(Reading time: 21 - 41 minutes)

வேறென்ன வேணும் நீ போதுமே – 22 - புவனேஸ்வரி கலைச்செல்வி

" ழகெல்லாம்  முருகனே

அருள் எல்லாம்  முருகனே

எழில் எல்லாம் முருகனே

VEVNP

தெய்வமும் முருகனே "

தன் இனிய குரலால் அந்த கார்த்திகேயனை எண்ணி உருகி பாடிக்கொண்டு இருந்தவளை ரசித்து கொண்டிருந்தான் சிவகார்த்திகேயன் . என்னதான் நித்யாவிற்கு  கடவுள் மீது நம்பிக்கை இருந்தாலும் தினமும் உருகி உருகி கும்பிடும் பழக்கம் எல்லாம் அவளுக்கு இல்லை .. ஆனால்  இன்று அவள் இப்படி மனமுருகி முருகனுக்கு நன்றி சொல்ல காரணங்கள் மூன்று.. முதல் காரணம் நம்ம கார்த்திக் , சிவா ஐ பி எஸ் என்ற ஸ்ட்ரிக்டான முகமுடியை கலைந்தாச்சு. இரண்டாவது " இசை மொட்டுகள் " அவங்க மியுசிக் பேண்ட் ஆரம்பிக்குற பணியை இருவரும் இனிதே தொடங்கிட்டாங்க .. மூன்றாவது அவளின் உயிர் தோழி மீராவுக்கும்  அவளின் செல்ல அண்ணன் கிருஷ்ணாவிற்கும் திருமணம் நடக்கபோகுது . அதற்காக அவள் குடும்பத்தோடு நம்ம கிராமத்திற்கு வர போகிறாள். ஒரு வழியாய் அந்த பழனிமலை முருகனின் மனதை குளிர்வித்தவள் பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள்... அங்கு அவளையே பார்த்துகொண்டு நின்றிருந்தான் சிவகார்த்திகேயன் ..

" என்ன கார்த்தி ?"

" ம்ம்ம் நீ நல்ல பொண்ணு மாதிரி இருந்தா எவ்வளோ அழகா இருக்க தெரியுமா நித்தி ? " என்றான் . கோபமாய் முறைத்தவள் ,

" அதென்ன நல்ல பொண்ணு மாதிரி ? நான் நல்ல பொண்ணுதான் "

" அதை நாங்க சொல்லணும் " என்றபடி அங்கு வந்தான் ஆகாஷ் ..

" ஹே என்ன ரோமியோ, உன் ஜூலியட்டை விட்டுட்டு  தனியா நிற்கிற ? நம்ப முடியலையே அண்ணி எங்கே ? " என்றாள் நித்யா ..

" அவ என்ன உன்னை மாதிரியா ? இன்னைக்கு நாம எல்லாரும் கிளம்பனும்னு  எனக்காக டிரஸ் எல்லாம் பேக் பண்ணி கொடுத்தா " என்று சொல்லிக்கொண்டே லக்கேஜை எடுத்து வந்தார் லக்ஷ்மி .. அவரை பின்தொடர்ந்து வந்த சுப்ரியாவின் முகம் ஒரு பூரண திருமண வாழ்வை பெற்ற மகிழ்வில் அழகாய் மலர்ந்திருந்தது ..

" என்ன அண்ணி , நீங்க இவ்வளோ சமத்தா இருந்து என்னை வில்லி ஆக்கிட்டிங்களே ? இனி எனக்கு பழைய சோறு கூட இந்த வீட்டுல கிடைக்காது போலயே........... ஹ்ம்ம்ம்ம் என் நேரம் ... பட் இட்ஸ் ஓகே .. இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான் கார்த்திக்கை சமையல் பண்ண கத்துக்க சொன்னேன் " என்றாள்...

