(Reading time: 21 - 41 minutes)

 

வள் பின் நின்றுருந்தவனோ அந்த அறையின் கதவை மூட கிட்ட தட்ட அலற வந்தளின் வாயை  ஒரு கையால் பொத்தி

" ஷ்ஷ்ஷ்ஷ் " என்றான் .. மெல்ல அவளை விடுவித்தவன் அவளின் கூந்தல் கற்றை ஒதுக்கிவிட்டு  அவள் கண்களுக்குள் பார்த்தான் ..

" ராம் "

" ம்ம்ம்ம்ம் "

" கதவை திறங்க ? "

" முடிஞ்சா திறந்துக்கோ " என்றவன் கதவு மீது நன்றாக  சாய்ந்து நின்றான் ...

" யாராச்சும் வந்திட போறாங்க ராம் "

" வரட்டுமே ... எப்படியும் கல்யாணம் பண்ணிக்கத் தானே வந்தோம்.. இதை பார்த்துட்டு சீக்கிரமா கல்யாணத்தை நடத்தி வெச்சிடுவாங்க"

"  அடடே .. இன்னைக்கு ஏன் இப்படி வம்பு பண்ணுறிங்க நீங்க ? நகருங்க ப்ளீஸ் " என்றாள் அழும் குரலில் ...

" மாட்டேன் மாட்டேன் .. சான்ஸ் ஏ இல்ல .... "

" பச்ச்... சரி சொல்லுங்க நான் இப்போ என்ன பண்ணனும் ? "

" ஹான் .. இப்போ கேட்டியே இது ஒரு நல்ல கேள்வி ... அப்படியே கண்ணை மூடி அங்க கட்டிலில் உட்காருவியாம் "

" ராம் "

" அடியே நான் உன் ராம் டீ .. இராவணன் இல்ல ... சும்மா ஏதோ வில்லன் கையில மாட்டின ஹீரோயின் மாதிரி சீன் போடாத " என்றான் லேசான கோவத்துடன் ..

" அய்யே .. ரொம்பத்தான் கோபம் " என்று அவனை  ரசித்தவள் அவன் சொன்னது போல கட்டிலில் அமர்ந்து விழிகளில் மூடினாள்...

சிறிது நேரத்தில் ரகுராமின் விரல்கள் அவளது செவிமடலை தொடுவது  போல இருக்க கண் விழிக்க போனாள் ஜானகி ..

" ஷ்ஷ்ஷ்ஷ்....கண்ணை திறக்காதே " என்றவன் அந்த ஹெட்போனில் ஒரு பாதி அவளுக்கு போட்டுவிட்டு இன்னொரு பாதியை தானும் போட்டுகொண்டு 

" கண்ணை திற " என்றான் .. அவனின் கைகளில் கண்ணாடி வளையல்கள் இருந்தன..

" ராம் "

" ம்ம்ம்ம் .... எனக்கு கண்ணாடி  வளையல் பிடிக்கும்னு  எப்படி தெரியும்?"

" மக்கு அன்னைக்கு நீதானே சுஜாதாவுக்கு வளையல் வாங்கும்போது சொன்ன ? "

" ஆமால"

" ஆமாவா? இல்லையா ? "

" ஹா ஹா ஆமாதான் .,... நான் கொஞ்ச நேரத்துல பயந்தே போயிட்டேன் "

" என்ன உன் ஹீரோ கொஞ்ச நேரத்துல எஸ் ஜே சூர்யா மாதிரி மாறிட்டேன்னு நெனைச்சியா ? "

" ஹீ ஹீ " என்று அசடு வழிந்தாள் ஜானகி ...

