(Reading time: 10 - 19 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 03 - ஜெய்

மூன்று  மாதங்களுக்குப்  பின்பு

“ஜானகி ஜானகி என்ன பண்ணிண்டு இருக்க?” என்று கேட்டபடி வந்தார் ராமன்

“உள்ள வேலையா இருக்கேன், என்ன இத்தனை பரபரப்பா வரேள்”, என்று கையை புடவையில் துடைத்தபடியே ஹாலிற்கு வந்தார் ஜானகி

Gowri kalyana vaibogame

“இல்ல நம்ம மகாலிங்கபுரத்துல கௌரி ஜாதகம் ரெஜிஸ்டர் பண்ணி வச்சிருந்தோம் இல்ல அதை பார்த்துட்டு எனக்கு இன்னைக்கு ஒரு பையன் ஆத்துல இருந்து போன் பண்ணினா. “

“அப்படியா . பகவானே எல்லாம் நல்லபடியா முடியனும்” என்று வேண்டியபடியே, “பையன் என்ன பண்றாராம், எத்தனை பேர் அவாத்துல”

“நம்மாம் மாறியே ஒரு பொண்ணு, ஒரு பையன்.  பொண்ணு BE first year படிக்கறா, பையன் BE,MBA  முடிச்சுட்டு singaporeல ஒரு MNCல வேலை செய்யறாராம். ஜாதகம் நன்னா பொருந்தி இருக்கு, மேல்கொண்டு எப்போ பேசலாம்ன்னுட்டு அவரோட அப்பா போன் பண்ணினார்” என்று வேஷ்டிக்கு மாறியபடியே அத்தனை விஷயங்களையும் சொன்னார்

“ஏன்னா நீங்க சொல்றத பார்த்தா கொஞ்சம் பெரிய இடம் மாதிரி தெரியறதே.  ரொம்ப கேப்பாளோ.  இங்க சென்னைல சாதாரண கம்பெனில வேலை செய்யற வரனுக்கே பையனாத்துக்காரா ஆயிரெத்தெட்டு கண்டிஷன்ஸ் போடறா.  இந்த 3 மாசத்துல நீங்களும்தானே பார்த்தேள்.  என்னமோ பையன் அப்படின்னாலே வானத்துல இருந்து குதிச்சா மாதிரியே பேசினாளே.   நமக்கு ஏத்தா மாதிரியே ஏதானும் சாதாரண வரனே பார்க்கலாமே”.

மாமியின் கஷ்டம் மாமிக்கு.  வந்த  ஜாதக வீட்டுக்காரார்கள்  எல்லாம் பயங்கர ஹோதாவில் பேசிய கடுப்பு.

“இல்ல ஜானு, சில பேர் பண்றதை வச்சுண்டு பொத்தாம் பொதுவா அப்படித்தான்னு சொல்லக் கூடாது.  இந்த மாமா பேசும்போது சாதாரணமாத்தான் பேசினா.  அதுவும் உங்களுக்கு எங்க பையனோட details பிடிச்சிருந்தா மட்டும் ஜாதகம் கொடுங்கோ அப்படின்னு ரொம்ப தன்மையாதான் பேசினார்.  பார்க்கலாம்.  அவா கேட்ட மரியாதைக்கு ஜாதகம் அனுப்புவோம்.  அப்புறம் கடவுள் விட்ட வழி.” 

“ஓ சரின்னா.  உங்களுக்கு மனசுக்கு சரின்னு பட்டுதுன்னா ஓகேதான் ,  நமக்கும் அவா பையனோட ஜாதகத்தை அனுப்பச் சொல்லுங்கோ. நாமளும் நம்மாத்து ஜோசியர்கிட்ட காட்டலாம்.  சேர்ந்திருந்தா மேல்கொண்டு பேசலாம்.  அதுக்கு முன்னாடி உங்க செல்ல பொண்ணுகிட்ட சிங்கப்பூர் வரன் ஓகேவான்னு கேட்டுக்கோங்கோ.  அவதான் ஆயிரம் நொட்டை, நொள்ளை சொல்லுவா”, coffeeயை ராமனிடம் தந்தபடியே பேசினாள் ஜானகி.

