(Reading time: 9 - 17 minutes)

 

ப்படியே ரவுண்டு அபௌட் டர்ன் பண்ணி கௌஷிக் ஆத்துல என்ன நடக்கறதுன்னு பார்க்கலாமா

“ஹலோ அப்பா, எப்படி இருக்கேள்.”

“நன்னா இருக்கேண்டா.  நீ கௌரியோட பேசினியா.  பிடிச்சுருக்கா.   உங்கிட்ட இருந்து தகவல் வந்தப்பறமா அவாத்துல சொல்றோம்னு சொல்லி இருக்கோம்.”

“ம் எனக்குப்  பிடிச்சிருக்குப்பா.  கௌரியை மட்டும் இல்ல, அவாத்துல எல்லாரையுமே ரொம்ப பிடிச்சிருக்கு.  அந்த மாமா, மாமி, ஹரி எல்லாரும் என்னமோ ரொம்ப நாள் பழகினா மாதிரி பேசினா.  அண்ட் கௌரி ரொம்ப சிம்பிள்.  அலட்டலே இல்லாம பேசினது ரொம்ப பிடிச்சிருந்துது (இதை எங்க ரீடர்ஸ்கூட ஒத்துக்கமாட்டாங்க கௌஷிக் .  ஹா கௌரி நீ பண்ற அழும்பெல்லாம் அவனுக்கு தெரியாம போச்சே, விதி வலியது.  கௌஷிக் பாவம்டா நீ).   நீங்க ப்ரோசீட் பண்ணிக்கலாம்ப்பா”.

“ஆமாம்டா கௌஷிக்.  அந்த மாமி பண்ணின டிபன் சூப்பரா இருந்துதுடா.  அதுக்கவானும் நீ கெளரியைக் கல்யாணம் பண்ணிக்கணும்.  உன்னை சாக்கு வச்சு நானும் அப்போ அப்போ அங்கப் போய் நல்ல டிபன் சாப்ட்டுட்டு வருவேன்”, என்ற ஸ்வேதாவைப் பார்த்து லச்சு மாமி முறைக்க ஆரம்பிக்க.  பத்து மாமா, இது எதுடா கல்யாணத்துக்கு முன்னாடியே இந்தப் பொண்ணு சம்மந்தி சண்டையை ஆரம்பித்து விடுவாள் போல இருக்கே  என்று நடுவில் புகுந்து  

“டேய் என்னடா இது மொத்தமா கவுந்துட்டயா.  சரி சரி இனிமே further-ஆ நாங்க பேசிட்டு உனக்கு அப்டேட் கொடுக்கொறோம். சரியா, நீ உன் கனாவ கண்டின்யு பண்ணு நான் போனை வைக்கறேன்”, என்ற கிண்டலுடன் பேச்சை முடித்தார் பத்து.

ரண்டு நாட்களுக்கு பின்

“ஜானு பத்மநாபன் போன் பண்ணினார் அவாத்துல எல்லாருக்கும் பூரண சம்மதமாம்.  வெள்ளிகிழமை நேர வாங்கோ மத்த விஷயம்லாம் பேசலாம்ன்னு சொன்னார் “.

“அம்மா காமாட்சி கண்ணை தொறந்துட்ட, ரொம்ப சந்தோஷம்ன்னா, நம்ம நேரப் போய் பேசலாம்.  இப்போ மொதல்ல கோவிலுக்கு போய் எல்லாம் நல்லபடியா நடக்கணும்ன்னு ஒரு அர்ச்சனை பண்ணிண்டு  வந்துடலாம்.  ஹரி நீ ஆத்தைப்  பார்த்துக்கோ. நானும் அப்பாவும் கோவிலுக்கு போயிட்டு வந்துடறோம்”, என்று உள்ளே நுழைந்த ஹரியிடம் கூறியவாறே அர்ச்சனைக்கு தேவையானவற்றை எடுத்து வைக்க ஆரம்பித்தாள் ஜானகி.

“என்னப்பா விசேஷம் திடீர்ன்னு கோவிலுக்கு கிளம்பறேள்”

“பத்து சார்  இன்னைக்கு போன் பண்ணினார் ஹரி.  அவாத்துல எல்லாருக்கும் சம்மதம்ன்னு சொன்னார்.  நம்மளை அவாத்துக்கு வர வெள்ளிக்கிழமை அன்னைக்கு வரச்  சொல்லி இருக்கா.  அதான் அம்மா எல்லாம் நல்லபடியா  நடக்கணும்ன்னு கோவிலுக்குப் போயிட்டு வரலாம்ன்னு சொன்னா ”

“ஒ சரிப்பா. எனக்கு அன்னிக்கு காலேஜ்ல டெஸ்ட் இருக்கேப்பா.  நான் வர்றது கொஞ்சம் கஷ்டம் ஆச்சே”

“இல்லடா ஹரி, மொதல்ல நானும் அம்மாவும் மட்டும் போயிட்டு வரோம்.  எல்லாம் முடிவாச்சுன்னா அப்பறமா நிறைய தரம்  அவாத்துக்கு போறா மாதிரிதான் இருக்கும்.  அப்போ நீ வா சரியா.  நாங்க வரதுக்குள்ள கௌரி வந்துட்டானா, அவளண்ட வம்பு வளர்த்துண்டு இருக்காத, சரியா.  சரி நானும் அம்மாவும் கிளம்பறோம்”

“சரிப்பா நீங்க பத்ரமா போயிட்டு வாங்கோ”, என்றபடியே கை அசைத்தான் ஹரி.

“எங்கடா ஆத்துல யாரையும் காணும். எனக்கு காபி போடணுமேன்னு இந்த ஜானுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. இப்போ எங்க போனா”

“கௌரி அம்மாவும் அப்பாவும் கோவிலுக்கு போய் இருக்கா கௌஷிக்காக வேண்டிக்க.”

“என்னது கௌஷிக்காக வேண்டிக்கவா.  என்னாச்சு அவருக்கு.  ஏதானும் உடம்பு சரி இல்லையா”, பதைத்துப்  போய் கேட்டாள்  கௌரி.

“உடம்புக்கு எல்லாம் ஒண்ணும்  இல்ல, மூளைதான் திடீர்ன்னு குழம்பிப்  போய் உன்ன ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டாராம்”, ஹரி சாவதானமாக சொன்னான்

“கடங்காரா எதுல விளையாடறதுன்னு இல்ல, ஒரு நிமிஷம் தவிச்சுப்  போயிட்டேன்.  இரு அப்பா வரட்டும் உன்ன சொல்றேன்”

“சாரி கௌரி சும்மாதான் உன்ன ஓட்டினேன், சரியா, அப்பாகிட்ட போட்டுக்  கொடுத்துடாதே.  நான் உனக்கு சூப்பரா ஒரு காபி போட்டுண்டு வரேன்.”

“அது அந்த பயம் இருக்கட்டும்.  போ போய் காபி போடற வேலையப்  பாரு”

எல்லாம் என் நேரம் என்று முனகியபடியே கௌரிக்கு காபி போடப்போனான் ஹரி. 

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.