(Reading time: 19 - 38 minutes)

 

வீட்டில மத்த எல்லாரும் அவனுக்கு  ‘ஜிங் சா’... போடுவாங்க...ஆனாலும் உனக்கு நான் இருக்கேன்...நீ கவலையே படாதே... “ என்றபடி இவள் தோளின் மீது கை போட்டாள்.

“அதெல்லாம் கிடையாது என் ஓட்டும் எப்பவும் நிருக்கு தான்.. “அடுத்த தோளை ஆரணி அணைத்துக் கொண்டாள்.

“இப்படி சொல்லி அவளை பிடிச்சு வச்சுகிட்டீங்கன்னா,  அவ எப்பபோய் அவனை நல்லதா நாலு அடி   போட ..” என்றது அக்க்ஷத்.

“யூ டூ” என்ற ரக்க்ஷத்தின் வார்த்தைகளை முந்தி கொண்டு வந்தது நிரல்யாவின் சத்தம்.

“ஐயோ!...அப்படில்லாம் இல்ல அத்தான், ரக்க்ஷத்த....” என ஆரம்பித்தவள் என்ன சொல்லவென ஒரு கணம் தயங்கிவிட்டு “அப்படில்லாம் செய்யமாட்டேன்...” என விழித்தாள்.

ரக்க்ஷத்தோ தன் வருங்கால மாமனாரை தேற்றினான் “அங்கிள் அவள பத்தி நீங்கி கவல படாதீங்க.. என்ன அடிக்கிறதுக்கு டீடெய்ல்ஸோட அவளுக்கு பெர்மிஷன் கொடுத்திருக்கேன்  எங்கேஜ்மென்டுக்கு மறுநாளே நாங்க இதபத்தி பேசி முடிச்சுட்டோம்...நீங்க கவலை படனும்னா கூட என்னை பத்திதான் கவல படனும்...”

 அவன் குறிப்பிடும் அந்த பேச்சும், ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற அவன் பாட்டும் ஞாபகம் வர பழைய நினைவை ரசித்த அவள் முகத்தில் புன்னகை உதயம்.

“பை தி வே கோயம்புத்தூரில் ஒரு வேலை இருக்குது...நல்ல விஷயம்தான்...ஒரு கல்யாணம்...அதுக்கு நிரல் எங்க கூட இருந்தா நல்லா இருக்கும்..அது முடிஞ்சதும் அவ அங்க உங்க வீட்டுக்கு வந்திடுவா...இன்னும் 2 அவர்ஸ்ல ஆருவோட நாங்க கோயம்புத்தூர் கிளம்பிடுவோம்...”

மொத்த சூழலையும் பார்த்திருந்த தந்தைக்கு மனம் குளிர்ந்து போனது. பின்னே மொத்த குடும்பமும் தன் மகளை இப்படி தாங்கினால். அவர் விடை பெற்றார்.

வர் கார் கிளம்பியதும் “நீ வா, என்ற ரக்க்ஷத் அவளை அழைத்தபடி நடந்தான், அவள் தொடர்ந்தாள். வீட்டின் ஒவ்வொரு அறையாக அவளிடம் காட்டினான். சில அறைகளுக்குள் சென்று வந்தனர். அக்க்ஷத் அறை, ஆரணி அறை போன்றவைகளை வாசலிலிருந்து சுட்டி காட்டியதோடு சரி, உள்ளே செல்லவில்லை.

அடுத்து அவனது அறைக்குள் அழைத்து சென்றான்  “இதுதான் மேரேஜ்க்கு அப்புறம் நாம இங்க வர்றப்பல்லாம் தங்க போற ரூம்.....நம்ம ரூம்.”

உள்ளே கால் வைக்கும் போதே எல்லாவற்றையும் மீறி ஒரு வித உணர்ச்சி ப்ராவகம் அவளை சூழ்ந்தது. என் இடம்.

ரக்க்ஷத் தொடர்ந்தான் “இந்த வீடு என் பேரண்ட்ஸ் கட்டியது...நான் பிறந்து வளர்ந்த வீடு....என் வீடு.....இங்க எனக்கு எல்லா உரிமையும் உண்டு...ஆனாலும் அக்க்ஷத் ரூமுக்கு,  அவங்க அனுமதி இல்லாம உன்னைய நான் இப்ப கூட்டிட்டு போக முடியாது..... ஆனா எப்பவும் என் ரூமுக்குள்ள நீ வரலாம்...

