“ஜானு இன்னைக்கு 4.30-6.00 ராகு காலம் அப்படிங்கறதால ஒரு மூணரை மணிக்கு வரலாமான்னு கேட்டு பத்மநாபன் சார் போன் பண்ணி இருந்தார், நானும் சரின்னு சொல்லிட்டேன், உனக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே”
“ஏம்பா அவாகிட்ட சரின்னு சொல்றதுக்கு முன்னாடி நீங்க அம்மாக்கிட்ட கேட்டிருந்தா பரவாயில்லை. எல்லாத்துக்கும் சரின்னு சொல்லிட்டு இப்போ எதுக்கு ஒப்புக்கு அம்மாக்கிட்ட பெர்மிஷன் கேக்கறேள். இப்போ அம்மா முடியாதுன்னு சொல்லிட்டா உடனே போன் பண்ணி அவாளை வேற டயத்துக்கு வர சொல்லப் போறேளா ”, காலை முதல் எந்த வேலையும் இல்லாமல் பொழுது போகாததால் தன் பெற்றோரை வம்பிழுக்க ஆரம்பித்தாள் கௌரி.
மக்களே எப்படி எல்லாம் டைம் பாஸ் பண்ணலாம்ன்னு நம்ம கௌரிகிட்ட கத்துக்குங்க.
“ஏண்டி அப்பா என்கிட்டக் கேக்கறார், அதுக்கு நான் பதில் சொல்லிக்கிறேன். நீ எதுக்கு நடுவுல பூந்து பஞ்சாயத்து பண்ற”, காபியை தன் கணவரிடம் தந்தபடியே கேட்டார் ஜானகி.
“இந்தக் காலத்துல நல்லதுக்கே காலம் இல்லமா . பாரு உனக்காக நான் பேசிண்டு இருக்கேன், நீ என்னையே திட்டற”, வராத கண்ணீரை துடைத்து எக்ஸ்ட்ராவாக மூக்கையும் சிந்தி போட்டாள் கௌரி.
“நீ எனக்கு சப்போர்ட் பண்ணின வரைக்கும் போறும். போ போய் மொதல்ல குளிச்சுட்டு வா. இப்படியே பப்பறப்பான்னு வரவா முன்னாடி நின்னு என் மானத்தை வாங்காத”, கூடத்தை விட்டு அவள் நகர்ந்து குளிக்கத்தான் போகிறாளா என்பதையும் சேர்த்து confirm பண்ணிய பிறகே தன் கணவரை பார்த்துப் பதில் சொன்னார் ஜானகி. (மாமி உஷாராய்ட்டேள் போங்கோ. நீங்க பின்னாடி போய் பார்க்கலைன்னா, கௌரி இந்த ரூம் வழியாப் போய் அந்த ரூம் வழியா கதை பேச வந்துருவாங்கற பயம்தானே)
”எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லைனா, நான் கேசரி கிளறி பஜ்ஜி போட்டுட்டு அப்படியே இட்லியும் பண்ணலாம்ன்னு இருக்கேன். இன்னும் ஏதானும் பண்ணனுமா, இல்ல இது போறுமா உங்களுக்கு என்ன தோணறது.”
“இல்லமா ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதே. பொண்ணு பாக்கத்தானே வரா. இதுவே போறும்.”.
“அவாத்துலேர்ந்து எத்தனை பேர் வரோம்ன்னு ஏதானும் சொன்னாளா.”
“அந்த மாமா, மாமி, அவா பொண்ணு 3 பேர் மட்டும்தான் வராளாம். பொண்ணும், பிள்ளையும் பார்த்து பிடிச்சு ஓகே சொல்லட்டும் அப்பறம் மத்தவாளண்டை சொல்லிண்டா போறும்ன்னு அந்த மாமாவே சொல்லிட்டார். உன் தம்பி வரேன்னு சொன்னானே, எத்தனை மணிக்கு வரானாம்”
“அவன் 12 மணிக்குள்ள வந்துடறேன்னு சொல்லிட்டான். குழந்தைகளுக்கு நாளைக்கு ஏதோ பரிட்சையாம் அதனால அலமுவை ஆத்துல விட்டுட்டு அவன் மட்டும் வரேன்னு சொல்லிட்டான்”
“ஹ்ம்ம் அதுவும் சரிதான். அவா 3 பேர் மட்டும் வரும்போது நம்மாத்துல மட்டும் நிறைய பேர் இருந்தா நன்னா இருக்காது. சரி நானும் ஹரியும் கடைக்குப் போயிட்டு பூ, பழம் எல்லாம் வாங்கிண்டு வந்துடறோம். வேற ஏதானும் வேணுமா”
“சரி நீங்க வரச்ச பால் கவர் ஒரு 2 வாங்கிண்டு வாங்கோ. போறாத மாதிரி இருக்கு. அதே மாதிரி காபி பொடியும் பிரெஷ்ஷா வாங்கிண்டு வாங்கோ. புதுப் பொடில போட்டா நன்னா இருக்கும். ”
“சரி ஜானு. நாங்க போயிட்டு வந்துடறோம். ஹரி ரெடியாடா. போலாமா. ஆமாம் வாசல்ல நிக்கறது யாரோட வண்டி”
“என் ப்ரண்டோடதுப்பா. நிறைய வாட்டி கடைக்கு போக வேண்டி வரும். அதனால இன்னைக்கு மட்டும் வாங்கிண்டு வந்தேன். அப்பறம் அம்மா நீ சமையல் வேலை மட்டும் பாரு, நானும் அப்பாவும் கடைக்கு போயிட்டு வந்து கூடத்தை ஒழிக்கற வேலை பண்றோம். நீயே எல்லாத்தையும் இழுத்து போட்டுக்காத”.
