(Reading time: 9 - 17 minutes)

கௌரி கல்யாண வைபோகமே – 05 - ஜெய்

ஞாயிறன்று எல்லாரும் கௌஷிக்குடன் முதல் சுற்றுப் பேச்சு வார்த்தை முடித்து கௌரிக்கு தனிமைக்  கொடுத்து அவர்கள் இருவரும்  பேசட்டும் என்று வெளியில் வந்தனர்.

“Hello கௌரி.  எப்படி இருக்க. “

“Hi கௌஷிக்.  I’m fine.  நீங்க எப்படி இருக்கேள்”

Gowri kalyana vaibogame

“ஹ்ம்ம் fine.  ஆபீஸ்லாம் எப்படி போறது”

“ம்ம்ம் நன்னா போறது.  இப்போதான் ஒரு ப்ராஜெக்ட் டெலிவரி முடிஞ்சுது.  so இன்னும் கொஞ்ச நாள் ப்ரீ தான்.  உங்களுக்கு எப்படிப்  போறது”

(ஷ்ஷ் ஷ்  அப்பா முடியலை.  இத்தனை அபீசியலா பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை Friends.  ரெண்டு பெரும் கொஞ்சம் உங்க natural போர்ம்க்கு வாங்கப்பா)

“ம்ம்ம் ஓகேதான்”. என்று பதிலளித்தவாறே மனதிற்குள் ரொம்ப அமைதியா,அடக்கமா  பேசறாளே. நம்மை பிடிச்சிருக்கா  இல்லையான்னு எப்படி கேட்க என்று நினைக்க.(ஏமாந்து விட்டாயே கௌஷிக்.  கௌரிக்கு தமிழ்ல பிடிக்காத பல வார்த்தைகள்ல முதல் ரெண்டு வார்த்தை அமைதி, அடக்கம்தான்)

அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல் ரெண்டு பேரும் முழிக்க,  கௌரியோ மனதிற்குள் இன்னும் எத்தனை நேரம் இப்படி நல்லவ மாதிரியே performance கொடுக்க முடியும் தெரியலையே என்று பதற ஆரம்பித்தாள்.  (நீங்க எல்லாம் கௌரிக்கு யாரோ சூனியம் வச்சு அவ வாயை அடைச்சுட்டதா கவலைப் படாதீங்க, ஜானு மாமி கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 5,6 வாட்டி அவ கௌஷிக்கிட்ட எதல்லாம் பேசலாம், எதல்லாம் பேசக்கூடாது அப்படின்னு ட்ரைனிங் எடுத்திருக்கா.  அதை மீறினா என்ன ஆகும்ன்னு ஏகப்பட்ட வாட்டி  கௌரிக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கறதால  இந்த அமைதி)

“அப்புறம் கௌரி  சிங்கப்பூர் வர ரெடி ஆகிட்டியா”, அவர் indirectஆ அவளுக்கு  பிடிச்சிருக்கான்னு கேக்கறாராம்.

“என்னை சிங்கப்பூர் கூட்டிண்டு போக நீங்க ரெடி ஆகிட்டேளா”, ஆஹ் கவுன்ட்டர் கேள்வி கலக்கற கௌரி. (இதை மட்டும் இப்போ ஜானு மாமி கேட்டிருக்கணும்.  இந்த மாதிரிதான் அச்சு பிச்சுன்னு பேசாதன்னு சொன்னேன்னு கௌரிக்கு மண்டைல ஒண்ணு விழுந்திருக்கும்.)

