(Reading time: 8 - 15 minutes)

23. என்னுயிரே உனக்காக - சகி

"து?"

"என்னக்கா?"

"அது...வந்து...போன் எதாவது வந்ததா?"

Ennuyire unakkaga

"உனக்கா?வரலையே!"

"எனக்கில்லை...அது...சரண் எதாவது போன் பண்ணாரா?"-புரிந்துவிட்டது மதுவிற்கு,பவித்ரா நிரஞ்சனை குறிப்பிடுகிறாள் என்று....

"அவர் பண்ணலை.நிரஞ்சன் பண்ணார்!"

"என்ன சொன்னார்?"-அவள்,குரலில் ஒருவித மகிழ்ச்சி,கலக்கம்,குழப்பம், பயம்.

"அவங்க காஷ்மீர் போயிட்டாங்கலாம்....கேஸ் சீக்கிரமே             ஆரம்பிச்சிடுவாங்கன்னு சொன்னார்."

"வேற எதுவும்  சொல்லலையா?"-அவள்,குரலில் ஏமாற்றமும் கலந்து ஒலித்தது.

"நிரஞ்சன் சீக்கிரம் வந்திடுவேன்னு சொல்ல சொன்னார்!"

"யார்கிட்ட?"

"உன்னை தவிர வேற யார்கிட்ட சொல்ல முடியும்?"-பவித்ரா குழப்பமாய் மதுவை நோக்கினாள்.

"எனக்கு எல்லாம் தெரியும்!"

"மது??"

"அப்பறமா நிரஞ்சனுக்கு போன் பண்ணி பேசு!"

".............."-மௌனமாய் நின்ற பவித்ராவிடம் ஆறுதலாய்,

"அவங்க இரண்டுப் பேருக்கும் எதுவும் ஆகாது...பயப்படாதே!"

"ம்...."

"நிரு!"

"ஆ...என்ன மச்சான்?"

"என்னடா தனியா உட்கார்ந்துட்டு இருக்க?"

"அ...அதெல்லாம் ஒண்ணுமில்லைடா!"

"வர வர உன் போக்கே சரியில்லை...என்னாச்சு?"

"ரகு ஞாபகம் வந்திடுச்சி!"

".............."

"என்னால எல்லா விஷயத்தையும் விளையாட்டா எடுக்க முடியலையே!!போன,முறை அவன் கூட மும்பை போனது ஞாபகம் வருது!"-ஆதரவாய்,தன் நண்பனின் தோளை தொட்டான் சரண்.

"ரகு இல்லைங்கிற விஷயம் யாராலும் மறக்க முடியாது...வேற வழி இல்லை மறக்க முயற்சி பண்ணி தான் ஆகணும்."

"..............."

"பவித்ராக்கிட்ட பேசினியா?"

"இல்லை..."

"ஏன்?"

"எதுவாக இருந்தாலும் கேஸ் முடிந்த உடனே பார்த்துக்கலாம்.பாவம்!அவ,மனசுல எதையும் விதைத்துவிட்டு,அவளை ஏமாற்ற விரும்பலை."-ஆதித்யாவிற்கு ஆச்சரியமாய் போனது,

எப்படி இவன் இவ்வளவு முதிர்ச்சி அடைந்தவனாய் மாறினான்???அதீத மாற்றம் இவனுள் எப்படி பிரவேசித்தது??

"மச்சான்..."

"ம்..."

"ரவி அடிக்கடி ஒரு காட்டுப்பகுதிக்கு போயிட்டு வரதா இன்பர்மேஷன் கிடைச்சிருக்கு!"

"ரவி இருக்கிற இடத்தை ட்ரேஸ் பண்ணியாச்சா?"

"இல்லை...அவன் அடிக்கடி போயிட்டு வர இடத்தை பண்ணியாச்சு!"

"அது...அப்துல்லா இருக்கிற இடமா?இருக்குமோ?"

"தெரியலை...ஆனா,அது பயங்கர பாதுக்காப்பான இடம்.நமக்கு காஷ்மீர் போலீஸோட ஹெல்ப் கண்டிப்பா வேணும்!"

"ம்...நிரு நீ என் கூட வர வேண்டாம்!"

"ஏன்?"

"இல்லை...அது வந்து..."

"எனக்கு எதாவது ஆயிடும்னு பயப்படுறீயா?"

"............"

"உன்னைப் பற்றியும் மற்றவங்களை பற்றியும் கவலைப்படாம நான் வாழ்வதற்கு,சாகறது மேல்!"-சரணின் பார்வையில் ஒருவித பெருமை,கர்வம் தெரிந்தது.

"நான் இருக்கிற வரைக்கும் உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன் நிரு!"

"அதே வாக்கை நான் உனக்கு தரேன் மச்சான்!"-அடடா!நண்பன் என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்...ஒருவன் இவனுக்காக உயிர் கொடுத்தான் மற்றொருவன் இவனுக்காக சேனையின் முதல் வீரனைப் போல உயிர் கொடுக்க துணிகிறான். இவர்கள் எதிர்ப்பார்ப்பது ஒன்றே தன் நண்பனுடைய மரணத்தின் அங்கீகாரம்...

இவர்களின் பயணம் இதே நிறைவேறுமா?அல்லது....அவர்களில் யாருக்காவது ஏதேனும் நிகழுமா???

"சாப்!"

"ம்...வா ரசூல்,ஏதாவது முக்கியமான விஷயமா?"

"ஆதித்யா சரண் காஷ்மீர் வந்துட்டான்!"

"மாஷா அல்லாஹா!ரவி சொன்னது சரி தான்,அவனை நெருப்புல போட்டாலும்,அந்த சாம்பலில இருந்து எழுந்து,பூமியில புதைத்தாலும் முளைத்து வரான்.தண்ணியில போட்டாலும் எதிர்நீச்சல் அடிக்கிறான்.என்ன பண்றது?"

"அவனை கொன்னுட வேண்டியது தானே சாப்!"

"அவன் இன்னும் அடங்கலைன்னா...அதான் முடிவு!"

"சாப்!ஆதித்யா உங்களை தேடிட்டு இருக்கிறதா செய்தி வந்திருக்கு!"

"அடிப்பட்ட  சிங்கம், பழிவாங்க துடிக்குது!வேட்டையாடுதுன்னா பார்க்கலாம்...."

".........."

"ரவியை வர சொல்லு!"

"சரி...சாப்!"

ன்றிரவு.......

ஆதித்யாவின் கைப்பேசி அலறியது....

"ஹலோ!"

"............."

"ஹலோ!"

"ஆதித்யா!"-கர்வமாய் ஒலித்தது அந்த குரல்.

"யாரு??"

"அப்துல்லா!"-கண்களில் இருந்த உறக்கம் கலைந்து போனது சரணுக்கு!!!

"என்னைத் தேடி காஷ்மீருக்கே  வந்துட்ட போல?"

"................."

"ஐ வாண்ட் டூ மீட் யூ!"

"................"

"உடனே தனியா கிளம்பி வா!"

"................."

"நீ இருக்கிற இடத்துக்கு கீழே ஒரு கார் இருக்கும்.அதுல, வந்து ஏறு!"

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.