(Reading time: 12 - 24 minutes)

24. என்னுயிரே உனக்காக - சகி

"ரண் நான் சொல்றதை கேளு...ரகு சாகலை!"-ரவியின் இவ்வார்த்தைகளில் அதிர்ந்தான் சரண்.

"இன்னும் பொய் சொல்றீயாடா?"

"சத்தியமா...சத்தியமா சரண்.நான் பொய் சொல்லலை.இது உண்மை!ரகு சாகலை.உயிரோட தான் இருக்கான்."

Ennuyire unakkaga

"புரியும்படி சொல்லு!"

"அன்னிக்கு ரகு தங்கியிருந்த அப்பார்ட்மண்ட்ல பாம் பிளாஸ்ட் ஆனது உண்மை.ஆனா,நாங்க ரகுவிற்கு சாப்பாட்டில மயக்கம் மருந்து கலந்து அவனை அங்கிருந்து கூட்டிட்டு வந்து,அவனுக்கு பதிலா ஏற்கனவே இறந்த பிணத்தோட கையில,ரகு கையில இருந்தா மாதிரியே,ஆதி,நிருன்னு பச்சை குத்தி,அங்கே வச்சி பாம் பிளாஸ்ட் பண்ணோம்."-அவன் கூறியது எதுவும் சரணுக்கு எட்டவில்லை.ஒன்றை தவிர,ரகு உயிரோட தான் இருக்கான் என்பதை தவிர!!!

"நீ சொல்றதை நான் எப்படி நம்பறது?"

"ரகு இ...இதே இடத்துல தான் இருக்கான்!"

"இங்கேயா?"

"ஆ...ஆமா!"

"கூட்டிட்டு போ...அவன் இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போ!நீ சொல்றது பொய்யா மட்டும் இருந்தால்..."

"இல்லை...உண்மை தான்!வா!"-ரவி வழிக்காட்ட, ஆதித்யா அவன் தலையில் துப்பாக்கியை வைத்தப்படி பின் தொடர்ந்தான்.

"ஸ்ரேயா?"-மது.

"என்ன மது?"

"ஏன் வெள்ளிக்கிழமை அதுவுமா,நெற்றியில பொட்டு கூட வைக்காம இருக்க?"

"இனி,கடைசி வரைக்கும் இந்த கோலம் தானே!!எனக்கு,இனி எல்லா கிழமையும் ஒண்ணு தானே!"

"ஸ்ரேயா..."

"ராகுல் நல்லா இருக்கானா?"

"ம்..."

"இரு...நான் உனக்கு காப்பி போட்டு தரேன்!"-என்று சமையலறைக்குள் சென்றாள் ஸ்ரேயா.சிறிது நேரம் கழித்து...

மதுவிற்கு அவள் காப்பி போட்டு எடுத்து வரவும்,எதிரே பவித்ரா குங்கும சிமிழோடு வரவும் சரியாக இருந்தது. தெரியாமல் இருவரும் மோதி கொள்ள,பவித்ரா கையில் இருந்த சிமிழ் திறந்து  கீழே விழ,ஸ்ரேயா அதை மற்றொரு கையால் தாங்கினாள்.

"கடவுளே!தேங்க்ஸ் ஸ்ரேயா!"

"பரவாயில்லை பவி.இந்தாங்க!"-என்று அவளிடம் சிமிழை தந்தாள்.ஆனால்,அதிலிருந்து சிறிது குங்குமம் அவள் கையில் விழுந்திருப்பதை அவள் கவனிக்கவில்லை.

"இந்தா மது!"

"தேங்க்ஸ்..."-சிறிது நேரம் மௌனமாய் இருந்தவள்,

"ஐயோ...உனகிட்ட ஒண்ணு தரணும்னு நினைச்சேன் இரு!"-என்று நெற்றியில் மெதுவாக தட்டியவள் கவனிக்கவில்லை,தன் கரத்தில் இருந்த குங்குமம் தன் நெற்றி வகிட்டில் ஒட்டி விட்டதை!சிறிது நேரம் கழித்து வந்தவள்..

"இந்தா!"-என்று ஒரு வகைப்படத்தை தந்தாள்.

"என்னது இது?"

"ராகுல் வரைந்தது.நல்லா இருக்குல!"-அதில்,ரகுவை போன்ற ஓவியம் இருந்தது.

"விட்டுட்டு போயிட்டான். அவனிடம் தந்துவிடு!"

