(Reading time: 16 - 31 minutes)

 

னாதையாய் உணர்ந்தாள் அவள். அத்தனையும் அணைந்து கும்மி இருட்டு பரவியது அவள் காதல் வனத்தில். பிடி இழந்தாற் போல் ஓர் பேருணர்வு. கொல்லாமல் கொன்றது வேரோடு தின்றது ஒரு வெறுப்பு.

கொந்தளித்து எழுந்தது சுயம்.

எது எப்படி போனாலும் இனி இவனுடன் ஒரு நொடி வாழக்கூடாது....உயிர்வலி கொண்ட உள்ளம் கொக்கரிக்க, கடலளவு காதல் கொண்ட அடி மனமோ அடிபட்ட ஊமையாய் அழுதது.

முழு வலியோடு அவள் அத்தையை பார்க்க அவரோ வக்கிர சிரிப்போடு வாசல் வழியே வெளியேறினார்.

மீண்டுமாக அபிஷேக்கைப் பார்த்தாள் அவனும் இவளோடு திரும்பி தன் தாயைப் பார்த்துவிட்டு மீண்டுமாக இவள் முகத்தைப் பார்த்தான்.

‘போடா... நீ இல்லாம வாழவே முடியாதுன்னு எனக்கு தோணுது...உனக்கு நான் ஒன்னுமே இல்லையா....’அடி மனம் அழ, ‘இன்னும் இன்னும் இவனைப் பார்த்து பலவீனப் பட கூடாது’ என காயம்பட்ட உள்ளம் உழல அவன் பார்வையை தவிர்த்து, போய் தன் உடைகளை அள்ளி பேக்கில் போடத் தொடங்கினாள்.

எங்கு போக? எப்படி போக?  என்ன செய்ய ? என்ற அறிவின் ஒவ்வொரு கேள்விக்கும் மனம் அழுகையை மட்டும் விடையாக கண்டது. ஏதாவது என் மனசு சமாதான படுறமாதிரி சொல்லேண்டா என கதறியது உள்ளிருந்த காதல்.

“ஹேய்....என்னாச்சு தயனி...என்ன பண்ற?” இவளின் செயல் பார்த்தவன் இவளைப் பார்த்து பதறி கேட்க...அவளுக்குள் இருந்த காதல் மௌனமாய் அவனது கெஞ்சும் மொழிகளை எதிர்பார்க்க, குமுறியது காயம் பட்ட மனம்.

“நீங்க எனக்கு வேண்டாம் ....யார் என்னை என்ன பண்ணினாலும் உங்களுக்கு ஒன்னுமில்ல...”

“தயனிமா...” காயம்பட்ட முக பாவம் அவனுக்கு வந்திருந்தது.

“உங்கள பொறுத்த வரைக்கும் நான் அடிமை...யார் வேணும்னாலும் என்னை என்ன வேணும்னாலும் பண்ணலாம்..”

இதயம் வலிக்க வலிக்க பேசியபடி சுட சுட வடிந்த கண்ணீரை துடைத்தபடி கையில் கிடைத்ததை இவள் பேக்குக்குள் திணிக்க

“அப்படில்லாம் இல்லடா..நீ எனக்கு ரொம்பவும் முக்கியம்....” இவள் காதல் மனம் எதிர் பார்த்தபடி அவன் கெஞ்ச, அம்மனம் அவனுக்காக தன் காயம்பட்ட மனதிடம் வக்காலத்து வாங்கியது. ‘ஹீ லவ்ஸ் மீ’

“ஆமா ரொம்ப முக்கியம் தான்...இந்த வீட்டில இருக்கிற டேபிள், சேர், தட்டு, டம்ளர், கட்டில், கடப்பாரை இதெல்லாம் விட நான் உங்களுக்கு முக்கியம் தான் எனக்கும் அது தெரியுமே!..”

ஆனா இந்த வீட்டு வேலைக்காரிக்கு இருக்கிற உரிமை கூட எனக்கு கிடையாது...அவங்களை யாராவது அடிச்சாங்கன்னா பார்த்துட்டு சும்மா இருப்பீங்களா? என்னை மட்டும்......ஆக்ரோஷமாக கேட்டவள்

கேவத் தொடங்கினாள் “எ..என்னை மட்டும் யார் அடிச்சாலும்.... கொன்னாலும்..” இதற்குள் அவளை அணைத்திருந்தான் அவன்.

“தயனிமா...உனக்கு இப்போ என்ன செய்யனும்னு சொல்லு அதை நான் அப்படியே செய்றேன்..ப்ளீஸ் அழாதடா..”

காதல் மனம் கணவனின் அணைப்பில் ஆறுதல் நதியில் நீந்த, காயம்பட்ட மனமோ இன்னும் கூட கொஞ்சமாய் குதிக்க விரும்பினாலும், அது சிறுகவும் காதல் பெருகவும் தொடங்கியது.

தற்காக சரணடையவெல்லாம் அது தாயாராக இல்லை.

தன் போர்முறையை மாற்ற முன் வந்தது. குரல் உயரம் குறைத்தது.

“உங்க அம்மாவ நான் மன்னிக்கனும்னு சொன்னீங்களோ...?” விழி உயர்த்தி அவன் முகம் பார்த்து கேட்டாள். அவன் அணைப்பு இன்னுமாய் இறுகியது.

 “அப்படித்தானேடா ஆண்டவர் சொல்லி இருக்கிறார்?”

