(Reading time: 30 - 59 minutes)

 

ருந்து வாங்க சென்ற மது, மேகா இருவரும் வந்து கதவை தட்ட கதவு திறக்க படாமல் இருக்கவே ரகுவின் செல்போனிற்கு கால் செய்தால் மது அதும் சுவிட்ச் ஆப் என சொல்ல கடுப்பாகி போனாள்.

நம்மள மறந்து தூங்கிட்டான அந்த பிசாசு, போனை வேற ஆப் பண்ணிட்டான் அறிவு இருக்கா ச்ச என்ன பையனோ?' என்று நொந்து கொண்டு கதவை அவள் எட்டி உதைக்க அது லேசாக திறந்து கொண்டது.

"அட இந்த எரும திறந்து வெச்சுட்டே தூங்குதா?"

"என்ன மது ஒரே இருட்டா இருக்கு, ஒரு லைட் கூடவா போடா மாட்டான்?"

"அதான் பாரு இருக்கட்டும் அவன இப்போ என்ன பண்றேன்னு பாரு மேகா"

 என்று அவள் ஒரு அடி நகர அந்த நேரம் சரியாக மணி 12 என கடிகாரத்தில் மணி அடிக்க துவங்கியது அதில் ஒரு வினாடிபயத்தில்  துள்ளி குதித்தவள் தன்னை சுதாரிக்கும் முன் தன் மேல் பூ போலா எதுவோ விழுக ஒன்றும் புரியாது மேலே பார்த்தாள்.

 ஒவ்வொரு விளக்காக எரிய ஆரம்பிக்க, அழகான பூ வேலை பாடுகள் , பலூன்கள் என வீடே ஜொலிக்க பிரமித்து போய் நின்றது மது மட்டும் அல்ல மேகா கூட தான்.

 ஹாலில் ஆர்கிட் மலர்களை கொண்டு "ஹாப்பி பர்த்டே அம்மு" என அலங்கரிக்க பட்டிருப்பதை பார்த்தவளுக்கு தன் நண்பனின் செயலை எண்ணி மெய் சிலிர்த்தது.

( இந்த வேலைய தான் பையன் அப்படி ரகசியமா பண்ணானா? பரவால ரகு அசத்திட்டிங்க)

 எல்லா விளக்கையும் போட்டபின் தான் கவனித்தாள். மூர்த்தி, லலிதா,கற்பகம் (ரகுவின் அம்மா), திவாக்கர், தன்யா, ப்ரிஷன் என அனைவரும் இருக்கவும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே போனாள். மேகாவும் சொல்ல முடியாத சந்தோசத்தில் இருந்தாள்.

 'என்ன தான் நான் மதுக்கு பெஸ்ட் அது இது ன்னு உளறினாலும் உன்ன வம்புக்கு இழுத்தாலும், நீ தாண்டா அவளுக்கு எப்பவுமே பெஸ்ட் நான் கூட சின்ன கிப்டோட முடிச்சுட்டேன் ஆனா நீ, யூ ஆர் ரியல்லி சூபெர்ப் டா" என்று மானசீகமாக ரகுவுடன் பேசி கொண்டாள்.  

"ஹாப்பி பர்த்டே மிது" என்று அனைவரும் கூற, மூர்த்தி- லலிதா, கற்பகம் காலில் விழுந்து ஆசிகளை பெற்று கொண்டாள்.

"ஹேய் நான் ஒரு பெரிய மனுஷன் உன் அண்ணன்னு இங்க இருக்கேண்டி என் கால்லயும் விழு"

"வெவ்வேவ்வேவ்வேவே, போடா நீ தான் என் கால்லயும், எங்க அம்மா கால்லயும் விழனும் இப்படி ஒரு தேவதை உன் தங்கச்சியா கிடைச்சதுக்கு" ( யாரு இவங்க தேவதையா? கொஞ்சம் ஓவர் தான் பேட் பாவம் பர்த்டேங்க்றது நால மன்னிச்சு விட்ருவோம்)

" ஹேய் என்னால இதெல்லாம் தாங்க முடில டீ இந்த கொடுமைக்கு நான் சென்னையிலேயே இருந்துருப்பேன்"

"நிறுத்து டா ஓவரா பண்ணாத இவ்வளவு பேசறியே என் கிபிட் எங்கடா?"

