(Reading time: 39 - 78 minutes)

 

" மா நித்து நீ எப்போ வந்த? "

" ஒரு நீலாம்பரி ப்ராஜெக்ட் பண்ண போறோம் .. ப்ராஜெக்ட் அண்ணாவுக்கு சொந்தம். இதுக்கு மேனேஜர் நீ . உன் துணை நான் "

என்றாள் நித்யா ....

" ப்ரொஜெக்டா ? "  என அனைவரும் கேட்க ,

கிருஷ்ணா தன் பேச்சை தொடங்கினான்.

" உங்க எல்லாரையும் கூப்பிட்டது என் பெர்சனல் லைப் பத்தி பேசுறதுக்கு ... நானே நெனைச்சு பார்க்கல இப்படி ரகசியம் காத்த என் கதையை நானே சொல்ல போறேன்னு ... பட் இதை ஏன் நான் சொல்லனும்னா, நாமெல்லாம் ஒரே பாமிலி..அப்படிதான் நான் பார்க்குறேன் . ஒருத்தர்கொருத்தர் எதையும் மறைக்கிறதுக்கு ஒன்னும் இல்ல " என்றபடி கொஞ்சம் அமைதி காத்தான் கிருஷ்ணன் .

" ரிலாக்ஸ் கிருஷ்ணா... எதுவா இருந்தாலும் நாங்க எல்லாரும் உனக்குத்தான்  சப்போர்ட் பண்ணுவோம் "

" தேங்க்ஸ் அர்ஜுன் . எனக்கு தெரியும் டா ... நீங்க எல்லாரும் எப்பவும் என்னோட இருப்பிங்க "

" அச்சோ அண்ணா சீன் தாங்கலை ...நீங்க இவ்வளோ பீலிங் ல கதையை சொல்ல வேணாம் ..நான் ஸ்டார்ட் பண்றேன் " என்ற நித்யாவை அனைவரும் புன்னகையுடன் பார்த்தனர். அந்த அறிமுகப்படலத்துலேயே அனைவரும் நித்யாவின் குறும்புத்தனத்தை தெரிந்து வைத்திருந்தனர்.

"" இயோங் இயோங்" என்று சுருள் வளையம் காற்றில் வரைந்தாள் நித்யா. ( ஓஹோ பிளாஷ் பெக் சொல்ல போறாங்களாம் )

கிருஷ்ணன்- மீராவின் காதல் கதையும் சாலை விபத்தையும் நித்யா சொல்லி முடிக்க, அதன் பிறகு கிருஷ்ணனே தொடர்ந்தான். மீராவால்  குழந்தை பெற்று கொள்ள முடியாது என்பதை மறைத்தவன், சென்னை வந்த பிறகே அவர்களுக்குள்ளே கொஞ்சம் கருத்து வேறுபாடு வந்தது என்றும், அவளை சமாதானம் செய்ய வேண்டும் என்றான் கிருஷ்ணன். கிருஷ்ணனின் கதை அங்கு இருந்தவர்களில் நித்யாவிற்கு மட்டுமே தெரியும் என்பதால் அவளும் முகத்தில் எந்த மாற்றமும் காட்டாமல்  இருந்தாள். மனதிற்குள் கிருஷ்ணனை எண்ணி பெருமை கொண்டாள் நித்யா. கிருஷ்ணனின் காதலில் உள்ள உண்மையான பிரச்னையை அறியாததால் அனைவரும் அவனுக்கு positive ஆகா ஆறுதல் கூறினர்.

நம்ம ஜானகி கூட " கவலை படாதிங்க கிருஷ்ணா சார், அக்கா மனசு மாறும் என்னால முடிஞ்ச அளவு நானும் நித்யா சுபாவுக்கு ஹெல்ப் பண்றேன்" என்றாள்.

அவள் வார்த்தைகளை கேட்ட கிருஷ்ணன் நன்றியுடன் பார்க்க, ரகுராமோ அவளை காதலுடன் பார்த்தான்.. அதை மூன்று  ஜோடி கண்கள் கண்டுகொண்டன ( அது யாருன்னு அடுத்த எபிசொட் சொல்றேன் )

ன்றிரவு

வேலையை முடித்துவிட்டு  சோர்வாக வந்த மீரா , கதவு தாளிடாமல்  இருப்பதை பார்த்து கிருஷ்ணன்தான் உள்ளே இருக்கிறான் என்று எண்ணி  கோபத்துடன்  உள்ளே நுழைந்தாள்.

