"தெரிஞ்சும் தெரியாத மாதிரி கேட்காத!"
"நான் எதையும் தர மாட்டேன்!"
"அப்போ நான் எடுத்துக்குறேன்!"
"வேணாம்....சும்மா இருங்க..."-அப்போது,அவன் அறையின் கதவருகே யாரோ நிற்பது போல தோன்றியது.அது யாரென்று அவன் அறியாமல் இல்லை.
"அம்மூ!"
"ம்...."
"நீ போய் ராகுலை எழுப்பு நான் வரேன்!"
"சரி..."-அவனது,நடவடிக்கைகள் புரியாதவாறு அவள் வெளியே செல்ல அறை கதவை திறந்தாள்.வெளியே ரம்யா நின்றிருந்தாள்.அவளை,பார்த்ததும் மதுவிற்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆதித்யாவின் பார்வையோ,'நினைச்சேன்' என்பதை போல இருந்தது.
"ரம்யா?"
"ஒண்ணுமில்லை சும்மா தான் இந்த பக்கம் வந்தேன்!"-ஆதித்யா அவளை வம்பிழுக்க,
"அவ,உன் பேரை தானே சொன்னா!!!நீ எதுக்கு பதறுகிறாய்?"என்றப்படி எழுந்து வந்தான்.
"இல்லை...அது...வந்து!"
"இங்கே உனக்கு என்ன வேலை?"
"அது.."
"நாங்க என்ன பண்ணிட்டு இருக்கோம்னு பார்க்க வந்தியா?"
"............."
"பதில் வரலை!"
"ஆமா...இவ ரூம்ல உனக்கு என்ன வேலை?"
"ஏய்...இந்த வீடு என்னோட வீடு!இவ எனக்கு சொந்தமானவ!!!இங்கே நான் என்ன வேணாலும் செய்வேன்.உனக்கு கஷ்டமாக இருந்தால்,நீ மும்பைக்கே கிளம்பலாம்."
"என்னங்க அமைதியா இருங்க!"-அவனை சமாதானம் செய்தாள் மதுபாலா.
"இதுக்கெல்லாம் வருத்தப்படுவ சரண்."
"நீ இன்னும் போகலையா?"-ரம்யாவிற்கு அதற்கு மேல் அங்கே இருக்க முடியாது என தோன்றி அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
"என்ன நீங்க?இப்படியெல்லாமா பண்றது?"
"ஆனா,நீயெல்லாம் சத்தியமா திருந்தவே மாட்ட,அவ எத்தனை முறை உன்னை தப்பா பேசி இருக்கா!உன்னை தலை குனிய வச்சிருக்கா!நீ கருணையை அப்படியே பொழியுற!"-மதுபாலா சிறிய சிரிப்பை தந்துவிட்டு,
"எனக்கு ஒண்ணுனா நீங்க இருக்கீங்க,அப்பறம் நான் ஏன் ரம்யா மேல கோபத்தை காட்டணும்?நீங்க இருக்கும் போது அதற்கு அவசியம் என்ன இருக்கு?"
"எப்போ பார்த்தாலும் இதையே சொல்லு!"-என்று குழந்தைத்தனமாக முகத்தை திருப்பிக் கொண்டான் ஆதித்யா.
காதலில் உதிக்கும் நம்பிக்கையானது,மனவுறுதி தன்னை வானுயர வைக்கும்.என்றும் ஒருவருக்கொருவர் மற்றவர்களுக்காக எந்த நிலையில் தனது ஆசாபாசங்களை விட்டுக் கொடுக்கிறார்களோ!அங்கே....காதல் என்னும் சூரியன் பிறக்கிறான்.காதல் என்னும் சூரியனும்,மனம் என்னும் மழைத்துளியும் சேரும் பொழுதினில் அங்கே அன்பு என்னும் வானவில் பிறக்கின்றது.
"சரி...நீங்க போய் குளிச்சிட்டு வாங்க!"
