(Reading time: 16 - 31 minutes)

 

தானும் பெண்ணைப் பெற்றவர் ஆயிற்றே, ஜானகியின் கவலை உடனே புரிந்தது,  “கவலையே படாதீங்கோ மாமி. எல்லாம் ஜமாய்ச்சுடலாம்.   சம்பிரதாயமெல்லாம் இப்போ சாஸ்த்ரிகள் சொல்றதுதான்னு ஆயிடுத்து.  எத்தனை பேருக்கு தெரிஞ்சிருக்கு சொல்லுங்கோ.  நான் போன வாரம் ஒரு கல்யானஹ்துக்குப் போய் இருந்தேன்.  அதுல தாலி கட்டிக் கூட முடிக்கலை,  மாப்பிள்ளை பொண்ணு ரெண்டு பெரும் ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிண்டு ப்ரிண்ட்ஸ்க்கு கை கொடுக்க ஆரம்பிச்சுட்டா.  அவாளோட அம்மா அப்பாவும் மாப்பிளை வந்தாச்சா, மாட்டுப்பொண்  வந்தாச்சான்னு இன்னொரு பக்கம் கை கொடுத்துண்டு இருந்தா.  பாவம் சாஸ்த்ரிகள்தான் அடுத்த மந்திரத்தை ஆரம்பிக்கனுமேன்னு தவிச்சுண்டு இருந்தார்.  அதே மாதிரி சீர் வரிசைப் பேசறதுக்கு ஒண்ணும் இல்லை  மாமி.  நீங்க ஆத்தைப் பார்த்தா மாதிரி இருக்குமேன்னுதான் வரச் சொன்னோம். மத்தபடி அவ உங்க பொண்ணு.  நீங்க என்ன ப்ரியப்படறேளோ, உங்களால என்ன முடியுமோ அதை செய்ங்கோ போரும்.  போட்டுக்கப்  போறது அவதானே.  அதே மாதிரி பாத்திரம் எல்லாமும் வாங்க வேண்டாம்.  அங்க ஏற்கனவே கௌஷிக் சமைச்சு சாப்ட்டுண்டு இருக்கான்.  அதனால பாத்திரமும் இருக்கு.  நீங்க ஏகப்பட்டது வாங்கிட்டு அப்புறம் கொண்டு போக முடியலைன்னா உங்களுக்கும் வருத்தமாத்தானே இருக்கும். ”, என்று லக்ஷ்மி சொல்ல, (லச்சு மாமி கலக்கிட்டேள், உங்களை மாதிரி எல்லா சம்மந்தி ஆத்துக்காராளும் இருந்தா நாட்டுல எங்கயுமே ஸ்டவ்  வெடிக்கவே வெடிக்காது)

“அது சரிதான் மாமி, இருந்தாலும் எங்க ஆசைன்னு ஒண்ணு இருக்கே, கௌரிக்கு 35 பவுன் போடலாம்ன்னு இருக்கோம்.  அது உங்களுக்கு பரவா இல்லையா.  அப்பறம் இந்த டௌரி  விஷயம் ....... “, என்று ஜானகி இழுக்க.

“நான் ஏற்கனவே சொன்னா மாதிரி நகைப் போட்டுக்க போறது கௌரிதான், அதனால அவளுக்கு என்னத் தேவையோ அதைப் பண்ணுங்கோ போரும்.  அப்பறம் 30 வருஷம் முன்னாடி நடந்த எங்க கல்யாணத்தப்போவே வரதட்சணை வாங்கறதை கண்டிச்சுப் பேசினார் எங்காத்து மாமா.  அதனால எங்காத்துல கௌரிங்கற  வார்த்தைதான்  கேக்குமே தவிர டௌரிங்கறது கேக்காது.(லச்சு மாமி அடிக்கடி இப்படி டயலாக் பேசி புல்லரிக்க வைக்கறேள்.  ஆனால் இன்னைக்கு கார்த்தால உங்காத்துக்கு வரப்போற மாட்டுப்பொண்ணு பேசினதை கேட்டிருக்கணும்.  உங்களை வடிவுக்கரசி ரேஞ்சுல வச்சிருந்தா.  ஜானு மாமி போய்தான் நீங்க பண்டரிபாய்ன்னு சொல்லணும்).   எங்களுக்குன்னு demands எதுவும் கிடையாது.  ஏன்னா நான் சொல்றது கரெக்ட்தானே”,  ராமனிடம் அதி முக்கியமாக   பிரதமர் மோடியின் செயல்களைப் பற்றி தீவிர விவாதத்தில் ஈடுபட்டிருந்த தன் கணவனை பேச்சிற்குள் இழுத்தாள் லக்ஷ்மி.

