(Reading time: 21 - 41 minutes)

 

 

வங்க அடுத்த சரணம் பாடி கொஞ்சி  கொண்டிருக்கும்போது  நம்ம சுபியை போய் பார்ப்போம் வாங்க ...

" சுபா " -மீரா

" அண்ணி ... "

" என்ன சோகமா உட்கார்ந்து இருக்க ? "

" இல்ல அண்ணி ஒண்ணுமில்ல"

" பொய் "

" ..."

" அண்ணாவை தேடுறியா ? "

" ம்ம்ம் .... இன்னைக்கு புல்லா அவர்கிட்ட பேசவே முடில்ல அண்ணி ... இப்போ காணோம் "

" நைட் ஆச்சு எங்க போயிருப்பாங்க.? கீழதான் இருப்பாங்க .. என் செல்லம் இப்படி மாடியில வந்து உட்கார்ந்து இருந்த என் அண்ணாவை எப்படி பார்ப்பிங்க ? "

" அட போங்க அண்ணி ..ஹீரோன்னா சும்மா அசால்ட்டா பறந்து வந்து ஹீரோயினை அள்ளிகிட்டு போகணும் .. அதுக்குதான் கண்ணாமூச்சி ஆடலாம்னு இங்க வந்தேன் .. அவர் எனக்கு மேல இருக்காரு "

" ஹா ஹா .. அண்ணாவுக்கு ஏற்ற ஜோடித்தான் நீ ... நான் மொட்டை மாடியில் இருக்குற ஊஞ்சலில் கொஞ்ச நேரம் ஆட போறேன் .. நீயும் வாயேன் " என்றாள் மீரா....

" ஹையா ஜாலி வாங்க அண்ணி போகலாம் " என்றாள் இளையவள்.  ஒருவரும் மொட்டைமாடிக்கு செல்ல அந்த படியேறி கொண்டு இருந்தனர் .. முன்னால் மீரா செல்ல அவளை பின்தொடர்ந்து கொண்டிருந்தாள்  சுபத்ரா .. அடுத்த படியில் பாதம் வைத்தவள் இடையோடு சேர்த்தணைத்து தூக்கி பக்கத்து அறைக்கு  வந்தது சாட்சாத் நம்ம அர்ஜுனனே தான் .. "

மீராவோ " சுபி???"  என்று குரல் கொடுக்க ,

" அண்ணி நீங்க போங்க நான் அஞ்சு நிமிஷத்தில் வரேன் " என்று கூறினாள் சுபத்ரா ... " எங்க போனா ? நல்ல பொண்ணு போ " என்று தோளை குலுக்கி கொண்ட மீரா , மெய் மறந்து ஊஞ்சலாடி கொண்டிருந்தாள்..

" ஹே மை டியர் யுவராஜரே " என்று சிரித்த சுபத்ரா மாலையாய் அவன் தோளில் கை கோர்த்து எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்...

" குட் .. ஹீரோன்னா  இப்படித்தான் இருக்கணும் " என்றவள் அவனின் மறுகன்னத்திலும் முத்தமிட்டு சிரித்தாள்...

" ஹே இளவரசி... நான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு பார்த்தா நீ எனக்கு சர்ப்ரைஸ் தர்றியே " என்றான் உல்லாசமாய் .....

" ஹா ஹா .. ஹெலோ மாப்பிளை நான் யாரு தெரியுமா ?அர்ஜுனனின் வருங்கால மனைவி .. நீங்க நான் மீரா அண்ணிகிட்ட பேசிட்டு இருக்கும்போது தூணின் மறைவில் நின்னதை பார்த்துட்டேனே" என்று கண்ணடித்தாள்...

" அடிப்பாவி "

" ம்ம்ம்ம் ...ஹா ஹா .. அதுனாலத்தான் ஹீரோன்னா சும்மா அசால்ட்டா பறந்து வந்து ஹீரோயினை அள்ளிகிட்டு போகணும் நு சொன்னேனே "

" அசத்துரடீ "

" ம்ம்ம்ம் எல்லாம் உங்களோடு சேர்ந்துத்தான் " என்று இல்லாத கோளரை தூக்கி விட்டு கொண்டவளை அலேக்காக தூக்கி கொண்டான் அர்ஜுனன் ..

