(Reading time: 8 - 15 minutes)

 

"ரி!"-நிரஞ்சனின் உறக்கம் கலையாதவாறு தனது கைப்பேசியை மட்டும் எடுத்துக் கொண்டு கீழே இறங்கினான் சரண்.அவன், கூறியப்படியே அந்த காரில் ஏறினான்..அந்த காரின் டிரைவர் சீட்டில்,முகம் எல்லாம் மூடிக்கொண்டு, கண்கள் மட்டும் திறந்திருக்க அமர்ந்திருந்தான் ஒருவன்.

"டூ யூ ஹேவ் எனி வெப்பன்ஸ்?"

"நோ!"

"வென் வீ எனி வெப்பன்ஸ் வித் யூ வீ வில் கில் யூ!"

"ஐ ஒன்லி ஹேவ் மை மொபைல் வித் மீ!"

"கிவ் மீ யுவர் மொபைல்!"-அவன்,தனது கைப்பேசியை அவனிடம் தந்தான்.

அதை வாங்கியவன் தூக்கி விசீ எறிந்தான்.

"ஷேல் வீ கோ?"

"யா!"-கார் புறப்பட்டது. இருண்ட அந்த சாலையில் காற்றை கிழித்துக் கொண்டு புறப்பட்டது அது.

"துக்கு திடீரென்று வர சொன்ன?"-ரவி.

"கழுகு பறந்து வருது ரவி!"

"என்ன?"

"ஆதித்யா வந்துட்டு இருக்கான்!"

"என்ன?எப்படி?"

"ஏன் பயப்படுற?நான் தான் வர வைச்சேன்!"

"பைத்தியக்காரத்தனம் பண்ணுறீயே!நீ வர வைத்தது சரணை இல்லை...எமனை!"

"எமனா?அவனா?"-பலமாக சிரித்தான் அப்துல்லா.

"அடங்கி ஒடுங்கி வந்துட்டு இருக்கான் உன்னோட எமன்."

"அவனைப் பற்றி தெரியாது...அவன் அடங்கி வரலை,அடக்க வந்துட்டு இருக்கான்!"-ரவி, கூறிக்கொண்டிருக்கும் போதே,கதவை உடைத்துக் கொண்டு உள்ளே இறங்கியது அந்த கார்.ஓட்டிக் கொண்டு வந்தவன் சரண்.ஒரு நொடி அனைவரும் ஸ்தம்பித்த நிமிடம் அது!!!

ப்துல்லா மிரண்டுவிட்டான்

ஆதித்யாவை சுற்றியும் துப்பாக்கிகள்    தோட்டாக்களை மழையாக பொழிந்தன.அவை அனைத்திற்கும் ஈடு கொடுத்தவன்.சுற்றி இருந்த,பெட்ரோல் கேன்களில் ஒன்றை இடித்தான்.அது,மற்றதன் மேல் விழ வெடித்து சிதறியது அனைத்து இடமும்!!ரவியும், அப்துல்லாவும் வெளியே தப்பித்து விட்டிருந்தனர். காரை அதிவேகமாக செலுத்தி வெளியே வந்தான் சரண்.காரை விட்டு இறங்கினான்.

"எவ்வளவு தான் வெட்டினாலும்,முளைச்சிட்டு இருக்கியே!உனக்கு உயிர் மேல ஆசையே இருக்காதா?"- வெறித்தனமாக கத்தினான் அப்துல்லா.

"உன்னோட சாவை முன்னாடியே வச்சிட்டு, வீராப்பா வீர வசனம் பேசுறீயே!உனக்கு உயிர் மேல ஆசை இல்லையா??"

"உன்னை சாவடிக்காம என் உயிர் போகாதுடா!"-வெறித்தனமாக ஆதித்யாவை தாக்க ஓடி வந்தான் அப்துல்லா.இரு துருவம் மோதிக் கொண்டதைப் போல மோதிக் கொண்டனர் இருவரும்.இது தான் சமயம் என்று ரவி அங்கிருந்து ஓடினான்.

மாறி,மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் இருவரும்.ஆதித்யாவின் அடியில் அப்துல்லா கீழே சரிந்தான்.

"அல்லாஹா!"

"ச்சீ...அந்தப் பேரை சொல்லாதே!!!தனக்கு இருக்குதோ இல்லையோ, மற்றவங்க கேட்டா ஜாதி,மதம்,இனம்,மொழி பார்க்காம வந்து உதவுறானே அந்த முஸ்லிம் சொல்லலாம் அல்லான்னு!!!நண்பர்களே இல்லாத இந்துவை,கிறிஸ்துவனை கூட பார்க்கலாம்.ஆனா, முஸ்லிம் நண்பன் இல்லாத ஒரு இந்துவை, கிறிஸ்துவனை கூட பார்க்க முடியாது.அப்படிப்பட்ட நாட்டுல கலவரம் பண்ண எப்படிடா உங்களுக்கு மனசு வருது?உன்னை மாதிரி சில பேரால ஒட்டுமொத்த எங்க முஸ்லிம் நண்பர்களும் தலை குனியுறாங்க.இனி,உன்னை உயிரோட விட மாட்டேன்.!"-ஆதித்யா,அருகிலிருந்த துப்பாக்கியை எடுத்தான், அப்துல்லாவின் நெற்றியை நோக்கி அவன் குறி வைத்த போது,மற்றொரு துப்பாக்கி அவன் நெற்றியை குறி வைத்தது.