“சரிடா நீங்க போயிட்டு சீக்கிரம் வாங்கோ”, என்றபடியே உள்ளறை வேலைகளை கவனிக்க சென்றார் ஜானகி.
“அம்மா அடிச்சு தூள் கிளப்புறம்மா, ஹரி நீ என்னைக்கானும் நம்மாத்து கேசரில இத்தனை முந்திரி பருப்பைப் பார்த்து இருக்கியாடா. பாரு, நாடார் கடைப் பருப்பு அத்தனையும் நம்மாத்து வாணளிலதான் இருக்கு. அம்மா எனக்கு கொஞ்சம் taste பண்ண குடேன்”, கேசரியை ஏகப்பட்ட ஏக்கத்துடன் பார்த்தவாறே கௌரி அம்மாவிடம் applicationai தட்டி விட்டாள்.
அதை அப்படியே சாய்ஸ்ஸில் விட்ட ஜானகி, “போடி, வீணா என்னை டென்ஷன் படுத்தாமப் போய் சாயங்காலம் கட்டிக்கப்போற புடவை, நகை எல்லாம் மாட்சா பீரோல கண்ணுக்கு படறா மாதிரி முன்னாடி எடுத்து வை”
“என்னது புடவை கட்டணுமா”, அப்படியே சமையலறை தரையில் மடங்கி உட்கார்ந்தாள் கௌரி.
“பின்ன புடவை கட்டாம, எப்பவும் ஒரு அழுக்கு நைட்டி போட்டுண்டு ஆத்துக்குள்ள சுத்துவியே, அதே மாதிரி போட்டுண்டு அவா முன்னாடி எம் மானத்தை வாங்கலாம்ன்னு நினைச்சியா”, ஜானகி கடுப்பாகி கேள்வி கேட்க்க
“ஏம்மா ஒண்ணு இந்த extreme இல்ல அந்த extremaa. நடுப்புற சுடிதார்ன்னு ஒரு super item இருக்கே, அது உன் கண்ணுல படலையா.”. தன் சொல்லுக்கு டெபாசிட் கூடக் கிடைக்காது என்று தெரிந்தும் தன் பங்கு கொடியை நாட்டினாள் கௌரி.
“இங்க பாருடி நம்மாதுக்குன்னு ஒரு இது இருக்கு .....”
“எதும்மா”
“அச்சோ ஒரு பாரம்பர்யம்டி, அதுனால மரியாதையா போய் எல்லாத்தையும் எடுத்து வைச்சுட்டு, கூடத்தை கொஞ்சம் ஒழி. எல்லாம் லாலி பீலின்னு எறஞ்சுண்டு இருக்கு. பாவம் அப்பா ஒண்டியா பண்றார்.”, லாவகமாக கௌரிக்கு வேலை கொடுத்து அனுப்பி கேசரியை அவள் கபளீகரம் பண்ணுவதிலிருந்து ஜானகி காப்பாற்றினார்.
