(Reading time: 14 - 27 minutes)

 

வளை என்ன பண்றதுன்னே தெரியலடா வைத்தி. இன்னும் ரெண்டாங்கிளாஸ் பொண்ணு மாறியே நடந்துக்கறா.  கல்யாணம் ஆனப்புறமும் இதே மாறி இருந்தா ரெண்டா நாளே அவாத்துல இருந்து  திருப்பி அனுப்பிடுவா”, ஜானகி மகா கவலையுடன் தம்பியிடம் பேச,

“ஜானு கவலை படாதே.  ஆபீஸ்ல எல்லாம் எத்தனை நல்ல பேரு அவளுக்கு.   எத்தனை அவார்ட்ஸ் எல்லாம் வேலைல வாங்கி இருக்கா.  நம்மகிட்ட தானே குழந்தை விளையாட முடியும்.  சும்மா எப்போ பாரு அவளை குத்தம் சொல்லாத நீ”, மகா அதிசயமாக ஜானகியின் சொல்லை மறுத்து பேசினார் ராமன்.

“ஆமாம் ஜானகி அத்திம்பேர் சொல்றது கரெக்ட்தான்.  நீ சும்மா சும்மா அவளை திட்டறதை நிறுத்து.  அப்பறம் அத்திம்பேர் எனக்கு இந்த சம்மந்தி ஆத்துக்காராளை  ரொம்ப பிடிச்சு இருக்கு. சாதாரணமா பொண்ணு பார்க்க வந்தாலே போற ஆத்துல ஏகப்பட்ட டென்ஷனை கிளப்பி விடுவா பிள்ளை ஆத்துக்காரா.  ஆனா இவா ரொம்ப  friendly-ஆ இருந்தா.  இந்த ஒரு விஷயத்துக்காகவே இந்த இடம் நம்ம கௌரிக்கு அமைஞ்சா ரொம்ப நன்னா இருக்கும்.” , என்று தன் அபிப்ராயத்தை வைத்தி சொல்லி கொண்டிருக்கும்போதே ரூமில் இருந்து வந்த கௌரி

“அப்பா எனக்கு கௌஷிக்கை ரொம்ப பிடிச்சு இருக்குப்பா, நீங்க மேல்கொண்டு proceed  பண்ணிக்கலாம்”, என்று படு casual-லாக சொல்ல நம்ம ஜானு மாமிக்கு மறுபடியும் BP  எகிற ஆரம்பித்தது.

“ஹே என்ன கௌரி இது, இப்படி படார்ன்னு போட்டு உடைச்சுட்ட, இந்த situation-ல நீ என்ன பண்ணனும்ன்னா, ஒண்ணும் சொல்லாம இருக்கணும், அப்பறமா நாங்கள்லாம் உன்னை ரொம்ப பிரஸ் பண்ணி கேட்டப்புறமா உங்களுக்கு எல்லாம் ஓகேன்னா எனக்கும் ஓகே அப்படின்னு ரொம்ப பதவிசா தலையை குனிஞ்சுண்டே சொல்லணும்.  இதை எல்லாம் விட்டுட்டு இப்படி மாயா பஜார் சாவித்திரி மாதிரி டங்கு டங்குன்னு நடந்து வந்து சதுர தேங்கா உடைக்கக் கூடாது”, ஹரி அம்மா கத்துவதற்கு முன்னால் பேச ஆரம்பித்தான்.

“ஏண்டா என்னால முடியாதது எல்லாம் பண்ண சொல்றே. என்னை இயல்பா இருக்க விடேன்.  அப்பா நீங்க அவாத்துல சொல்லிடுங்கோ. அவாளுக்கும் ஓகேன்னா எனக்கு proceed பண்றதுல objection  இல்ல.”, என்று கூறிவிட்டு மாமாவிடம் திரும்பி அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் மண்டையை உருட்ட ஆரம்பித்தாள் கௌரி.

“கௌரி மாப்பிள்ளை பேரை மண்டைல அடிச்சா மாறி சொல்றதை மொதல்ல நிறுத்து, அப்புறம் அவரோட சாட்டிங்ல பேசும்போது இந்த மாதிரி கெக்கே பிக்கேன்னு பேசி வைக்காதே. எங்க மானம்தான் போகும்”, ஜானகி மகளை அடக்க

“ஆமாம் கௌரி, அம்மா சொல்றது ரொம்ப கரெக்ட், அப்புறம் இது ஏதுடா ஏர்வாடி கேஸ் போல இருக்குன்னு அவர் பயந்துடப்போறார்”, இது ஹரி.

“ஏண்டா ஹரி அவளை வம்புக்கு இழுக்கற, நீ விடும்மா கௌரி நான் பத்மநாபன்கிட்ட பேசிட்டு அவாளுக்கு ஓகேன்னா என்னைக்கு சாட் பண்ணலாம்ன்னு கேட்டு சொல்றேன். “

“சரிப்பா ஆனா சண்டே சாட் பண்றா மாதிரி சொல்லுங்கோப்பா.  Week days கொஞ்சம் கஷ்டம்.  அம்மா கௌஷிக்-ன்னு கூப்பிடாம வேற எப்படிம்மா கூப்பிடறது, உன்ன மாதிரி ஏன்னா அப்படின்னா, ஒரு கிக்கே இல்லையேம்மா”, என்று கௌரி ஜானகிக்கு ஏற்கனவே ஏறி இருந்த  BP-யை மறுபடியும் எகிற வைக்க, ஜானகி கத்த ஆரம்பிப்பதற்குள் ராமன் உஷாராக நடுவில் புகுந்து

“சரிம்மா நான் சொல்றேன்.”, என்று கௌரியிடம் கூறிவிட்டு, வைத்தியிடம் திரும்பி கடைசியாக எடுத்த பாலிசி பற்றி பேச ஆரம்பித்தார் ராமன். 

தொடரும்

Episode # 03

Episode # 05

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.