(Reading time: 11 - 22 minutes)

 

"ம்மாடி!சாருக்கு அதெல்லாம் பண்ற ஐடியாலாம் இருக்கா?பார்க்க நல்லா வெறப்பா!சி.பி.ஐ.க்கு உண்டான சர்வ லட்சணத்தையும் முகத்தில வச்சிக்கிட்டு,பண்ற வேலையெல்லாம் கிருஷ்ணர் வேலை."

"ஐயோ!ஆரம்பிச்சிட்டாயா  கிருஷ்ணர் புராணத்தை!எனக்கு தான் இதெல்லாம் நம்பிக்கை இல்லைன்னு தெரியும்ல!"

"சரி...ஸாரி!"

"இன்னொரு தடவை நீ ஸாரி கேளேன்.உன்னை...."-என்று அவள் காதில் ஏதோ கூறினான்.

"திருட்டுப்பய!திருட்டுப்பய!"-திடீரென்று சரண் அவளின் இடையை பற்றி தன்னருகே இழுத்தான்.அவனது,இந்த செயல் அவளுக்கு சற்று திகைப்பை அளித்தது.

"எப்படிடி??நான் என்ன யோசிக்கிறேனோ,அதை நீ சொல்ற?என் மனநிலையை சுலபமா மாத்திடுற?"

"அதான் நம்மக்குள்ள இருக்கிற உறவு!"

"இப்போ நான் உன்னை கொஞ்ச நேரம் கட்டிப்பிடிச்சிக்கிட்டா?திட்ட மாட்டியே!"-அவள் வெட்கத்தில் தலை குனிந்தாள்.

"இந்த பொண்ணுங்களே இப்படி தான்ப்பா!வெட்கத்தையே விலைக்கு வாங்கினா மாதிரி வெட்கப்படுவாங்க!ஆனா,எதையாவது பேசி பசங்க தூக்கத்தை மட்டும் கெடுத்துவிடுவாங்க!"

"போங்க!"-என்று அவனைவிட்டு நகர்ந்தவளை,கை பற்றி இழுத்தான் சரண்.

"என்னங்க...விடுங்க!"-அவள்,முழுவதுமாக கூறி முடிப்பதற்குள் அவள் வாயை பொத்தினான் சரண்.

"அம்மா திதி இன்னும் 1 வாரத்துல வருது அம்மூ!!!எங்கே அவர் முகத்தில விழிக்க வேண்டுமோன்னு பயமா இருக்கு!"

"இப்போலாம் நீங்க சரியே இல்லீங்க...சின்ன விஷயத்துக்கெல்லாம் மனசு உடைஞ்சு போயிடுறீங்க!நாளைக்கு நடக்கப் போறதை இன்னிக்கு யோசிக்காதீங்க,நிம்மதியே இருக்காது."

"ம்..."

"போய் தூங்குங்க!"

"மாட்டேன்."

"ஏன்?"

"நீ தூங்க வைக்கிறீயா?"

"நானா?"

"ம்..."

"அத்தையை தூங்க வைக்க சொல்லி அனுப்புறேன்!"

"அம்மா பாவம் அம்மூ!தூங்குவாங்க!"

"நான் எப்படி??"

"உனக்கு இல்லாத உரிமையா?"

"அதெல்லாம் முடியாது."

"ஏன்?"

"அதெல்லாம் கூடாது...குழந்தை தூங்கிட்டு இருக்கான்.எழுந்தான்னா...?"

"ஒன்னு பண்ணு,நான் உன் ரூம்ல தூங்குறேன்.நீ என் ரூம்ல தூங்கு!இன்னிக்கு நீதான் என்னை தூங்க வைக்கணும்."-அவன்,சிறு குழந்தையை போல அடம் பிடித்தான்.

"ம்..."-என்றாள் தலை குனிந்தவாறே!

தித்யா சரண் மதுபாலாவின் மடி மீது தலை சாய்ந்தான்.அவள்,அவனின் தலை கேசத்தை மென்மையாக வருடியப்படி அவனை உறங்க வைத்திருந்தாள்.பல வருடங்களாய் தாயின் மடி தேடி கிடைத்த குழந்தைப் போல உறங்கினான் சரண்.

