(Reading time: 39 - 78 minutes)

 

" காதலை சொல்லாமல் இருக்குறதும் கொடுமைதானே ஜானு ? " என்றான் . அவன் கேள்வியில் அவனை ஏறிட்டவள் , வழக்கம் போல அவன் பார்வையின் பொருள் அறியாதவளாய்,

" ம்ம்ம் காதலே கொடுமைதான் " என்றாள்.

" அய்யே.... அப்பரும் ஏன் ஸ்னேஹா இந்த பாட்டுல ஜாலியா டான்ஸ் ஆடினாங்க ? "

" ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்? கொடுமைன்னு நீங்களே ஆரம்பிச்சுட்டு இப்போ அப்படியே என் கிட்ட திருப்பி விடுறிங்களா ? "

" ஹ ஹா ஹா ஆமா இதைத்தான் எங்க ஊருல சுட்ட தோசையை திருப்பி போட்டு சுடுறதுன்னு சொல்வாங்க"

" நல்லா சொன்னாங்க போங்க "

" ஆனா காதலை சொல்லாமல் இருக்குறதும் தப்புதான் ஜானகி . அது எவ்வளோ பெரிய வலின்னு எனக்கு தெரியும் " அவன் குரலில் உண்மையிலேயே வலியை உணர்ந்தவள்,

" நீங்க லவ் failure ah  " என்று கேட்டுக்கொண்டு நாக்கை கடித்து கொண்டாள்.

" அப்படி சொல்ல முடியாது ஆனா அப்படிதான் “

" தெளிவா குழப்புறிங்க ரகு ! "

"ஹ்ம்ம் முன்னலாம் லவ் சொல்ல தைரியம் இருந்தா போதும் .. ஆனா இப்போலாம் நல்ல டைமிங் வேணும் போல .. ஆனா என்ன பண்ணுறது ஜானகி ஒரே நேரத்துல ஒருத்தர் மேல ரெண்டு பேருக்கு காதல் வரக்கூடாதுன்னு ஏதும் சட்டம்மா?"

" இப்போ குழப்பமாகவே குழப்புரிங்க ரகு  "

அதற்குள்  அடுத்த பாடல் ஒலித்தது .. ( இந்த பாடலின் எல்லா வரிகளும் நான் நம்ம ரகுகாக டெடிகெட் பண்றேன். ஸ்டார்ட் மியுசிக் )

வெண்ணிலா இரு வானிலா நீ

நண்பனே அறியாமலா நான்

கண்ணே கண்ணே காதல் செய்தாய்

காதல் என்னும் பூவை நெய்தாய்

நண்பன் அந்த பூவை கொய்தால்

நெஞ்சே நெஞ்சே நீயென் செய்வாய்

( வெண்ணிலா)

மழை நீரில் வானம் நனையாதம்மா

விழி நீரில் பூமுகம் கரையாதம்மா

எனைக் கேட்டு காதல் வரவில்லையே

நான் சொல்லி காதல் விடவில்லையே

மறந்தாலும் நெஞ்சம் மறக்காதம்மா

இறந்தாலும் காதல் இறக்காதம்மா

( வெண்ணிலா)

இருக்கின்ற இதயம் ஒன்றல்லவா

எனதல்ல அதுவும் உனதல்லவா

எதை கேட்ட போதும் தரக்கூடுமே

உயிர் கூட உனக்காய் விட கூடுமே

தருகின்ற பொருளாய் காதல் இல்லை

தந்தாலே காதல் காதல் இல்லை

( வெண்ணிலா)

அந்த அப்பாடல் முடியும்வரை அமைதியாக இறுகிய முகத்துடன் காரை செலுத்திய ரகுவை விநோதமாக பார்த்தாள் ஜானகி . ( என்னாச்சு ரகுவுக்கு ? )

" ரகு  "

