(Reading time: 10 - 19 minutes)

 

நீங்க சொல்றதும் சரிதான்.  அவாளுக்கு சண்டே வர முடியுமான்னு கேளுங்கோ, கௌரியை லீவ் போட சொன்னா வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பா”, அவர் கவலை அவருக்கு, ஏற்கனவே பையன்  வரவில்லை, இதில் அவளை வேறு லீவ் போட சொன்னால் இல்லாத லா பாயிண்ட் எல்லாம் பேசுவாளே என்று பயம்.

“சரிம்மா நான் பேசிட்டு அவாளுக்கும் தோது படுமான்னு கேட்டுட்டு சொல்றேன். கௌரி வந்தாச்சா”

“இல்லனா வர நேரம்தான் நீங்க அவ வரதுக்குள்ள அவாத்துல கேட்டுடுங்கோ, இந்த வாரம், அடுத்த வாரம் ரெண்டு வாரமுமே சொல்லுங்கோ. உங்க பொண்ணை  நம்ப முடியாது.  திடீர்ன்னு எனக்கு வேல இருக்குப்பா அப்படிம்பா”  (இதுதான் மாமி அம்மா அப்படிங்கறது.  எத்தனை கரெக்டா உங்க பொண்ணை புரிஞ்சு வச்சுருக்கேள்.  அதேதான் நம்ம கௌரியும்  சொல்லப்போறா)

“இல்லை ஜானு அப்படியெல்லாம் சொல்ல முடியாது கௌரி வந்து அவக்கிட்ட கேட்டுண்டே அந்த மாமாக்கு போன் பண்றேன். இப்படி ரெண்டு மூணு நாள் சொன்னா முதல்லேயே  ரொம்பக் கறாரா இருக்கறா மாதிரி இருக்கும்.”

இவர்கள் பேசிக்கொண்டே இருக்கும்போது உள்ளே நுழைந்த கௌரி, “என்னப்பா ரொம்ப சீரியஸ்ஸா இருக்கேள்.  அம்மாத் தெரியாம நன்னா சமைச்சுட்டாளா” என்று ஜானகியை சீண்டியபடியே வந்தாள்.

“ஏம்மா வரும்போதே அவளை டென்ஷன் படுத்தணுமா. கௌரி உன் ஜாதகமும் பையன்  ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்கு. அதுனால உன்னை பொண்ணு பாக்க சண்டே வரேன்னு அவாத்துலேர்ந்து போன் பண்ணினா, உனக்கு ஓகேயா, இல்ல ஏதானும் ஆபீஸ் வேலை இருக்கா”, ராமன் ஆபீஸ் விட்டு வந்த கௌரியிடம் கேட்டார்

“இந்த சண்டே எனக்கு ஒரு கட் ஓவர் இருக்குப்பா, கண்டிப்பா போகணும். அடுத்த வாரம்ன்னா ஓகே”

“ஒ சரி நான் அப்போ அந்த மாமாகிட்ட அடுத்த வாரமே வர சொல்றேன்.  நீ உள்ளப் போய் கை கால் அலம்பிண்டு அம்மாக்கு ஹெல்ப் பண்ணு.  முக்கியமா எந்த ஹெல்பா இருந்தாலும் அவளை வம்பிழுக்காமல் பண்ணு”, கௌரியை எச்சரித்தபடியே போன் செய்யப் போனார் ராமன்.

கே நம்ம பையன் வீட்டு நிலவரம் என்னன்னு பார்த்துட்டு வரலாமா

“ஹலோ அப்பா, அம்மா, ஸ்வேத் எல்லாரும் எப்படி இருக்கேள்”, சாட்டிங்கில் வந்தான் கௌஷிக்.

“ஹாய்டா கௌஷிக், உன்ன  எதுக்கு அடிச்சு பிடிச்சு சாட்டிங்க்கு வர சொன்னா தெரியுமா.  நாங்கல்லாம் வர வாரம் பொண்ணாத்துக்கு போய் பஜ்ஜி. சொஜ்ஜி சாப்பிட்டு வர போறோம்.”, ஸ்வேதா தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் மொட்டையாக ஆரம்பித்தாள்.

“என்னது பொண்ணு பாக்க போறேளா, யாருப்பா பொண்ணு”.  

“கௌஷிக் நான் போன வாரம் பேசறச்ச ஒரு அலையன்ஸ் பத்தி சொன்னேனே, அந்த ஜாதகம் ரெண்டு சைடும் பொருந்தி இருக்கு. அவாளுக்கும் சம்மதம், இந்த வாரம் பொண்ணு பாக்க வர முடியுமான்னு கேட்டா, நானும் சரின்னு சொல்லிட்டேன். 

