(Reading time: 22 - 44 minutes)

 

"ன்னடா அண்ணா அப்படி பார்க்கிற உன் தங்கச்சி அவ்ளோ அழகாவா இருக்க" என்று கண்ணாடி நோக்கி வைஷ்வி திரும்ப,

"என் தேவதை கூட டூயட் பாட விடாம என்ன எழுப்பிட்டு, அதும் தண்ணி ஊத்தி இப்படி ஒரு ஆசை காதலனோட கனவு கூட்ட கலைச்சுட்டு நீ அழகா இருக்கன்னு  ஸெல்ப்  டப்பா வேறைய உனக்கு... உன்னை...." என தலையணையை வைத்து அவள் முதுகில் நாலு போட,

"ஐயோ அம்மா உன் சீமந்த புத்திரன் என்ன கொல்றான் சீக்கிரம் வந்து காப்பாத்து ம்மா, ஐயையோ உயிர் போகுதே" என ஆர்பாட்டம் பண்ணினால் வைஷ்வி.

"ஐயயையய என்ன டீ இங்க சத்தம், தினம் காலைல உங்க சண்டைக்கு த்ஹெர்ப்பு சொல்லியே என் உயிர் போய்டும் போல" என்றவாறு கையில் கரண்டியுடன் பானுமதி வரவும் சட்டென அமைதி அனனர் இருவரும்.   

"வழக்கம் போல தான, என்ன பிரச்சனைன்னு கேட்ட மட்டும் வாய மூடிப்பிங்களே, எக்கேடோ கேட்டு போங்க, எனக்கு அடுப்புல வேலை இருக்கு இன்னும் பத்து நிமிசத்துல சாப்பாடு ரெடி பண்ணலைன உங்க அப்பா கிட்ட திட்டு நான் தா வாங்கணும்" என்று புலம்பியவாறே அவர் செல்ல,

மீண்டும் தலையணையை தங்கையை நோக்கி உயர்த்தினான், அவளும் தன கைகளை அரணாக பயன்படுத்தி பயப்பது போல் பார்க்க, இருவரும் கலகலவென சிரித்தனர். செல்லமாக அவள் தலையில் அவன் தட்ட, வாகாக தன் அண்ணன் தோளில் சாய்ந்துக் கொண்டாள் அந்த தங்கை.

"என்னடா கனவுல என் அண்ணியா?"

"ஆமா டீ" என்று அவன் எங்கோ பார்த்து புன்னகையுடன் சொல்ல, அவன் காதலின் அழகை ரசித்தவள்,

"இன்னைக்காவது உன் லவ்வ சொல்லிட்டிய இல்லையா?"

"ப்ச், பிசாசு போடி அவ கைய புடிச்சு, அவ கண்ண பார்த்து சொல்ல போனப்போ தான் நீ வந்து தண்ணி ஊத்தி எழுப்பிட்ட" என்று சலித்துக் கொண்ட அண்ணனை பார்க்க நிஜமாகவே பாவமாக தான் இருந்தது வைஷ்விக்கு.

ஒன்ற இரண்டா? முழுதாக நான்கு வருடங்கள் ஆகி விட்டன, அவள் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது ஒரு நாள் வருண் வந்து தான் ஒரு பொன்னை விரும்புவதாக கூறினான்.

அந்த வயதில் அவளுக்கு அது கொஞ்சம் அதிர்ச்சி தான் என்றாலும், 'தன்னை உயிர் தோழியாக நினைக்கும் அண்ணன் தன்னிடம் பகிர்ந்து கொள்ளாமல் யாரிடம் போவான்?' என்று சமாதனம் அடைந்தாள்.

ஓரிரு முறை அவளை தூரத்திலிருந்து கண்பிதிருக்கிரன் அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அதன் பின் அவளை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை அவளுக்கு. பின்னர் தான் தெரியும் அந்த வாய்ப்பு வருனுக்குமே கிடைக்கவில்லை என்று.

அவளை தேடாத இடமே இல்லை எனலாம், கடைசியில் இதோ ஓராண்டு கழித்து வந்து விட்டாள் அவன் இடத்தை தேடி அவளே.

"ஹே பிசாசு என்னடி நான் தான் லவ் மூட்ல இருக்கேன், நீ ஏண்டி விட்டத பாத்துட்டு நிக்கற"

"ஆங்.. ஒன்னும் இல்ல டா, இன்னைக்கு அண்ணிய பார்க்க போற தானே"

"பார்க்க மட்டும் இல்லடி, என் லவ்வையும் சொல்ல போறேன், ஆபீசெக்கு லீவ் சொல்லிட்டேன் இந்த சென்னை புல்லா சுத்தி என் தேவதைக்கு ஒரு அழகான பரிசு வாங்கி காதலா இந்த வருண் சொல்ல போறாண்டி"  என்று தோரணையாக அவன் சொல்ல,

"ஐ சூப்பர் டா அப்படியே அண்ணிய போட்டோ எடுத்துட்டு வாடா.. இப்போ எங்க இருகாங்க? நீ பார்த்துட்டியா? போகும் போது கண்டிப்பா கோவில் போய்ட்டு போ.. நானும் என் காலேஜ் பக்கத்தில இருக்கிற கோவில்ல உனக்கு ஸ்பெசல் அர்ச்சனை பண்ணிடறேன்" என்று ஆர்பரித்தாள்..   