" நான் ஒரு பொன்னை காதலிச்சேன் ஜானகி..பார்த்த உடனே புடிச்சு போச்சு. ஆனா பிடிச்சது எனக்கு மட்டுமில்ல இன்னொருதருக்கும்தான் . அந்த இன்னொருத்தர் தன் காதலை சொல்ல, அந்த பெண்ணின் மனசுல முதலில் இடம் புடிச்சது அவர்தான். லைப் இஸ்  எ ரேஸ் நு  நண்பன் படத்துல சொல்லுவாங்களே , அந்த மாதிரி என் லைப் ல காதலும் ஒரு ரேஸ் தான் . நான் லேட்டா வந்துட்டேன் . அதுனாலே என் காதலும் தோத்துடுச்சு"

" அப்போ அந்த பொண்ணு ? "

"  மனசுல அந்த பையனை சுமந்துகிட்டு வாழுறா ! "

" அப்போ நீங்க மட்டும் ஏன் அவளை நினைச்சுகிட்டு இருக்கீங்க ? மனசை மாத்திக்க வேண்டியதுதானே ? "

கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் ஆவேசமென அவள் புறம் திரும்பியவன் , அவளை எவ்வளவு பாதிக்கும்  என்று யோசிக்காமலே வார்த்தையை விட்டான். ( ஆனா இட்ஸ் ஓகே ரகு ... ஜானகிக்கு இந்த மாதிரி அதிர்ச்சிகள் அவசியம்தான் ..நான் உங்களுக்கு சப்போர்ட் பண்ணுறேன் )

சட்டென அவள் புறம் திரும்பியவன்

" இதை நீ சொல்லுவேன்னு நான் எதிர்பார்க்கல ஜானகி. உயிரோட இல்லாதபோதும் ஸ்ரீ ராமை நினைச்சுகிட்டு நீ வாழும்போது, நான் விரும்புற பொண்ணு உயிரோட கல்யாணம் ஆகாம இருக்கும்போது நான் அவளை  நினைச்சுகிட்டு இருக்க முடியாதா? "

அவனின்  பதில் அவளுக்கு அதிர்ச்சியை தந்தது. அவன் கேட்ட விதம் அவளை காயப்படுத்தினாலும் அதில் இருந்த உண்மை அவளை சுட்டது. அதே நேரம், இவனின் காதலை நிராகரித்த பெண் யாரென்ற கேள்வியும் எழுந்தது. 

ரகுராம் கேட்பதும் நிஜம்தானே ? காதலிக்க காலனின் உதவியும் தேவைதானோ ? என்ன ஒரு சங்கடமான சூழ்நிலை இது .? காதல் சொல்ல கொஞ்சம் நேரம் ஆனா கூட அந்த காதல் கை நழுவி போய்விடுமா ? ரகுவின்  குரலில் தெரிந்த துயரும் தவிப்புமே சொல்லுதே எந்த அளவிற்கு அந்த பெண் மீது காதல் வெச்சிருக்கிறார்ன்னு. யாரந்த பெண் ? எங்கிருக்கிறாய்  பெண்ணே ? உனக்கு திருமணம்  ஆகலைன்னு சொல்றாரே ? அப்பறம் என்ன தடை? தன்னிலையை மறந்து அவள் அவனின் நண்பனுக்காக வருந்தினாள்.

 வேகத்தில்  வார்த்தைகளை விட்டவன், ஜானகியின் நீண்ட மௌனத்தை கண்டு நிதானம் அடைந்தான். அவளின் முகத்தை பார்த்தவனுக்கு நிச்சயம் அதில் கோபம் தென்படவில்லை என்பது ஆச்சர்யமாகத்தான் இருந்தது.

" ஜானு "

" ...."

"ஜானகி "

" ம்ம்ம்ம்ம்"

" ஐ எம் சாரி ...மன்னிச்சிரு.. உன்னை கஷ்டபடுதுற மாதிரி பேசிட்டேன் "

" அதை  விடுங்க ரகு நான் தப்பா எடுத்துக்கல.... ஆமா நீங்க சொன்ன மாதிரி உண்மையிலேயே அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகலையா?  "

" இல்லை ஆகவும் ஆகாது "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.