ஏகப்பட்ட முறை லச்சு மாமி பேசுவதை கவனிக்காமல் விட்டுவிட்டு பிற்பாடு அதற்காக லச்சு மாமி படு பயங்கரமாக அவரை கவனித்த அனுபவம் இருந்ததால் ஒரு காதை மாமிகள் பேச்சிலும் வைத்திருந்த பத்து மாமா, “நீ சொன்னா சரியாத்தான் இருக்கும்”, என்று சரணாகதி அடைந்தவாறே.

 “லக்ஷ்மி சொல்றாப்பல எங்களுக்கு demands எதுவும் இல்ல.  எங்க பக்கம் மனுஷா கொஞ்சம் ஜாஸ்தி.  அவாளை மட்டும் கல்யாணத்துல நன்னா கவனிச்சு அனுப்பினா போரும்.  அப்பறம் ராமன் நான் எங்காத்து ஜோசியர்கிட்ட பேசினேன்.  அவர் October, Novermber ரெண்டு மாசத்துலேயும் நாள் குறிச்சு கொடுத்திருக்கார்.  நீங்களும் பாருங்கோ.  உங்களுக்கு தோதுப்படற நாள்ல வச்சுக்கலாம். ஆத்துக்கு போயிட்டு நிதானமா யோசிச்சு சொல்லுங்கோ”

“கண்டிப்பா.  இது மே மாசம், நவம்பர்னா சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.  எதுக்கும் நாங்க எல்லாம் கலந்து பேசி உங்களுக்கு சொல்றோம். இன்னும் 5 மாசம்தான் இருக்கு. மண்டபம் புக் பண்ணனும், நிறைய வேலை இருக்கு.”, ராமன் தன போக்கில் பேசிக்கொண்டே போனார்.

“ராமன் கவலைபடாதீங்கோ, உங்களுக்கு any time, any help கேளுங்கோ.  செய்ய ரெடியா இருக்கோம்.  நீங்க மட்டும் தனியா கஷ்டப்பட வேண்டாம்.”, பத்து கூற, ராமன் நிம்மதி பெருமூச்சு விட்டார்.

“சரி மாமி நான் உங்களுக்கு குடிக்க எடுத்துண்டு வரேன்.  நீங்க இருந்து டிபன் சாபிட்டுட்டுதான் போகணும்.  உங்க அளவுக்கு இல்லைனாலும் ஓரளவுக்கு நன்னா பண்ணுவேன்.  எங்காத்து சின்னக் குட்டி நீங்க பண்ற டிபனை அவ வந்து சாப்பிடறத்துகாகவே கௌஷிக்கை கல்யாணத்துக்கு ஓகே சொல்ல சொன்னா ”, என்று சிரித்தவாறு சொல்லியபடி லஷ்மி மாமி கிட்சனுக்குப்  போக அவருக்கு ஹெல்ப் செய்யும் சாக்கில் ஜானகியும் அவரை பின்தொடர்ந்தார்.  அன்னைக்கு ஸ்வேதா டிபன் பத்தி பேசியபோது கல்கட்டா காளி மாதிரி முறைத்தவள் இன்று எப்படி அதே விஷயத்தை காலண்டர் மகாலக்ஷ்மி மாதிரி சொல்கிறாள் என்று பத்து மாமாதான் முழித்தார். 

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.