(Reading time: 16 - 31 minutes)

 

ப்பொழுது அடுத்த இருக்கையில் அமர்ந்தான் என புரியவில்லை, ஆனால் இவள் முகத்தை விழி தட்டாமல் பார்த்திருந்தான். கண்களிரெண்டிலும் கரிசனை.

“நகை கடைய பார்த்து நியாய படி நடுங்க வேண்டியவங்க நாங்க, உங்களுக்கு என்ன மேடம் இவ்ளவு டென்ஷன்?,

வீட்டில ரெண்டு வாசல்ல ஒன்னு, வரப்போற வாண்டுன்னு நாலு பொண்ணுங்களுக்குமா நாங்க தான் நகை ஷாப்பிங் பில் செட்டில் பண்ண நடுங்கனும்....” ரக்க்ஷத்தின் குரலில் இவளுள் இருந்த அத்தனை வலியும் சொல்லாமல் தொலைந்துபோனது. பரவியது  அவனிடமிருந்த உற்சாகம் இவளிடமுமாக.

அவன் அருகிலில்லாத நேரத்தில் வந்து கவ்வும் வலியும் வேதனையும்,வந்தவுடன் சென்று மறைவது காதலின் இயல்பா?

“ஃபெராரி வச்சிருக்கவங்க பேசுற பேச்சா இது....”என துடுக்காக ஆரம்பித்த பின் தான் கவனித்தாள், அதென்ன நாலு பேர்?

“வரப் போற வாண்டா?” ஓரளவு விஷயத்தை நிரல்யா ஊகித்துவிட்டாள் தான். இருந்தாலும் ஊரிஜிதபடுத்தி கொள்ளவேண்டுமே!

“அம்லுவுக்கும் அச்சுவுக்கும் அடுத்த வாரிசு...அன் எஃஸ்பெக்டட்.....அன் பிளாண்ட்..... எனி வே வீட்டில் எல்லாருக்கும் படு எக்ஸைட்டிங்கா இருக்குது.......கேர்ள் பேபினு ஒரே கற்பனை...... ஜஃஸ்ட் இப்பதான் கடையில இருக்கப்ப கூபிட்டாங்க.........அம்லுவே நைட் உன்ட்ட சொல்லுவா......அப்படியே ஆருவ அங்க அனுப்புறதுக்கு பெர்மிஷன் கேப்பா....”

“ஹை ஜாலி...அடுத்த பாப்பாவா?” துள்ளினாள் நிரல்யா. குழந்தையின் நினைவு எப்பொழுதும் எல்லாவற்றயும் மறக்க செய்வது மனித இனம் கொண்ட வரம்.

ஆரணியின் பிரிவு மனதிற்கு சுகம் தரவில்லை எனினும் இச் சமயம் தாயற்ற அரண்யாவிற்கு ஆரணி அவசியம் என புரிய இயல்பாகிவிட்டாள் இவள்.

“ஆமா 4:3னு திரும்பவும் பொண்ணுங்க முன்னாடி போகபோறாங்கபோல தெரியுது வீட்டில, அதான் அச்சுட்ட பேசாம ஜுவல்லரி பிஸினஸும் தொடங்கலாமான்னு பிட் போட்டிருக்கேன்”

“பேசாம பிஸினஸா, அதெப்படி.....? சேல்ஸ் ஆகும்ங்கிறீங்க?.....”

திரும்ப வார்த்தையால் வாருவான் என இவள் எதிர்பார்த்தால் ரக்க்ஷத் மௌனமாய், மென்மையாய் அவளை பார்த்திருந்தான்.

இவள் விழிகள் தானாக தாழ்ந்தன. அவன் இவளை ரசிக்கும் போதெல்லாம் இவளுக்கு என்னவாகிறது?

“ம்க்கும்.” செருமிக் கொண்டான். பறக்காவண்ணம் அவன் மனதை சமன படுத்துகிறானோ? அல்லது இவள் மனதிற்கு தடையிடும் முயற்சியா?” திருமணம் வரை கற்பனையில் கூட விலகி நிற்பேன் என்றானே! இவள் போல்தான் அவனும்.

அடிப்படை நம்பிக்கைகள் ஒத்திருப்பது திருமணத்திற்கு பலம்.

“எப்படி அப்ப வீட்டுக்கு வந்தேன்னு கேட்டல்ல.....” ஆரம்பித்தான். சூழலை இலகுவாக்கும் முயற்சி.

“உன்ன விட்டுட்டு கிளம்புறப்ப எப்பவும் போர்டிகோல இருந்து கேட் போறதுக்கு முன்ன உன் ரூமை பார்ப்பேன், அப்படி இன்னைக்கு பார்த்தப்ப லைட் ஆணாச்சு. சரி நீ ரூமுக்கு போய்ட்டன்னு நினைச்சேன்.

பட் கேட்டை தாண்டி யூ டர்ன் எடுத்துட்டு திரும்பவும் பார்த்தா ஆஃப் ஆயிருந்தது லைட்...அவ்வளவு சீக்கிரம் ஏன்னு தோணிச்சு....அதான் திரும்ப வரலாம்னு வந்தேன்....உன் வீட்டு பக்கத்தில உடனே திரும்ப வழியில்ல.....அவ்வளவு தூரம் போய்ட்டு வர்றதுக்குள்ள....சைரன் கேட்டதும்......ப்ரிபர்டா வந்தேன்...அங்கில்ட்ட சொல்லி உன் வீட்டு கேட்டுக்கு பக்கத்தில் ஒரு மீடியன் கிராஸ் ஏற்பாடு செய்யனும். அது ஸேஃப்.....”

“ம்...” ஆமோதித்தாள்.

