(Reading time: 7 - 13 minutes)

22. என்னுயிரே உனக்காக - சகி

புது விடியல் அழகான விடியல்...அனைவர் மனதிலும் புத்துணர்வை விதைத்தது.

மஹாதேவனுக்கு காலையிலிருந்து ஆனந்தம் தாங்கவில்லை.

'அவனா?அவனா என்னை பார்க்க வேண்டுமென்று விரும்பினான்?நான் இத்தனை நாளாய் காத்திருந்ததின் பலன் கிடைத்ததா?'-பெரும் ஆனந்தத்துடன்,அவன் அழைத்த இடத்திற்கு சென்றார்.அது ஒரு அழகான இடம்.பூத்துக் குலுங்கும் நந்த வனம் எனலாம்.சரண்,கூறிய நேரத்திற்கு வந்துவிட்டார் மஹாதேவன். இன்னும் அவன் வரவில்லை.

Ennuyire unakkaga

மகேந்திரன் கூறிய வார்த்தைகள் இன்னும் செவிக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது சரணுக்கு.

" சாரதா மரணத்துக்கு மஹாதேவன் காரணம் இல்லை சரண்.உன் அப்பா சாரதா மேல உயிரையே வைத்திருந்தான்.சந்தர்ப்ப வசத்தால,ராஜேஸ்வரிக்கும்,தேவாக்கும் தவறான உறவு இருந்ததுன்னு அவர்கள் மேல அநியாயமா சுமத்தப்பட்ட பழியை துடைக்க தான்,அவன் ராஜேஸ்வரியை கல்யாணம் பண்ண நிலை வந்தது.   இதுவரைக்கும் சாரதா,தேவா மாதிரி ஒரு தம்பதியை யாரும் பார்த்திருக்க முடியாது. அப்படி,வாழ்ந்தவங்க அவங்க!இப்போக் கூட நீ இந்த உண்மையை ஏத்துக்குவியா?மாட்டியான்னு தெரியாது...ஆனா,இப்போ உண்மையை புரிந்து கொள்கிற பக்குவம் வந்திருக்குன்னு சொல்றேன்.அதுக்கு மேல உன் இஷ்டம்.ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பத்து மாதம் சுமக்கிறது போல,அந்த குழந்தையோட அப்பாவும் வாழ்க்கை முழுசும் அந்த குழந்தையை தன் இதயத்தில சுமக்கிறான் சரண்.உனக்கு புரியும்னு நினைக்கிறேன்."-மகேந்திரனின் இந்த சொற்கள் இன்னும் அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

அவர் கூறியதை ஆராய்ந்தால்,அனைத்தும் சரியென பட்டது சரணுக்கு.இதுவரையில்,தன் தாய்-தந்தையை போல ஒத்து வாழ்ந்த தம்பதியை அவன் கண்டதில்லை.கூற போனால்,இன்று மதுவின் மீது அவன் காட்டும் காதல்,அவனது பெற்றோரின்     அந்நியோயத்தின் பிரதிபலிப்பு எனலாம்.

அவனை அறியாமல் சிறு சிறு விஷயத்தில் கூட சரண் அவன் தந்தையை பிரதிபலித்தான் என்பது அவன் அறியாமல் இல்லை.இப்போது அவன் அவரிடம் மன்னிப்பு கேட்க போகிறானா?அல்ல... பிராயிச்சித்தம் தேட போகிறான்.அவன், ஒருவனுக்காக அவனை சார்ந்திருந்த அனைவரும் மஹாதேவனை ஒதுக்கினர்.இனியும், அவர்களுக்கு அந்நிலை வேண்டாம் என்ற முடிவில் அவன் இருந்தான்.அவன் வர வேண்டிய இடமும் வந்தது.

முதன்முறையாக மனதில் கலக்கம் சரணிடத்தில்...

தவறு இழைத்த குற்றவுணர்வு அவனிடத்தில்...

அமைதியாக அவர் பின்னால் நின்று,

"வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சா?"என்றான்.12 வருடம் ஒரு வருடமா?இரு வருடமா?12 வருடம் விலகல் வாசம் உடைந்தது அப்போது...