“அவ ஆபீஸ்ல இருந்து வந்தவுடனே பேசறேன்,அவளுக்கும் ப்ராஜெக்ட் முடிஞ்சு போச்சான்னு கேக்கணும்.  ஹரி எங்க இன்னுமா காலேஜ்ல இருந்து வரலை?  ரொம்ப நாழி ஆயிடுத்தே”

“இல்லைனா அவன் அப்போவே வந்துட்டான்.  டிபன் சாப்பிட்டுட்டு பக்கத்துல பிரண்டு ஆத்து வரைக்கும் போயிருக்கான். வர்ற நேரம்தான்.”

“சரி உனக்கு ஏதானும் வாங்கணுமா, கொஞ்ச தூரம் நடந்துட்டு வரலாம்ன்னு பார்க்கறேன்.  எப்படியும் உனக்கு வேலை இருக்கும், நான் இருந்தா தொண தொணன்னு பேசிண்டே இருப்பேன். உனக்கும் வேலை ஆகாது”

“கடை பக்கம் போகப் போறேள்னா, எனக்கு வெங்காயம் மட்டும் வாங்கிண்டு வாங்கோ, மத்தபடி ஒண்ணும் வேண்டாம்.  ரொம்ப நேரம் நடக்காம சீக்கிரம் வரப்பாருங்கோ”

“இல்ல ஒரு அரை மணி மட்டும் நடந்துட்டு வரேன்.  அதுக்குள்ள நீயும் வேலையை முடி. கௌரி வந்தா சாப்பிட்டுட்டு பேச சரியா இருக்கும்.  நீ தாப்பா போட்டுக்கோ.  நான் கிளம்பறேன்”

சாப்பிட்டு ஆசுவாச படித்துகொண்டு ஹாலில் பேச அமர்ந்தார்கள்.

“என்னப்பா அம்மா ஏதோ பேசணம்ன்னு சொன்னா?  ரொம்ப நேரம் ஆகுமாப்பா? எனக்கு நாளைக்கு போட்டுக்க டிரஸ் அயர்ன் பண்ணனும்.  கொஞ்சம் வேல இருக்குப்பா” என்றபடியே வந்து அமர்ந்தாள் கௌரி.

“இதைத்தாண்டி நான் சனி, ஞாயிறுலையே பண்ணுன்னு சொல்றேன்.  சொன்னா எங்க கேக்கறே, எல்லாத்துக்கும் ஏதானும் ஒரு வெட்டி ஞாயம் பேச வேண்டியது”,  தன் ஆதங்கத்தை கொட்டினாள் ஜானகி

“நாளைக்கு வேற ஏதானும் ஏற்கனவே அயர்ன் பண்ணினதை போட்டுக்கோ. எனக்கு உன்கிட்ட கொஞ்சம் leisure-ஆ பேசணும். அதே மாதிரி நான் பேசி முடிக்கறவரை காது கொடுத்து கேளு. நடுப்புற அம்மாவை, ஹரியை எல்லாம் வம்புக்கு இழுக்காதே”, டீலிங்கில் கறாராக இருந்தார் ராமன்.  

அவருக்கு தெரியும் அவர்கள் வீட்டில்  கௌரியால் பல நேரங்களில் மிகவும் முக்கியமாக பேச வேண்டிய விஷயங்கள் டைவர்ட் ஆகி உப்பு சப்பில்லாத விஷயங்களுக்கு போய் இருக்கிறதென்று.  (ராமன் சார் ரொம்ப உஷார் ஆகிட்டேள்)

“ஓகேப்பா நான் நீங்க பேசி முடிக்கறவரை வாயே தொறக்கலை”, என்று உடனே நல்ல பெண்ணாக கௌரி ஒத்துக்கொண்டாள் , அதுவும் எல்லார் வயிற்றிலும் புளியைக் கரைத்தது.