“ஏம்மா தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பர்யம்ன்னு சொல்றத்துக்கு நாம என்ன சென்னை சில்க்ஸ் ஓனரா. ஆனாலும் ரொம்ப ஓவராத்தான் பண்றேம்மா”, என்று புடவை கட்ட வேண்டுமே என்ற ஆதங்கத்தில் கத்தியபடியே கூடத்திற்கு வந்த கௌரியை ஏற இறங்கப் பார்த்த ஹரி,
“கௌரி அம்மா உனக்காக ப்ளீச்சிங் பவுடர் எல்லாம் எடுத்து வச்சாளே மூஞ்சியை ப்ளீச் பண்ணிக்கலை”. வம்பிழுக்க ஆரம்பிக்க,
“இல்லடா ஹரி, அது நேக்கு இல்ல. சப்போஸ் உனக்கு தப்பித் தவறி இயற்கை கோளாறால கல்யாணம் ஆயிடுத்துன்னு வச்சுக்கோ, அப்போ உன் பொண்டாட்டி வருவா இல்லையா, அவளுக்காகதான் அம்மா இப்போலேர்ந்தே காபந்து பண்ணி வச்சிருக்கா”. என்கிட்டயேவா என்று ஒரு லுக்கை விட, சமையலறையிருந்து கரண்டி வடிவத்தில் ஏவுகணை கூடத்திற்கு வந்தது, கூடவே காளி ஸ்வரூபத்தில் ஜானு மாமி.
“மரியாதையா ரெண்டு பெரும் போய் ஆளுக்கு ஒரு ரூமைப் கிளீன் பண்ணுங்கோ. இல்லை கூடத்துல விழுந்த கரண்டி ரெண்டு பேர் மண்டைலையும் விழும்”, காளி அருள் வாக்கு சொல்ல ஹரியும், கௌரியும் ஒரு ஒரு அறைக்குள் எஸ்கேப் ஆக ராமன் சார் ஜானு மாமியை ஆசுவாசப்படுத்த ஆரம்பித்தார்.
unga humour sense adha ninga ezhudara vidham ..... sooopppperrrrrr ...
paasakkara thambi nalla pillai aanadhu
gowri kesari pathi sonna comment
ammavoda sound kettu athirndha gowri
paattu paada sonna podhu ... Woaw ..... ninga soldra vidham ummmmaaah dear ....
Gowri yin kurumbugal chooo cute...
Gowri photo paakama thaan yes sonnanga correct aah
kowshiyum skypa'la vara poradhu illa ....
avanga kalyanathu annaikku thaan gowri "kannum kannum nokiya paada poraanga correct aah
Sorry Rendu answerum thappu sujatha. Gowri photo paarthuttuthan yes sonnaa. And avan skypela pesuvaan
enakku romba romba pidichathu namma Gowriyin mind voice...athuvum avanga amma voice keddudu ithu avanga voice thaana ille recording pinnadi oduthaanu confuse aana scene thaaru maaru.. romba sirichen
Hari ennathan oru padipsss ah irunthalum counter kodukkumbothu appapo goundamani sir aiye minjiduvar pola.. namma Swetha konjam Gowri kidda pesuna scene yen mute pannidinga Jay ? i missed it actually.. ponnu paartha idathula ponnu paadamal swetha paadunangale future avanga maapilaiyum angathan irukkaaro ( Hari ???
Enaku Koushik pidichirukkunu paddunu solra scene super
maya bajar personally enakum pudicha padam :)
Jaanu mami + Gowri = tom and jerry tamil version la irukku ... i thoroughly enjoyed this episode .. super ma
YEn yen ippadi yeppavume Koushikku villiyaave irukkeenga Bhuvaneshwari. Paavam avan
athu ennamo theriyala enna maayamo puriyala ..Kowshik ai nenachale sandai podanum pola irukku .. aama naangalam hero enga enga nu valai poddu theduna avaru engalukke dimikki kodukkiraare ... athunaalthaan ..
apparam oru mikkiyamaana kelviku bathil varliye ;)
mounam sammathamnu eduthukava da
jollya irunduchu
janu ma nejamave idu neenga dana
sweth-gowri frnds aitanga......
ena pa ithu adukula thodarum nu potutel......
nxt episd more pages kudunga ....plz
koushik-gowri chat panra scene kaga wait panren
Story romba Gala Gala nu poitu irukku....
I really enjoyed it..........
Paravala Gowri ennai madhiriye romba amaidhiyana ponnu pola very good......
vocabulary
sila vishayam thavira almost en kalyaana kathaiya rombavum njaabaka paduththuchchu...( naan salvarthaanpa potten) enga veetu jaanukku thittave varaathu.
enjoyed it very much
Gowrium swethavum ivlo samatha irunthutale.. Aachariyam! athisayam!! aanal unmai..
Janu mamium lakshmi mamium ivlo pathusa pesuvala engalukume athu aachariyam than..
Gowri unoda vaal thanam eppavum pola intha epi-um super...Hari porupana thambi agitaye..Gud gud...
Gowri-Kowsik net chatting pakka nangalum wait pannitrukom..