 “ஹா ஹா ஹா சூப்பர் கௌரி, முதல் 5 நிமிஷம் நீ பேசினதை வச்சு ரொம்ப அமைதியா இருக்கியே பேசவே மாட்டியோன்னு நினைச்சேன்.  ஆனால் இந்தப் போடுப் போடற.  எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.  நீ நாளைக்கே வரேன்னாக் கூட உன்னைக் இங்க வர வைக்க  நான் ரெடிதான்.  நீ வரதுக்கு ரெடியா”. (டேய் மாத்தி மாத்தி நீங்க பாடற நான் ரெடி நீங்க ரெடியா பாட்டை எப்போடா நிறுத்தப் போறீங்க. )

“அய் அய் இந்தக் கதைதானே வேண்டாங்கறது.  சிங்கப்பூர் விசா வரவே 3 நாள் ஆகும், இதுல நான் எங்க இருந்து வரது. “.  ஏதோ விசா கிடைத்தால் உடனேயே flight ஏறுவதுபோல் கௌரி பேச

“அதெல்லாம் நீ சென்னைல அப்ளை பண்ணினாதான்.  இங்க சிங்கப்பூர்ல நான் பண்ணினா, அன்னைக்கு மத்தியானமே வந்துடும்.  வேணுன்னா சொல்லு.  இப்போவே  பண்ணிடறேன்.  நாளைக்கு நைட் நீ இங்க வந்துடலாம்.  டீலா, நோ டீலா”,  (கௌஷிக் ரீடர்ஸ்  எல்லாரும் உன்னைப் பார்த்து ரொம்ப பரிதாபப்பட்டாங்க,  நீ பேசறதைக் கேட்டு இனி கௌரிக்குதான் அனுதாப ஓட்டு விழும்ன்னு நினைக்கிறேன்)

“நோ டீல், நோ டீல்.  கல்யாணத்துக்காக என்னல்லாம் வாங்கணும்ன்னு இப்போலேர்ந்தே நான் பிளான் போட்டுண்டு இருக்கேன்.  நீங்க எல்லாத்துக்கும் ஆப்பு வச்சுடுவேள் போல இருக்கே. ஆனா நீங்க இப்படி சொன்னேள்ன்னு ஹரிக்கு மட்டும் தெரிஞ்சுது, அவ்வளவுதான், கௌஷிக்கா என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன்.  அந்தக் கண்ணு நொள்ளக் கண்ணா ஆனாக் கூட திருப்பி அனுப்பக் கூடாதுன்னு சொல்லி டயலாக் அடிச்சு என்னை பிளேனோட இறக்கைல கட்டியானும் அனுப்பிடுவான்.   அதனால அவன் காதுப்பட இந்த மாதிரி டயலாக் எல்லாம் சொல்லாதீங்கோ.”

“ஹரி ரொம்ப பாசக்கார பயலா இருப்பான் போல இருக்கே.  உன்னை பத்தின விஷயம் ஏதானும் தெரியணும்ன்னா அவன்கிட்ட கேக்கலாம் போல இருக்கு.   அப்புறம் நான் நேரடியா உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொன்னேன்.  நீ உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா இல்லையா  ஒண்ணுமே சொல்லலை”,  அவ வாயால சொல்லி கேக்கணுமாம் அவருக்கு.

“எனக்குப் பிடிக்கலைனா நான் சாட்டிங்க்கே வந்திருக்க மாட்டேனே.  எனக்கும் உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு”

“தேங்க்ஸ் கௌரி.   அப்புறம் கல்யாணத்துக்கு அப்புறம் வேலை பண்ற ஐடியால இருக்கியா இல்லை மேல படிக்கப் போறியா, இல்லை ஹவுஸ் wifeஆ ஆத்துலேயே இருக்கற ஐடியாவா”

“இல்லை கௌஷிக்.  எனக்கு வேலைக்கு போகணும்ன்னுதான் இருக்கு.  இப்போ நான் பண்ற ப்ராஜெக்ட் சிங்கப்பூர், US இந்த ரெண்டு இடத்துலேர்ந்தும் பண்ணலாம்.  So இங்க இருந்தே try பண்றேன்”

“பாரு உனக்கு அப்படி கிடைக்கலைனாலும் பரவா இல்லை.  இங்க இருக்கற கன்ஸல்டன்சி வழியா இன்டர்வியூ அரேன்ஜ் பண்ணலாம்.  வேலை கிடைக்கறதுல ஒண்ணும்  பிரச்சனை இருக்காது”

“ம்ம்ம் ஓகே.  எங்க ஆபீஸ்ல முடியாதுன்னு  சொல்லிட்டான்னா அப்புறம் அதை யோசிக்கலாம்.”