அது மாதிரிதான் லயு  நம்ம லைஃபும்....நமக்கு  இடையில நம்ம மட்டும் சம்பந்தபட்ட விஷயத்தில எந்த ரகசியமும் எப்பவும் வராது. ஆனா அடுத்தவங்க சம்பந்தபட்ட விஷயங்கள்..அது என்னதான் நம்மளோடதா இருந்தாலும், அவங்க இஷ்டம் இல்லாம ஷேர் பண்ணிக்க முடியாது...ஆரு விஷயத்தை நீ சொல்லலைனு எனக்கு வருத்தம் கிடையாது...”

அவ்வளவுதான் மடை திறந்த வெள்ளமென நடந்த அனைத்தையும் கொட்டி தீர்த்தாள் நிரல்யா. ஜேசனை கர்பிணி பெண்ணாக காண்பித்து ஜெஷுரன் அவளை சந்தித்ததிலிருந்து இந்த நிமிஷம் வரை நடந்த அத்தனையும் பேசி முடித்தாள்.

“சாரிப்பா...எனக்கு வேற எப்படி ஹண்டில் பண்ணனு தெரியலை....”

“இட்ஸ் ஓகே....எல்லாம் முடிஞ்சுட்டு....என்ன காரணம்னு கேட்காதீங்கன்னு சொல்லிட்டு ஜெஷுரோட உள்ள ஃப்ரெண்ஷிப்ப கட் பண்ணுங்கனு நீ சொன்னப்ப நான் என்ன காரணம்னு துருவலைங்கிறத யோசிச்சு...அதே மாதிரி காரணம் கேட்காதீங்கன்னு சொல்லி என்னை துணைக்கு கூப்பிடுருக்கலாம்...

பைதி வே...இனிமே யார்ட்டயும் சொல்லமாட்டேன்னு வார்த்தை குடுக்காதே...ஆஃப்டர் மேரஜ் நானும் நீயும் ஒன்னு. அதனால ரக்க்ஷத் தவிர யார்ட்டயும் சொல்ல மாட்டேன்னு வேணும்னா....சொல்லிகோ.....அடுத்தபடியா எந்த காரணத்தை கொண்டும் யாருக்காகவும் இவ்ளவு ரிஃஸ்க் ஒருநாளும் எடுக்காதே....இது என் ஸஜசன் இல்ல....”

அவன் பேசி முடிக்கும் போது பேச்சற்று பார்த்திருந்தாள் நிரல்யா. இதை அவள் யோசிக்காமல் போனாளே!

தன் பின்பு இன்று ரக்க்ஷத் அருணை சந்தித்த நிகழ்வை விலாவரியாக பேசி முடித்தார்கள்.

“அப்ப துவி, ஆரு விஷயம் பத்தின கன்ஃபஷன் வீடியோ ரெக்கார்டாகி போலீஃஸ்ட்ட இருக்குதா....?”

“இல்ல....  தேவையில்லாம இது நிறைய பேர் கைல கிடைக்க வேண்டாம்னு...அருண் ஆட்களுக்கு போன வீடியோ கவரேஜை பெர்சனல் விஷயம் பேசுறப்ப கட் பண்ணிட்டேன்.....அதோட கன்ட்ரோல் என்கைலதான் இருந்தது....ஆரு விஷயத்துக்காகன்னு  இல்ல...துவி குழந்தைங்களுக்கு விஷயம் புரிஞ்சுக்கிற வயசு வர வரைக்கும் இந்த விஷயம் அவங்கட்ட போய் சேராம இருக்கட்டுமேன்னுதான்...மத்தபடி என் பெர்சனல் ரெகார்டர்ல ரெக்கார்ட் செய்திருக்கேன்...கேஸ்ல தேவை படுறப்ப குடுத்துகிடலாம்....”

எதோ நெருடியது. தன் தங்கை விஷயம் தெரிந்த உடன் அதை பத்தி கொஞ்சமும் அதிராமல் இவனால் எப்படி இப்படி அனைத்தையும் யோசித்து? இவள் நினைவறிந்தாற் போல அருகிலிருந்தவன் பேசினான்.

