(Reading time: 20 - 39 minutes)

 

வன் மனதின் வலி அவளுக்கு புரிய...இது அவளது பேனா என்பதே அவனுக்கு தெரியவில்லை என உறைக்க,  தன் கதை அவனிடம் சொல்லும்போதும் தங்கத்தில் பரிசு எனதான் அவனிடம் கூறி இருந்தாளே தவிர தங்கபேனா என்றவரை கூட தெரிவித்திருக்கவில்லை என்ற ஞாபகம் வர, அவனை தன் தோளில் சாய்த்தாள் தயனி. இவளை அணைத்தான் அவனும்.

ஒரு அம்மாவுக்கு தன் குழந்த வேண்டாததா போகுமா......?” முனங்கினான் அவன். அவன்பால் தாய்மை கொண்டாள் தயனி.

மறு நொடி “ப்ச், உலகத்தில் என்னவென்னவோ நடக்குது....அது நமக்கு நடக்கிறப்பதான் வலி புரியுது...எத்தன குழந்தைங்கள குப்ப தொட்டியில இருந்து கண்டெடுக்காங்க என்ன தயூ....” திடம் பெற்று நிமிர்ந்துவிட்டான். “அப்படிபட்ட குழந்தைங்களுக்காக இனி எதாவது செய்யனும்” தனக்குதானே அவன் சிறு குரலில் உறுதியோடு சொல்லி கொண்டான்.

“தூங்கலாம் தக்காளி! நாளைக்கு ரொம்ப வேலை இருக்குது.” இவளை இழுத்துகொண்டு போய் படுக்கையில் விழுந்தான்.

ஏசிக்கு இதமாக இவளுக்கு மூடிவிட்டு கண்களை மூடிக் கொண்டான்.

அவன் தாயின் நினைவு வந்ததும் அவன் மனம் சோர்ந்து விட்டது என தயனிக்கு புரிந்தது. இல்லையென்றால் அவன் தொடங்கிய தொடுகை தொடர்ந்திருக்கும். இவளை போல அவனும் பலவற்றையும் எண்ணி மனம் தவித்து கொண்டுதான் இருக்கிறான்.

அப்படி அவன் தவிக்கும் போதும் இவளுக்கு குளிருக்கு இதமாக மூடும் அன்பின் கரங்கள் அவனது. மனம் முழு நிம்மதி அடைய கணவன் மேல் கரம் போட்டபடி தூங்கி போனாள்.

டுத்த நாள் அவன் எழுப்பிதான் அவள் கண் மலர்ந்தாள்.

“அம்மு, மணி பத்தாச்சுடா...சப்பிட்டு ட்ரஃஸ் ட்ரயல் பார்த்துட்டு தூங்குமா...”

தடபுடவென எழுந்தாள். “எப்பவும் யாருக்காவது பயந்துதான் எழும்புவியா? நான்தானே! மெதுவா எழுந்தா என்ன?” அதட்டினான்.

உரிமையாய் உண்மையாய் இவளிடம் அன்பாயிருக்கிறானா?.... நடிக்கிறானா?......முதல் சிந்தனை அதுதான்.

என்னதிது ஒரு கணம் அவனை நம்புவதும் மறுகணம் அவனை சந்தேகிப்பதும்......நேற்றும் எதை வைத்தோ சந்தேகித்தாள்.....பின்பு எதை வைத்தோ நம்பினாள்தானே.....இன்று திரும்பவும்?

ஒவ்வொரு நொடியும் அவனது அன்புக்கு இவளுக்கு சாட்சி தேவைபடுகின்றதா? அவன் நடிகன் என்பதால் நம்ப முடியவில்லையா? அல்லது அவன் அம்மாதான் இதற்கு காரணமா? இரண்டும்தான் என்றது அறிவு.

அந்த நாள் இவளுக்கு நத்தையாய் நகர்ந்தது என்றால் அபிஷேக்கிற்கோ நிற்க நேரமில்லை. அன்று அவனை தயனியால் கண்ணால் காண கூட முடியவில்லை.