“ஓகே கௌரி.  நீ உனக்கு எந்த time ஓகே பேசறதுக்குன்னு மெயில் அனுப்பு.  அந்த time நானும் ப்ரீயா இருந்தா பேசலாம்.  Bye”

“ஓகே கௌஷிக்.  வீக் என்ட்ஸ் ஒன்னும் ப்ரோப்லம் இருக்காது.  வீக் டேஸ்ன்னா நீங்க மெசேஜ் பண்ணுங்கோ,  நான் ப்ரீயா இருந்தா reply பண்றேன்.  அப்புறம் பேசலாம்.  Bye”

கௌஷிக்குடன் பேசிவிட்டு கலர் கலர் கனவுகளுடன் வெளியில் வந்த மகளிடம் ராமன்,  “ஏம்மா கௌரி,நீ கௌஷிக்கோட பேசினியே, உனக்கு ஓகேவா, பிடிச்சுருக்கா, அவா கேட்டா நான் என்ன சொல்லட்டும்”

“எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா. அவா அம்மா, அப்பா மாதிரிதான் ரொம்ப friendly-ஆ பேசினார்.  வேலை பத்தி எல்லாம் கேட்டார்.  Transfer  கிடைக்காட்டாலும் பரவா இல்ல. வேற consultancy  வழியா புதுசா தேடிக்கலாம்ன்னு சொல்லிட்டார்.”, என்று ராமனிடம் கூறினாள் கௌரி.

“அச்சோ கௌரி உன் மூஞ்சியைக் காட்டினே இல்ல,  முக்காடு ஏதானும் போட்டுண்டு உக்கார்ந்து இருந்தியா.  எப்படி உன்னைப் பிடிச்சுதுன்னு சொன்னார்”

“டேய் ஹரி.  உலக அழகியை எல்லாம் யாருக்கானும் பிடிக்காம போகுமாடா”,

“என்னது உலக அழகியா, நாங்க உன்னை உள்ளூர்க் கிழவி ரேஞ்சுலக் கூட சேர்க்கலையே.  அம்மா உன் ட்ரைனிங் வொர்க் அவுட்  ஆயிடுத்துன்னு நினைக்கிறேன்,  பாரு  அவ அமைதியா பேசறத பார்த்து மாப்பு ஏமாந்துட்டார். கல்யாணம் ஆனப்புறம் இவ ஸ்வர்ண லக்ஷ்மி இல்ல, ஸ்வர்ணாக்கான்னு தெரியறரச்ச என்ன ஆகப் போறாரோ  தெரியலையே.  “, என்று பிலாக்கணம் பாடி முடிக்க.

As Usual நம்ம நாட்டாமை நடுவில் புகுந்து “ஹரி அவளை வம்பிழுக்காத.  சரிம்மா நானும் அம்மாவும் அவாத்துலப்  போய் பேசிட்டு வரோம், ஜானகி என்னைக்கு நாள் நன்னா இருக்குன்னு பாரு நாம நேராப் போய் பேசிட்டு வரலாம்.”

“வர வெள்ளிக்கிழமை நன்னா இருக்குன்னா, அவாத்து மாமா போன் பண்ணினா இவளுக்கு பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டு நாம வர்றதையும் சொல்லிடுங்கோ.  அம்மா காமாட்சி அவாத்துலேர்ந்து நல்ல நியூஸ் வரணும்”, வேண்டியபடியே நடந்தாள்  ஜானகி.

தன்னை எப்படி உள்ளுர்க் கிழவி என்று ஹரி சொல்லலாம் என்று அவனுடன் ஒரு பாரதப் போரை சங்கு, சக்ர, கதாயுதத்துடன்  கௌரி தொடங்கினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.