 " அடிங்க , ஏண்டி நீ கால் மேல கால் போட்டு சாப்பிடுறதுக்கு  என் மாப்பிள்ளை சமைக்கணுமா ? அடி பிச்சிருவேன் "

" அம்மா போங்கம்மா உங்களுக்கு திட்டவே தெரியல .. இப்படி உதட்டோரம் சிரிப்பை மறைச்சு வெச்சிகிட்டு கோபமா பேசினா நான் எப்படி பயப்படுவேன் " என்று கண் சிமிட்டினாள்.... அதற்கு லக்ஷ்மி ஏதோ சொல்ல போக

" ஐயோ அம்மா இந்த வாயடிக்கு நீங்க பதில் கொடுத்திங்க, இன்னைக்கு புல்லா இங்கயே உட்கார்ந்து பேசிகிட்டே இருப்பா .. மணியாகுது வாங்க கிளம்பலாம் ..."  என்று அந்த பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்தான் ஆகாஷ் .. அதே நேரம் ,

" அண்ணா " என்றபடி அங்கு வந்தான் அவன் ..

" அடடே ..உனக்குத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம்டா ...போகலாமா ? " - கார்த்திக்

" கார்த்திக், இந்த பையன் ??? " என்று கேள்வியை பார்த்தனர் அனைவரும் ..

" காருல சொல்லுறேன் வாங்க " என்றான் சிவகார்த்திகேயன் .... ( அவங்க கூட வருகின்ற அந்த பையன் யாருன்னு நான் அப்பறமா சொல்றேன் )

மூன்று நாட்கள் சென்றதே தெரியவில்லை .. தங்கள் மகன், மருமகள்கள் , மகள் (பானு ) , பேரன் பேத்தி என்று அந்த வீடே விழா கோலம் பூண்டது ...

" தாத்தா ..தாத்தா ... பாட்டி ..பாட்டி " என அந்த வீடே அவர்களின் குரலால்  நிறைந்து இருந்தது .. வேலுச்சாமி அய்யா மற்றும் வள்ளியம்மாள் இருவருமே உளமார இறைவனுக்கு நன்றி நல்கினர் .. சூர்யா- அபிராமி, சந்துரு - சிவகாமி , பானு அனைவரும் பட்டணத்தில் தொலைத்த உயிரோட்டமான வாழ்வை கிராமத்தில் கண்டெடுத்து அகமகிழ்ந்தனர் .. பானு , வேலு அய்யாவின் மகளாக ஏற்கபட்ட அந்த நேரமே, அங்கிருக்கும் மக்களுக்கு அவரும் முக்கியமாகிவிட்டார் .. அவரை கண்ட அனைவரும் " சின்னம்மா" என்று மரியாதையையும்  சலுகையையும் தந்து அன்பாய் பழகினர் .. பானுவின் நிம்மதியான முகத்தை கண்டு மனம் நிறைந்தான் அர்ஜுனன் .

கிருஷ்ணா- மீரா, ரகுராம்- ஜானகி, அர்ஜுன் - சுபத்ரா மூவருமே அந்த இயற்கையோடு இணைந்த கிராமத்து வாழ்க்கையில் சொக்கித்தான் போயினர் .. இனி அடிக்கடி இங்கு வந்து தாத்தா பாட்டியின் செல்லங்களாக வலம்வர முடிவெடுத்தனர். மொத்தத்தில் அந்த ஊரே நம்ம பாண்டவர் பூமி பாணியில் சந்தோஷமாய் கலகலப்பாக இருந்தது .. இப்படித்தான் அன்றும் மொத்த குடும்பம் அவர்களது தென்னந்தோப்பை சுற்றி பார்க்க கிளம்பினர் .. அர்ஜுன் , ரகு கிருஷ்ணா மூவரும் தாத்தாவுடன் தோப்பு வேலைகளை கண்காணித்துகொண்டே பேசிக்கொண்டு இருந்தனர். அவர்களோடு வந்த பெண்கள் அனைவரும் பாட்டியுடன் சேர்ந்து தென்னை ஓலையை பின்ன கற்றுக்கொண்டு இருந்தனர் ..  சூர்யா , சந்துரு இருவரும் அங்கு கூலி வேலை பார்த்து  கொண்டு   இருந்தவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தனர் .

" ஹ்ம்ம் எப்படி தாத்தா எல்லா வேலையையும்  அயராமல் பார்க்குறிங்க ? " என்று அசந்து போனான் ரகுராம் ..