"ஏய் ஏய் வாலு, ரிலாக்ஸ், எல்லாம் நடக்கும், நான் போய் குளிச்சுட்டு வந்துடறேன் நீ எனக்கு சூடா இன்னொரு காபி மட்டும் கொண்டு வா" என்றபடி சென்றான்.

(இவரு தாங்க அந்த நம்பர் 5, சொல்லிட்டேன் ஹப்பாடா.. இவரு யாருன்னு இப்போ சில மாஸ்டர் மைன்ட்ஸ் கண்டு பிடிச்சுருப்பிங்க, அப்படி தெரியலன நோ பிரபலம் இந்த எபிலேயே சொல்லிடுவேன்.. ஹிஹிஹி

ன்னையின் நளபாகத்தை ஒரு பிடி பிடித்த ஆதி, முதல் வேலையாக ச்வேதவை காண அவள் வீட்டிற்கு சென்றான். சென்னை வந்தால் தங்குவதற்கு என ஒரு வீட்டை கட்டி இருந்தார் சரண்ராஜ். அங்கேயே தங்குவது என முடிவும் பண்ணினார்.

 அவளுடன் பேசி விடுவதே சிறந்தது என்று நினைத்து அவன் செல்ல, அவளோ தீபவளிகாக ஷாப்பிங் சென்றிருந்தாள்.

(இனி வர போற சீன் ஒரே நேரத்தில் நடப்பவை, சீன் ஒன்னு தான் ஆனா அது நடக்கும் இடமும் ஆட்களும் வேறு வேறு.. அப்படி நீங்களும் கற்பனை பண்ணிகொங்க)

துவிடம் பேச எண்ணியவன் ஏனோ தயங்கினான். மீண்டும் அவளிடம் பேசும் போது ஒரு பரிசுடன் ஆரம்பிக்கலாம் என்று நினைத்தவன் அவளுக்காக என்ன வாங்கலாம் என்று எண்ணியவாறே காரை செலுத்தினான்..

ங்கு பிரகாஷும் மாலை அவர்கள் நிச்சயம் பேசி முடிக்கும் போது அவளுக்கு கொடுக்கவென ஒரு கிபிட் வாங்கலாம் என கிளம்பினான்...

வைஷ்வியை கல்லூரியில் விட்டு விட்டு தன் தேவதையின் நினைவிலே அவளுக்கு கொடுக்க போகும் பரிசையும் அதை எப்படி கொடுப்பது எனவும் மனதுக்குள் ஒத்திகை பார்த்தவாறு சென்றான் வருண்...

மூவரும் பல இடங்களுக்கு சென்று தன் காதலியின் வருங்கால மனைவியின் நினைவுகளில் மிதந்த படி பரிசு பொருளை தேட, மூவருக்குள்ளும் ஒலித்த பாடல் இதுவே.........

பைக்கில் இலகுவாக சென்று கொண்டே, தன் ஹெட் போனில் அந்த பாடலை ஒலிக்க விட்டு பாடி கொண்டே சென்றான் வருண்.....

ஒரு முறை ஒரு முறை என் விழிகளை பாராயோ

கனவுகள் கசிந்திட, அது கதைப்பதை கேளாயோ

பாதி  கண்களை மூடுகிறேன்

மீதி கண்களில் தேடுகிறேன்

உள்ளம் புறாவும் உன் முகமே

ஊர்ந்திட கண்டேனே ..

அவள் மீதான காதலை உணர்ந்து கொண்டவன்... காரை ஒட்டி கொண்டே பாடலுக்கு ஏற்றவாறு தாளம் போட்டு கொண்டிருந்தான்... அவன் ரசித்த வரிகள் அவன் மனதை சொல்ல சாலை ஒர ரோஜா கடையை பார்த்தபடி பாடினான்,

என் நெஞ்சம் எங்கும் பொங்குகின்ற காதல்

அது சொல்லிவிட  வேண்டும்  என்று  ஆவல்

அட என தந்து சொல்வதென்று

ஒரு மொட்டவிழ்ந்த ஒற்றை ரோஜா பார்த்தேன்

என் கட்டவிழ்ந்த காதில் சொல்ல இயலும்

அதை நம்பவில்லை நம்பவில்லை நானும்

வாங்கவில்லை நான்....

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.