(Reading time: 12 - 24 minutes)

 

"மிஷின் கம்ப்ளீட்டட் ஆதி!"-என்று கூறிய நண்பனை அணைத்துக் கொண்டான் சரண்.பின்,அவனது கட்டுகளை அவிழ்த்துவிட்டு,அவன் வலது கையை தன் இடது தோளில் போட்டு கொண்டு அவனை தாங்கிப் பிடித்து நடந்தான் சரண்.

வெளியே...

ரவி கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் நின்றிருந்தான். அவனை பார்த்து நின்ற சரணின் மனதை படித்து கொண்டான் ரகு.

"வேண்டாம் ஆதி!அவனை போலீஸ்ல ஒப்படைத்து விடலாம்!"-மௌனமாக அவனை அழைத்து கொண்டு சென்றான் சரண்.

ஆதித்யாவின் வரவை நோக்கி காத்திருந்த நிரஞ்சன் கண்களில் ஆதி,ரகுவுடன் வருவது போன்ற காட்சி பட்டது.மாயை என்று கண்களை கசக்கி கொண்டான்.மீண்டும் அதே காட்சி! ஆச்சரியத்தில் மிதந்தான்.அவன்,இதழ்கள் தன்னியச்சையாக ரகு என்று கேள்வியாய் உரைத்தன.

ரகு மிகவும் தளர்ந்து போயிருந்தான்,அவன் நெற்றியில்,இதழ்களில், கைகளில் இருந்தன இரத்த காயங்கள்...நிரஞ்சன் ஓடிச் சென்று ரகுவை மறுப்பக்கமாக பிடித்துக் கொண்டான்.

"மச்சான்....நீ....நீ?"-மகிழ்ச்சியில் பேச்சிழந்தான் நிரஞ்சன்.

"ரகு தான்டா!"

"நீ...உனக்கு ஒண்ணும் ஆகலையா?"

"ஏன் எதாவது ஆகணுமா?"-இடைப்பட்ட காலத்தில், ரகுவிடம் அதீத மாற்றம் வந்திருப்பது தெரிந்தது இருவருக்கும்!!!!!

"பாவி...வாயை மூடுடா!மச்சான்...வா!!முதல்ல இவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்!"

"நிரு...நீ கூட்டிட்டு போ!நான் வரேன்!"

"எங்கே போற ஆதி?"

"அது...அந்த குடோன்ல இருந்த வெப்பன்ஸ் எல்லாத்தையும் சீஸ் பண்ணணும் அதான்!"-ரகுவின்,பார்வை கூர்மை அடைந்தது.

"நிஜமா அதுக்கு தான் போறேன்."

"போயிட்டு வா!"-ஆதித்யா சென்றான்...ஆயுதங்களை பிடிப்பதற்கு அல்ல...ரவியை கொல்வதற்கு!!!

ரவி சிரமப்பட்டு கட்டுகளை அவிழ்க்க முயன்று கொண்டிருந்தான்.அவன், எதிரில் வந்து நின்றான் ஆதித்யா.அவனைக் கண்டவனுக்கு ஒரு நொடி வெலவெலத்து போனது.

"ஆதி???"

"உன்னை அரஸ்ட் பண்ண போறதில்லை! அனுப்பி வைக்க வந்திருக்கேன்!"

".............."

"போய் சேரு...நரகத்துக்கு!"-அதிர்ந்துப் போனான் ரவி.

"ஆதி...நான் உன் ரகுவை திருப்பி தந்திருக்கேன்.நீ என்னை எதுவும் பண்ண கூடாது!"

"அப்படி,உனக்கு நான் எந்த சத்தியமும் பண்ணலை... அப்படியே பண்ணி இருந்தாலும்,அதை காப்பாற்ற அவசியம் இல்லை."

"ஆதி!"-சரண் அவன் கட்டுகளை அவிழ்த்து விட்டான்.

"உன்னை கட்டி போட்டு கொல்ல எனக்கு இஷ்டமில்லை."-அவன்,கட்டை அவிழ்த்து விட்டவுடன்,ரவி அங்கிருந்து ஓட பார்த்தான்.சரண், அருகிலிருந்த கட்டையை எடுத்து அவன் கால்களை குறி வைத்து வீசினான்.அதன் தாக்குதலால் தடுமாறி கீழே விழுந்தான் ரவி.

சரண் அவன் அருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்.

"கவலைப்படாதே!அவ்வளவு சீக்கிரம் கொல்ல மாட்டேன்.நீ என்ன இருந்தாலும் என் ரகுவை திருப்பி தந்திருக்க...."-என்று அவனருகே துப்பாக்கியை போட்டான்.

