(Reading time: 5 - 9 minutes)

04. நீ எனக்காக பிறந்தவள் - Parimala Kathir

லோ..... “ வாமினி

“ஹலோ மினி நான் க்ரிஸ் பேசறன்” க்ரிஸ்

“க்ரிஷா? எந்த க்ரிஷ்? எனக்கு தெரியல நீங்க ரோங் நம்பருக்கு கால் பண்ணி இருக்கீங்க போல” என்றவள் தொடர்பை துண்டித்தாள்.

Nee enakaga piranthaval

மறுபடியும் மினியின் நம்பரை டயல் செய்தான்.

 “ ஹலோ வாமினி ப்ளீஸ் போனை வச்சிடாத!  . நீ என்மேல ரொம்ப கோவமா இருக்க என்று தெரியுது ஆனா.....”

“கோவமா? எனக்கா நான் யாரு சார் உங்க மேல கோவப்பட. இவளவு நேரம் தெரியாதவங்க கிட்ட பேசிட்டிருக்கன் பாருங்க! எனக்கு தான் உங்களை தெரியாது என்று சொல்றனே சார்”  என்றவள் மறுபடியும் தொடர்பை துண்டிக்கும் முன்.

“மினி நான் எது சொன்னாலும் நீ இப்ப அதை ஏத்துக்கப் போறதில்லை என்று எனக்கு நல்லா தெரியுது. எனக்கு இப்ப தெரிந்து கொள்ள வேண்டியது. ஆரு எதுக்காக அவ பேரன்சை விட்டிட்டு உன்கூட தங்கி இருக்கா? யாதவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேள்விகளை அடுக்கி கொண்டான்.

வாமினிக்கு அவன் தன்னிடம் இத்தனை வருடம் கழித்து போன் பேசியதே ஆச்சரியம் என்றால் அவன் இப்போது கேட்ட கேள்விகளில் சற்று நேரம் வாயடைத்து போனாள்.. இவனுக்கு எப்படி இது பற்றி தெரிய வந்தது. அப்படி என்றால் ஆருவை இவன் சந்தித்திருக்க வேண்டும். இல்லையென்றால் எப்படி இது பற்றி அவனுக்கு தெரிய வந்தது. ஆனால் ஆராவை சந்தித்திருந்தால், இவன் என்னிடம் இந்த கேள்விகள் கேட்க என்ன  அவசிம் என்று குழம்பித் தவித்தாள். அதனை அவனிடமே கேட்டும் விட்டாள்.

“அப்படி என்றால் நீங்க ஆராவைப் பார்த்தீங்களா? உங்களுக்கு எப்பிடி இதெல்லாம் தெரிய வந்தது. க்ரிஷ்!”. என்றாள் குரலில் சிறு பதட்டத்துடன்.

“ம்ம்ம்ம் அவ இப்ப என்னோட வீட்டில தான் இருக்காள்.” என்றான் அமைதியாக

“வட்”

அந்த ஒற்றை வார்த்தையில் அத்தனை அதிர்ச்சியை உணர்ந்தான்.

“அவ எப்படி உங்க வீட்டில! நீங்க இத்தனை நாளா எங்கிருந்தீங்க? அவளை எப்படி மீற் பண்ணீங்க?” என்று இப்போது அவள் கேள்விகளை அடுக்கினால்.

“அவ வேலை செய்த எ.எம்.கெ ஹோட்டல் என்னோடது.” என்றான்.

“அவ எப்பிடி உங்ககிட்ட வேலை பாக்க முடியும்? நீங்க சொல்றது எதுவும் எனக்கு விளங்கல. அவ எ.எம்.கே ஹோட்டலில்...... ஓ கோட் அப்பிடின்னா அந்த புது எம்டி நீங்க தானா?”

“ஆமா!!! அது நான் தான்”.

“அனால் நீங்க எப்படி அந்த ஹோட்டலின் எம்.டி ஆனீங்க என்னால நம்பவே முடியல!!! அது இருக்கட்டும் ஆரா எப்படி உங்க வீட்டில என்று எனக்கு இன்னும் நீங்க சொல்லல கிரிஸ்!"

அவன் சிறிது தயங்கி விட்டு பின் நடந்த அனைத்தையும் ஆராவினது தோழி வாமிநியிடம் ஒன்று விடாது ஒப்பித்தான்.  அவன் எப்படி இவளவு பெரிய ஹோட்டலின் முதலாளி ஆனான் என்பது உட்பட.(அது எப்படி என்பதை பிறகு சொல்றேன்)

அவளவு நேரம் சற்று கோபம் தணிந்து பொறுமையாக அவனுடன் உரையாடிக் கொண்டிருந்தவள் அவன் சொன்னதை கேட்டு கோவத்தின் உச்ச நிலையை அடைந்தாள்.

