்டி காட்டி அவன் ஏதோ சொல்ல( அவரு எப்போவும் அப்டி தாங்க), ஆதி எரிச்சலுடன் நகர்ந்தான். லிப்டில் சென்றவனுக்கு பல பல யோசனைகள். ரூமில் இருந்த மதுவோ என்ன நடக்கிறது என்று புரியாமல் குழம்பி போய் இருந்தாள்.

( அதான் அதே தான் நீங்க எல்லாரும் ஆவலுடன் காத்து கொண்டிருந்த நம்ம ஹீரோ ஹீரோயின் மீட்டிங் தாங்க)

ரூம் நம்பர் 69,

அவன் கதவை லேசாக தட்ட உள்ளே இருந்து சத்தமே வரவில்லை.

கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைய,ஜன்னல் வழியே வெளியே பார்த்த படி தனக்கு முதுகு காட்டி நின்ற பெண்ணை அடையலாம் கண்டு கொள்ள முடியவில்லை.

சட்டென்று ஒன்று தோன்ற "அட நம்ம ஸ்வேதா, இவ எப்படி இங்க?" என்று மனதிற்குள் சொன்னவன்.

"ஹேய் " என்று அவள் தோள்களை தொட்டு திருப்ப, அதிர்ந்து திரும்பியவள் "டேய் ரகு அறி...."

"ஸ்வே...  "

இருவர் சொன்ன வார்த்தைகளும் பாதி காற்றில் கரைய, அதிர்ச்சியில் விழிகள் நான்கும் கலந்திருக்க, அவளை பற்றியிருந்த கையை எடுக்காமல் சிலையென நின்றான் ஆதி....!

காதல் பெருகும்… 

Episode # 04

Episode # 06

{kunena_discuss:725}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.