12. கனியாதோ காதலென்பது! - Anna Sweety
காவல் துறைக்கு செய்ய வேண்டிய அத்தனை ஒத்துழைப்புகளையும் செய்து முடித்து ரக்க்ஷத் வீடு திரும்பும் போது குடும்பத்தின் அனைவரும் வீடு வந்து சேர்ந்திருந்தனர்.
இவனை முதலில் ஓடி வந்து கட்டிக்கொண்டது ஆரணி தான். காரை விட்டு இறங்கியதும் கழுத்தோடு சேர்த்து கட்டி கொண்டு ஒரு அழுகை.
“நீயும் எங்கள மாதிரி எதோ ஒரு பாதுகாப்பான இடத்துக்குதான் போறேன்னு நினைச்சேன்...இப்படி தனியா...உனக்கு ரொம்ப ....ஏண்டா இப்படி செய்த?...”

அவள் அழுதவுடன் வழக்கமாக அவன் ஏதாவது கேலி செய்து சிரிக்க அல்லது முறைக்க வைத்து கவனத்தை திருப்பிவிடுவான். ஆனால் இன்று ஆறுதலாக அவள் பின் தலையை தடவினான்..முகத்தில் ஒரு கனிவு. தாய்மையை அடையாள படுத்தும் சிறு புன்னகை அவன் இதழ்களில்.
ஆரணிக்கு ஏதோ புரிந்தது. வலியோடு ஒரு கேள்வி பார்வை பார்த்தாள்.
“அருணை பிடிக்க நான் போகாம யார் போகனும்?” என்றான்.
உன்னை தொடுகிறவன் என் கண்ணின் மணியை தொடுகிறான் என்ற வேத வசனத்தின் உணர்பூர்வ விளக்கமாக அது சத்தமிட்டது.
அவன் சொன்ன அந்த வாக்கியம், அதை அவன் சொன்னவிதம், அதன் ஆழம், அதன் உட் பொருளை தெளிவாக உணர்த்தியது அவளுக்கு. அதற்கு மற்றொரு காரணம் இடைபட்ட நேரத்தில் நிரல்யா ஜெஷுரன், துவி, அருண் சமபந்தபட்ட அவளறிந்த அனைத்தையும் ஆரணியிடம் சொல்லி இருந்ததும் தான்.
வலி, தவிப்பு, அண்ணனிடம் இதை எப்படி துருவ என்ற நிலை, ஆனாலும் தெரிந்தாக வேண்டுமே என்ற வெறி, அகனை குற்றவாளியாக நினைத்தேனே என்ற குற்ற உணர்வு இப்படி எல்லாவற்றின் கலவையாக ஒருகணம் மாறியவள்
“அகன்....அவர...” என தடுமாறினாள். இல்லை என்பது போல் மெல்ல இடவலமாக தலை அசைத்தவன் விழியாலும் அதே கருத்தை வலியுறித்தினான்.
அவள் மனதில் அவளையும் மீறி ஓடிய நொடி நேர நிம்மதி, மொழியின்றி வெளிப்பட்டு அவளது அண்ணனுக்கு ஆரணி என்ற நதி இனி தேங்காது ஓடும் என்பதை உணர்த்தியது.
“அருண்க்கு லைஃப் டைம் ப்ரிசன்மெண்ட் கண்டிப்பா கிடைக்கும் ....” ஒரு நொடி நிறுத்தியவன்.
“யார் நமக்கு எதிரா செய்த காரியத்தையும் பெரிசாக்றதும் சிறிசாக்றதும் நம்ம கைலதான் இருக்குது ஆரு... நடந்ததை பெரிசா நினைச்சு சோர்ந்து போறதும், அதை சின்னதா நினைச்சு தூக்கி எறிஞ்சிட்டு போறதும் உன்ன பொறுத்த விஷயம்தான்...அதுவும் நம்மை ஹர்ட் பண்றதுக்காக மட்டுமே நடந்த ஒரு விஷயத்துல ஹர்ட் ஆனா, அதை ஒரு விஷயமா நினைச்சு நம்ம வாழ்க்கையின் முக்கிய விஷயங்களில் முடிவெடுத்தா..., அது எதிரியை ஜெயிக்க வச்சதாகாதா....? ஒரு கோடை சின்னதாக்கனும்னா என்ன செய்யனும்னு உனக்கு தெரியும்...அதை அழிக்க டிரை பண்ணலாம்...இல்லனா.....பக்கதில பெருசா புது கோடு போடலாம்....காயபடுத்த நினைச்சவனை தோக்கடிக்க பெருசா புதுசா சந்தோஷ கொடு போடுறது எனக்கு புத்திசாலித்தனமா தெரியுது.....உன் இஷ்டம்..”