தெரியாமலா கூறினார்கள்?தாய்க்கு பின் தாரம் என்று?கருவில் சுமப்பவள் தாய் என்றால்,மனதில் சுமப்பவள் தாரம் தானே!!!!ஒருவர் இல்லறத்தில்,நல்லறம் செய்வதற்கு விட்டுக் கொடுக்கவே வேண்டாம்!!!!

தன் மனதில் உள்ள காதலை உணர்ந்தால் மட்டுமே போதுமே!!!

தன்னவளின் அரவணைப்பினால்,அமைதியாக உறங்கினான் சரண்.மதுபாலா,மெல்ல அவன் கன்னத்தை வருடி தந்துவிட்டு,அவன் நெற்றியில் மெதுவாக முத்தமிட்டு,போர்வையை போர்த்திவிட்டு நகர்ந்தாள்.

தித்யாவின் அறையில்....

ராகுல் கண்களை கசக்கிக் கொண்டது அமர்ந்திருந்தான்.

"ராகுல்...என்னடா கண்ணா இன்னும் தூங்கலையா?"-மதுபாலா.

"ஆதி எங்கே மது?"

"அவருக்கு இங்கே தூக்கம் வரலைன்னு வேற ரூம்ல தூங்குறார் கண்ணா!"

"என்னை தனியா விட்டுட்டு போயிட்டான்.நான் பயந்துட்டேன்!"

"ஏன் பயப்படுற?உன் ஆதி தான் இருக்கார்ல?சரி வா தூங்கு!"

"ம்...."-அடுத்ததாக மற்றொரு குழந்தையையும் உறங்க வைத்துவிட்டு,தானும் உறங்கினாள் மதுபாலா.

றுநாள் காலை...

காப்பியோடு வந்து ஆதித்யாவை எழுப்பினாள் மதுபாலா.

"என்னங்க..."

"ம்..."

"எழுந்திரிங்க நேரமாயிடுச்சி!"

"ம்ஹீம்..."

"மணி 10 ஆகுது!எழுந்திருங்க!"

"போடி,தூக்கம் வருது,,வேணும்னா கடிகாரத்துல டைம் மாற்றி வச்சிக்கோ!"

"விளையாடாதீங்க...எழுந்திரிங்க!"-அவன்,அவள் கையை பற்றி இழுத்தான்.

"என்ன பண்றீங்க.விடுங்க..."

"காயத்ரி தேவி ராத்திரில ஆதித்யாவை தூங்க வச்சிட்டு போயிட்டா,ஆதித்யா என்ன பண்ணுவான் பாவம்?எல்லார் மேலையும் இரக்கப்படுற காயத்ரி தேவி,தன்னோட ஆதித்யாவை மட்டும் கவனிக்கிறதே இல்லை..."

"இன்னும் நீங்க இதை மறக்கலையா?"

"மறக்கிற விஷயமாடி இது? நான் அம்மாக்கிட்ட கேட்கும் போதே அவங்க சொன்ன காயத்ரி தேவியா,உன்னை நினைச்சிட்டு தான் கேட்டேன்."

"அட கடவுளே!"

"அம்மூ..."

"ம்..."

"இங்கே வந்ததில இருந்து ரம்யா உனக்கு பிரச்சனை எதாவது தராளா?"

"இல்லைங்களே!!!!"

"அவளால் உனக்கு பிரச்சனை ஏதாவது வந்தா என்கிட்ட உடனே சொல்லு!"

"ம்...இப்போ என்னை விடுறீங்களா?"

"முடியாது..."

"விடுங்க...கல்யாணம் ஆகாத பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துகறது தப்பு!"

"அப்போ வா! இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்!"

"ஐயோ...விடுங்க!"

"முடியாது...முடியாது...எனக்கு ஒன்று தா விட்டுவிடுகிறேன்!"

"என்ன?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.