(Reading time: 22 - 44 minutes)

 

மூர்த்தி வீட்டிற்கு சென்ற சமயம் எல்லாம் தயாராக இருக்கவும்,கவலையின்றி சரணுடன் தோட்டத்தில் அமர்ந்து பேச, ஆதி உலவி கொண்டிருந்தான்.பெண்கள் இருவரும் அடுப்படியில் தயார் செய்தவற்றை பரிமாற்ற ஏதுவாக எடுத்து வைக்க, மேகாவும் ரகுவும் வந்தனர். மேகா அவள் ஸ்கூட்டியில் வந்து இறங்க, ரகு கற்பகதுடன் காரில் வந்து இறங்கினான்.

கற்பகம் இறங்க உதவி செஇதாவரு பக்கவாட்டில் தோட்டத்தை பார்த்தவனுக்கு தலைக்கு மேல் கோபம் பொங்கியது. அப்போது வெளியில் வந்த லலிதா அனைவரையும் வரவேற்க,

எல்லாரும் உள்ளே சென்றனர், மேகா கற்பகத்தை சக்கர நாற்காலியில் இறுதி தள்ளி செல்ல, ரகுவும் ஆதியும் இறுதியில் சென்றனர்.

அவனை பார்த்து முறைத்தவன் ஏதோ பேச எத்தனிக்க, வேண்டாம் நிறுத்து என்பது போல் தன் கையை காண்பித்தான்  ஆதி.

அவன் சோர்வாக ஏதோ யோசனையில் இருப்பது போன்று தோன்றவும் ரகு அமைதியாக மதுவை தேடி அவள் அறைக்கு சென்றான்.

அங்கே அவள் ஜன்னல் வழியாக வெறித்துக் கொண்டிருக்க,

'ஆதி வந்ததை பார்த்திருப்பாளோ' என்று நினைத்தவனுக்கு கோபம் தலைக்கேறியது.

அவளிடம் நெருங்கியவன் அவள் கண்களை பார்க்க அழுத தடயம் தெரிந்தது.அவள் செய்திருந்த ஒப்பனைக்கு பின் இருந்த வலி அவன் மட்டுமே உணர முடிந்தது.

ஜன்னலில் ஓங்கி குத்தியவன் அங்கிருந்து சட்டென நகர்ந்தான்.

அவன் வந்ததையே கவனியாமல் தன் நிலை எண்ணி வருந்தி கொண்டிருந்தவளுக்கு அவன் கோபமும் சேர்ந்து வழியை தர இப்போது இந்த உலகை விட்டு பொய் விட மாட்டோமா என்றிருந்தது.

சற்று நேரத்தில், பிரகாஷ் குடுமபத்துடன் வர, மதுவை கீழே அழைத்து சம்பிரதாயங்கள் எல்லாம் முடித்து,கல்யணம் பற்றி விரிவாக பேசி முடித்த பின் இரு வீட்டாரும் சம்மதம் என தட்டு மாற்றி கொண்டனர்.

கீழே வந்தபோது பிரகாஷிற்கு எதிரில் அமர்ந்திருந்தவனை ஆற்றாமை தந்த கோபத்துடன் ஒரு வேற்று பார்வை பார்த்து விட்டு திரும்பி விட்டாள். அதன் பிறகு மறந்தும் கூட சந்தர்ப்பம் இருந்தும் கூட அவன் பக்கம் திரும்ப வில்லை அவள் கண்கள்.

காலை முதல் இருந்த சந்தோஷம் எல்லாம் கானல் நீராய் வடிந்து போக, கண் முன்னே நடக்கும் காட்சிகள் எல்லாம் கனவாக இருந்து விட கூடாதா? என மனமுருகி வேண்டினான் ஆதி.

மெல்ல திரும்பி மதுவையும் பிரகாஷையும் ஒரு முறை பார்த்தான். பிரகாஷ் மது முகத்திலிருந்து கண்ணை அகற்றாமல் இருக்க, அதை பார்த்து ரகு கோபத்தில் இருப்பதை ஆதி பார்த்தான். பார்த்தவன் நெஞ்சில் ஏதோ ஒரு மூலையில் வெளிச்சம் தெரிந்தது.

சிறிது நேரத்தில் பிரகாஷ் குடும்பம் விடை பெற்றுக் கொள்ள, ஆதியும் வேலை இருப்பதாக கூறி சரனை கூஒடி கொண்டு கிளம்பினான்.

அவர்கள் வெளியேறியதும் வேகமாக அறைக்கு ஓடி சென்றவள், என்ன செய்வதென தெரியாமல் அழுதாள்.

ஏதோ ஒரு வேகத்தில் தாயகக எடுத்த முடிவு என்றாலும் ஆதி நிச்சயம் முடிந்த பின் தானும் ஒரு வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும் என்ற வேகமும் உண்டானது அதன் விளைவாக தான் இந்த திருமணம்.ஆனால் அவன் முன்னே இது நாடாகும் என கனவில் கூட அவள்  நினைக்கவில்லை. தான் தவித்தது போலே அவனும் தவிதிருப்பானோ?? கொஞ்சமேனும் வலி இருந்திருக்குமோ? என எண்ணியவளுக்கு, அடி பைத்தியமே என்று மூளையிடம் இருந்து வசவு தான் கிடைத்து.