“இன்னைக்கு எங்க ஆபீஸ்க்கு ஒரு பையனாத்துல இருந்து பேசினா, அவா பையன்  singaporeல MNCல வேலை செய்யறானாம்.  அவாளுக்கு உன்னோட ஜாதாகம் பொருந்தி இருக்காம்.  நமக்கும் ஓகேன்னா மேல்க்கொண்டு பேசலாம்ன்னு சொன்னா. நீ என்ன சொல்ற, singapore வரன் ஓகேயா.”, நேரடியாக விஷயத்திற்கு வந்தார் ராமன். 

“அம்மாகிட்ட விஷயம் சொன்னதுக்கு என்னப்பா சொன்னா, அம்மாக்கு ஓகேயா “

“இல்லடி, எங்களுக்கு ஓகே, இல்ல இல்லைங்கறது இப்போ முக்கியம் இல்ல, உனக்கு Singapore போறதுன்னா பரவாயில்லையான்னு மட்டும் சொல்லு”, ஜானகி கணவனை முந்திக்கொண்டு பதில் சொல்லி ஒரு கேள்வியும் கேட்டார்.

“அம்மா எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல, நான் இப்போ வொர்க் பண்ற ப்ராஜெக்ட் Singapore, US ரெண்டு இடத்துலேர்ந்தும் பண்ணலாம், அதுனால இது ரெண்டு இடமும் ஓகேதான்.  நான் இங்க இருந்தே ட்ரான்ஸ்பர் மாதிரி கேட்டு வாங்கிப்பேன்.”

“சரி ஜானகி நான் அவரோட பேசி ஜாதகம் அனுப்ப சொல்றேன். நமக்கும் தோது பட்டு வந்ததுன்னா ப்ரோசீட் பண்ணலாம்”, ராமன் போன் செய்வதற்காக எழுந்து செல்ல, ஜானகி ஸ்டில் போஸ்ஸில்  உட்கார்ந்து இருந்தாள்.

“என்னாச்சும்மா, அப்படியே அசந்து போய் உக்காந்துட்ட”, ஹரி என்னவோ ஏதோ என்று ஜானகியை உலுக்க,

“அது ஒண்ணும் இல்லடா ஹரி, இங்க பக்கத்துல இருந்தா என்ன ஏதானும் திட்டணும்ன்னா கூட ரயிலோ, பஸ்சோ பிடிச்சு வந்து திட்டலாம், இப்போ சிங்கப்பூர்ன்னா  அது முடியாதுல்ல அதுதான்.”  கௌரி சமயம் தெரியாமல் ஜோக் என்ற பெயரில் கடிக்க ஜானகி காளி அவதாரம் எடுத்தார்.

“சும்மாவே இருக்க மாட்டியா கௌரி, எதுக்கு அவள வம்புக்கு இழுக்கறே, நீ ஏதோ அயர்ன் பண்ணனும்ன்னு சொன்னியே போய் பண்ணு போ.  ஜானு நா அவாத்துல பேசிட்டேன், நாளைக்கே அவர் ஜாதகம் அனுப்பறேன்னு சொல்லிட்டார்.  பாப்போம் ப்ராப்தம் எப்படி இருக்குன்னு. “

“ஜானகி நம்மளுக்கும், அவாளுக்கும் ஜாதகம் பொருந்தி இருக்கறதால அவா பொண்ணைப்  பாக்க எப்போ வரலாம்ன்னு கேட்டு போன் பண்ணினா, நான் உன்னண்ட பேசிட்டு  சொல்றேன்னு சொல்லி இருக்கேன்.  நீ என்ன சொல்ற”

“ஏன்னா, பையன்  இப்போ வராராமா”, ஜானகி ஆர்வமாக கேட்டாள்

“இல்லமா பொண்ணு பாக்கறதுக்கு எல்லாம் லீவ் போட முடியாது, அதுனால ஏதானும் பிக்ஸ் ஆனா சொல்லுங்கோ, கல்யாணத்தை ஒட்டி வரேன்னு சொன்னாராம். அவர் சொல்றதும் வாஸ்தவம்தானே. எத்தனை செலவு அங்க இருந்து வரணும்ன்னா” பையனுக்கு ஓவராக சப்போர்ட் பண்ண ஆரம்பித்தார் ராமன்.  (ராமன் சார் NRIs கஷ்ட்டத்தை கரெக்டா புரிஞ்சுண்டு இருக்கேள்)

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.