"கன்னை கீழே போடு,இந்த இடத்தைச் சுற்றி ஆளுங்க இருக்காங்க...உன்னால தப்பிக்க முடியாது!சாப்...நீங்க இங்க இருந்து போயிடுங்க!"-பலமாக சிரித்து கொண்டே எழுந்தான் அப்துல்லா!

"ஓவரா வசனம் பேசக் கூடாதுன்னு இதுக்கு தான் சொல்லுவாங்க!"

"............."

"உன்னை என் கையாலயே சாவடிக்கணும்!"-என்று வேறு துப்பாக்கியை சரணின் நெற்றியில் குறி வைத்தான்.

"கடைசி ஆசை எதாவது இருக்கா?}"

"..........."

"இருந்தாலும் நிறைவேற்ற முடியாது!"-என்று அவன் சுட வருகையில் அவன் நெற்றியை குறி வைத்தது நிரஞ்சனின் துப்பாக்கி!மூவருக்கும் எதிர்ப்பாராத அதிர்ச்சி இது!

"கன்னை கீழே இறக்குடா!இந்த இடம் முழுசா என் கன்ட்ரோல்.என்

தலை அசைத்தால்,உன் தலை சிதறிவிடும்."-அப்துல்லா, துப்பாக்கியை தளர்த்தினான்.அவனைச் சுற்றி காவலர்கள் சூழ்ந்தனர்.அவனது, துணைவனும் பிடிப்பட்டான்.

"மச்சான்...நீ போ!ரவி தப்பிக்க போறான்!"

"நீ எப்படி?"

"அதை அப்பறமா சொல்றேன்.போ!"-ஆதித்யா,அங்கிருந்து ரவியை தேடி விரைந்தான். திடீரென்று நினாறவன்,தன் கையில் இருந்த துப்பாக்கியால் அப்துல்லாவை மூன்று முறை நெஞ்சில் சுட்டான்.அதை எதிர்ப்பார்க்காதவர்கள் ஸ்தம்பித்து நிற்க,திரும்பி ரவியை தேடி சென்றான் சரண்.

வியை தேடி அடர்ந்த வனப்பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டியதாயிற்று!!!

"ரவி!"

"............."

"ரவி!"-ஆத்திரம் பொங்க கத்தினான் சரண்.திடீரென்று அவன் தலையில் ஏதோ பலமாக தாக்கியது போன்ற உணர்வு!!தலையில் சகிக்க முடியாத வேதனை. அப்படியே,மண்டியிட்டான் ஆதித்யா.அடித்தவன் ரவி தான்!!!

"நான் தான் உயிர் மேல ஆசை இருந்தா விட்டுவிடுன்னு சொன்னேன்ல,அப்பறம் ஏன் சாகறதுக்குன்னே வர?"

".............."

"இனி,உன்னை உயிரோட விட்டா,எனக்குத் தான் பிரச்சனை!"

"டேய்!உன் உயிரை எடுக்காம என் உயிர் போகாதுடா!"

"............."

"ரகுவோட மரணத்துக்கு நீ பதில் சொல்லியே ஆகணும்!"-ஆதித்யாவை நோக்கி ரவி துப்பாக்கியை ஏந்திய போது,தன்னிரு கைகளால் இழுத்தான். அவனது,அந்த திடீர் செயலில் தடுமாறினான் ரவி.ஆதித்யா,தனது கால்களால் அவனது கால்களை மடக்கினான். அதனால்,ஏற்பட்ட வலி தாங்காமல் மண்டியிட்டான் ரவி.கண நொடிகளில் அடுத்து துப்பாக்கியை எடுத்து அவன் நெற்றியில் வைத்தான் சரண்.

"சரண் நீ இப்படி பண்ண கூடாது...எதுவாக இருந்தாலும் என்னை அரஸ்ட் பண்ணு!"

"அரஸ்ட்டா??நீ பண்ண எல்லா தப்புக்கும் ஒரே தண்டனை மரணம் மட்டும் தான்!எனக்கு சட்டம் முக்கியம் இல்லை.நீ சாகணும் அதுவும் என் கையால சாகணும்."

"சரண்...தயவுசெய்து என்னை மன்னிச்சிடு!"

"ஒரு வகையில உனக்கு மன்னிப்பு தான் தரேன்.உன்னோட மரணத்தை பார்த்து என் ரகுவோட ஆத்மா சாந்தி அடையட்டும்!"

"சரண்..."

"அவனோட மரணத்துக்கு நியாயம் கிடைக்க போகுது!சாவுடா!"-சரண் துப்பாக்கியை அழுத்திய நேரம் கண்களை மூடி கொண்டு,

"சரண்...நான் சொல்றதை கேளு!ரகு சாகலை!"-என்றான் ரவி.

தொடரும்...

Go to EUU # 22

Go to EUU # 24

{kunena_discuss:722}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.