(Reading time: 20 - 39 minutes)

04. காற்றாக நான் வருவேன் - Anna Sweety

விஷயத்தை சொன்னால் சாப்பிடுவாளோ, என்னவோ? உண்டு முடிக்கும் வரை பொறுமையாய் இருப்பது உத்தமம்.

உணவு முடிய வந்து நின்றார் பி.ஏ ராஜிவ் “ரிஷப்ஷன் அரேஞ்சமென்ட் பத்தி பேசனும் சார்” என்றபடி.

“வெட்டிங் ரொம்ப சிம்பிளா முடிஞ்சுட்டுது...ஸோ ரிஷப்ஷன் ரொம்ப க்ராண்டா இருக்கட்டும். மேடம் சொல்றபடி எல்லாம் செய்துடுங்க....” அவள் முகம் பார்த்தான் அபிஷேக்.

Katraga naan varuven

“எனக்கு டிரஃஸ்....ம்..காக்ரா...சோளி......ம்....பிங்க் கலர்....காப்பர் ப்ளு த்ரெட் எம்ராய்டரி வித் பர்ல் அண்ட் ஜெம் வொர்க்...மத்தபடி எல்லாம் உங்க இஷ்ட்டம்”

குழந்தையின் முக பாவத்துடன் அவள் சொல்ல,  பஞ்சுமிட்டாய் கேட்கும் குழந்தையின் ஆர்வத்துடன் அவள் சொன்ன விதத்தில் மனதிற்குள் செல்லமே! என் சீராட்டிகொண்டான் கணவன்.

“எல்லாமே உன் இஷ்டம்தான்னு சொன்னேன்....” மனைவியிடம் சொன்னவன் “ராஜிவ் ஸ்டேஜ் டெகரேஷன், காஸ்ட்யூம் எல்லாத்தையும் நாளைக்கே மேடத்தை கேட்டுட்டு செய்ய சொல்லுங்க...,நம்ம டீமுக்கு நாளைக்கு லன்ச் இங்கதான், அதுக்கான அரேஞ்மென்ட் பண்ணிருங்க.... பெர்சனலா நானே இன்வைட் பண்ணிகிடுறேன்...மூனு நாள்ல ரிஷப்ஷன்....முடியும்தானே.....?”

“ஷ்யூர் சார்...” ராஜிவ் திரும்பி செல்ல,

“டீமா...கிரிகெட் டீம் வச்சிருக்கீங்களா என்ன?” கிண்டல் இருந்தது அவள் குரலில்.

மீண்டும் தயனிக்கு தெரிவிக்காத விஷயம் தற்காலிகமாக மறந்திருந்தது இப்பொழுது ஞாபகம் வந்தது. மறக்கும் காரணமும் புரிந்தது.

காதல் கொண்ட மனம் அவளைத்தான் சுற்றி வருகின்றதே தவிர, அவனிடம் வர மறந்து விடுகிறது. அதனால் வந்த குழப்பம் இது.

“கிரிகெட் டீம் வச்சுகிற அளவுக்கு நான் இன்னும் சம்பாதிக்கலையே மேடம்” அவள் கிண்டலுக்கு பதில் சொல்லதான் இவன் சொன்னது.

“ஆங்!...அங்க உங்க அம்மா வீட்டில இல்லாத பணமா? எப்படியெல்லாமோ சம்பாதிச்சு வச்சிருக்காங்களே!”

சொன்ன பின்புதான் இது அவனுக்கு எப்படி வலிக்கும் என்பதே உறைத்தது தயனிக்கு.

“சாரிபா.... சாரிபா...வேக வேகமாக மன்னிப்பு கேட்டாள். “எனக்கு பேசவே தெரியலை அபிப்பா.... உங்கள..”

கண்ணில் நீர் திரண்டுவிட்டது அவளுக்கு. எழுந்து வந்து அமர்ந்திருந்த அவன் மடியில் முகம் புதைத்தாள் தரையில் முழந்தாளிட்டபடி.

அவன் கை அதுவாக அவள் தலை கோத” என்னடா நீ இதுக்கெல்லாம் அழுதுகிட்டு.. நான் ஒன்னும் தப்ப நினைக்கலடா...நீ எல்லாத்தையும் பறி கொடுத்திருக்க...அந்த வலி உனக்குள்ள இருக்குது...இத்தனைக்கும் அம்மாமேல உள்ள கோபத்த நீ என் மேல காட்டாம இருக்கியே அதுவே ரொம்ப பெரிய விஷயம்...” முகம் மாத்திரம் நிமிர்த்தி தன்னை தாங்கி இருப்பவன் முகம் பார்த்தாள்.