“ஆரு விஷயத்த நான் நீ ஜெஷுரனை பத்தி கம்ளயின்ட் செய்த அப்பவே அல்மோஸ்ட் கெஸ் செய்துட்டேன்....ஏன்னா அவ துவி போனதும் கொஞ்ச நாள் ரொம்ப டல்லாயிருந்ததயும் நீ சொன்னதையும் வச்சு ஜெஷுர் ஏதாவது செய்திருக்கனும்னு யோசிச்சேன்னு சொன்னேன்ல...அப்படி ஜெஷுரா  இல்லனா கூட விஷயம்....இது மாதிரி ஏதாவதா இருக்கும்னு தோணிச்சு...ஏன்னா நீ அப்ப ஆரணியதான் பார்த்துட்டு நேர என்னை பார்க்க வந்த....காரணம் கேட்க கூடாதுன்னு சொன்ன....ஜெஷுர வேற இந்த விஷயமா...அக்யுஸ் செய்த...இப்படி இருக்குமோன்னு தோணியதும் ஒரு ஃப்யூ செகண்ட்ஸ் ரொம்ப கஷ்டமா இருந்தது....நடந்து முடிஞ்சதுக்காக வருத்தபட்டு என்ன செய்யனு நீ கேட்டல்ல.... அப்பவே அடுத்து என்ன செய்யன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்....நீயா என்ட்ட அதைபத்தி பேசவிரும்பலைனு தெரிஞ்சதும் உன்னை துருவ எனக்கும் விருப்பம் இல்ல....பைதிவே அருணை பார்க்கபோறப்ப  முழுசா ப்ரிப்பர்டாதான் போனேன்...”

அன்று அவன் தவித்த அந்த வேதனை ஞாபகம் வந்தது அவளுக்கு. ஆறுதலாக அவனிடம் பேசிவிட்டு ஆரணியிடம் நடந்ததை விளக்கமாக சொல்லிவிட்டு, அவளையும் அழைத்துக்கொண்டு விமான நிலையம் நோக்கி புறப்பட்டனர் ரக்க்ஷத்தும் நிரல்யாவும்.

முழுதாக எல்லாவற்றையும் ரக்க்ஷத்திடம் பேசிவிட்டதாக தோன்றினால் கூட, எதையுமே பேசாதது போல் ஒரு அழுத்தம் நிரல்யாவின் மனதினுள். புயல் மண்டலம். அவள் பேச விரும்பும் எதையோ பேசவில்லை. எதை பேசவில்லை? எதை பேச விரும்புகிறாள்? அவளுக்கே புரியவில்லை.

அந்த குழப்பத்துடன் கோயம்புத்தூர் நோக்கி ஒரு பயணம்.

கோயம்புத்தூரில் விமான நிலையத்தில் இறங்கியதும் ஆரணி ரொம்பவும் தவித்து போனாள். அகன் அவளை காண வந்திருப்பானே என தவிப்பும் சங்கடமுமாக இருந்தது அவளுக்கு. எப்படிபட்ட குற்றசாட்டை அவன் மீது சுமத்தி இருக்கிறாள் அவள். அதற்கு பின்னும் அவன் அவளிடம் தன்னை நிரூபிக்கதான் முயன்றிருக்கிறானே தவிர இவளை எதற்காகவும் வெறுக்கவில்லை, மாறாக சிறு விஷயத்தில் கூட இவள் மனம் வருந்திவிட கூடாதே என்றுதான் அக்கறைபட்டிருக்கிறான்.

முன்பு காதல் கொண்ட பொழுதின் அத்தனை மன சுகந்தங்களும் மீண்டுமாய் மனதின் தளத்தில் உயிர்த்தெழுந்தன.

ஆனால்....

அருணை ஜெயிக்கவிட அவளுக்கு விருப்பம் இல்லை. அவன் செய்த தப்பிற்கு இவள் ஏன் இழப்புகளை சந்திக்க வேண்டும்?

அந்த வைராக்கியம் இருக்கிறதுதான்.....இருந்தாலும்.....இன்று நன்றாய் தோன்றும் இந்த திருமணம் என்றும் அப்படியே இருக்குமா? ஏதோ ஒரு சூழலில் அகன் இவளை ஏதாவது சொல்லிவிட்டால்...? இவள் தாங்குவாளா?   இவள் தாங்குவது இரண்டாவது பட்ச்சம்....ஏதோ ஒரு சந்தர்பத்தில் அவனுக்கே இது ஒரு அருவருப்பான....வெறுப்பான உறவாக தோன்றிவிட்டால்....இருவருக்குமே இந்த திருமணம் நரகமாகிவிடாதா?

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.