(Reading time: 11 - 22 minutes)

16. என்னுயிரே உனக்காக - சகி

"ம்மா?"

"என்னடா?"

"அம்மா,குரு,அபி எல்லாம் எங்கே ?ஆளையே காணோம்?"

Ennuyire unakkaga

"அவங்க ராஜசிம்மபுரத்திற்கு போயிருக்காங்க..."

"எப்போ வருவாங்க.?"

"2 நாள்  ஆகும்.செல்லம்!"

"ம்...அப்பா எங்கே?"

"அப்பா! உன் மாமாக்கூட போயிருக்கார்.ராத்திரி வந்துவிடுவார்."

"என்ன விஷயமாம்?"

"ரம்யாக்கு உடம்பு சரியில்லையாம் அதான்."

"சரிதான் போம்மா!எனக்கு போர் அடிக்குது!"

"நீ தூங்கு...நான் அப்பா வந்ததும் எழுப்புறேன்!"

"நிஜமா?"

"நிஜமா!"

"அப்போ வா!"

"நான் எதுக்கு?"

"எதாவது பாட்டு பாடி தூங்க வை!"

"சரி வா!"-அவனை அமைதியாக தூங்க வைத்தார் சாரதா.அவன் உறங்கிய பின்,அவனுக்கு போர்வையை போர்த்திவிட்டு வெளியே வந்தார்.அவன் எவ்வளவு நேரம் உறங்கி இருப்பான் என்று தெரியாது.திடீரென்று அவனுக்கு விழிப்பு வந்தது.கடிகாரத்தை பார்த்தான் மணி 1 என்று காட்டியது.அருகில் தன் தாய் இல்லை என்பதை அவன் கண்கள் கண்டிப்பிடித்துவிட்டது.தீடீரென்று,'ஆ...'அலறல் சத்தம் மட்டும் கேட்டது அவனுக்கு.அவசரமாக சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினான்.அங்கே அவன் கண்ட காட்சி அவன் உயிரையே உலுக்கிவிட்டது.ஆம்....சாரதாவின் நெஞ்சில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்தது.அவரை சுட்டு வீழ்த்திய துப்பாக்கியோ மஹாதேவனின் கையில் இருந்தது.

"அம்மா!"-அலறியப்படி சாரதாவை தாங்கினான் சரண்.

"அம்மா!என்னாச்சும்மா?"

"அம்மா இல்லாம தைரியமா இருப்பியாடா செல்லம்?"

"அம்மா ஏன்மா இப்படி பேசுற?வா...ஹாஸ்பிட்டல் போகலாம்!"

"வேண்டாம் கண்ணா!என் கடைசி மூச்சு நான் வாழ்ந்த இந்த வீட்டிலையே போகட்டும்.இனி,அபியை,குருவை,ராஜியை நீதான் பத்திரமா பார்த்துக்கணும்!"

"அம்மா!"

"நான் போக போறேன் கண்ணா!இனி,ராஜி தான் உன் அம்மா...நீ எல்லாருக்கும் சவாலா இருக்கணும்."-தன் கைகளில் இருந்து இரு வளையல்களை கழற்றி,

"இது உன் மனசுக்கு பிடிச்ச,உன் கஷ்டத்திலையும்,சந்தோஷத்துலையும் சம பங்கு வகிக்கிற ஒருத்தி வருவா!அவளுக்கு என் ஆசீர்வாதத்தோட,நான் கொடுத்தேன்னு அவ கையில போட்டு விடு!"என்று அவனிடம் தந்தார்.

"எனக்கு பயமா இருக்குமா!இப்படிலாம் பேசாதே!"

"இல்லை கண்ணா..."-அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவர் உயிர் பிரிந்தது.

"அம்மா!"

".........."

"அம்மா!"-உடைந்துப் போனான் ஆதித்யா சரண்.அதுவரை தன் வாழ்வில்,உடனிருந்த ஒளியானது அன்று அணைந்துவிட்டது.அதுவரை தன் வாழ்வில் ஒளிர்ந்த ஆதவனானவன் அஸ்தமித்தான்.அதுவரை தன்னை பரிசுத்தமாக்கிய கங்கை நீரானது,வற்றி விட்டது என்பதை போல உணர்ந்தான்.

நாட்கள் கழிந்து ஈம சடங்குகள் எல்லாம் பூர்த்தியாயிற்று.அன்று,

"ஆதி!"-பரிவோடு அழைத்தார் மஹாதேவன்

".........."

