(Reading time: 16 - 31 minutes)

 

ஃபேல்ட்ட இன்ஃபார்ம் பண்ணு, நீ என் கூட தான் இருக்கன்னு..” தன் மொபைலை நீட்டினான்.

அவன் சொன்னதை செய்தாள்.

“இப்ப சொல்லுடா.....என்னாச்சு....?”

“அ...அவன் திரும்பவும் வந்தான்பா....வ..வந்து..”

‘இவள் உயிர் காக்க ஜாஷ்வாவுக்கு குடுத்த உறுதி மொழியை முறிக்க இவளுக்கு உரிமையில்லை....பின் என்னவென்று சொல்ல...’

“அவனா......யாருமா?”

போக்குவரத்தில் இவர்கள் வாகனம் தறிகாரனின் எறி நாடாபோல் முன்னும் பின்னுமாய் போய்கொண்டிருந்தது. ஓட்டுனராய் இருப்பவனின் கண்கள் சூழலை துளாவிக்கொண்டிருந்தன. செவிகள் மட்டும் இவள் புறம் நோக்கி திறந்திருந்தன போலும்.

“அத...அதான் அவன்,  அவன பத்தி   சொல்ல..மாட்டேன்னு வாக்கு குடுத்திருக்கேன்...”

“அந்த ஸ்பையவா சொல்ற?”

ரக்க்ஷத் கேட்டதில் அதிர்ந்து போனாள் இவள்.

“அவன் ஸ்பையின்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” கோபம் கொண்டிருந்தது நிரல்யாவின் குரல்.

“நீதானடா சொன்ன... X + y னு எல்லாத்தையும் கண்டுபிடிச்சுடுவான்னு.....அப்படின்னா ஸ்பைதான...?”

“ஓ” ஸ்திதி இறங்கியது குரலில் இவளுக்கு.

“நான் சொல்லமாட்டேன்னு அவன்ட்ட.....” அவள் பேசியதை இடை வெட்டினான் ரக்க்ஷத்.

“சொல்லகூடாது....”அழுத்தமாக சொன்னான்.

“கொடுத்த வாக்க மீறினா குடும்பத்துக்கே சாபம்.....அதையே காப்பாத்துனா......கர்த்தர் தலைமுறையையும்  பாதுகாப்பார்.....நம்ம குழந்தைங்க நல்லா இருக்கனும்டா...... சரி அத விடு,  இப்ப என்ன வேணுமாம்?” அழுத்தமிருந்தது கடைசி கேள்வியில்.

வந்தவன் சொன்னதை சொன்னாள்.

“நீங்க...யார்ட்டயாவது அவன் ஸ்பைனு......?” தயங்கி கேட்டாள். ரக்க்ஷத்தை குற்றம் சொல்லுவது போல் தோன்றி விட கூடாதே என்ற தயக்கம்தான்.

காரை சாலை ஓரம் நிறுத்தினான். அவள் பார்வையை தன் பார்வையால் பரிவாய் வருடியவன் கேட்டான்.

“உன் பெர்சனல் விஷயங்கள நான் அடுத்தவங்கட்ட சொல்லுவேன்னு நீ நினைக்கிறியாடா?” கண்டிப்பாக இருக்காது என இவளுக்கே தெரியும். ஆரணியிடமே இவள் உளறிவிட கூடாது என எச்சரித்தவனாயிற்றே!

“ஆனால்....அவன்....எப்படி....இந்த மிஸ்அன்டர்ஸ்டான்டிங்கை சரி செய்யனுமே......” இவள் தன் குழப்பம் தவிப்பு எல்லாவற்றையும் வார்த்தையில் வரையறுத்தாள்.

“நிரல்.... எதுக்காகவும் வந்தவன நம்பாத!”  ஏறத்தாழ அதட்டினான் ரக்க்ஷத். இப்படி பிஸ்டலை நெத்தியில வச்சவன.....எதுக்காக நம்பனும்?”