" நாம சிங்களா இருக்குற நாட்கள் இது ஜானகி ... இதை நான் அப்பபோ உனக்கு குட்டி குட்டி சர்ப்ரைஸ் கொடுத்து கொண்டாடனும்னு நெனச்சேன் .. அதுமட்டும் இல்ல "

" ... "

" திருமண வாழ்க்கைக்கும், காதல் வாழ்க்கைக்கும் வித்தியாசம் இருக்கு "

" காதலிக்கும்போது நமக்குள்ள ஒருத்தரை ஒருத்தர் சந்தோஷமா வெச்சுக்கணும்னு கற்பனையும்  கனவும்தான் இருக்கும்.. அதுல முழுக்க முழுக்க நமது  சந்தோஷமான பகுதிகளை மட்டும்  தான் பகிர்ந்துக்குவோம் .. ஆனா  "

" ஆனா ? "

" ஆனா  கல்யாணம் முடிஞ்சு வர்ற வாழ்கையில் கனவோடு கடமையும் சேரும் .. நம்ம ரெண்டு பேருமே முழுக்க முழுக்க நமது குணத்தை காட்டுவோம் .. அதுல சந்தோசம்  இருக்கலாம், சோகம் இருக்கலாம், கோபம் இருக்கலாம் .. அது நமக்கு புதுசாகவும் இருக்கலாம் .. அதுனாலத்தான் எல்லாருமே கல்யாணத்துக்கு முன்னாடி உள்ள லைப் தான் ரொம்ப அழகுன்னு சொல்லுவாங்க ..என்னை கேட்டா நான் இல்லைன்னு சொல்லுவேன் "

"...."

" சந்தோஷமான சூழ்நிலையில் சந்தோஷமா இருக்குறது பெரிய விஷயமே இல்லை .. சோகத்திலோ அல்லது கஷ்டத்திலோ  அதை சேர்ந்து எதிர்கொண்டு சந்தோஷமா வாழுறதுதான் உண்மையிலேயே அழகான வாழ்க்கை .."

" அதுனால ? "

" அதுனால, வருங்கலத்துல நம்ம வாழ்க்கை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாது " என்றவன் அவளின் முகத்தை கைகளில் ஏந்தி அவள் விழிகளுடன் விழி கலந்தான் ...

" ஆனா நான் உனக்கு ப்ராமிஸ் பண்ணுறேன் .. லைப் ல எந்த பிரச்சனையை வந்தாலும் அதை நீ தனியா பேஸ் பண்ண மாட்ட .. நான் உன்னோடு எப்பவும் இருப்பேன் ... உன்னோடு வாழப்போற ஒவ்வொரு நாட்களையும் இப்போ இருந்தே நான் கனவு காண ஆரம்பிச்சுட்டேன் ஜானு .. அந்த கனவை இப்போ உன்னோடு பகிர்ந்து கொள்ள விரும்புறேன் " என்று சொன்னான் ரகுராம் ..

அதன் பிறகு தனது சின்ன சின்ன ஆசைகளை சொல்லிக்கொண்டே அவளின் எண்ணங்களையும்  கேட்டு கொண்டான் .. பேச்சின் ஊடே அவளின் தளிர் கரம் பற்றி ஒவ்வொரு வளையலாக அணிவித்து அழகு பார்த்தான் ..

" ஹே மறந்துட்டேன் பாரு .. நமக்காக தேடி தேடி ஒரு பாட்டு எடுத்து வெச்சேன் " என்றவன் அந்த பாடலை ஒளிபரப்ப இருவரும் அதை ஹெட்போனில் கேட்டனர் ..

ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி

பொன் மான்விழி தேடி

மேடை கட்டி மேளம் தட்டி

பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

இருவரின் கண்ணிலும் அவர்களின் மணக்கோலம் கற்பனையில் தோன்ற, ஜானகி ரகுராமை பார்த்தாள்..

குங்கும தேரில் நான் தேடிய தேவன்

சீதா புகழ் ராமன்

தாளம் தொட்டு ராகம் தொட்டு

பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

ரகுராம விடவே மாட்டேன் என்பது போல அவளின் விழிகளை பார்த்து கொண்டே இருந்தான் .. மெல்ல அவள் கண் இமைக்க, " என்ன ? " என்பது போல புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான் . எதுவும் சொல்லாமல் அவன் தோளில் சாய்ந்தாள் ஜானகி.

காதல் நெஞ்சில் மேல தாளம்

காதல் நெஞ்சில் மேல தாளம்

காலை வேளை பாடும் பூபாளம்

மன்னா இனி உன் தோளிலே

படரும் கோடி நானே

பருவ பூ நானே

பூ மஞ்சம் உன் மேனி

எந்நாளில் அரங்கேறுமோ ?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.