"ஏன்பா பேச மாட்ற?"

"போதும் நிறுத்து உன் நாடகத்தை!"-அவன் குரலில் தெரிந்த கோபத்தில் அவர் அதிர்ந்தே விட்டார்.

"ஆதி!"

"இனி என்னை அப்படி கூப்பிடாதே!நீயெல்லாம் மனுஷனா?என் அம்மா அப்படி என்ன துரோகம் பண்ணாங்க??நீ இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு வந்து நிற்கும் போது,மனசார தானே ஏத்துக்கிட்டாங்க?உனக்காக தன் வாழ்க்கையே தொலைச்சாங்களே!அப்படிப்பட்டவங்களை கொல்றதுக்கு எப்படி மனசு வந்தது உனக்கு?"

"சரண்."

"என் பேர் சொல்லி கூப்பிடாதே!இனி...ஆதித்யா சரண் உன் மகன் இல்லை.உனக்கும்,எனக்கும் எந்த உறவும் இல்லை.இதுவரைக்கும் இருந்த சரண் செத்துட்டான்!இனி...உன் வாழ்க்கையோட முதல் எதிரி நான் தான்!இனி உனக்கு சிரிப்பே கிடைக்காது.உனக்கு சந்தோஷம் வரும் போதெல்லாம் அதை வேரோட சாய்ப்பேன்.வாழ்வும்,இல்லாம சாவும் வராம நரக வேதனையை அனுபவிப்ப!உன் முடிவு கடைசியில என்கிட்ட தான்!"-ஆவேசமான வார்த்தைகளை உதிர்த்துவிட்டு நகர்ந்தான் ஆதித்யா.அதன் பிறகு நடந்தவை,உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

துபாலா வரும் போது,உறக்காமல் இருந்தாலும்,உறங்கியதுப் போல நடித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளின் செயல் இதையே ஞாபகப்படுத்தியது.

மொட்டை மாடிக்கு சென்று,அங்கிருந்த நிலவிடம் இது குறித்தே ஆலோசித்துக் கொண்டிருந்தான் சரண்.

"என்னங்க?"-குரல் வந்த திசையை நோக்கி திரும்பினான்,அழைத்தது மதுதான்.

"என்னங்க...இந்த குளிர்ல இங்கே என்ன பண்றீங்க?தூங்கலையா?"

"இல்லை அம்மூ...தூக்கம் வரலை!"

"நான் உங்க ரூம்க்கு வரும்போதும் நீங்க தூங்கலைன்னு எனக்கு தெரியும்.என்னாச்சுங்க?"

"ஒண்ணுமில்லைம்மா....நீ என் கூடவே இருப்பல்ல?"

"என்னங்க நீங்க?நீங்களும்,நானும் வேற வேறயா?பிரியறதுக்கு?கடல் நீரில் நதி எப்படி கலக்குதோ!அப்படி உங்களோட கலந்தவ நான்!"-அவன்,மதுபாலாவின் தோள் மீது தலை சாய்த்தான்.அன்பு கலந்த அவளது ஆதரவான அணைப்பானது,அந்நேரத்தில் அவனுக்கு அவசியமாயிற்று!!!!

"அத்தை ஞாபகம் வந்திடுச்சா?"

"ம்...."

"உங்களுக்கு அவங்க ஞாபகம் இருக்கிற வரைக்கும் யாராலையும் அவங்களை அழிக்க முடியாதுங்க!"

"என்னமோ தெரியலை அம்மூ....இந்த ஊருக்கு வந்ததில் இருந்து அவங்க ஞாபகமாகவே இருக்கு!யாருக்கும் அப்படி ஒரு அம்மா கிடைக்க மாட்டாங்க!இது வரைக்கும் என்னை விட்டுக் கொடுத்ததே இல்லை..."-அவன்,மனநிலையை மாற்றி,

"இப்போ நீங்க பண்றதுல்லாம் பார்த்தா!என் பையனா இவன்னு கேட்பாங்க!"

"ஏன்?"

"ம்....உங்களுக்கே தெரியலை?"-அவன்,ஏதோ உணர்ந்தவனாய்,மெல்ல சிரித்தான்.

"அப்படி நான் ஒண்ணும் தப்பா பண்ணிடலையே!நான் என்ன கண்ணடிச்சேனா?கையை பிடிச்சி இழுத்தேனா?இல்லை...வேற எதாவது பண்ணேனா?சும்மா லெட்டா கட்டி தானே பிடிச்சேன்!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.