"அலையாத டீ எல்லாம் இருக்கு பர்ஸ்ட் நீ கேக் கட் பண்ணு"

"ம்ம்ம் சரி" ( நம்ம ரகு எங்கனு தான தேடரிங்கா வெயிட் வெயிட் வருவாரு)

" ஹாப்பி பர்த்டே மது"

"தேங்க்ஸ் அண்ணி"

நலம்  வாழ  எந்நாளும்  என்  வாழ்த்துக்கள்

தமிழ்  கூறும்  பல்லாண்டு என்  வார்த்தைகள்

இளவேனில்  உன்  வாசல்  வந்தாடும்

இளந்தென்றல்  உன்  மீது  பண்பாடும்……

மனிதர்கள் சிலநேரம்  தடம்  மாறலாம்

மனங்களும்  அவர்  குணங்களும்  நிறம்  மாறலாம்

இலக்கணம்  சில  நேரம்  தவறாகலாம்

எழுதிய  அன்பு  இலக்கியம்  பிழையாகலாம்

விரல்களைத்  தாண்டி  வளர்ந்ததைக்  கண்டு

நகங்களை  நாமும்  நறுக்குவதுண்டு

இதில்  என்ன  பாவம்  எதற்கிந்த  சோகம்  கிளியே ...

கிழக்கினில்  தினம்  தோன்றும்  கதிரானது

மறைவதும்  பின்பு  உதிப்பதும்  இயல்பானது

கடலனில்  உருவாகும்  அலையானது

விழுவதும்  பின்பு  எழுவதும்  மரபானது

நிலவினை  நம்பி  இரவுகள்  இல்லை

விளக்குகள்   காட்டும்  வெளிச்சத்தின்  எல்லை

ஒரு  வாசல்  மூடி  மறு  வாசல்  வைப்பான்  இறைவன் ...

(கரெக்ட் கரெக்ட் பாடுனது நம்ம ரகுவே தான்)

கையில் கிதாருடன் அவன் மாடியில் இருந்து இறங்கி வந்து பாட, அனைவரும் அவன் குரலில் மெய் மறந்து போயிருக்க, மதுவிற்கு மட்டுமே அந்த பாடலின் உள்ளர்த்தமும் அவன் தனக்காக சொல்ல வந்த செய்தியும் புரிந்தது.

வன் அன்பில் திளைத்தவள்,கண்களின் ஓரம் ஈரமாக அவனை இமைக்காமல் பார்த்து நின்றாள். பிரெண்டே இப்படின்னா நம்ம ரகுவோட ஹீரோயின்? பாட்டில ஐஸ்கிரீம் மாதிரி கரைஞ்சு உருகி ஒரு வழியா தன்ன சரி பண்ணிக்கிட்டு நிற்க அப்பப்பா....

"ஹாப்பி பர்த்டே அம்மு" என்றவன் ஒரு பெரிய கிப்டை அவள் முன் எடுத்து வந்து வைத்தான். என்ன என்பது போல் அவனை பார்த்தவள், ஆர்வமாக அதை பிரித்தாள்.

அவளும் அவனும் கை கோர்த்த படி நின்று ஒருவரை ஒருவர் பார்த்து சிரிப்பது போல் தத்ரூபமாக பென்சில் ஸ்கெட்ச் என்பார்களே அந்த பாணியில் வரைந்திருந்தான். சாதரணமாக அல்ல அவர்களின் சிறு வயது படத்தை...

"ரொம்ப தேங்க்ஸ் டா புஜ்ஜி" என்றால் கண்களில் ஆனந்த கண்ணீருடன்

"ஷ்ஷ்ஷ்ஷ், இனி எப்பவும் நோ டியர்ஸ்"

"ம்ம்ம் இது ஹாப்பி டியர்ஸ் டா" என்று புன்னகைத்தவள், மேகாவையும் வா என அருகில் அழைத்து இருவரையும் அனைத்து கொண்டாள்.

"அப்படியே மூணு பெரும் இங்க பாருங்க" என்று திவாக்கர் அந்த அழகான தருணத்தை தன் கேமராவில் பதித்து கொண்டான்.

"மத்த்தூ, நானு என்ன மட்டு உட்டுட்ட போ" என்று ப்ரிஷன் கைகளை நீட்டவும் அவனை தூக்கி செல்லம் கொஞ்சி கன்னத்தில் முத்தமிட்டாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.