"உனக்கு 2 ஆப்ஷன்.ஒன்று...நீயா துப்பாக்கியால சுட்டுட்டு செத்துடு! இல்லை...நான் தர நரக வேதனையை அனுபவித்து சாவு!நானா தந்தேனா...உன் உடம்புல உயிர் மட்டும் இருக்கிற நிலையில தான் கொல்வேன்.துப்பாக்கியை என் பக்கம் திருப்பனும்னு நினைச்ச,காலி! சீக்கிரம் 10 எண்ணுவதற்குள் முடிவு எடு!"-அவன்,12345 என எண்ண ஆரம்பித்தான்.

"நீ ஜெயிச்சிட்ட சரண்!"

"ப்ச்..அது எனக்கு தெரியும்!"-ரவி துப்பாக்கியை எடுத்து தன் நெற்றியில் வைத்து,தானே சுட்டு கொண்டு மாண்டான்!!!!!!சரணிடமிருந்து பெரு மூச்சு வந்தது.

"இது எதுக்கு நீ காரணமாய் இல்லாமல் இருந்தா, உயிரோட இருந்து இருக்கலாமேடா!"-அங்கிருந்து எழுந்து சென்றான்.ஊரை பொறுத்தவரை ரவி தீவிரவாதிகளால் சுடப்பட்டு வீர மரணம் அடைந்தான். உண்மை அங்கிருந்தவருக்கு மட்டுமே வெளிச்சம்!!!!!

ருத்துவமனையில்....

ரகுவை காண வந்தான் சரண்.

"ரகு!"

"போன காரியத்தை முடிச்சிட்டியா?"

"என்ன?"

"ரவி!"

"அ...அதெல்லாம் ஒண்ணுமில்லையே!"

"தெரியும்டா!நீ எப்போ என்ன பண்ணுவன்னு!"

"அது..."

"அவன் குடும்பத்துக்கு என்ன பதில்?"

".............."

"நீ பண்ண தப்புக்கு நீயே பிராயச்சித்தம் பண்ணு!அவங்களுக்கு ரவி ஸ்தானத்துல எல்லாத்தையும் நீயே பாரு! வாழ்க்கை முழுசும்!"-சரண் தலை குனிந்தவாறு சரி என்றான்.

"உனக்கு அவன் மேல கோபம் வரலையா ரகு?"

"வந்தது...அவன் பண்ணதுக்கு தண்டனை கிடைத்தது.அவன் குடும்பம் எந்த தப்பும் பண்ணலை, ஞாபகம் இருக்கட்டும்!"-அப்போது நிரஞ்சன் வந்தான்.

"மச்சான்...ஃப்லைட் டிக்கெட் புக் பண்ணியாச்சு!"

"ம்...ஏ...நான் அங்கே தான் இருந்தேன்னு நீ எப்படி கண்டுப்பிடிச்சு வந்த?நான் என் மொபலை கூட எடுத்துட்டு போகலை!"-நிரஞ்சன் அசட்டுத்தனமாக சிரித்துக் கொண்டு,சரண் சட்டை காலரில் இருந்து ஒரு சிப்பை எடுத்து நீட்டி பல் இளித்தான்.

"அடப்பாவி!எனக்கே உளவு பார்க்கிறீயா?இந்த வேலையை எப்போடா பார்த்த?"

"நீ தூங்கும் போது!"-ரகு சிரித்தே விட்டான்.பல நாட்கள் கழித்து கண்ட ரகுவின் சிரிப்பு,இருவருக்கு பிரகாசத்தை தந்தது.

"நல்லா பண்றீங்கடா! நடத்துங்க!"

கு உயிரோடு தான் இருக்கிறான் என்ற செய்தி ஊடகங்கள் வழியாக மகேந்திரனுக்கு எட்டியது.உடனே,அவர் மதுவிற்கு தொடர்பு கொண்டார்.

"ஹலோ!"

"சொல்லுங்கப்பா!"

"பேப்பர் பார்த்தியாம்மா?"

"இல்லைப்பா!"

"பாருடா!நம்ப முடியாத ஆச்சரியம் இருக்கு!"

"என்னதுப்பா?"

"பாருடா!"-மதுபாலா அன்றைய நாளிதழை பார்த்தாள்.அதில்,

'இறந்த போன சி.பி.ஐ.அதிகாரி மறுபிறப்பு!' என்று தலைப்பு செய்தியாய் போட்டிருந்தது.அதை முழுதாக படித்தவள் ஆச்சரியத்தில் நாளிதழை கீழே விட்டாள்.

தொடர்பில் இருந்த மகேந்திரனிடம்,

"அப்பா?"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.