(Reading time: 7 - 14 minutes)

15. என்னுயிரே உனக்காக - சகி

ரு வாரம் எப்படி ஓடியது என்றே தெரியவில்லை.ரகு கஙஷ்மீருக்கு சென்றாகிவிட்டது.ஒவ்வொரு முறை அவன் சரணை தொடர்பு கொண்ட மாத்திரத்தில்,ரகுவின் குரலில் சுரமே இல்லாதது போல இருக்கும் சரணுக்கு!!!!அவன் ஆதித்யாவை தவிர வேறு யாருடனும் பேச விரும்பவில்லை.எப்போதாவது,ஒரு முறை நிரஞ்சனிடம் பேசுவான்.ரகுவின்,இந்த மாற்றத்திற்கு தான் தான் காரணமோ??என்று சரண் நினைத்து ஏங்கியதும் உண்டு!!!

பல்வேறு சிந்தனைகளில் மூழ்கியிருந்த நமது கதாநாயகனை அவன் அன்னை ராஜேஸ்வரியின் குரல் கலைத்தது.

"கண்ணா!"

Ennuyire unakkaga

"ம்...என்னம்மா?"

"என்னாச்சுப்பா?ஒரு மாதிரி இருக்க?"

"ஒண்ணுமில்லைம்மா!"

"எனக்கு புரியுதுப்பா!ரகு விஷயத்துல நீ பண்ணது சரியா?தப்பான்னு யோசிக்கிற சரியா?"-அவன் அதிசயித்து பார்த்தான்.எப்படி உலகில் உள்ள அனைத்து அன்னையும் தன் பிள்ளைகளின் மனதில் பட்டதை விவரித்துவிடுகின்றனர்????

"ஆமாம்மா...."-ராஜேஸ்வரி சரணின் தலையை தடவி தந்தார்.

"கண்ணா!!!!நான் தான் முதல்லயே உன்கிட்ட சொன்னேன்ல?வாழ்க்கையில கஷ்டம் வரும்போது கலங்கி நின்றால்....வாழ்க்கையை வாழுற தகுதியை நாம இழந்துவிடுவோம்...சந்தோஷத்தைவிட,கஷ்டத்தை தான் நாம சந்தோஷமா எதிர்ப்பார்க்கணும்...ஏனென்றால்...சந்தோஷம் நமக்கு வாழ்க்கையை அனுபவிக்க சொல்லுது.கஷ்டம் நம்ம வாழ்க்கையோட அனுபவத்தை சொல்லுது! புரியுதா?"

"ம்...."

"நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல தான் வந்தேன்."

"என்னம்மா?"

"அக்காக்கு திதி வருதுப்பா!!!அதுக்காக நீ ராஜசிம்மபுரம் வரணும்."-ஆதித்யா,சிறிது நேரம் ஏதோ யோசித்தான்.

"வரேன்ம்மா!"-ராஜேஸ்வரியின் முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது.

"ஆனா,அந்த வீட்டு படியை ஏற மாட்டேன்.நான் தனியா தான் தங்குவேன்."

"ஏன்?"

"உனக்கு காரணம் தெரியாம இருக்காது....நான் வரமாட்டேன்."

"சரி கண்ணா!!!நீ வந்தால் போதும்!சரி...சாப்பிட வா!"

"பசிக்கலைம்மா!"

"வாப்பா!"

"வேண்டாம்மா..."

"அப்பறம்...என் மருமகக்கிட்ட சொல்லிடுவேன்.பார்த்துக்கோ!"

"சரி தான்...இருங்க உங்களுக்குள்ள ஏதாவது சண்டையை மூட்டி விடுறேன்..."

"மது என்ன சாதாரண பொண்ணா?அவ தங்கம் மாதிரி!"

"ம்...அம்மா! என் அம்மாவையே அந்தப் பொண்ணு கவுத்துட்டா!"

"வாடா!"

"சரிம்மா...நீ போ நான் குளிச்சிட்டு வரேன்."

"ம்..."

அன்றாடம் போகும் நமது பாதையில்,என்றாவது மாறுபாடு வருமா???

சிலர்,கூறுவர் என் பாதையானது,நான் வகுத்தது.அதில்,எந்த சலனமும் வராது என்று!!! ஆனால்,அப்படியிருப்பவர்களை நன்றாக கவனியுங்கள்...அவர்கள் தமக்கு துன்பம் வரும் போது அவர்கள்,'எனக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது?'என்று புலம்புவதுண்டு!!!!இன்னும் கடவுள் நம்பிக்கை இருப்பவர் என்றால் சுத்தம்....தான் செய்த தவறை குறிக்காமல் விதியின் மீது பழி போடுவர்.

