(Reading time: 7 - 14 minutes)

 

"...அது...வந்து."-அவள்,தடுமாறியதை அழகாய் இரசித்தான் சரண்.

"மது எனக்கு தூக்கம் வருது!"

"ம்...பால் குடிச்சா தான் தூங்க விடுவேன்."

"ம்...அப்போ ஆதி ரூம்க்கு எடுத்துட்டு வா! அவனுக்கும் சேர்த்து..."

"டேய்!"

"பரவாயில்லை....குடி ஆதி!"

"சரி ராகுல்....எடுத்துட்டு வரேன்."

சிறிது நேரம் கழித்து...

அவள் பாலோடு ஆதித்யாவின் அறைக்கு சென்றாள்.ஆனால்,அவர்கள் இருவரும் உறங்கிவிட்டிருந்தனர்.

அவள் தான் கொண்டு வந்த இரு கண்ணாடி டம்ளர் கொண்ட தட்டை மேசை மீது வைத்தாள்.இருவரும்,உருவத்தில் மட்டும் தான் வெவ்வேறு என்று தோன்றியது அவளுக்கு.தன் மனதுள்ளே,

"இரண்டும் சின்ன குழந்தைகள்."-என்று கூறி ராகுல் அருகே சென்று அவனுக்கு போர்த்திவிட்டாள்.பின்,தயக்கத்துடன்,ஏதோ எண்ணியவள்,வேண்டாம் என்பது போல திரும்பினாள்.அவளை,செல்ல விடாமல்,ஏதோ தடுத்தது.ஆதித்யாவின்,அருகில் வந்தமர்ந்தாள்.அவன்,தலை கேசத்தை மெல்ல வருடி தந்தாள்.

"மனதில்,என்ன கஷ்டம்,இன்பம்,துன்பம்,சோகம் எல்லாம் இருந்தாலும் எல்லாத்தையும் தன்னுள்ளே புதைத்து விடுகிறான்.அதனால் தான் மற்றவர் பார்வைக்கு இரக்கமற்றவன் போல தெரிகிறான்."-என்று எண்ணினாள்.அவள்,கண்கள் இலேசாக கண்ணீர் சிந்தியது.

அங்கே சில்லென்று வீசிய பனிக்காற்றானது,அவர்களுக்கு இடையே மௌனமாய் தூது சென்றது.அவன்,உறக்கம் கலையாதவாறு அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு வெளியே வந்தாள் மதுபாலா.

றக்கம் வராமல் மாடியில் உலவிக் கொண்டிருந்தார் மஹாதேவன்.

மனதில் ஏதோ கனமான பொருளை வைத்து தைத்தாற் போன்ற உணர்வு....

தான் ஆசையோடு ஈன்ற புதல்வன் தன் அருகே இருந்த போதிலும்,அவனை பார்க்கக் கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டேனே!'என்று கலங்கினார் அவர்.சிறு வயதில் உறக்கத்தில் கூட அப்பா என்று தானே கூறிக் கொண்டிருப்பான்.இப்போது?வாழ்வின் முதல் விரோதியாக பாவிக்கின்றானே!!!ஐயோ...சாரதா எனக்கு ஏன் இந்த தண்டனையை தந்துவிட்டு போனாய்???ஆதித்யாவின் மனம் சிறிதும் மாற்றம் பெறாதா?"செய்யாத குற்றத்திற்கு இன்னும் எத்தனை வருடங்கள் தண்டனை?

"ஐயா..."-அவரின் சிந்தனைகளை நீண்ட நாட்களாய் அவ்வீட்டில் பணி புரிந்த குமாரசாமியின் குரல் கலைத்தது.

"என்ன?"

"ராஜேஸ்வரி அம்மா போன் பண்ணி இருக்காங்க."

"வரேன்."

அவர் வந்து தொலைபேசியை எடுத்துப் பேசினார்.

"சொல்லு ராஜி..."

"............"

"இருக்கேன்மா!"

"............."

"ஒண்ணுமில்லைம்மா!"

".............."

"சரண் சாப்பிட்டானா?"

".............."

"சரிம்மா...வேலை இருக்கு,அது இருக்குன்னு உடம்பை கெடுத்துப்பான் பார்த்துக்கோ!"

".........."

"வைச்சிடுறேன்."-என்ன நடக்கிறது இங்கே ஆதித்யா தன் முதன்மை விரோதியாக இவரை பாவிக்கிறான்.இவரோ,அவன் மீது அளவுக்கடந்த அன்பை வைத்திருக்கிறார்?என்ன நடந்தது இவர்களுக்குள்?என்று தானே கேட்க வருகிறீர்கள்?சொல்லிகிறேன்....

24 வருடங்களுக்கு முன்னால்...(என்னடா!12 வருட கதைன்னு சொல்லிட்டு இப்போ 24 வருஷம்ன்னு சொல்றேன்னு நினைக்கிறீர்களா?பயப்பட வேண்டாம்....ராஜேஸ்வரி எப்படி ஆதித்யாவின் வாழ்வின் நுழைந்தார் என்று தெரிய வேண்டாமோ? ரகுவிற்கு வந்த அதே நிலைமை தான் மஹாதேவனுக்கும் வந்தது.)ஆனால்,சாரதா ராஜேஸ்வரியை மனதார ஏற்றுக் கொண்டார்.ஆதித்யா அப்போது தான் பிறந்திருந்தான்.அவன்,நாவில் இருந்து வெளிவந்த அம்மா என்ற வார்த்தை ராஜேஸ்வரிக்கு சொந்தமாயிற்று.ஆம்...அவன்,ராஜேஸ்வரியை தான் முதலில் அம்மா என்றழைத்தான்.

அதைப் பார்த்த சாரதா,

"ராஜி...பய ஐஸ் வைக்க ஆரம்பிச்சிட்டான் பார்த்துக்கோ!"-எந்தத் தாய்க்கு இந்த மனம் வரும்?சாரதாவிற்கு இருந்ததே!!!!!

இப்போது 12 வருட கதைக்கு வரலாம்......

அன்று

 ஆ....அதுக்குள்ள ஃப்லாஷ் பேக் சொல்லிடுவோமா???அது அடுத்த வாரம் தான் திரிய வரும்......

தயவு செய்து கோபப்பட வேண்டாம்...

தொடரும்...

Go to EUU # 14

Go to EUU # 16

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.