(Reading time: 22 - 44 minutes)

10. நெஞ்சமெல்லாம் காதல் - ப்ரியா

தியுடன் கனவில் உலா வந்து கொண்டு இருந்தவளை ஆதவன் ஜன்னலின் வழியே ஒளிக்கரம் நீட்டி தழுவி எழுப்ப, ஆனந்தமாய் புன்னகைத்த படி எழுந்து சோம்பல் முறித்தாள் ஸ்வேதா.

தன்னவன் அணிவித்த மோதிரத்தை தடவியவள்,

"வசீகர என் நெஞ்சினிக்க உன் பொன் மடியில்

ல ல லாலா....."

Nenjamellam kathal

என்று தனக்கு மிகவும் பிடித்த பாடலை பாடியவாறு குளியறையில் நுழைந்தாள். அவளுக்கு காபி கொண்டு வந்த திவ்யாவின் முகத்திலே தாய்களுக்கே   உரித்தான பெருமையும் ஆனந்தமும். தன் ஒரே மகளின் திருமணமும் அதில் அவளுக்கு ஏற்படும் பூரிப்பும் தவிர அந்த தாய்க்கு சந்தோச பட வேறு கரணம் தேவை இல்லையே..

ன்றென்றும் புன்னகை

முடிவில்லா புன்னகை

இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தே....

இனிமையாக அவனை புதியதோர் நாளுக்கு வரவேற்ற ஆலரத்தை அணைத்தபடி எழுந்தவன், வழக்கத்துக்கு மாறாக கோபம் கொள்ளாமல் அமைதியாக தன் விரல்களை அலைபேசி ஒளித்திரையில் விளையாட விட்டான். அடுத்த பத்தாவது நொடி பிங்க் நிற சேலையில் சிரித்தால் அவன் தேவதை...!!!

நேற்று அவளுக்கே தெரியாமல் அவளை தூரத்தில் இருந்த எடுத்த படம் தான் அது.முகத்தில் அமைதியான சிரிப்பு, கையில் ப்ரிஷனுடன் அவள். அவனை கொஞ்சி கொண்டிருந்தால் போலும் முக பாவனை அப்படி தான் இருந்தது. ஒரு கணம் அவள் அவனையே கொஞ்சுவது போல் தோன்ற, வெட்க சிரிப்புடன் அறையை விட்டு வெளி வந்தான்.

அவனை எதிர் கொண்ட சித்ரா அவன் புன்னகையை பார்த்து அப்படியே நின்று விட, அவரை கவனிக்காமல் தாண்டி சென்றான்.சோபாவில் சென்று அமர்ந்தவன் தன் அலைபேசியை வலக்கையில் பிடித்து நெஞ்சோடு வைத்து கொண்டு சிரிக்க, சித்ரா சைகையால் நாதனை பார்க்க சொல்ல அவரும் அதை கவனித்து புன்னகைத்தார்.

அவனுக்கு கேட்குமாறு சப்தமாக

"ஏன் சித்து பொண்ணு வீட்டுல இருந்து எப்போ வர சொன்னங்க? 4 மணிக்கா?" என்று கேட்டார்.

பூலோகத்திற்கு வந்து தந்தையை பார்த்தவன் அவர் முகம் கடினமாக இருக்க, 'என்ன பூகம்பம் வர போகுதோ' என முழித்தான்.

"ஆமாங்க ப்ரோக்கர் 3.30 மணிக்கு எல்லாம் நம்ம வீட்டுக்கு வந்திடுவார், பெரியவனுக்கும் கூப்பிட்டு சொல்லிட்டேன், அவனும் ஆபீஸ் ல பெர்மிசன் சொல்லிட்டு அப்படியே மிதுனாவையும் கூட்டிட்டு வரேன்னு சொல்லிடாங்க"

"அப்போ சரி, ஏன்பா பிரகாஷ் இன்னைக்கு ஆபீஸ் கு லீவ் சொல்லிடு, ஒரு நல்ல வரன் வந்திருக்கு உனக்கு பொண்ணு பாக்க லட்சணமா இருக்க, படிப்பும் உன்ன அமாதிரி தான் வசதி அது இதுன்னு எல்லாமே நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்கு, இன்னைக்கே தட்டு மாத்திடலாம்னு நானும் உங்க அம்மாவும் முடிவு பண்ணிட்டோம்"

என்று அவர் கூறி விட்டு இவன் பதிலுகாக அமைதி காக்க,

 அவனோ தாயின் முகத்தை பார்த்தான். 'என்ன இதெல்லாம்' என்பது போல் கோபமும் தவிப்புமாக அவன் பார்க்க, அவரோ பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு 'என்னால ஏதும் முடியல' என்பது போல் கைகளை விரித்தார்.