“நீங்க அவகிட்ட பொய் சொல்லியிருக்கீங்க அவள ஏமாத்தியிருக்கீங்க.? உங்களுக்கு மனசாட்சியே இல்லையா க்ரிஷ்? எப்பிடி அவள பார்த்து இப்பிடி ஒரு கேள்விய உங்களால கேட்க முடிந்தது?”

அவன் செய்த தவறை எப்போதோ உணர்ந்து விட்டான் தான் ஆனாலும் அவளிடம் மௌனம் காத்தான்.

“அவ தன் பெத்த அப்பாம்மா  சொந்த ஊர், சொந்த பந்தம் இப்பிடி எல்லாரையும் இழந்து இன்னிக்கு யாருமில்லாத அனாதையா நிக்கிறா! அவ இப்பிடி எல்லாரையும் விட்டு பிரிஞ்சு தனிமரமா நிக்கிறதுக்கு நீங்க மட்டும் தான் காரணம் க்ரிஷ் உங்களால இத்தன வருடமா அவ அனுபவிக்கிற கஷ்டம் போதாதென்று ச்சா! என்ன மனிதர் நீங்கள். அவ அம்மா செய்த அதே தப்பை நீங்களும் செய்திருக்கீங்க கிரிஸ்."

"என்ன சொல்லுறீங்க வாமினி அவ அம்மா அப்பிடி என்ன செய்ததால அவ உங்க கூட வந்து தங்கி இருக்கா எதையும் என்கிட்ட மறைக்காமல் சொல்லுங்க மினி." என்றான் பதைப்புடன்.

“என்னை மன்னிச்சிடுங்க வாமினி கோபத்தில அப்பிடி பேசிட்டனே தவிர மனசறிந்து அப்பிடி சொல்லல வாமினி. நான் அப்பிடி சொன்னதும் அவ துடிச்ச துடிப்பு இருக்கே அத என்னால பாக்கவே முடியல மினி” என்று கரகரத்த குரலில் கூறினான்.

அதைக் கேட்ட வாமிநிக்கே சற்று கவலையாக தான் இருந்தது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அவ்வளவு காதலை வைத்துக் கொண்டு எதற்காக இப்படி வேதனைப்பட வேண்டும். என்று கேட்டாள்.”

அவனிடம் இருந்து மௌனமே பதிலாக வந்தது.

“இது எல்லாத்துக்குமே நீங்க தான் காரணம் கிரீஷ். (ஒரு குட்டி பிளாஷ் பாக் வாங்க பொய் பாத்திட்டு வருவோம்.)

அவள் தோழி ஆராணி தனது குடும்பத்தை விட்டு பிரிந்து வந்ததற்கான காரணத்தை சொல்லத்தொடங்கினாள்..

நான்கு நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு.

நள்ளிரவு சரியாக பன்னிரண்டு அடித்து முடிப்பதற்குள் ஆரபியின் கைபேசி அழகான சஷ்டி கவசத்தோடு உயித்தெழுந்தது. அதன் திரையில் கிரிஷ் என்று ஒளிர்ந்தது. அவனது அழைப்புக்காக காத்திருந்த ஆரபி உடனே அதனை எடுத்து தனது காதுக்கு பொருத்தினாள். அனால் எதுவும் பேசாது சிறிது நேரம் அமைதி காத்தாள்.

மறு முனையில் ஹாய் டார்லிங். என்ன ஒரு ரிங்கிலையே எடுத்திட்ட நீ இன்னும் நித்திர கொள்ளல?"

" ம்ம்ம்ம் இல்ல உங்க போனுக்காக தான் வெயிட் பண்ணிட்ட்டிருந்தேன்.”

"அப்பிடியா? எதுக்கு என்னோட போனுக்கு வெயிட் பண்ணிட்டிருந்தாய்.” என்றான் குரலில் குறும்பு மின்ன.

“ஏன் நான் காத்திட்டிருந்தேன் என்று உங்களுக்கு தெரியாதா க்ரிஷ். உங்க வாயால தான் முதல் முதலா என்னோட பர்த்டே விஸ்ஷை கேட்கணும் என்றிருந்தால் நீங்க என்னடான்னா!” என்றாள் குரலில் சற்று ஏமாற்றத்துடன்.

“சரி நீ இப்ப எழும்பி உன்னோட வீட்டு வாசலுக்கு போ உனக்கொரு சப்ரைஸ்   காத்திட்டிருக்கு”

“ம்ம்ம்ம் சரி ஆங் அப்பிடி என்ன சப்ரைஸ் சொல்லுங்களேன்!”

“அதுக்குள்ள என்ன அவசரம் செல்லம் நீ அங்க போய் என்னோட சப்ரைசை பார்த்திட்டு எனக்கு கால் பண்ணு பை செல்லம்” என்று சொல்லி போனை கட் செய்தான்.

அவங்கலுக்கு அப்பிடி என்ன சப்ரைஸ் வச்சிருக்காறேன்று அடுத்த எப்பிசொட்டில பாத்துக்குவோம்.

தொடரும்!

Episode # 03

Episode # 05

{kunena_discuss:755}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.