அவனை அமைதியாக பார்த்திருந்த ஆரணி சிறு இடைவெளிக்கு பின் “சாரி ண்ணா...அன்னைக்கு உன்ட்ட சொல்லாம போய்ட்டேன்...” என தொடங்கினாள். மீண்டும் அழுகையின் வாசம்.
“உனக்கு பொறுப்பு நான் தான்ங்கிற.....அப்படின்னா உன் தப்புக்கு தண்டணையும் எனக்குதானே வரனும்...அதைதான் இப்போ நான் அனுபவிச்சேன்... தனியா அந்த அருண்ங்கிற நரிகூட்டத்துட்ட போய்ட்டு வந்திருக்கனே...ஒரு சின்ன பிஃஸ்டல் கூட இல்லாம.....செத்து பிழச்சு...அது போதும்னு நினைச்சா....உன்னையவோ ஜெஷுரையோ தண்டிக்காத...”
“அண்ணா...” அதிர்ச்சியும் அழுகையுமாக அவனை பார்த்தாள்.
“ரச்சுன்னு கூப்பிடு கழுத....சீக்கிரமா சீன முடி...அங்க என் ஆள் ரொம்ப நேரமா வெய்டிங்.....அவ முட்ட கண்ண க்லோசப்ல பார்த்தா......” கண்சிமிட்டி அவன் சொன்ன விதத்தில்
“போடா....” என்றபடி ஒரு அடி போட்டுவிட்டு விலகிய ஆரணி அவள் வழக்கமான குறும்பு பாவத்திற்கு மாறி இருந்தாள்.
பின்பு உணர்ந்தவளாக “அண்ணா...நிரு அண்ணிய நான் தான் சொல்ல வேண்டாம்னு...சாரி..அவங்கள தப்பா நினைக்காதே...” என தடுமாறினாள்.
“என் ஆளை எப்படி கவனிச்சுகிடனும்னு எனக்கு தெரியும்...கொஞ்சம் வழி விடுறியா நீ...” என்று அவன் தன் இயல்பில் பேச அடுத்த “போடா”வை அவன் முன் போட்டுவிட்டு ஓடினாள்.
அங்கிருந்து ஓடிய ஆரணி இவர்கள் பேச தனிமை தரும் விதமாக, வாசல் நிலையில் சாய்ந்தபடி, உணர்வு பிழம்பு பேச முடியாத பெண்ணாகிய பாவத்துடன் பார்த்திருந்த நிரல்யாவின் கை பற்றி இழுத்து வந்து, அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த ரக்க்ஷத்தின் கையில் கொடுத்தாள்.
“எல்லாரும் இங்கதான் இருக்கோம் ஞாபகம் வச்சுக்கோ.....”என்றபடி உள்ளே ஓடினாள்.
அவள் கையை மென்மையாக அழுத்தி அதன் பின் விட்டவன், அவள் கண்களை பார்த்து “பழைய கணக்குடா...முடிச்சிட்டா நம்ம லைஃப் பீஸ்ஃபுல்லா போகும்...அதான் ” என்றான்
“ம்” என சம்மதமாக சிறு அசைவாய் தலை ஆட்டியவள் திரும்பி வீட்டின் உட்புறமாக பார்த்தாள். அசாத்திய அமைதி அவள் மேல் குடி கொண்டிருந்தது. அவளுள் என்ன புயல்?
அவளுடன் வீட்டினுள் வாசலில் கால் வைத்தான் ரக்க்ஷத்.