பொறாமையோ என எண்ணி அவன் கண்களை பார்த்தால் அங்கு அதன் அடையாளம் எதுவுமில்லை. இருந்ததெல்லாம் ஆழியளவு அக்கறை.

அடிமனதில் அசையாதிருந்த சமாதானம் நுனி நாக்கில் தித்தித்தது. நிறைந்தாள் நிரல்யா.

ஜாஷ் மீதிருந்த மாயை விலகிவிட்டதுதான் இவளுக்கு. ஆனால் அதற்காக, இவளை முன்னொரு நாள் தன் உயிரை பணயம் வைத்து பாதுகாத்த ஜாஷை இவள் வெறுக்கவேண்டுமா? அவனை காதலிப்பதாக காத்திருந்த காலத்திலேயே கூட இச்சையை இம்மியளவும் இவள் கற்பனையில் கூட கலந்தது கிடையாது. வேதாகமத்தின்படி அது விபசாரம் என்பதால்.

குழப்பமற்ற இந்நாளில் குற்ற உணர்வு கொள்ள என்ன இருக்கிறது ஜாஷ்வா விஷயத்தில்?

அவனோடு நட்பு பாராட்ட போவதில்லை எனினும் இத்தவறான புரிதலை சரி செய்யாமல், அவனை, தடுப்பு முயற்சி என்ற பெயரில், தாக்குவதை இவளால் கற்பனை செய்ய கூட முடியவில்லை.

அவசர குழப்பத்தில், ஜாஷை எப்படியும் சந்தித்து உண்மையை விளக்கிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தில், இவள் தன் உதவியாளர்களிடம் அவன் வரவை உளறிவிட்டாளே தவிர இப்படித்தான் இருந்தது நிரல்யாவின் நினைவு.

தோ ஹோட்டலுக்கு சென்று இரவு உணவை வாங்கி காரில் வைத்தே சாப்பிட்டுவிட்டு ரக்க்ஷத்துடன் வீடு திரும்பும்போது படபடப்பு தணிந்து தெளிவாகி இருந்தாள் நிரல்யா.

“ஆமா நீங்க எப்படி வந்தீங்க? ஸ்பை ஆஃப் தி ஸ்பைஸ் மாதிரி......ஆன் டைம்மில்....சூப்பர் பிஸ்டல் வேற வச்சுருக்கீங்க....உங்க பிஸ்டல் க்யூட்டா குட்டியா.....பிஸ்டல் மாதிரியே இல்ல.”

சொல்லியபடி டேஷ் போடிலிருந்த அந்த வெள்ளி நிற சிறு ஜந்துவை எடுத்து புரட்டி பார்த்தாள்.

அவள் ரசனையை, அவன் ரசிப்பதை, அவன் முகத்தில் பரவிய புன்னகை காண்பித்துகொடுத்தது அவளுக்கு.

“லேட்டஸ்ட்,.....நல்லாயிருக்கா....ஆட்டோ ஃபோக்கஸிங் இருக்குது...உனக்கு கூட இத மாதிரி ஒன்னு வாங்கனும்னு டிசைட் பண்ணியிருக்கேன்.....கண்டிஷன்ஸ் அப்ளை.” அதே புன்னகையுடன் அவன் சொன்னான். சிறு குறும்பும் தெரிந்தது அவன் முகத்தில்

“அதென்ன கண்டிஷன்ஸ்......?.” ஆர்வமின்றி கேட்டதுபோல் கேட்டாலும், அவள் உள்ளுக்குள் உண்டாகியிருந்த இருந்த க்யூரியாசிட்டி குரலில் வெளிபடத்தான் செய்தது.

“ஃபர்ஸ்ட் ஒன், விஷமில்லாத பாம்பு மாதிரி, சீறலாம் ஆனா கொத்தகூடாது.......தூக்கி காமிச்சு மிரட்டலாம்.....ஆனா சுடக்கூடாது....” இலகு தொனியில் வந்தாலும் இயல்பில் அது கட்டளை.

