(Reading time: 22 - 44 minutes)

 

மாலின் உள்ளே நுழைந்தவன் கண்ணில் கலை மற்றும் கண்ணாடி பொருட்கள் இருந்த ஒரு கடை பட்டது, நேரே அங்கு சென்றவன் கவனத்தை ஈர்த்தது ஒரு கண்ணாடி புகைப்பட பிரேம்.... பெரியதாக அழகாக, கண்ணாடி சிப்பிகள் வெண்முத்துக்கள் கொண்டு செய்யப்பட்ட, அழகாக நுண்ணிய வேலைபாடுகளுடன் இருந்தது...

அதில் மது புகைப்படம் வைத்தால் எப்படி இருக்கும் என யோசித்தவன்... பாடலை முனுமுனுத்தவாறு அதற்கு பில் போடா சென்றான்.....

உனது பெரிய படத்தால்

அறையின் சுவரை மறைத்து விடவா..

நிலவின் ஒளியில் மின்னும் முகத்தை

விரலை நீட்டி தொடவா...

தஜ்மகால் வாங்லாம்

ஷாஜகனாய் மாறலாம்

ஏர்கவில்லை நான் அதை

உனக்கு பின்பு வாழ்வதை ..

மாலில் இருந்த பிரபல நகைகடைக்குள் நுழைந்த பிரகாஷ்,எல்லாவற்றையும் பார்த்து விட்டு எதுவும் வேண்டாமென வெளியேறி விட்டான்....

மலர் கொத்துகளோ ரொம்ப ரொம்ப அலுப்பு..

விரல் மோதிரஙள் இப்பொதெல்லாம் சலிப்பு

அட தங்கதுக்கு தங்கநகை எதுக்கு

வாஙவில்லை நான்........

பின் பலதையும் பார்த்தவன் இறுதியில் ஒரு அழகிய புடவையுடன் வீடு திரும்பினான்... மாலை நேரம் துவங்க மூவரும் காத்திருந்தனர்....

னக்கு உதவியாளராக நாட்டிய பள்ளியில் பணிபுரிய ஆள் தேவை என மது கொடுத்த விளம்பரத்தை பார்த்து, நேர்காணல் வந்தவர்களை பார்த்து விட்டு,மதியம் அம்மா, மேகா, தன்யாவுடன் தீபாவளி ஷாப்பிங் சென்று வந்தவளுக்கு மிகவும் சோர்வாக இருக்க படுக்கையில் வந்து விழுந்தாள்.

"என்னடி படுத்துட்ட"

"ஏன் ம்மா, ரொம்ப டையர்டா இருக்கு ம்மா, இன்னைக்கு வேற ஆபீஸ் போகணும், பர்ஸ்ட் ஷோ, அதான் தூங்கலாம்னு"

"ஐயையோ சாயங்காலம் மாப்பிள்ள வீடுகரங்க வேற வரேன்னு சொல்லிருக்காங்க நீ இப்டி சொல்ற"

"என்னம்மா சொல்ற"

"நீ தான நைட் சொன்ன, அதை நான் உன் அப்பாகிட்ட சொன்னதும் அவரு மாப்பிள வீட்டுக்கு போன்ல சொன்னாரு அவங்களும் இன்னைக்கு நாள் நல்ல இருக்கு, நல்ல காரியத்தை ஏன் தள்ளி போடணும், சாயங்காலமே சும்மா தட்டு மாத்திக்கலாம், நிச்சயம் எல்லாம் கிரேன்ட்டா தீபாவளிக்கு அப்புறம் வெச்சுக்கலாம்னு சொன்னங்க"

"ஐயோ அம்மா இன்னைக்கு எல்லாம் என்னால முடியாது ப்ளீஸ் சொல்லிடுங்க"

"உங்க அப்பா வேற வெளில பொய் இருக்காரு டி"

"யாரையும் கேட்காம எதுக்கு முடிவு பண்றிங்க"

"யாரா கேட்கணும் உன் சமதம் தெரிஞ்சுருச்சு, உங்க அண்ணனுக்கும் சந்தோஷம் டா மிது, கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு டா, என் கண்ணு ல"

"ம்ம்ம் சரி நன் கொஞ்ச நேரம் தூங்கறேன், ரகுக்கு போன் பண்ணி வர சொல்லிடு, ஆமா அப்பா எங்க ?"

"அப்பா, ஸ்வேதா அப்பாவோட நேத்து பாத்தோமே அவங்க மாப்பிள அவங்க வீடு வரைக்கும் போயிருகர் ஏதோ விஷயமா.. சரி நீ தூங்கு" என்று விட்டு லலிதா நகர,

தூக்கத்தை வர விடாமல் தடுத்தன அவள் கண் முன்னே நடப்பவை யாவும்..

