(Reading time: 30 - 59 minutes)

 

னால் ஒரு வாரம் தான் அவை எல்லாம், விளையாட்டாக மது இதை மேகாவிடம் கூற அவளோ ரகுவை உசுப்பேத்த ஆரம்பித்தாள்.

எங்குசென்றாலும் மதுவுடனே ஒட்டிக் கொண்டு சென்றாள். வேண்டும் என்றே ரகுவை கலாய்க்க தொடங்கினாள்.

ஆனால் மனதிற்குள் அவனை மிகவும் நேசிக்க துவங்கினாள்.அவன் மதுவிற்காக காட்டும் அக்கறை படிப்பிலும் கலைகளிலும் முதன்மையாக இருப்பது, இவை அனைத்தையும்  மீறி அவனுக்கு அவன் அம்மா மேல் இருந்து அளவு கடந்த பாசம்.இதை ரொம்ப நாள் மனதில் வைத்திருக்க வேண்டாம் என்று எண்ணி அவன் பிறந்த நாள் அன்று அழகிய பூங்கொத்துடன் அவனை காண காலையிலேயே சென்றாள்.

ல்லேஜிர்க்கு வெளியில் காத்திருப்பதாகவும் சீக்கிரம் வருமாறு அவனுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி விட்டு மனதில் ஒத்திகை பார்த்தபடி நின்றிருந்தாள்.

தூரத்தில் ரகு வெளிர் நீல ஷர்ட் வெள்ளை பேண்ட்டில் கம்பீரமாக நடந்து வருவது தெரியவே மனதை கட்டுக்குள் வைக்க மிகவும் திணறி போனாள்.

ஆறடிக்கு சற்றே குறைந்த உயரம், மாநிறம் தான் என்றாலும் மினு மினுக்கும் அழகு அவன் நிறம், கூர்மையான இதயத்தை கூறு போடும் கண்கள், அவன் முகத்திற்கு ஏற்றார் போல நாசி, அளவெடுத்து வைத்தது போல இதழ்கள் அதில் எந்நேரமும் ஒட்டி இருக்கும் புன்னகை, அடர்ந்த முடி, கம்பீரமான மீசை, நேரான நடை, ஷிர்டின் முதல் பட்டனை போடாமல் விட்டு அதில் அவன் மாட்டியிருந்த கண்ணாடி, மெல்லியதாக மின்னிய தங்க செயின்......

( போதும் போதும் மேகா நிறுத்து கதைக்கு போலாம் ஆடியன்ஸ் டென்சன் ஆவங்கள்ள)

அவனை மெய் மறந்து பார்த்தவள் அவன் அருகில் வந்தவுடன் என்ன சொல்வதென்று தெரியாமல் நிற்க, அவனே பேச்சை தொடங்கினான்

"ஹே என்னடீ, பொக்கே எல்லாம் எனக்கா?"

"ஆங்... ஆ..மா உனக்கு தான், ஹாப்பி பர்த்டே ரகு"

"தேங்க்ஸ், ஆமா இத  காலேஜ்லையே குடுத்திருக்கலாமே"

"இல்ல உன்கிட்ட கொஞ்சம் பேசணும்"

"ம்ம் சொல்லு" என்று எப்போதும் போல் அவன் புன்னகைக்க மேகாவிற்கு வார்த்தையே வரவில்லை.

அவளின் மௌனம் ஏதோ சொல்வதை உணர்ந்தவன் அவள் முகத்தை கவனமாக ஆராய்ந்தான் அந்த பார்வை ஏதோ செய்ய முகத்தை வேறு பக்கம் பார்ப்பது போல் திருப்பி கொண்டு பேச தொடங்கினாள்,

" இத ரொம்ப நாளாவே என் மனசுக்குள்ள வெச்சுருக்கேன் ரகு, இன்னைக்கு சொல்றது நல்லதுன்னு தோனுச்சு அதான் அது ஐ லவ் யூ ரகு உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்"

ஒரு நிமிடம் அவளை உற்று பார்த்தவன் சிரிக்க ஆரம்பித்து விட்டான்.

புரியாமல் மேகா பார்க்க,

"இதுக்கு தான் பொக்கேவா, ஐயையோ காச வேஸ்ட் பண்ணிட்டியே டீ"

"ரகு?"

முகம் இறுக, " அன்னைக்கு நீ சொல்லும் பொது கூட என்ன வெறுப்பேத்த தான் அப்படி சொல்றனு நினைச்சேன் ஆனா இப்போ நீ யாருன்னு தெரிஞ்சுடுச்சு டீ"

"என்ன சொல்ற எத பத்தி பேசற?"

"அதான் சொன்னியே உனக்கோ இல்ல மதுக்கோ லவ் இல்ல கல்யாணம்னு வந்தா பிரிய தான போறீங்க இதுக்கு எதுக்கு டா இவ்வளவு சீன் போடற? கூடிய சீக்கிரம் பிரிய தான் போறீங்க அதை நானும் பார்ப்பேன்னு"

"ரகு அது விளையாட்டுக்கு"

"ச்சீ நிறுத்து எங்கள பிரிக்கறதுல அப்படி என்னடி சந்தோஷம் உனக்கு நீ வந்ததுல இருந்து தான் என் மது என்ன விட்டு தள்ளி போய்ட்டா, முதல்ல இருந்தே எனக்கு உன்ன பிடிக்காது மது தான் நீ எனக்கும் பிரண்டு உன்ன நல்ல படிய பாத்துக்கனும்னு கேட்டுகிட்டா அதனால சும்மா இருந்த ரொம்ப ஓவரா போற, லவ் மண்ணாங்கட்டின்னு,இந்த உன் பொக்கே தூக்கிட்டு போய் வேற எவனயாவுது தேடு" என்று அவள் கைகளில் பொக்கேவை திணித்து விட்டு நடக்க எத்தனித்தவன் நின்று மீண்டும் பேசினான்.