“டீல் ஓ.கே,... ஆனா இதுக்கு ஆட்டோ ஃபோகஸிங் ரொம்ப அவசியமா?” கலாய்க்கும் எண்ணத்தில் கேட்க்கவில்லைதான் அவள்.

“தேளை விட பாம்புக்கு எதுக்கு அதிகமா பயபடுறாங்க எல்லாரும்? மோர் பவர், மோர் ஃபியர்” அவன் விளக்கம் நிரல்யாவுக்கு ஏற்புடையதாகத்தான் இருந்தது.

“ஓ...அது என்ன அடுத்த கண்டிஷன்....?” அவள் கேட்க்க

“அது.....”.என்றவன் காரை நிறுத்தினான். நிமிர்ந்து பார்த்தாள் நிரல்யா. எதிரிலிருந்தது ஒரு நவநாகரீக நகை கடை. அவள் நெஞ்சு படபடப்பது அவள் காதில் அந்நியமாய் ஒலித்தது.

அசையவில்லை அவள். ஒரு பார்வை அவளை ஆழமாக பார்த்தவன் உள்ளே சென்று சில நிமிட செலவுக்கு பின் திரும்பி வந்தான்.

‘முழங்கால் படியிட்டு, மோதிரத்தை நீட்டி, நாளை நம் கல்யாணம் என்பானோ?’ இவளாக சம்மதிக்கும் வரை மூன்று மாதம் காத்திருப்பதாக சொன்னான் தான்.

எப்பொழுது அவனை மறைத்து நின்று  ‘ரக்க்ஷத்தை எதுவும் பண்ணிடாத’ன்னு அலறினாளோ அப்பொழுதே இவள் சம்மதத்தை செயலில் காண்பித்துவிட்டாள் தானே!

ஆனாலும் மனதிற்குள் வேறு ஒரு வலியும் சில குழப்பங்களும் அதே அந்த செயலின் காரணமாக புதிதாக பிறந்திருக்கின்றனவே! அதோடு ஜாஷ் விஷயத்தை சரிபடுத்தாமல் இத்திருமணத்திற்குள் நுழைவது பேரிழப்பாக முடியகூடும்.

இப்பொழுது ஜாஷ் இவளைத்தான் தனியாக சந்திக்க விரும்புகிறான். அவன் உள்மனம் சுத்தம். எடுத்து சொன்னால் இவளாலோ  ரக்க்ஷத்தாலோ எந்த தீமையும் அவனுக்கு நேரிடாது என புரிந்தும் கொள்வான். புத்திசாலி.

ஆனால் திருமணம் என்று நடந்துவிட்டால் இபொழுதே பகல் முழுவதும் பாதுகாக்கும் இந்த ரக்க்ஷத் இரவில் கூட இவளை தனியே விடமாட்டான்.  ஜாஷ் இவளை தொடர்புகொள்ள முயலும்போது அவனுக்கு விஷயத்தை விளக்க இவளுக்கு வாய்ப்பு கிடைக்குமா? அல்லது ரக்க்ஷத்தின் பிரசன்னத்தால் நேரடியாய் யுத்தமாய்தான் தொடங்குமா ஜாஷுடனான அச்சந்திப்பு? ஆண்கள் இருவரில் யார் துப்பாக்கி முந்தினாலும் அழப்போவது இவள்.

சிறு விளக்கத்தால் தடுக்கபட வேண்டிய ஜாஷின் மரணத்தை இவள் தடுக்காவிட்டால்.....அல்லது ரக்க்ஷத்தை இழந்தால்...?

நினைவில் தோன்றிய எண்ணத்தின் பயங்கரத்தில் நெருப்பிடபட்டது அவள் நெஞ்சம். நிச்சயமாக இப்பொழுது இவளால் இந்த திருமணத்திற்குள் உட்பட முடியாது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.