இரவு தாமதமாக வீடு வந்தவன் இவள் வரவேற்பறையில் திரு திருவென விழித்தபடி அமர்ந்திருப்பதை பார்த்தவுடன், “தூங்காம இங்க என்ன செய்துகிட்டு இருக்க?” சற்றே அதட்டினான்.

அவன் அருகில் இல்லாமல் உலகமே வெறுமையாய் தெரிந்திருந்தது அதுவரை அவளுக்கு. “நாளைல இருந்து எங்க போனாலும் என்னையும் கூட்டிட்டு போங்க......நீங்க இல்லாம முடியல அபிப்பா....”

அவள் அழுவாள் என நிச்சயமாக அபிஷேக் எதிர் பார்க்கவே இல்லை.

“ஹேய்....என்னாச்சு அம்மு? வர லேட்டாகும் தூங்குன்னு சொன்னே தயூ? “ மார்பில் முகம் புதைத்திருந்தவளை மௌனமாக சில நொடி அணைத்துகொண்டான்.

“ஒரு முக்கியமான வேலை...” அவளிடம் சில பத்திர கட்டுகளை நீட்டினான்.

“நம்ம ப்ராப்பர்ட்டி எல்லாத்தையும் நம்ம ரெண்டு பேருக்குமா மாத்திட்டேன்....நாளைக்கு ரிஷப்ஷன்...அதான் நாள கழிச்சு ரிஜிஃஸ்டர் செய்துடனும்...”

காலையில் இவள் விழித்த விதத்தை அவன் புரிந்திருக்கிறான். சந்தேகம் போக்க இந்த ஏற்பாடு.

நொடியில் புரிய “சாரி....அபிப்பா....ஒரு நிமிஷம் நம்பிக்கை...மறு நிமிஷம் சந்தேகம்னு....” குற்ற உணர்ச்சி அவளை கொன்றது.

“தெரியும்டா தயூ....பொறுமையா இருக்கனும்னு சொல்லி இருந்தேனே....இதுக்கெல்லாம் கில்டியா ஃபீல் செய்துகிட்டு....கொஞ்ச நாள்ல சரி ஆயிடும் அம்மு” அப்பொழுதும் அவளுக்குதான் ஆறுதல் சொல்ல முனைந்தான் அவள் கணவன்.

“என் மேல உங்களுக்கு கோபமே இல்லையா....அபி?”

“இல்லடா......நான் இல்லனா தூக்கம் வரலைனு வந்து உட்கார்ந்துட்டு இருந்தியே அது என்னவாம்?.....காதல்.....அது எனக்கான பொக்கிஷம்.....உன் சந்தேகம் ஒரு காயம்.....அதை ஏற்படுத்தியது என் அம்மாவேங்கிறதால அது நம்ம ரொம்ப பாதிக்குது....குணமாக்க என்னவெல்லாம் செய்யனுமோ அதையெல்லாம் செய்வேன்....அதவிட்டுட்டு....என் பொக்கிஷத்தை தொலைக்க நான் தயாரா இல்ல......ஐ லவ் யூ தயு...” இதற்குள் தயனி அவன் மார்பில் சரணடைந்திருந்தாள்.

“தயு....,  நம்ம மேரேஜ் ப்ராப்பரா தெரியனும் இங்க...அதுக்கு ரிஷப்ஷன் முடியட்டும்....அங்கே போய் உனக்கு நியாயம் கிடைக்க என்ன லீகல் ஆக்க்ஷன் எடுக்கனுமோ எல்லாம் எடுப்போம்.  வொய்ஃபோ, பிள்ளைங்களோ, பேரண்ஸோ எனக்கு எதிரா செய்றத நான் விட்டு கொடுத்திடலாம்...பட் அவங்களே அடுத்தவங்களுக்கு எதிரா செய்த அநியாயத்துக்கு நீதி செய்யனும்னுதான் பைபிள் சொல்லுது. தாமர், அம்னான் விஷயத்தில் அவங்க அப்பா டேவிட் நீதி செய்திருந்தார்னா, பின்னால எவ்ளவோ இழப்ப தடுத்திருக்கலாம்” மௌனத்தால் தன் சம்மதத்தை வெளிபடுத்தினாள் மனையாள்.

குரூரமாய் பார்த்தபடி அங்கு வந்து நின்றது அது.

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:762}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.