சம்பந்தம் இல்லாமல்,இதை நான் கூற காரணம் இருக்கிறது...ஆனால்,அது தாமதமாகவே தெரிய வரும்.

ராஜசிம்மபுரம்.....

ஆதித்யா உண்மையில் பிடிவாதக்காரன் தான்....

அவன் கூறியதை போலவே தனியாக தான் தங்கினான்.ஆனால்,அவனோடு,அவன் அன்னையும்,ரம்யாவும்,மதுவும் தங்கினார்கள்.(என்னடா!நெருப்பு இருக்கும் இடத்திலே பஞ்சை துணைக்கு வைக்கிறேனே! என்று உங்களுக்கு யோசிக்க தோன்றும்!) இதையே தான் மதுபாலாவின் தந்தையும் யோசித்தார்.

ஆனால் ராஜேஸ்வரி,

"அண்ணா! மதுவுக்கு எந்த பிரச்சனையும் வராது.நான் இருக்கிறேன்,கொஞ்ச நாள் அனுப்புங்கண்ணா!" என்றதால்,அவர் சம்மதித்தார்.(இந்த இடத்தில் நிரஞ்சன் எங்கே என்ற கேள்வி உதித்திருக்கும்.அவன்,சென்னையிலே இருந்தான்.காரணம்,உங்களுக்கு தெரியாமல் இருந்திருக்காது....ஆதித்யாவின் அந்தரங்க தளபதி ஆயிற்றே! அதான்...அவனை அங்கேயே விட வேண்டியதாயிற்று.ஆதித்யாவையும்,மதுவையும் ஒன்றாக இருக்கவிட்டு!!!நிரஞ்சனையும்,பவித்ராவையும் பிரித்துவிட்டீர்களே!!!என்று என்னை கோபித்துக் கொள்ள வேண்டாம்.விரைவிலே!!!அவன் ராஜசிம்மபுரம் வருவான் என்று உறுதி அளிக்கின்றேன்...)

ஆதித்யா வந்தப்பிறகு,ராகுலும் அவனோடு தான் தங்குவேன் என்று அடம் பிடித்து வந்து சேர்ந்தான்.

"ராகுல்...."-மதுவின் குரலில் கலைந்தான் நமது செல்லப்பிள்ளை.

"என்ன மது?"

"என்ன பண்ணிட்டு இருக்க?"

"விளையாடிட்டு இருக்கேன்."

"என்னது?"

"ஆங்கிரி பார்ட்ஸ் கேம்."

"சரி தான்.யார் வாங்கி தந்தா?"

"ஆதித்யா..."

"உன் ஆதி இருக்கானே...நல்லதையே வாங்கி தர மாட்டான்.அதை வை கண் வலிக்கும்!"

"கடைசி லெவல் முடிச்சிட்டுறேன்."

"அதுல்லாம் முடியாது!வா!நேரமாகுது பார்...வந்து பால் குடிச்சிட்டு தூங்கு வா!"

"பாலா? வேணாம்"

"அதுல்லாம் இல்லை...வளர்கிற பையன் பால் தான் குடிக்கணும்!"

"ஓ...அப்போ ஆதியும் பால் குடித்து தான் வளர்ந்திருப்பானோ??"-அவன்,கேட்ட விதத்தில் மது சிரித்தே விட்டாள்.(வழக்கமா எல்லா லவ் ஸ்டோரி படி ஹீரோயின் சிரிச்சா ஹீரோ அங்கே ஆஜர் ஆயிடணும்.இங்கேயும் அதே விஷயம் தான் நடக்க போகுது!)ஆதித்யா அங்கே வந்து சேர்ந்தான்.

"ம்...என்ன நடக்குது இங்கே?"

"பாரு....ஆதி...மது பால் குடிக்கணும்னு சொல்றா!"

"ஐயயே..."-என்று முகம் சுளித்தான் சரண்.

"பார்...ஆதிக்கும் பால் பிடிக்காது!"

"ப்ச்....என்ன நீங்க?அவன் தான் குழந்தைன்னா நீங்களுமா?"-ஆதித்யா,விசித்ரமாய் அவளை பார்த்தான்.

"என்ன?"

"நீ எப்போ இருந்துடி என்னை வாங்க போங்கன்னு கூப்பிட ஆரம்பிச்ச?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.