" நாம இப்போ எங்க போறோம் அஜ்ஜு " என்றவளுக்கு பதில் சொல்லாமல் படி இறங்கி பின்பக்கமாக இருந்த கேணி அருகில் அவளை அமர வைத்தான் .. சில்லென்ற காற்று வீச, அங்கு தூரத்தில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் தேவதையாய் மிளிர்ந்தாள் சுபத்ரா ... அர்ஜுனன் அவளை ரசிக்க, அவளோ அவன் முகத்தையே ஆர்வமாய் பார்த்து கொண்டு இருந்தான் ..

" ஹே கண்மணி , இப்படி கேணி ஓரமா உட்கார வெச்சுருக்கேன் உனக்கு பயம்மா இல்லையா ? "

" ச்ச ச்ச நோ வே ... என் அர்ஜுன் என்னோடு இருக்கும்போது நான் ஏன் பயப்படும் " என்று உணர்ந்து சொன்னாள் சுபத்ரா ... சிரித்து கொண்டே அவளை தூக்கி கொண்டவன் அங்கு இருந்த பெரிய சலவை கல் மீது சாய்ந்து அமர்ந்து அவளை மடி மீது அமர்த்தி கொண்டான் .. அருகில் இருந்த சிறிய பாத்திரத்தை திறந்தான் ...

" ஹே என்ன இது ? "

" நீயா பாரேன் "

" ஹை மருதாணி "

" ம்ம்ம் ஆமா .. உனக்கு பிடிக்கும்னு பாட்டியை தாஜா பண்ணி ரெடி பண்ணேன் .. "

" பாட்டி எனக்கு மட்டும் அரைச்சு தந்திருக்க மாட்டாங்களே "

" அம்மாடியோவ் ... என்கூட சேர்ந்து ரொம்ப ஸ்மார்டா தான் கேஸ் பண்றிங்க இளவரசி ... பட் பாட்டியை தாஜா பண்ணது நானே உனக்காக இந்த மருதாணியை அரைக்கணும்னு தான் "

" அஜ்ஜு "

" என்னடா ? "

" நிஜம்மாவா ? "

" என்னம்மா ? "

" நிஜம்மா எனக்காக நீங்களே  அரைச்சிங்களா?"

" ம்ம் ஆமா "

" ..."

" ஹே இளவரசி .. இதுக்கு ஏன் உன் முகம் சுண்டைக்காய் மாதிரி சுருங்குது ? என் பொண்டாட்டிக்கு நான் செய்யுறேன் .. அவ்ளோதான் .. சரியா ? ரொம்ப பீல் பண்ணாமல் கையை நீட்டு " என்றவன் அவளுக்கு மருதாணி போட்டுவிட்டான் .. இரண்டு கைகளிலும் மருதாணி இருக்க

" போதும் அஜ்ஜு இறக்கி விடுங்க .. உங்களுக்கு மடி வலிக்கும்ல "

என்றாள் சுபத்ரா...

" ஹா ஹா இவ்வளவு நேரம் ... நல்லா சலுகையை உட்கார்ந்துகிட்டு இப்போதான் எனக்கு வலிக்கும்னு தெரியுதா இளவரசி? " என்று சன்னமாய் கேட்டு சிரித்தான் அர்ஜுனன் .. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை .. அவளின் கைகளில் அழகாய் மருதாணி வரைந்தவன், பாவாடை தாவணியில் இருந்தவளின் இடையில் தன் விரல்களால்  கோலமிட தொடங்கினான் .. அவனிடமிருந்து தப்பிக்கவே அவளின் இளவரசி அப்படி சொல்ல, அவனும் அவளை விடுவித்தான் ..

" ஹே மிஸ்டர் மைனர் என்ன பார்குற ?

என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற?

காற்று காலில் கொலுசு கட்டி அனுப்புற

காதலை கை குலுக்கி இழுக்குற " என்று பாடினாள் சுபத்ரா.,..

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.