“ஒரே ஒரு நிமிஷம் ரச்சு...” என்றபடி எதிரில் கமிராவோடு நின்றிருந்தாள் ஆரணி.
“மார்னிங் நீங்க வர்றப்ப இதெல்லாம் முடியல...எனக்கு இந்த ஃபோட்டோ வேணும்...”
“ஏய் ஆணி இன்னும் கல்யாணம் ஆகல...அதுக்குள்ள என்ன?..”
“எக்ஸாட்லி...அத..அதத்தான் நானும் ரிமைண்ட் செய்றேன்...இன்னும் கல்யாணம் ஆகலை...அடக்கி வாசி...அவங்க அப்பா வேற இங்கதான் இருக்காங்க....”
படகருவியில் பதிவுகளை பொதிந்தவள் திரும்பி பாராமல் ஓடினாள்.
“ஃபார்ம்க்கு வந்துட்டா....” என்றபடி வீட்டினுள் நுழைந்தவன் பக்கத்தில் வந்தவளை பார்த்தான் அவள் முகபாவம் மாறாமல் அப்படியே இருந்தது.
ஆனால் அவர்கள் பேசிக்கொள்ளும் சூழல் அங்கு இல்லை. மொத்த குடும்பமும் அவனை சூழ்ந்து கொண்டது. சொல்ல வேண்டியவற்றை, சொல்ல முடிந்தவற்றை (துவி, ஆரணி விஷயம் நீங்கலாக) சொல்லி முடித்தான். அடுத்து இரவு உணவு முடிந்து நிரல்யாவின் தந்தை விடை பெறும் வரையும் கூட நிரல்யாவிடம் பேசும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அவள் அருகிலேயே இருக்கும்படி பார்த்து கொண்டான்.
நிரல்யா அவனிடம் மட்டுமல்ல, யாரிடமும் பேசவில்லை. அதற்காக விலகிப் போனாள் என்றும் இல்லை. இவன் அருகில் அமைதி துணையாய் அவள். அவ்வளவே!
கிளம்பும் போது நிரல்யாவின் தந்தை “என்னாலான எல்லா அரேஞ்ச்மெண்டும் அப்பா செய்துகிட்டு இருக்கேன்மா....கல்யாண டிரஃஸ் மட்டும் நீயும் மாப்ளையோட போய் பார்த்து டிசைட்பண்ணு...இல்ல எங்கேஜ்மென்ட்க்கு மாதிரி இதையும் மாப்ள மட்டுமே செலக்ட் செய்யட்டும்னு நீ நினச்சனாலும் எனக்கு ஓகே...பட் ரெடி ஆகுங்க...வெட்டிங் டேட் பக்கத்தில வருது பாரு...” என்றார் மகளிடம்.
அவளுக்கு ரக்க்ஷத்திடம் உள்ள காதலை தான் அறிந்து மகிழ்வதை காட்டும்விதமாக சொன்னார் அவர்.
பதிலுக்கு சம்மதமாக தலையாட்டிய நிரல்யாவிடம் இன்னும் மிச்சமிருந்தது மௌனம்.
“என்னமா...என் கூட கிளம்புறியா...நீ...அங்க வந்தாலும் வெட்டிங் அரேஞ்ச்மெண்ட்ஃஸ் பார்க்க வசதியா இருக்கும்...” மகள் எதோ மன கஷ்டத்தில் இருக்கிறாளோ என்று தோன்றிவிட்டது அவருக்கு.
“இல்லப்பா, நான் ரக்க்ஷத்ட்ட பேசணும்” அவசரமாக அவள் சொன்ன பதிலில் அவள் தந்தை உட்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.
“ரச்சுட்ட சண்ட போட முடியலையேன்னுதான் இவ்ளவு ஃபீலிங்ஸா....” ஆரணி ஆரம்பிக்க,
அரண்யாவோ “ஹப்பா...இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்குது...எப்ப பாரு இவனை நான் மட்டும்தான் கேள்வி கேட்கனும்... இனி அந்த வேலைய நீ பார்த்துப...