எண்ணங்கள் எங்கே சுற்றி கொண்டு திரும்ப வந்த நேரம், அப்பா ஆதி வீட்டில் இருக்காரா? அப்போ நம்ம கல்யாண விஷயம்? அதையும் சொல்வாரே... அதுவும் பிரகாஷுடன்? சட்டென்று எழுந்தவள் தலையில் அடித்து கொண்டாள்.

கிழ்ச்சியுடன் வீடு திரும்பிய ஆதி... மிது, ப்ரிஷன் என பின் கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்த அந்த கார் தன் வீட்டு வாசலில் நிற்க, ஒரு நிமிடம் மனம் வானம் சென்று ஆனந்த கூத்தாடியது... பின் 'அவளுக்கு இங்கே என்ன வேலை?' என்று மூளை கேள்வி எழுப்ப, தொப்பென்று கீழே விழுந்தது மனது மூளையை திட்டியவாறே..!

அவன் காரை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல, அப்பாவுடன் மாமாவும், மதுவின் அப்பாவும் பேசும் சத்தம் கேட்டது...

இவன் அவர்கள் அருகில் செல்லவும், மூர்த்தி விடை பெற்று எழவும் சரியாக இருந்தது..

"சரி மகேஷ், அப்போ நானும் அப்படியே வீட்டுக்கு போய் திவ்யாவ கூட்டிட்டு மூர்த்தி வீட்டுக்கு போயிட்டு வரேன்" , சரண்ராஜ்.

"சரிடா அதும் நல்லது தான், தப்பா நினைச்சுக்காதிங்க மூர்த்தி, வேலை விஷயமா சில ஆளுங்கள பாக்கணும், அதுல சந்தேகம்ன்னு தான் இப்போ அவசரமா உங்களையும் ராஜையும் வர சொன்னேன், அதான் நீங்க இவ்வளவு கூப்பிட்டும் வர முடியாத சூழ்நிலை", மகேஷ்.

"புரியுதுங்க, இப்போ இல்லன்ன என்ன, தட்டு மட்டும் தானே மாத்த போறோம், அதும் மாப்பிளை வீட்டுகாரங்க ரொம்ப ஆசை படறதுனால, இப்படி வீட்டில சிம்பிள வைக்க எனக்கு மனசே ஒப்பலை, எப்படியும் இன்னும் ஒரு வாரத்துல நிச்சயத்த தடபுடலா செய்யனும் அப்போ கண்டிப்பா குடும்பத்தோட வாங்க" என்று வாய் நிறைய கூப்பிட்டார் மூர்த்தி.

தலையில் கூடை நிறைய தணல் அள்ளி கொட்டியது போல் உணர்ந்தான் ஆதி. இது பொய்யாக இருக்க கூடாத என மனம் தவித்தது.

அவர்கள் வெளியே வர, முயன்று புன்னைகையை வரவழைத்து வணக்கம் சொன்னான்.   

அவனுக்கு பதில் வணக்கம் தெரிவித்த மூர்த்தி,

"நீங்களும் கண்டிப்பா அப்பா கூட வீட்டுக்கு வரணும்" என்று சொல்லி விட்டு நகர,

"கண்..டிப்பா" என்று சொல்கையில் தடுமாற்றம் அதிகரிக்க தொண்டையை செருமி சீர் செய்து கொண்டான்.

"ஆதிஇப்போ நீ ப்ரீ தான?"

"ம்ம்ம் ஆமாம் மாமா, தீபவளிக்கு டிரஸ் எடுக்க போகணும்ன்னு அம்மா சொன்னங்க"

"யாரு என் தங்கச்சியா? அவ,தன்யா,உங்க அத்தை, ஸ்வேதா எல்லாம் காலையிலேயே போய்ட்டாங்க"

"நான் காலைல அத்தைய பார்த்தேனே மாமா?"

"ஒ வீட்டுக்கு போனியா? ஆராவும் ஸ்வேதாவும் காலைல சாய் பாபா கோவிலுக்கு போனாங்க, அங்க இருந்து அவங்க கடைக்கு வரப்போ அப்டியே இவங்கள பிக்கப் பண்ணிட்டு போய்ட்டாங்க"

"சரி மாமா"

"நீயும் கிளம்பி என்னோட வா ஆதி, நம்ம அப்படியே மூர்த்தி வீடு வரைக்கும் போயிட்டு வந்துடுவோம்"

"இல்ல..."

"அட வா" என்று அவனையும் இழுத்து சென்றார். தான் வாங்கிய பரிசு பொருளை நண்பன் ஒருவனிடம் பத்திரமாக வைத்திருக்குமாறு கூறி விட்டது நல்லதாகி போனது என நினைத்தவாறே காரை செலுத்தினான் ஆதி.

மெல்லிய அலங்காரத்தில் உணர்ச்சி துடைத்த முகத்துடன், ஆனால் உணர்ச்சி பெருக்கெடுத்து அலைகளித்த கனத்த மனதுடன் அமர்ந்திருந்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.