" வேலைன்னு நெனச்சா எல்லாமே கஷ்டம் தான் பா .. எல்லாத்தையுமே பிடிச்சுதான் செய்யணும் .. நமக்கு உரிமை இருக்குறது மேல தானாகவே ஆர்வம் வரும் இல்லையா ? அப்படித்தான் .. இது நம்ம சொத்துன்னு நெனச்சா பொறுப்பு தானா வரப்போகுது " என்று பதில் அளித்தார் இயல்பாய் .. தாத்தா சொன்னதில் இருபொருள் கண்டான் கிருஷ்ணன் ..

" அப்படியா தாத்தா .. நமக்கு உரிமை இருக்குறது மேல தானாகவே ஆர்வம் வந்திடுமோ " என்றான் மீராவுக்கு மட்டும் கேட்கும் குரலில் ... மூன்று நாட்களாகவே " பாட்டி .. பாட்டி " என்று சொல்லி அவனிடம் கண்ணாமூச்சி ஆடி கொண்டு இருப்பவளை ஏக்கமாய் பார்த்தான் கிருஷ்ணன்.. மீராவோ பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நிறைவான குடும்ப வாழ்கை கிடைத்த சந்தோஷத்தில் லயித்திருந்தாள்... இப்போதும்

" ஜானு கூப்பிட்டியா ? " என்றபடி அவனிடம் இருந்து தப்பித்து சென்றாள்....

 " நீலாம்பரி ராட்சசி உன்னை என்ன பண்ணுறேன் பாரு " என்று பொருமினான் ..

அனைவரையும் கண்காணித்து கொண்டே வந்த தாத்தா கிருஷ்ணனின் பார்வையையும் கண்டுகொண்டார் ... ஒரு மர்ம சிரிப்புடன் அவர் அவனை பார்க்க கிருஷ்ணனும் தாத்தாவை பார்த்தான் .. " இங்கே வா " என்று செய்கையால் அழைத்தவரின் அருகில் சென்றான் கிருஷ்ணன் ..

" என்ன பேரனே? உச்சிவெயில்ல ரொம்ப வாடிபோயிட்டியே ? " என்றார்... முதலில் கொஞ்சம் குழம்பித்தான் போனான் கிருஷ்ணன் .. என்னத்தான் வெயிலாக இருந்தாலும் அந்த தென்னதோப்பு நிழலும்  மிதமான காற்றும் நிச்சயம் தாத்தா சொன்ன அளவிற்கு வெப்பம் தரவில்லை ..பிறகுதான் தாத்தா மீராவை ஜாடை காட்ட லேசாய் அசடு வழிந்தான் கிருஷ்ணன் ..

" இருந்தாலும் தாத்தா  நீங்க ரொம்ப டேஞ்சரஸ் மென் ... எப்படி கண்டுபிடிச்சுட்டிங்க  ? "

" ஹாஹா நான் கிராமத்தான் பா .... நாலாபக்கமும் கண்ணு விழிப்பாதான் இருக்கும் "அவர்களின் ஜோதியில் இணைந்து கொண்டனர் அர்ஜுனனும் ரகுராமும் ..

" எனக்கு இங்க எல்லாம் பிடிச்சிருக்கு தாத்தா .... ஆனா என்ன, பேச வேண்டியவங்ககிட்டதான் நேரடியா பேசமுடியல " என்ற ரகுவின் பார்வை ஜானகியின் மீது மொய்த்தது ..

" ஏன் தாத்தா நீங்க பாட்டியை பார்த்து பாட்டுலாம் பாடி  பேச மாட்டிங்களா ? " என்று அதிமுக்கியமான கேள்வியை கேட்டான் கிருஷ்ணன் ....

" யாரை பார்த்து இந்த கேள்வியை கேட்ட பேரனே ? " என்ற தாத்தா மீசையை முறுக்கி கொண்டார் ..

" நீங்களாச்சும் யாரோ எழுதுன சினிமா பாட்டை நோகாம  பாடுவிங்க .. ஆனா நாங்கல்லாம் பாட்டு பாடியே சொல்ல வர்ற செய்தியை சொல்லிடுவோம் "

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.