" என்ன நெனச்சுட்டு இருக்கீங்க மனசுல ? " என்று வினவியவள் அங்கு நித்யாவை எதிர்பார்க்கவில்லை என்பது அவள் முகத்தில்  அப்பட்டமாக தெரிந்தது. ஓடி வந்து அவளை கட்டிக்கொண்ட நித்யா

" உன்னைத்தாண்டி நெனைச்சிட்டு இருக்கேன் என் செல்ல நீலாம்பரி " அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.

" ஹே நித்யா எப்போ வந்த நீ ? " என்றவள், கன்னத்தை தடவிக்கொண்டே " நீ இன்னும் மாறவே இல்ல "

" ஆமா நான் எதுக்கு மாறனும் ?"

" மாறாதே தாயே மாறவே வேணாம் . சரி எப்போ வந்த ? "

" இப்போதாண்டி செல்லம் . "

" என்ன திடீர்னு " என்று கேட்டவள்  தன் தோழியை கண்ட மகிழ்ச்சியில் கண் கலங்கினாள்.

" சென்னையில இடி மழையாமே ..அப்போவே தெரியும் நீதான்  அழுது வடிஞ்சுகிட்டு  இருப்பேன்னு " என்று அவள் கண்ணீரை துடைத்தாள்.

" ஹே சொல்லு டீ " என்று மீரா சொல்லும்போதே கிருஷ்ணன் உள்ளே வந்தான் . வந்தவன் வந்தது தான் . அப்படியே அசந்துவிடான் . பேபி பிங்க் நிற புடவையில், சோர்வாய் இருந்தாலும் கலைந்த ஓவியமாய் அழகாகவே இருந்தாள் மீரா. அவளை கண்டு உல்லாசமாய் விசில் அடித்தவன், விழுங்குவதை போல் அவளை  பார்த்து வைக்க , இன்ப அவஸ்தையில் நின்றிருந்தாள் மீரா .

" என்ன நித்யா. ரொம்ப அழகா இருக்க இன்னைக்கு " என்றபடி அவன் மீராவை பார்த்து வைத்தான் . ( கள்ளன்... என்னை பார்த்து சொல்ல வேண்டியதை ஜாடை மாடயை சொல்றானாம் என்று மனதிற்குள் செல்லமாய் திட்டினாள் மீரா )

" எல்லாம் உங்களை பார்த்த சந்தோசம் தான் " என்று மீராவை பார்த்து கொண்டே அவளும் சொல்ல ( யு டூ புருட்டுஸ் என்றபடி ஒரு பார்வை பார்த்தாள் மீரா .

" எனக்கொரு பாட்டு  தோணுதே பாடவா நித்யா " என்றவன் இப்போதும் மீராவையே பார்க்க , நமட்டு சிரிப்புடன் " ம்ம்ம் " என்றாள் நித்யா .

அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன் ..

 நீ என் மனைவியாக வேண்டும் என்று

ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்

 ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லி வந்தேன்

 என் ஆசை நிறைவேறுமா? என் தோழி நீயும் சொல்லம்மா..?

இதை பாடியவனின் குரலில் காதலும் தவிப்பும் கலந்திருந்ததை உணர்ந்தாள் மீரா.

 " நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் " என்று பாட நினைத்தவள் மனதிற்குள் பாடினாள் . நித்யா அதை வாய் விட்டே பாட ,

" விட்டா அண்ணனும் தங்கச்சியும் விடிய விடிய பாடுவிங்க . ஒழுங்கா சமைச்சு வைங்க பசிக்கிது " என்றவள் இம்முறை நேராகவே கிருஷ்ணனை பார்த்து சொல்லிவிட்டு துள்ளலுடன் ஓடினாள். அவளை பார்த்து கிருஷ்ணா பெருமூச்சு விட

" விடுங்கண்ணா நீலாம்பரியை மாற்றி விடலாம் " என்று ஆறுதல் சொன்னாள் இளையவள்.

..............................

( இன்னைக்கு இவ்வளோதான்... அந்த மூன்று கண்கள் யாரு ? நித்யா சுபாவுடன் சேர்ந்து என்ன பிளான் பண்ண போறாங்க ? நம்ம சந்திர பிரகாஷ் என்ன ஆனார் ? அபிராமி ஜானகி ஆபீஸ் வேலை செய்ய போறதை  தெரிஞ்சு என்ன சொல்ல போறாங்க ? அர்ஜுனன் ஜானகியை வேலை செய்ய விடுவாராபேரன்ட்ஸ் எல்லாரும் என்ன பண்ண போறாங்க ? என்பதை அடுத்த எபிசோட சொல்றேன் பாய் பாய் )

தொடரும்

Episode # 08

Episode # 10

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.