ரகு அவள் அறைக்குள் நுழைய, வேகம்மை எழுந்து விழி நீரை துடைத்தாள்.

"இப்போ எதுக்கு அழற?"

"......"

"பண்றத பண்ணிட்டு... அதும்.. என்கிட்ட கூட சொல்லாம" கடித்திருந்த பற்களுக்கு இடையில் வார்த்தைகள் வந்து விழுந்தன.

"அது வந்து அம்... அம்மா..க்காக"

தலை சுழல, யாரோ தலைக்குள் தேனீக்களை அள்ளி போட்டது போல் ரீங்காரமும் வலியும் தாள முடியாமல், கால்கள் தடு மாறி, நடுங்கிய கைகளை கட்டிலில் ஊனி, கண்களில் நீர் நிறைய மிகவும் சிரம பட்டு பார்த்தல் மது... கன்னத்தில் ரகுவின் விரல்கள் பதிந்திருந்தது..!!!!

வேலை விஷயமாக கலையில் இருந்து அலைந்து கொண்டு இருந்தவன் மாலையில் மதுவை சந்தித்து பேச வேண்டும், 'இனிமேலும் ஆதிகாக காத்திராமல் அவளுக்கு தானே மாப்பிள்ளை பார்கிறேன் அவள் கடந்த காலத்தோடு தொடர்புடைய யாரும் வேண்டாம்' என சொல்ல வேண்டும் என எண்ணிய படி அவன் இருக்க.

மதியம் அவள் அழைத்து கூறிய செய்தி ஆதிர்ச்சி மற்றும் ஆத்திரத்தை உண்டு பண்ணியது. தன்னிடம் கூட கேட்காமல் இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு அதையும் லலிதாவிடம் சொன்னதை எண்ணி எண்ணி அவனுக்கு தலை வெடிக்கும் அளவில் இருக்க, இப்போது தன் அம்மா போன் பண்ணி தன்னை லலிதா வீட்டில் கொண்டு விடுமாறு கேட்க அந்த காரணத்தை அறிந்தவன் முற்றிலும் மாறி போனான்.

இங்கு வந்த நடந்த கூற்றை எல்லாம் பார்த்து, இப்போது அழுது கொண்டு நிற்பவளிடம் கரணம் கேட்டால் அம்மாவாம்......  பற்றி கொண்டு வந்தது அவனுக்கு...

கோபத்தை கட்டு படுத்தி ஆழ்ந்த மூச்சுகள் எடுத்து நிதானமாக அவன் திரும்ப,தலை பிடித்து கொண்டு கண்கள் சொருக அவள் சாய்ந்தாள்...

தாவி சென்று தாங்கியவன், விழிகளிலும் நீர் கோர்த்தது..

"ஐயோ அம்ம்மு எழுந்திரு டா ஐயம் சாரி டா மா, ந.. நான் ஏதோ கோவ..." அதற்கு மேல் பேச முடியாமல் அவளை நென்சில் கட்டிக்கொண்டு அழுதவன்.பக்கத்தில் பாட்டிலில் இருந்த நீரை எடுத்து அவள் முகத்தில் தெளித்து, அவளுக்கு புகட்டி எழுப்பி விட்டான்.

எழுந்தவள் மீண்டும் கண்ணீர் பெருக அவனை பார்த்து "ச..சாரி" என்று சொல்ல.. அவன் அவள் தலையை வருடியவாறு பேச்சு எழாமல் அழுதான்...

ரண்டு நாட்கள் கடந்திருந்தது...

"பாட்டி எண்ணை வேண்டாம் பாட்டி" என பரிஷன் கெஞ்சி கொண்டிருக்க,

"இது ரொம்ப நல்லது டா கண்ணா, நீ குட் பாய் தானே?" என்று கேட்டவாறே அவனுக்கு உடல் முழுவதும் எண்ணை பூசி விட்டு கொண்டிருந்தார் லலிதா.

மூர்த்தி குளித்து முடித்து வர, ப்ரிஷனுக்கு மேலாக ரகுவும், திவாக்கரும் அடம் பிடித்து கொண்டிருந்தனர்.

தன்யா, மது, மேகா மூவரும் அவர்களுக்கு எண்ணை குளியல் நடத்தி கொண்டிருக்க வடிவேல் மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்து அழுதனர் இருவரும்.

ஒருவழியாக இந்த பொற்காலம் முடிந்து அனைவரும் குளித்து விட்டு, காலை பிரார்த்தனைக்காக பூஜை அரை முன்னால் வந்தனர்...

மாம்பழ நிறமும் பச்சை நிறமும் கலந்த டிசைனர் சாரியில் மதுவும், ஊதா  நிற லேஹன்காவில் மேகாவும், அடிவானத்தின் நிறத்தில் பாடு புடவையில் தன்யாவும் இருக்க..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.