அவளுக்கும் இது தெரியும்.மேலும் எந்த சூழ்நிலையிலும் வேத வார்த்தைகளை மறுதலிக்க அவளால் முடியாது.

“அப்படின்னா நான் உங்கம்மாவை மன்னிச்சிடனும், பைபிள்ல சொல்லிருக்க மாதிரி தகுந்த தண்டணையை உங்கம்மாவுக்கு கடவுளே தருவார்னு சொல்றீங்க....”

கேட்கும் போதே தெரியும் இந்த கேள்வி அவனுக்கு குத்தும் என. கேட்டபின்பு இவளுக்கே வலித்தது.

எந்த மகனால் என் அம்மாவுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார் என சொல்ல மனம் வரும்? மற்றவர்களுக்கு எப்படியோ இவள் அனாதையாய் அடிபட்டு கிடக்கும்பொழுது அத்தனை ஆபத்துகளுக்கு மத்தியில் இவளுக்கு இரக்கம் பாராட்டின அபிஷேக்கிற்கு எப்படி தன் சொந்த தாய் சபிக்க படட்டும் என சொல்ல மனம் வரும்?

அவன் முகம் பார்க்க அதில் அடிபட்ட பாவம்.

இப்பொழுது காதல் இவளுள் அரியணை ஏறி அமர்ந்திருந்தது. சாட்டையெடுத்து தன்னை தானே தாக்கியது. நீ தான் மோசம், நன்றி கெட்டவ, அபி உனக்கு செய்த அத்தனையும் மறந்திட்ட...யு ஃபர்காட் ஹிஃஸ் லவ்...மன்னிக்க தானே சொல்றான்...மன்னிகாட்டி உனக்கும் மன்னிப்பு கிடையாதுன்னு தானே கடவுளே சொல்லி இருக்கார்...

மண்டியிட்டாள் மனதின் முன். என்றைக்கோ செய்த ஒரு தப்பை மன்னித்துவிடலாம் போலும்.ஆனால் தினமும் இப்படி கண்முன் நின்று கொண்டு, ஆறிய அத்தனை காய கல்லறைகளையும் துடிக்க துடிக்க திறந்து உள்ளுறங்கும் குரோதத்தையும் கோபத்தையும் உயிர்த் தெழச்செய்தால்...எப்படி மன்னிக்க? மன்னித்துவிட்டதாக நம்பி இருக்கும் விஷயம் கூட வீரியமாக எழுந்து வருகிறதே...

ஆக எப்படி பார்த்தாலும் இவளும், இவள் அத்தையும் ஒரே இடத்தில் வசிப்பது என்பது இயலாத காரியம். அதே நேரம் இவன் தன் தாயை தனியே அனுப்ப ஒப்புவானா? அப்படி அனுப்புகிறவன் ஏன் இப்போது உடன் அழைத்து வைந்திருக்கிறான்?

 அவனுக்கு விருப்பம் இல்லாததை செய்யவைப்பதில் எனக்கும் உடன்பாடு இல்லை என்றது காதல். அவனாகவே அவன் அம்மாவிற்கு வேறு வழி பார்த்திருக்கனும், எனக்கு இது எவ்வளவு வலிக்கும் என அவனுக்கு தெரியாதோ... என்றது காயம். எப்படியோ இதில் இரு மனமும் ஒத்துப்போனது.

வளுக்கும் இவள் அத்தைக்கும் இடையில் நடக்கும் இந்த யுத்தத்தில் அடி படுவது அபிஷேக்கிற்கும் தான். ஆக இவள் தான் வீட்டைவிட்டு வெளியேறி ஆக வேண்டும்...முதலில் கோபத்தில், அடிபட்ட வலியில் வெளியேற விரும்பிய மனம் இப்பொழுது காதல் காரணமாய் வெளி நடப்பை நாடியது.

“நான் சுகந்தினிய பார்க்கனும்...”

“போலாம்டா....நம்மை கல்யாணத்துக்கு வரச்சொல்லி ரொம்ப கேட்டுகிட்டாங்களாம்...உனக்கு தான் முடியுமோன்னு யோசிச்சேன்..” அணைப்பை நெகிழ்த்தாமல் அவள் நெத்தியிலிருந்த காய கட்டை ஒரு விரலால் மெல்ல வருடியவன், அதன் அருகில் அழுத்தாமல் இதழ் பதித்தான்.

“மேரேஜ் ஈவ்னிங் தான். ஒரு ஃபோர் ஓ க்ளாக் கிளம்பலாம்..”

“இல்ல எனக்கு இங்க இருக்கிற ஒரே ஃப்ரெண்ட் அவங்க தான்...அதனால பார்க்கனும்...இப்பவே...”

“ஹேய்...சுகந்தினி இன்னைக்கு ரொம்ப பிசியா இருப்பாங்க...”என்றவன்

குரல் இறக்கினான் “நான் கூட உன் ஃப்ரெண்டுதான் தயனிமா...உனக்கு என்ன கேட்கனுமோ அதை என்ட்ட கூட கேட்கலாம்” ஒதுக்கபட்ட வலியும், அடிபட்ட காதலும் அதை மீறிய தாய்மையும் இருந்தது அக் குரலில்.

இவள் மனம் மாறி கூட இருக்கும் மற்ற நேரமாயிருந்தால். ஆனால் இப்பொழுதோ அவள் அத்தை மீண்டுமாய் அறைக்குள் அனுமதி இன்றி நுழைந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.