“எந்த அலையன்ஸ்ப்பா, நீங்க ஒரு 7-8  பேரோட details சொன்னேள்.  இதுல எந்த பொண்ணை  போய்ப்  பாக்கப்  போறேள்”, அவன் கவலை அவனுக்கு.

“அதுதாண்டா கௌரி-ன்னு ஒரு பொண்ணோட bio-data உனக்கு மெயில்-ல அனுப்பி இருந்தேனே, அந்த ஜாதகம்தான் நன்னா பொருந்தி இருக்கு, அவாத்துக்குதான் போக போறோம்”, டவுட் கிளியர் செய்தார் பத்மநாபன்.

“ஒரு நிமிஷம் அப்படியே லைன்ல இருங்கோ, நான் ஒரு வாட்டி பார்த்துடறேன்.  ஓ ஓகே BE படிச்சுட்டு  HCL-ல வேல பண்றாளே, அவாளோடதா,”

“ஆமாம்டா அதேதான்.  உனக்கு ஓகேதானே”

“ஏம்பா நேர்ல போறேள், அவாளை மொதல்ல போட்டோ அனுப்பச் சொல்லலாம் இல்ல, என்னோட போட்டோவும்  அவாத்துல கொடுத்துட்டா போட்டோல பிடிச்சிருந்தா அப்புறம் நேர்ல போலாம் இல்ல.  அவசரப்பட்டு போயிட்டு நமக்கு பொண்ணையோ இல்ல அவாளுக்கு என்னையோ பிடிக்காம போய்ட்டா அப்பறம் சங்கடம்தானே”,

“ஏண்டா கௌஷிக் மாமனார் ஆத்துக்கு இப்போவே செலவு வைக்க கூடாதுன்னு பாக்கறியா,      2 பஜ்ஜிக்கு மேல சாப்பிட மாட்டோம்டா”, சமயம் தெரியாமல் கேலி என்கிற பெயரில் கடித்தாள்  ஸ்வேதா.

“சும்மா இருடி, நீ வேற, இல்லடா கௌஷிக் இப்போல்லாம் பொண்ணாத்துக்காரா  போட்டோ கொடுக்கவே தயங்கறா.  எல்லாம் இந்த இன்டர்நெட் படுத்தற பாடு.  ரொம்ப பயப்படறா.  நாம நேர போனோம்ன்னா அட்லீஸ்ட் நம்ம பழகறத பார்த்துக்  கொஞ்சம் நம்பிக்கை வச்சு கொடுக்கலாம் இல்லையா.  அதுதான்”, பெண்ணை பெற்றவர் இல்லையா, கரெக்ட் பாயிண்ட்டை சொன்னாள்  லக்ஷ்மி.

“சரிம்மா, நீங்க போயிட்டு வந்து details சொல்லுங்கோ நான் அடுத்த சண்டே நைட் கால் பண்றேன், பாய்”

“பாய்டா கௌஷிக், உனக்கு ஏதானும் ஸ்பெஷல் கேள்வி பொண்ணுகிட்ட கேக்கணுமா சொல்லு உன் சார்பா நான் கேட்டுட்டு வரேன்”, ஸ்வேதா பெரிய உதவி செய்வதாக கௌஷிக்கிடம் கேட்க

“அம்மா பரதேவத, நீ உன் வாயை மூடிண்டு போயிட்டு வந்தா போரும்.  கேள்வி கேக்கற வேல எல்லாம் அம்மா பார்த்துப்பா.  அம்மா 3 பேரா போனா நல்லது இல்லைன்னு சொல்லுவாளே, பேசாம இவளை இங்கயே விட்டுட்டு நீங்க ரெண்டு பேர் மட்டும் போயிட்டு வாங்கோளேன்”, கெஞ்சலுடன் முடித்தான் கௌஷிக்.

“இல்லடா கௌஷிக் அதெல்லாம் மனுஷாளா போகும்போதுதான் பார்க்கணும், இந்த மாதிரி குரங்கை எல்லாம் கூட்டிண்டு போறச்ச பாக்க வேண்டாம்.  நீ கவலைப் படாம இரு.  நான் பார்த்துக்கறேன்”.  பத்து சார் கௌஷிக்கிடம் வாக்கு கொடுத்தார்.

தொடரும்

Episode # 02

Episode # 04

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.