"இ...இல்லப்பா...இப்போ தான் வந்தேன்."

"நான் எதுக்கு வர சொன்னேன்னு தெரியுமா?"

"தெரியாது..."

"அம்மா சாகும் போது என்ன நடந்தது?"

"............."

"பதில் வேணும்!"-அவர்,நடந்தவற்றை கூறினார்.

"ஏன் முதல்லையே  என்கிட்ட சொல்லலை?"

"..............."

"ரொம்ப பெரிய தியாகம் பண்ணிட்டதா நினைப்பா?"

".............."

"பதில் வரலை?"

".............."-கனத்த மௌனம் நிலவியது.அதை,

"அப்பா!"-என்றழைத்த சரணின் குரல் கலைத்தது. யார் கூறினார்???தாய்க்கு மட்டும் பிரசவ வலி உண்டு என்று??அவளுக்கு மட்டும் தான் குழந்தை பிறந்த பின் அதன் முதல் அழுகை ஆனந்தத்தை தரும் என்று??12 வருடங்களாய் இங்கே ஒரு தந்தை அனுபவித்த பிரசவ வலியை பாருங்கள்...

அது,அவர் மகன் கூறிய அப்பா என்ற ஒரு வார்த்தையில் அவ்வலி நீங்க ஆனந்தம் அளித்ததை பாருங்கள்...

"அப்பா?"

"சரண்...நீ...நீ என்னை இப்போ அப்பான்னு கூப்பிட்டியா?"

"ம்...இத்தனை வருஷமா இதை கேட்க தானே காத்திருந்த?"

"ம்..."

"மன்னிச்சிடுப்பா!"

"டேய்!கண்ணா!என்னடா நீ?"-என்று அவனை அணைத்துக் கொண்டார் மஹாதேவன்.

"ஸாரிப்பா...உன்னை ரொம்ப               கஷ்டப்படுத்திட்டேன்."

"டேய்!அம்மா வயிற்றுல இருக்கிற ஒரு குழந்தை, உதைத்தால்...அது அம்மாவுக்கு வலிக்குமா என்ன???நீ எனக்கு மறுபடியும் கிடைத்ததே போதும்பா!"

"அப்பா!எனக்கு ஒரு உதவி பண்றீயா?"

"என்னடா கண்ணா?"

"நான் நாளைக்கு காஷ்மீர் போறேன்.திரும்பி வரலாம்,வரமலும் போகலாம்."

"சரண்?"

"நீ இப்போ நான் இருக்கிற வீட்டில வந்து தங்கு!அம்மாவை,ராகுலை, ரம்யாவை,மது...மதுவை பத்திரமா பார்த்துக்கோ!"

"சரிப்பா!"

"ஒரு வேளை எனக்கு எதாவது நடந்தால், மதுவுக்கும்,ராகுலுக்கும் நல்ல வாழ்க்கையை நீதான் அமைத்து தரணும்."

"சரண்???"

"ப்ளீஸ்!"

"ம்....."

ன்று மாலை...

"ராகுல்...ஓடாதே!இங்கே வா!"

"போ நான் வரமாட்டேன்."

"வா...ராகுல்!"

"நீ மாத்திரை தர மாட்டேன்னு சொல்லு வரேன்."

"டேய்! இன்னிக்கு மட்டும் தான்!"

"இதையே தான் தினமும் சொல்ற!"

"நிஜமாடா!"

"சரி..."-என்று ராகுல் அவளருகே வந்தான்.

"ம்...இந்தா!"

"ம்மா.."

"ம்??"

"அப்பா...நாளைக்கு ஊருக்கு போறாரா?"

"ஆமாடா!"

"சீக்கிரம் வந்துடுவார் தானே!"-அவன்,குரலில் ஒரு வித பயம் தெரிந்தது.அதை உணர்ந்தவள்,அவனை தன்னோடு வாரி அணைத்துக் கொண்டாள்.

"உன் அப்பா!என்னிக்குமே வாக்கு தவற மாட்டார் செல்லம்.சீக்கிரமே வந்துவிடுவார்!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.