“எனிவே..... நான் மெடிசின் படிச்சு முடிக்கிற வரை என் பேரண்ட்ஃஸ்ட்ட இருந்துதான் ஃபினான்சியல் சப்போர்ட்.....அதுக்கபுறம்.....இங்க உள்ளது எல்லாமே என் சுயசம்பாத்யம்....ரத்த பணம் நம்மட்ட இல்லடா அம்மு...” உணர்ச்சி வசபட கூடாது என்ற அவனது முற்சிகளை மீறி இயல்பிழந்தது அவனது முகமும் குரலும் கடைசி வரியில்.

“சாரி அபிப்பா! ஹர்டட் யூ” இருந்த நிலையிலேயே இறுக்கி அணைத்தாள் தன்னவனை.

“ஐ’ம் நாட் ஹர்ட் பேபி” என்றவன் கைகள் அவள் தோள்களை சுற்றியது. அவள் உச்சந்தலையில் ஒரு அன்பின் அச்சாரம் ஆறுதலாய் பதிக்கபட்டது.

பை தி வே, நம்ம டீம் பத்தி நீ தெரிஞ்சிகிடனும் தயனிமா” என தொடங்கினான்.

“சொல்லுங்க அபி...” இதழ்கள் தவிர எதையும் அசைக்கவில்லை அவள்.

“நான் படிச்சிருப்பது மெடிசின் தான், பட் நான் இப்போ மெடிசின் ப்ராக்டீஃஸ் பண்ணல...”

“இஸிட்..?என்ன நல்லா பார்த்துகிட்டீங்களே...! ஏன்? பிடிக்கலையா?”

“ம்...அது அப்படியெல்லாம் இல்ல....நேரமில்ல...என் பிஸினஃஸ்....ஆணடவர் எனக்கு கொடுத்த வேலை இதுன்னு தான் நம்புறேன்....நான் இத உன்ட்ட மறைக்கனும்னு நினைக்கவே இல்ல தயனிமா... பட் எப்படி சொல்லாமல் இருந்தேன்னு எனக்கு இன்னும் முழுசா புரியல...என்ன நம்புவியா தயூ?”

அவனை அணைத்திருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள். சற்று விலகி தன்னை சூழ்ந்திருந்த அவன் வலக்கையை எடுத்து தன் இரு கரங்களுக்குள்ளும் வைத்துக் கொண்டாள். நேர் பார்வை பார்த்தாள் அவன் கண்களை. உன்னை நம்பாமலா? என்ற கேள்வி இருந்தது அப்பார்வையில்.

அவன் வேதனையை கூட்ட அவளுக்கு விருப்பம் இல்லை. இவளிடம் சொல்ல தயங்குகிறான் என்றால் விஷயம் இவளுக்குள் வெறுப்பை தூண்டுவதாய் இருக்க போகின்றது. எந்த வேலை இவளுக்கு பிடிக்காததாக இருக்க முடியும்?....... ஒருவேளை அது தவறான ஒன்றாய் இருந்தால் கூட, கடவுள் பயம் உள்ளவன் தவறு என்றால் திருத்தி கொள்வான்.

“நான் உங்களை எப்பவும் நம்புவேன்னு உங்களுக்கு தெரியும் அபிப்பா...”

“ஐ அஅக்ட் இன் மூவிஸ்....தமிழ் மூவிஃஸ் ப்ரொடியூஃஸ் பண்றேன்..அதில நடிக்கவும் செய்றேன்...”

“வாட்?” அஷ்ட கோணலாகியது தயனியின் முகம். விமானத்தில், விமான நிலையத்தில் அனைவரும் பார்த்த பார்வை ஞாபகம் வந்தது. ‘ஓ.... இதனால் தானா?’

கோபம் கொப்பளித்துகொண்டு வந்தாலும் அவனிடம் அதை காண்பிக்க விருப்பமின்றி அதை அடக்கியவள். “தப்புன்னு தெரியுதுல்லபா...தயவு செய்து விட்டுறுங்க..ப்ளீஸ்” கெஞ்சினாள்.