"நீ மட்டும் இல்லடீ யாரு வந்தாலும் மதுவ என்கிட்டே இருந்து பிரிக்க முடியாது, பை"

"ஒரு நிமிஷம் நில்லு"

"என்ன"

"இது வரைக்கும் விளையாட்டுக்கு தான் இப்படி சொல்லிட்டு இருந்தேன் ஆனா உண்மையாவே என் மனசுல உன்மேல ஒரு காதல் இருந்துச்சு, ஆனா எப்போ வேற எவனயாவுது ......" குரல் உடைவதை உணர்ந்தவள் ஒரு நிமிடம் தொண்டையை செருமி சரி செய்து கொண்டு,

"வேற ஒருத்தன தேட சொன்னியோ அப்போவே அது அழிஞ்சு போச்சு இனி உனக்கும் எனக்கும் ஏதும் இல்ல நான் எப்பவும் உன் எனிமி தான், மது உன்ன விட்டுட்டு என்கிட்டே வருவா என்கூடவே இருப்பா உன்ன விட நல்ல பிரெண்டா அவளுக்கு நான் இருப்பேன் அப்போ பாத்துக்கறேன் டா உன் மூஞ்சிய எங்கே கொண்டு போய் வைப்பன்னு, நீ என்ன சொல்றது நான் சொல்றேன் குட் பை"

(பேக் டூ தி கரன்ட் சீன், இப்போ உங்களோட ஒரு கேள்விக்கு விடை சொல்லிட்டேன், லவ் நண்பர்கள பிரிச்சது எல்லாம் ஓல்ட் ட்ரெண்டு இங்க பாருங்க ஒரு ப்ரெண்ட்ஷிப் நாலா நம்ம ஹீரோ ஹீரோயின் பிரிஞ்சுட்டாங்க, சரி வாங்க கதைக்கு போவோம்)

டந்த எல்லாவற்றையும் அசை போட்டவன் வாசலில் காலிங் பெல் ஒலி கேட்கவும் சென்று கதவை திறந்தான். மேகா எங்கோ பார்த்த படி திரும்பி நின்று கொண்டிருந்தாள்.

அவளை ஒரு நிமிடம் மெதுவாக பார்வையால் அளந்தான்.அன்று அவள் கண்களில் தெரிந்த வலி, ஏமாற்றம், ஆத்திரம் எல்லாம் இன்று பார்த்ததை போல இருக்கிறது அதற்குள் வருடங்கள் ஓடி விட்டன.

அந்த நாளுக்கு பிறகு ரகுவோ மேகாவோ மதுவிடம் எதையும் சொல்லவில்லை.

 மேகா அவர்களை பிரிக்க நினைத்ததை போல எதுவுமே செய்யவில்லை. அவனாக தான் லண்டன் சென்றது. அப்போது மட்டும் ஏர்போர்ட்டில் ஒரு ஏளனமான பார்வை வந்தது அவளிடம் இருந்து அதும் ஒரு சில வினாடிகள் உடனே முகத்தை திருப்பிக் கொண்டாள்.

அதன் பிறகு மதுவை தேற்றி இந்த அளவுக்கு கூடவே இருந்து அவள் அக்காவை கூட விட்டு கோவைக்கே வந்து அவளுக்கு வேலையும் வாங்கி கொடுத்து அவள் கூடவே நாட்டியப் பள்ளிக்கும் சென்று எந்நேரமும் அவள் உடனே செலவிட்டிருக்கிறாள்.    

அவன் இல்லாத இந்த 2 வருடங்கள் மது மேகா பற்றி கூறிய அனைத்தும் அவனை ஈர்க்க கோபம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து போனது.

ஏனோ அடிக்கடி அவள் காதலை சொல்கையில் வெட்கத்தில் மின்னிய அவள் முகமும், வலியில் கண்களில் நீருடன் அவனை வெறுப்புடன் பார்த்த அந்த முகமும் மாறி மாறி நினைவில் வரும்.

இதுவரை அவளுடன் பேச வேண்டும் என எவ்வளவோ நாட்கள் நினைத்து இருக்கிறான்.

மூளை ஒரு வேலை செய்து கொண்டிருக்க ( என்ன வேலைன்னு கேட்கறிங்களா அதாங்க அவரு லவ் பீலிங்க்ச அசை போட்டுட்டு இருக்காம்) கண்கள் அதன் வேலையை தொடர்ந்தது (சைட்டிங் தா  ;-) )

பக்கவாட்டில் தெரிந்த அவள் முகம் ஏதோ யோசனையில் இருக்க நிலவொளியில் மின்னிய கண்ணின் ஓரம் அவனை ஈர்க்க தான் செய்தது.

(மேடமும் இதே தான் யோசிச்சுட்டு இருக்காங்க, இதுவும் ஒரு கோவம் நம்ம ரகு மேல )

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.