(Reading time: 12 - 24 minutes)

 

"ம்ப முடியுதாம்மா?"

"நம்பவே முடியலைப்பா!"

"சரண் எதாவது போன் பண்ணனா?"

"இல்லைப்பா!"

"சரிம்மா...எதாவது தகவல் தெரிந்தால் உடனே போன் பண்ணு!"

"சரிப்பா!"-இணைப்பைத் துண்டித்தாள்.அருகில் என்ன?என்று கேள்வியுடன் பார்த்து கொண்டிருந்த ராஜேஸ்வரியிட நாளிதழை காட்டினாள்.அதை படித்தவரின் கண்கள் விரிந்தன.

"மது?"

"ஆமாம் அத்தை!"

"எனக்கு என்ன பண்றதுன்னே தெரியலை. முதல்ல,அந்த     திருட்டுப்பயலுக்கு போன் பண்ணு!"

"யாருக்கு அத்தை?"

"சரணுக்கு தான்!"-அவள் சரணுக்கு அழைப்பு விடுத்தாள்.

"ஹலோ!"

"என்னங்க...நான் தான்!"

"சொல்லு குட்டிம்மா!"

"அது...அத்தை உங்க கூட எதோ பேசணுமாம்!"

"கொடு!"

"ஹலோ!"

"சொல்லும்மா!"

"என்னடா இது?பேப்பர்ல போட்டு இருக்கிறது உண்மையா?"

"என்னதும்மா?"

"ரகுவை பற்றி போட்டு இருக்கிறது?"

"போட்டுடாங்களா?நம்ம ஆளுங்க எல்லாத்துலையும் முதல்ல இருக்காங்க!"

"புரியும்படி சொல்லுடா!"

"ஆமாம்மா!"

"அடப்பாவி...ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டியா?ஏன்டா மறைத்த??"

"ஒரு சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும்னு தான்!"

"உன்னை..."

"ம்மா..ம்மா...எதுவாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தவுடனே திட்டும்மா!பப்லிக் ப்ளேஸ்ம்மா!"

"சரி...ரகு இருக்கானா?போனை கொடுடா!"

"இல்லைம்மா...அவன் தூங்கிட்டு இருக்கான்!"

"எப்போடா வருவீங்க?"

"ம்மா...இன்னிக்கு ராத்திரி கிளம்புறோம்!!!நாளைக்கு காலையில அங்கே இருப்போம்!"

"சரிடா!சீக்கிரமா வந்துடுங்க!"

"சரிம்மா..."-இணைப்பை துண்டித்தான்.

றுநாள் காலை பத்து மணி அளவில்,மூவரும் வந்து சேர்ந்தனர்.ரகு தலையில் கட்டு கட்டிருந்தான்.

ஆரத்தி தட்டுடன், ராஜேஸ்வரி வந்தார்.அவர் கண்களில் கண்ணீர் சுரந்தது.

ரகுவின் முகத்தில் சிரிப்பு தவழ்ந்தது.அவர் மூவருக்கும் ஆரத்தி எடுத்தார்.

"உள்ளே போங்கப்பா!"-மூவரும் உள்ளே வந்தனர்.

ரகுவின் தந்தை ஓடி வந்து அவனை அணைத்து கொண்டார்.

"ரகு..."

"அப்பா?"

"மன்னிச்சிடுப்பா!நீ கூட இருந்த வரைக்கும் உன்னை புரிஞ்சிக்காம இருந்துட்டேன்."

"அப்பா..என்னப்பா நீங்க?நான் தான்...நான் தான் எல்லாத்துக்கும் மன்னிப்பு கேட்கணும்!"-அவன் கண்கள் யாரையோ தேடின!!!

"அப்பா!"-ஓடி வந்து தன் தந்தையை அணைத்துக் கொண்டான் ராகுல்.

"ராகுல்.."

"நீ...நீ..."

"இல்லடா!அப்பா எங்கேயும் போகலை!"

"உனக்கு எதுவும் ஆகலை தானே!"

"இல்லைடா!நான் நல்லா தான் இருக்கேன்."-தன் மகனை தூக்கி முத்தமிட்டான் ரகு.ஆதித்யா ஏதோ எண்ணியவனாய்,

"ரகு நீ போய் ரெஸ்ட் எடு!அப்பறமா பேசிக்கலாம்!"-ரகு சரி என்பது போல ராகுலை அழைத்து கொண்டு தன் அறைக்கு சென்றான்.சிறிது நேரத்தில் ராகுல் அங்கிருந்து வந்துவிட தனித்திருந்தான் ரகு.கண்களை மூடி சாய்ந்திருந்தவனின் அறை கதவு தட்டப்பட்டது.

"உள்ளே வாங்க!"-கதவை திறந்து கொண்டு ஸ்ரேயா வந்தாள்.தலை குனிந்தவாரே அவனருகில் நின்றாள்.கனத்த மௌனம் நிலவியது.

"எப்படி இருக்கீங்க மாமா?"-என்று அந்த மௌனத்தை கலைத்தாள் ஸ்ரேயா.

"மன்னிச்சிடு ஸ்ரேயா!"

"எதுக்கு?"

"நான் அன்னிக்கு...உன் வாழ்க்கையே    கெடுத்துட்டேன்! அன்னிக்கு நான் என்             கட்டுபபாட்டுலையே இல்லைம்மா!!என்னை மன்னிச்சிடு!"

"............"

"நான் பண்ணதுக்கு பிராயச்சித்தம் பண்ணனும்னு நினைக்கிறேன்!"-அவள் என்ன என்பது போல பார்த்தாள்.

ரகு எழுந்து அவளருகே வந்தான்.அவள் ஓரடி தள்ளி நின்றாள்.

"இனிமே வாழ்க்கை முழுசும்,கீதாவோட ஸ்தானத்துல என் கூட இருப்பியா?"-ஸ்ரேயாவின் கண்கள் விரிந்தன.

"மாமா?"

"இருப்பியா?"-அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

ரகு அவள் கண்களை துடைத்து விட்டான். பெருக்கெடுத்த கண்ணீரை ஸ்ரேயா அவன் மார்பில் சாய்ந்து கொட்டி தீர்த்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.