“அடுத்தது, இந்த பிஸ்டல் வாங்கிற விஷயம்... எல்லாத்திலயும் ஆரம்பமும் முடிவும் கர்த்தருடையதுன்னு சொல்லுவாங்க.....அதான் குடுக்கிற முதல் கிஃப்ட்டே பிஃஸ்டலா இருக்க வேண்டாம்னு பார்த்தேன்... இது முன்னாலயே ஆர்டர் கொடுத்ததுதான்.” என்றவன் கையிலிருந்த கவரிலிருந்து ஒரு சிறு நகை பெட்டியை திறந்து நீட்டினான்.

இவள் பயந்தது போல் மோதிரமெல்லாம் இல்லை...ஒரு அழகிய பிரேஸ்லெட்.  மெல்லிய சங்கிலியில் அழகிய சிறு மாதுழம் பழங்கள் ஆங்காங்கே கோர்கபட்டு இடையில் என், ஜே ஆர் என்ற ஆங்கில எழுத்துக்கள் அழகுற கோர்க்க பட்டிருந்தன.

புன்னகையுடன் நன்றி சொல்லி வாங்கி அப்பொழுதே அணிந்தவள், “அழகா இருக்குது....ஆனா உங்களுக்கு 2 பங்கும் எனக்கு ஒரு பங்கும்...நீங்க ஜே.ஆர்...நான் வெறும் என்....அது தான்...”

கிண்டலாகத்தான் அவள் சொல்ல தொடங்கியது, ஆனால் அது கூட அவனுக்கு பொறுக்கவில்லை போலும்.

“அந்த ஜே ஃபார் ஜீஸஸ்.....முப்புரி நூல் அறாது....கேள்விபட்டதில்ல? அந்த முதல் அவர் அடுத்து ... எல்லாத்திலயும் சரி பாதிதான்.... நாம இப்ப வீட்டுக்கு கிளம்பலாம்..வேலையிருக்குது..”

என்றவன் இவள் வீட்டில் சென்று இவள் தூக்கத்தால் சொக்கி விழும் வரை காத்திருந்துவிட்டு, இவள் அறை பால்கனியில் இருவர், வாசலில் இருவர் என ரஃபேல் நிறுத்திய காவலர்களிடம் தான் பேசிமுடித்தபின்பே கிளம்பினான். அதுதான் அவன் சொன்ன வேலை என்பதுபோல்.

வன் செல்லும் வரை இயல்பாய் இருந்தவளுக்கு, அவன் சென்றதும் மனதுக்கு பிடிக்காத அனைத்தும் ஞாபகம் வந்தது.

அன்று ஜாஷ் பிரியும் நேரம் கதறிய மனம், இன்று ரக்க்ஷத்திற்காக அதெ ஜாஷிடம் கதறுகிறது...!என்ன மனம் இது..?.இத்தனை பலவீனமானவளா இவள்...?ஆண்கள் விஷயத்தில் அலை பாய்ந்ததில்லை என இவள் தன்னை பற்றி நினைத்திருப்பது வெறும் மாயையா....?.ஒழுக்கம் கெட்டவளா இவள்.....?

தன் மீது பெரும் வெறுப்பு வந்தது அவளுக்கு. இன்று ரக்க்ஷத் விஷயத்தில் இருந்த பொறுமை அன்று ஜாஷ் விஷயத்தில் இல்லாமல் போனதென்ன? ஏழு வருடம் முன்பு அத்தனை முக்கியமாய் தெரிந்தது, இன்று இத்தனை தெவையற்றதாக போனது எப்படி? இதைதான் அன்று ஜாஷ் சொன்னான்.

சரி போகிறது....இன்று இந்த ஜாஷ் விஷயத்தில் மனவிடுதலை என்றதோடு நில்லாமல் ரக்க்ஷத் பின் இவள் மனம் வளைய வேண்டிய அவசியம் என்ன?

இந்த ஜாஷ், இவளை நம்பாமல் போனதில், வார்த்தை காக்க மாட்டாள் இவள் என நினைப்பதில் என்ன தவறிருக்கிறது?

மௌனமாய் அழுது கரைந்து மனதிற்குள் மன்றாடி பின் நிரல்யா தூங்கச்செல்ல  வெகு நேரமாயிற்று.

அவள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த அந்த அதிகாலை மூன்று மணி.....

அவள் அறை சுவரின் ஒரு பகுதி சற்று நெளிந்தாற் போல் இருந்தது. சுவரின் ஆப்பிள் க்ரீன் வர்ணத்தில் ஒரு துண்டுசுவர், சுவரை விட்டு பிரிந்து முன்னால் வந்தது. அது மனித உருவத்தில் ஆனால் கண், காது என உறுப்புகள் வரையபடாத பாதி ஓவியம் போல் இருந்தது. தன் கையை நீட்டி தன் கண் இருக்க வேண்டிய இடத்தின் பக்கவாட்டை அவ் உருவம் தொட முகம் உண்டாயிற்று. ஜாஷ்.

மெல்ல நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்து இவள் முகம் பார்த்தான்.

“மேடம் உங்க பாதுகாப்புக்கு ப்ரச்சன வராம நான் பார்த்துபேன்” மென் சத்தத்தில் அவன் சொல்ல பிரண்டு படுத்தாள் நிரல்யா. அசையாது நின்றான் அவன் சில கணம்.

“உங்க மேரஜ் லைஃப்ஐ தான் எப்படி காப்பாத்துறதுன்னு எனக்கு தெரியலை?” சொன்னவன் பெரு மூச்சுவிட்டான். பின் முன் போல் அவன் முகமருகில் சென்ற கை அவனை உருவமற்றவனாக்கியது. மறைந்தான்.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:752}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.