"ம்...ராகுலை எழுப்பி சாப்பிட எதாவது கொடு!"
"ம்...சரிங்க."-மதுபாலா ராகுலை எழுப்புவதற்காக சென்றாள்.
"ராகுல்."
"..........."
"செல்லம்!"
"............"-அவன் எழுந்த பாடாய் இல்லை.மது அவனருகே அமர்ந்து,அவன் நெற்றியை தொட்டுப் பார்த்தாள்,நெருப்பாய் தகித்தது.
"ராகுல்..."
"ம்..."
"என்னாச்சுடா?"-பதறிவிட்டாள் அவள்.
"கண்ணை திறக்க முடியலை மது!"
"செல்லம்...என்ன பண்ணுதுடா?"
"ஒரு மாதிரி இருக்கு!"-அவள்,என்ன தான் மருத்துவராய் இருந்தாலும் அந்நேரத்தில் அவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.
"என்னங்க!"-ஆதித்யாவை அழைத்தாள் அவள்.அவன்,வந்து பார்த்தான்.
"ராகுல்...செல்லம் என்னாடா பண்ணுது?"
"ஒரு மாதிரி இருக்கு ஆதி!"-மதுவிற்கு அது சாதாரண உடல் நல குறைவு அல்ல என்பது தெரிந்தது.அவனுக்கு,உடனடியாக சிகிச்சை அளிக்க எந்த உபகரணத்தையும் அவள் வைத்திருக்கவுமில்லை.
உடனடியாக ராகுலை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே அவன் ஐ.சி.யு.எனப்படும் வார்டில் அனுமதிக்கப்பட்டான்.
"என்னங்க ராகுல்...."
"பயப்படாத அம்மூ!ஒன்றுமில்லை..."-மதுபாலாவிற்கு அவளையும் மீறி கண்ணீர் பெருக்கெடுத்தது.ராஜேஸ்வரி அவளை தேற்றி கொண்டிருந்தார்.
"அந்தக் குழந்தையை நீங்க தான் அட்மிட் பண்ணீங்களா?"-ஆதித்யாவிடம் கேட்டார் ஒரு மருத்துவர்.
"ஆமா...டாக்டர்!"
"அவனுக்கு என்னாச்சு?"-மது.
"என்னங்க நீங்க?உங்க பையனை இவ்வளவு அலட்சியமாகவா கவனிக்கிறது?"-அவர்,ராகுல் அவர்களின் என்று எண்ணிக் கொண்டார்.
"அவனுக்கு ஃபுட் பாய்சன் ஆகியிருக்கு!கொஞ்சம் தாமதமாக வந்தாலும் காப்பாற்றி இருக்க முடியாது!"
"டாக்டர்..."
"இப்போ பரவாயில்லை...வார்ட் மாத்தின பிறகு,போய் பாருங்க!"-என்று அவர் நகர்ந்துவிட்டார்.
"ஆதி...என்னப்பா இப்படி சொல்றாங்க?"
"ராத்திரி...யாரு ராகுலுக்கு சாப்பாடு ஊட்டினது?"
"நான் தான்ங்க!"
"அவனுக்கு சாப்பாடு ஊட்டும் முன்னாடி எங்கேயாவது போனியா?"
"தோட்டத்து பக்கம் சத்தம் கேட்குதுன்னு போனேன்!"-அவன்,முகம் ஏதோ வித்தியாசமான பாவனையை காட்டியது.
"சரி...நீ பயப்படாதே அம்மூ!அம்மா...நீ ராகுலை பார்த்துக்கோ,நான் வரேன்."
"சரிப்பா!"-ஆதித்யா காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.யார் மீதோ இருந்த மொத்த கோபத்தையும் அதன் மீது காட்டி பயணித்தான்.அவனது,ருத்ரதாண்டவத்தில் யார் சூறையாடப்பட இருக்கின்றாரோ???
தொடரும்...
{kunena_discuss:722}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.