என்ன தான் நாதன் கோபகாரரோ,முசுடோ இல்லை என்றாலும் ஒரு சில விஷயங்களில் மிகவும் கண்டிப்பானவர் அதிலும் அவர் முடிவு எடுத்த பின்பு அதை மாற்றும் அதிகாரம் அங்கு யாருக்கும் இல்லை.

முந்தைய இரவு தான் நள்ளிரவு வரையிலும் அன்னையிடம் மதுவை பற்றி அனைத்தையும் கூறினான். ஏற்கனவே சித்ராவிற்கு தெரிந்த விஷயம் தான் என்றாலும் கல்யாணம் வரை தெளிவாக எல்லா ப்ளானையும் போட்டு அப்பாவிடம் சொல்லுமாறு கேட்டுக் கொண்டான்.

ஆனால் இங்கு நடப்பது என்ன?  

'என்னப்பா சரி தானே" என்று நாதன் அழுத்தமாக கேட்க,

"ஆங் ச.. சரிப்பா" என்று திணறி வெளிவந்தது வார்த்தைகள்.

சில வினாடிகள் அவனையே பார்த்த இருவரும் வாய் விட்டு சிரிக்க ஒன்றும் புரியாமல் அவர்களை பார்த்தான்.

"பொண்ணு யாருன்னு தெரிய வேண்டாமா? அவ போட்டோ காட்டவா?" என அவன் அருகில் வந்து அவன் மொபைலை வாங்கி அதில் இருந்த மதுவின் போடோவையே சித்ரா காட்ட,

"ஐயோ என் செல்ல மம்மி, என் டார்லிங் நா டார்லிங் தா" என அவரை அனைத்து முத்தமிட்டவன்,

"ரொம்ப தேங்க்ஸ் டாடி" என நாதனையும் கட்டிகொண்டான். 

(அந்த ஐஞ்சு பேர்ல நாலு பேர் யாருன்னு சொல்லிட்டேன் கடைசி யாருன்னு அடுத்த எபில சொல்லலாம்னு நினைச்சேன், ஆனால் அல்ரெடி நான் பண்ண சொதப்பல்ஸ்க்கு கதைய கொஞ்சம் மாத்தி அமச்சுருக்கேன்)

வன் அந்த தெருமுனையை தன் யமஹா r15-இல் கடக்கும் போது கண்டான் அவளை. எதனை நாட்களுக்கு பிறகு அவள் தரிசனம். மேனி எங்கும் சில்லிட்டு சிலிர்த்தது.

இவளுக்கும் தான் எத்தனை சக்தி, காந்தத்தை மிஞ்சும் ஈர்ப்பு சக்தி ஒரு நொடி பார்வையில் அந்தோ தவற விட்டான் இருபத்தி இரண்டு வயது பெருந்தவத்தை.

என்ன ஒரு அழகி அவள், அவள் அருகே சென்று பைக்கை நிறுத்தியவன், இறங்கி அவள் முன் நின்றான்.

"என் முகம் காண

நீ நிமிர்ந்தாய்

குடை சாய்ந்ததோ

உன் இமை இரண்டும்

அப்படிதான் எண்ணினேன்....

வெட்கம் எனும் பேராம்

அதில் சிவந்த கன்னம் கண்டு

உன்வசம் சாய்ந்தது என்னவோ

என் இதயமடி"

மதி இழந்து மனம் குலைந்து இதயத்தை அவள் பார்வை வருடி செல்ல, விழி கிறங்கி சுயம் துளிய பற்றினான் அவள் கையை மெல்ல,சிலிர்தேன்னவோ இவள் தான் என்றால், வானமகள் தூவினால் பூத்தூரல்........

"டேய் எரும, தண்ணி தெளிச்சா கூட எழுந்துக்க மாட்டேங்குறே, இருடா உன்ன என்ன பண்றேன் பாரு"

என ஜக்கில் இருந்த நீர் முழுவதும் அவன் மேல் ஊற்ற, அலறியடித்து எழுந்தான்.

"அப்பாடா ஒரு வழிய எழுந்துட்டியா? இந்த காபிய குடிச்சுட்டு சீக்கிரமா கெளம்பு எனக்கு காலேஜ்க்கு டைம் ஆகுது" என்று அவனை பாராமல் காபி கப்புடன் வந்த தன் தங்கையை முறைத்து கொண்டு இருந்தான் வருண்..!!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.