-சிரித்துக் கொண்டு"சரி" என்று வாங்கியவள் அப்போது தான் கவனித்தாள் அவள் நெற்றியில் இருந்த குங்குமத்தை...

"என்னாச்சு?"

"ஆ...ஸ்ரேயா உன் நெற்றியில குங்குமம்..."

"குங்குமமா?"-என்று நெற்றியை தொட்டுப் பார்த்தவள்,அப்போது தான் அதைப் பார்த்தாள்.

"எ...எப்...எப்படி இது?"-என்று ஸ்தம்பித்து நின்றாள்.சிறிது நொடிகள் கழித்து அதனை அழிக்க போனவளை தடுத்தாள் மது,

"வேணாம்...நல்ல நாள் அதுவும் இப்படி பண்ணாதே!அது உன் நெற்றியை விட்டு போகணும்னா அதுவா போகட்டும்!"

"மது?"

"ப்ளீஸ்..."-அமைதியானாள் ஸ்ரேயா.

டர்ந்த காடாய் இருந்தது அவ்விடம்...

சுற்றி ஆள் நடமாட்டமே இல்லை...

அங்கே குடோன் போன்ற இடத்தில்...

"டேய்!அவனை எழுப்புங்கடா!"-என்றது ஒரு குரல்.அவன் அப்துல்லாவின் பணியாளாய் இருக்கலாம்...

அவன் ஆணைக்கு அடிப்பணிந்து அவனை எழுப்பினான் ஒருவன்.அவன்....அவன்...ரகு தான்!ரகுவே தான்!இத்தனை நாளாய் அனைவரையும் கலங்க வைத்த அதே ரகு தான்! இங்கே இருக்கிறான்.அதுவும் உயிரோடு!!

மயக்கம் தெளிந்தான் ரகு!!!

"என்னடா?உன் நண்பன் கேஸ்சை எடுத்துக்கிட்டு காஷ்மீர் பக்கம் வந்திருக்கான்.உன்னை வச்சி...அவனை மிரட்டலாம்னு பார்த்தா,அவன் அசர மாட்டான் போல இருக்கே?"

-ரகு நக்கலாய் சிரித்தான்.

"நான் அன்னிக்கே சொன்னேன்.அவன் வருவான்டா! பழி வாங்க நிச்சயமா வருவான்டான்னு!வந்தான் பாரு!அவன் பேர் அளவில மட்டும் இல்லை...எனக்கும் அவன் தான் ஆதி!விட மாட்டான்...ஒருத்தனையும் விட மாட்டான்.இந்த நேரத்துக்கு உங்க சாம்ராஜ்ஜியத்தையே  தரை மட்டம் ஆக்கி இருப்பான்!"-ரகுவிடம் பேசி கொண்டிருந்தவனுக்கு கண்கள் சிவந்தன.அவன், ரகுவை பலமாக தாக்கினான்.

"எங்களை கொல்வானா?ஆ...எங்களை கொல்வானா?"

"நீ உண்மையிலே ஆம்பளையா இருந்தா, கட்டை அவிழ்த்துவிடு!அப்பறம்...உன் முடிவை நானே சொல்றேன்!"

"உன் திமிர் இன்னும் அடங்கவில்லை!"-அவன்,ரகுவின் கழுத்தில் கத்தியை வைத்தான்.

"சாக தயாரா?"-அப்போது,அங்கிருந்த கதவை உடைத்து கொண்டு ஒருவன் அவன் காலடியில் விழுந்தான்.திடீரென்ற இந்த சம்பவத்தால் அனைவரும் திகைத்தனர்.உடைந்த கதவு வழியாக ஆதித்யா உள்ளே பிரவேசித்தான்.

"ஆதித்யா!"-அனைவரும் திடுக்கிட்டனர்.

வந்தவன்,நேராக தனது துப்பாக்கியை எடுத்து அங்கிருந்தவரை வெறித்தனமாக சுட்டான்.அதில்,தோட்டா தீர்ந்தப் பட்சத்தில் அங்கிருந்த துப்பாக்கிகளை பயன் படுத்தி கொண்டான். ரகுவை தாக்கியவன் நெஞ்சில் மட்டும் நான்கு குண்டுகள் இறங்கின.அவன்,அப்படியே ரகுவின் காலடியில் சாய்ந்தான்.

னைவரையும் கொன்ற பின்,ஓடிச்சென்று ரகுவை தாங்கினான் சரண்.

"ரகு!"

"வந்துட்டியா?"

"மன்னிச்சிடுடா! நான் உன்னை தனியா அனுப்பி இருக்க கூடாது!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.