பெரும்பாலான கிறிஸ்தவ குடும்பங்களைபோல திரைபடம் பார்ப்பது தடை செய்யபட்ட குடும்பம் தான் தயனியுடையதும். சில நேரம் ஆசையில் ஒரு சில காட்சிகளை பார்த்திருப்பாளே தவிர முழு படம் எதுவும் பார்த்தது இல்லை. சில நிமிடம் பார்த்ததற்கே குற்ற மனப்பான்மை குறுகுறுக்கும். இதில் படம் தாயரித்து அதில் நடிப்பதென்றால்? நிச்சயமாக அவளால் ஏற்க முடியாது.

 “நான் சொல்றத கேட்டுட்டு, நீ உன் முடிவ சொல்லுடா..ப்ளீஸ்” கணவனும் கெஞ்சினான்.

அவள் மௌனம் அவன் பேச சம்மதம் சொன்னது.

நாம எதை கேட்கிறோமோ...நாம விரும்பினாலும் விரும்பாட்டாலும்..அதை கொஞ்சம் கொஞ்சமா நம்ப ஆரம்பிக்கிறோம்....அது வார்த்தைகளோட வல்லமை...மனதில் வந்த நம்பிக்கை மெல்ல வாயில் வார்த்தையா வரும்...அப்புறம் ஏற்ற சூழல்ல அது செய்ல்ல வரும்....நானும் அதை முழுசா நம்புறேன்.

நியாமில்லாத கருத்துக்கள்....மாட்டிக்காம திட்டுதனம் பண்றது, பொய் சொல்றது புத்திசாலித்தனம்...பழிக்குபழி...வன்முறையை....சட்டங்களை மீறுவதை நியாயபடுத்துறது...லஸ்டிங்க்....ஃப்ளர்டிங்....ஈவ் டீஃஸிங்க்....ஃஸ்மோக்கிங்க்...டிரிங்க்ஃஸ்.... இதெல்லாம் ஃபன்....பொண்ணுக்கு விருப்பமே இல்லனாலும் தாலி கட்டிட்டா அது கல்யாணம்...ரேப் பண்ணவனை மேரஜ் பண்றதுதான் கற்பு...கல்யாணத்துக்கு முன்னால காதல்ங்கிற பேர்ல நெருங்கி பழகிறது ஹிரோயிசம்....வேலைக்குபோறதுக்கு முன்னாடி படிக்கிற காலத்தில லவ் பண்றது சரி....அத தப்புன்னு சொல்ற பேரண்ட்ஃஸ் வில்லன்....ரேப் விக்டிம்ஸ் அவங்க சேஸ்டிடிய லாஸ் பண்ணிட்டாங்க....முதல் ஒய்ஃப் இருக்கிறப்ப ரெண்டு கல்யாணம் பண்ற ஹீரோ....இன்னும் எத்தனையோ தவறான பல கருத்துகளை நியாயபடுத்திறத பார்க்கிறது, படிக்கிறது இதில் எனக்கும் சுத்தமா உடன்பாடில்லை.

நியாயத்துக்கும், உண்மைக்கும், ஆண்டவரோட வார்த்தைக்கும் விரோதமான கருத்தை நியாயபடுத்துற எதையும் நான் பார்ப்பதும் இல்ல, நடிக்கிறதும் இல்ல.....

ஆனால் நல்ல பொழுதுபோக்கு இல்லனா?......கெட்டதைதானே பார்க்கவேண்டிய கட்டாயம்......அதான்....

நான் ஹவுஃஸ் சர்ஜனா இருக்கிறப்ப அதுவா தேடி வந்தது ஆக்டிங் சான்ஸ்.....அப்ப ஜஸ்ட் ஃபார் ஃபன் அப்படின்னுதான் போனேன்....மூவி படு ஹிட்...அப்படியே தொடர்ந்து ஃப்யூ மூவிஸ்.... அந்த டைம் தான் ஐ கேம் டு காட்....நடிக்கிறத விட்டுடலாமான்னு தோணிச்சுதான்....பட் எனக்கு ஒரு சூப்பர் டீம் கிடச்சாங்க...எல்லாருக்குள்ளயும் பாவமில்லாத தரமான பொழுதுபோக்கு மக்களுக்கு கிடைக்கனும்னு ஒரு ஆசை....எனக்கு அது காட்ஸ் கால் ஃபார் மை லைஃப்னு  தெரிஞ்சுது.... ஐ ஸ்டார்டட் அவர் ப்ரொடக்க்ஷன் ஹவுஸ்...என் மூவிஸை பாரு தென் யூ டிசைட்....”

அவனது ஒரு திரைபடத்தை பார்த்த தயனி மனதில் நிம்மதியே!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.