(Reading time: 21 - 41 minutes)

 

"..."

" ஐயோ அஜ்ஜு ..என்ன இப்படி விழிக்கிறிங்க ? இது புதுப்பாட்டு .. காவியத்தலைவன் படத்துக்கு நம்ம ரஹ்மான் சார் போட்ட பாட்டு " என்று சிரித்தாள்.

" என்னை உனக்கு ரசிகனாக்க பார்க்குறேன்

உன் அழகை இன்னும் நூறு மடங்கு கூட்டுறேன்

கண்கள் பட்டு போகுமென்று நினைக்கிறேன்

நெஞ்சிலே தங்கி கொண்டு சிரிக்கிறேன் " என்று அந்த பாடலை தொடர்ந்து பாடினான் அர்ஜுனன்..

" அர்ஜுன் ...உங்களுக்கும் இந்த பாட்டு பிடிக்குமா ? "

" உனக்கு பிடிச்ச எல்லாமே  எனக்கும் பிடிக்கும் இளவரசி " என்றவன் தொடர்ந்து பாடினான்.. அங்கே ஒரு காதல் நாடகம் அழகாய் நடந்தேறியது ..

ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது ஆடை ஒட்டி பார்க்குது

பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது வாய் பேச வாய் தாயேன்

இமைகளை திறக்குதே கனவுகள்

இதழ்களை நனைகுதே இரவுகள்

மலர்களை உடைக்குதே பனித்துகள்

நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்

ங்கு ஊஞ்சலில் உல்லாசமாய் ஆடிக் கொண்டிருந்தாள் மீரா .. வளர்பிறை நிலவும் அமுதை பொழிய, அவளின் இதயம் மெல்லிய  காற்றின் ஸ்பரிசத்தில் சிறகடித்தது .. ஏனோ அவளுக்கு நித்யாவை பார்க்க வேண்டும் என்று தோன்றியது .. அவளின் சீண்டலும், சேஷ்டையையும் எண்ணி பார்த்து சிரித்து கொண்டாள்.... அவளின் காதல் மனமோ கிருஷ்ணனின் முகத்தை அகக்கண்ணில் நிறுத்தியது ..

" திருட்டு பையா, தனியா இருக்கும்போது நினைவில் கூட அத்துமீறி வர்றதே வேலையா போச்சு " என்று அவனை செல்லம் கொஞ்சினாள்...

தனிமையிலும் கூட அவனின் நினைவுகள் துணை இருப்பதை எண்ணியவளின் முகத்தில் புன்னகை பெரிதானது. அதே காதலுடன் மெல்லிய குரலில் பாடினாள் மீரா ..

யாருமில்லா தனியரங்கில் ஒரு குரல் போலே நீ எனக்குள்ளே

எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் இப்படிக்கு உன் இதயம்

என்ன சொல்வேன் இதயத்திடம் உன்னை தினமும் தேடும்

என் பேச்சை கேட்காமல் உன்னைத் தேடும்

அவள் எண்ணங்கள் மெல்ல பின்னோக்கி சென்றன.. இதேபோல் ஒரு நாள் ஊட்டியில் அவனும் அவளும் ஊஞ்சலில் அமர்ந்த நினைவுகள் அவளை ஆக்கிரமித்தது .. அவன் சட்டென அவளருகில் அமர்ந்து அவளது ஹெட்போனில் பாடல் கேட்டதும், தன் மனதை வெளிப்படுத்தியதும், முதல் முத்தத்தை முத்திரையாய் பதித்ததும் கண்ணில் நின்றது ..

இசையால் ஒரு உலகம் அதில் நீ நான் மட்டும் இருப்போம்

கனவால் ஒரு இல்லம் அதில் நாம் தான் என்றும் நிஜமாய்

அது ஒரு ஏகாந்த காலம் உன் மடி சாய்ந்த காலம்

இதழ்கள் எனும் படி வழியே இதயத்துக்குள் அது இறங்கியது

காதல் காதல் காதல் காதல்

அதே நேரம் அங்கு வந்து கை கட்டி நின்றான் கிருஷ்ணன் .. கண்களில் மட்டும் போலியாய் கோபம் ...

" கிருஷ்ணா "

" ..."

"கண்ணா ..... "

" ம்ம்ம்ம் "

" கோபமா ? "

" ம்ம்ம்ம்ம்"

" என் மேல என்ன கோபம் ? "

" உனக்கு தெரியாதா ? "

" நான் சரியா பேசலைன்னு கோவம் வந்துடுச்சா ? "

" பின்ன கோபம்  வரதா ? "

" பக்கத்துல நின்னு பேசுனாதான் பேச்சா ? நான் மனசுக்குள்ள உங்க கிட்ட தானே பேசிகிட்டே இருக்கேன் "

அவளின் சாமர்த்தியமான பதிலில் அவனுக்கு சிரிப்பு வந்தது .. இருந்தும் அதை மறைத்து கொண்டான் .. அவளோ அவள் பாடிய அதே பாடலில் அவனுக்கு பதில் தந்தாள்.

பேச மொழி தேவையில்லை பார்த்துக்கொண்டால் போதுமே

தனிப்பறவை ஆகலாமா மணிக்குயில் நானுமே

சிற்பம் போல செய்து என்னை சேமித்தவன் நீயே நீயே

மீண்டும் எனை கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா சொல்

" கல்லாய் செய்ய யோசிப்பதும் ஏனடா ? சொல் " என அவள் உருகி பாடவும் அவளை அனைத்து கொண்டு முகமெங்கும் முத்தமிட்டான் கிருஷ்ணன் ..

" கண்ணா "

" எனக்கு தெரில கண்ணம்மா ... நீ என் கண்முன் இருந்தாலுமே என்னை விட்டு நீ தள்ளி நிற்குற ஒவ்வொரு அடியும்  எனக்கு கடினமா இருக்கு " என்றான்

" ஷ்ஷ்ஷ்ஷ் என்ன கண்ணா இது குழந்தை மாதிரி ? "

" காதலிச்சாலே குழந்தையாகிடுவோம் ... உனக்கது தெரியாதா ? "

" அதெப்படி ? "

" அது ஒரு பீல் கண்ணம்மா .. நாம குழந்தையா இருக்கும்போது எல்லாருடைய பார்வையும் நம்ம மேலத்தான் இருக்கும் .. நம்மளை அணுஅணுவா ரசிக்க நம்மளை சுத்தி பல பேரு இருப்பாங்க ... குழந்தையின் எச்சில் முத்தம் கூட பெற்றோருக்கு மிக பெரிய ஆனந்தத்தை தரும் .. இந்த பீல் எல்லாம் வளர்ந்த பிறகு நமக்கு கிடைக்காது .. கிடைச்சா அது காதலில் மட்டும்தான் "

" ம்ம்ம் "

" என் ஒவ்வொரு செய்கையும் ரசிக்கிற காதலி, என் தப்பையும் ரசிக்கிற மனைவி என்னை மறுபடியும் குழந்தையா மாத்திட்டா ? " என்றபடி அவளை தன்னோடு இறுக்கி கொண்டான் ...

" மெல்ல நிமிர்ந்தவள் ... மனைவி யாரு ? காதலி யாரு கிருஷ்ணா ? " என்று குறும்பாய் வினைவினான் ..

" அதுவா " என்றவன் அவள் இடையில் கரம் வைக்க அவன் கையில் சட்டென அடித்து "பிச்சு"என்று மிரட்டினாள் மீரா ..

" ஹா ஹா பார்த்தியா ? இவ்வளவு நேரம் என்னை கட்டி பிடிச்சு நின்னது காதலி .. இப்போ அடிச்சு மிரட்டுறது மனைவி" என்று விளக்கம் தந்தான் ...

" வெவ்வெவ்வெவ்வெவெ "

" ஹா ஹா .. உனக்கொரு சர்ப்ரைஸ் ஒன் தி வே ல வந்துகிட்டே இருக்கு" என்று அவன் சொல்லவும் ஹாரன் சத்தம் கேட்டது ..

" இதோ வந்தாச்சே " என்றவன் அவளை அழைத்து செல்ல ,  இருவரும் மாடியில் இருந்து கீழே பார்க்க, காரில் இருந்து இறங்கி வந்தனர் லக்ஷ்மி, ஆகாஷ் - சுப்ரியா, நித்யா - சிவகார்த்திகேயன்...அவர்களுடன் அந்த சிறுவன் .. ! 

உடல்நல குறைவால் என்னால் நீளமான பதிவு தர முடியவில்லை நண்பர்களே .. இந்த குட்டி பாப்பாவை மன்னிச்சு விட்டுடுங்க .. அடுத்த எபிசொட் கம்மாங்கரையில் சந்திப்போம்

தொடரும்

Episode # 21

Episode # 23

{kunena_discuss:734}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.