(Reading time: 16 - 31 minutes)

 

னக்கு வேற ஹாஸ்டல் பார்க்கனும்...உங்கட்ட சொன்னா செய்து தருவீங்களா...அதான்..இன்னைக்கே போறேன்..”

சட்டென அவன் அணைப்பு இறுகியது இவள் எலும்பில் வலிக்கும் படியாய்.

“என்னை விட்டுட்டு எங்கயும் நீ போக போறது இல்ல...போகவும் விடமாட்டேன்...” அவன் இதயம் துடிகும் விதம், அவன் உள்ளாடும் உயிரின் அலைப்புறல் எல்லாம் தயனிக்கு புரியத்தான் செய்கிறது....இருந்தாலும் இந்த அத்தையுடன் இவள்...ம்ஹூம்...நோ வே..

அவனை தள்ளி விலக்க முற்பட்டாள். அசைய கூட முடியவில்லை.

“உங்க அம்மாவும் நானும் ஒரே வீட்டில இருக்க முடியாது  அபி...புரிஞ்சுக்கோங்க....”

அவசரமாய் அவளைத் விலக்கித் தள்ளி னிறுத்தினான்.

இவள் முகம் பார்த்தான் கூர்மையாய்.

“என்ன சொல்ற நீ? என் அம்மாவா?  இங்கேயா? எங்க?” கிட்டதட்ட அவன் கர்ஜித்தான்.

தயனிக்கு விபரீதம் புரியத் தொடங்கியது. அறை வாசலில் நின்றிருந்த அத்தையை தன்னை மீறிப் பார்த்தாள்.

“அவங்க செத்து மூனு நாள் ஆகுது...”

‘ஈ’ என்று இளித்தது அது.

“எங்கப்பா செத்து பல மாசமாயிருக்குது... யார்ட்டயும் சொல்லாம அந்த உடம்பையும் உள்ளவச்சு பூட்டி வச்சிருந்திருக்காங்க எங்க அம்மா...இப்ப எங்கம்மா இறந்த பிறகுதான் விஷயம் வெளியே வந்து...அதான்...நான் திரும்பி வர 2 நாள்..” மரத்த குரலில் சொன்னவன்

“இல்லனா...உன்ன ஆஃஸ்பிட்டல்ல விட்டுட்டு...நான் வராம இருப்பனாடா...” கெஞ்சினான்.

பழக்கம் காரணமாக இங்கேயும் கறுப்பு நிற உடையில் முழு முக்காடிட்டு நின்றிருந்த அத்தை இப்பொழுது இவள் பார்வைப் பட்டதும்  தக தகவென ஜொலிக்கும் தங்க நிற உடைக்கு மாறியது.

“அம்மா செய்த தப்புக்கு லீகலி என்ன செய்யனுமோ அதை செய்யனும்னு தான் நானே நினைச்சேன்...ஆனாலும் அவங்க நரகத்துக்கு போகட்டும்னு தோண மாட்டேங்குதே...ஆண்டவர் இப்ப தண்டணை குடுப்பார்னு நீ சொன்னதும் அந்த ஞாபகத்திலதான்...”புலம்பினான்.

“திருந்தாதவங்களையும் மன்னிச்சுடனும் தான், அதுக்கு அர்த்தம் அவங்க கூட திரும்ப சேரனும்ங்கிறது இல்ல...கடவுள் எல்லாரையும் மன்னிக்க போய்தான் நம்ம பாவத்துக்காக அவர் தண்டணை அனுபவிக்கவே வந்தார்...இருந்தாலும் திருந்தாதவங்களை ஆண்டவர் இல்லாத நரகத்துக்கு தானே அனுப்புவேன்னு சொல்லி இருக்கிறார்...தன் வீடான பரலோகம் கூட்டிட்டு போறது இல்லையே...உன் மன சமாதானத்துக்காகதான் மன்னிக்க சொன்னேனே தவிர...நிச்சயமா நான் வேற எதுவும் மீன் பண்ணலை...” தன்னிலை விளக்கினான்.

 தங்க நிற உடைக்கு மாறிய அது, கொஞ்சம் கொஞ்சமாக வயது குறைந்து கிட்டதட்ட ஒரு ஆறேழு வயது சிறுமியாகி தங்க நிற ரெக்கைகளுடன் இவளை நோக்கிப் பறக்க ...

“அபி!!!!” என்ற அலறலுடன் இவள் அவனுக்குள் தஞ்சம் புகுந்தாள். இவளின் பார்வையின் திக்கில் அவனும் பார்க்கவென அவளை விட்டு சற்று விலக...இருவருக்கும் இடையில் இருந்த இடைவெளியில்  அது நுழைந்து இவள் வயிற்றில் மறைந்தது.

அப்படியானால்???

ஹிபன் சுகந்தினி திருமணம் இனிதாய் முடிந்து இளையவர்களுக்கு இன்பம் தரும் தனிமை என்று சொல்லபடும் துணை மாத்திரம் அருகிருக்கும் அனுமதி கிடைத்தது.

கணவன் மனைவியாய் மஹிபனின் அறைக்குள் இருவரும் நுழையவும், கதவை சாத்தியவன் அதை தாள் கூட போடாமல் தன்னவளை தன்னோடு அணைத்துக் கொண்டான் இதமாய்..

பெண்மைக்குரிய தடுமாற்றம் தவிப்பு தயக்கம் அவளை தங்கள் தாயகமாக்கி தங்கி இருந்தாலும் துணைவனின் தொடுகையின் பொருள் புரிய அணைப்பினை பகிர்ந்தாள் அவளும்.

மௌன மாருதம்.

இதயம் முழுவதும் சுக விடுதலை.

பரஃஸ்பரம் இருவரும் மௌனமாய் கொண்டாடியது தன் துணையின் அருகாமையத்தான். காமமற்ற காதல் கல்யாண இரவிலும் சாத்தியம்.

சென்றது சில பொழுது.

“ரொம்பவும் நிம்மதியா இருக்குது சுகி...”

“ம்..”

மௌனமும் மனோ ரம்யமாய் இருக்க அதை கலைக்க விரும்பாமல் வந்தது அந்த ஒற்றை எழுத்தொலி மனைவியிடமிருந்து.

“விடுதலை கிடச்சமாதிரி இருக்குது....”

“எப்பவும் உன் கூட இருக்கலாம்...எதை வேணும்னாலும் பேசலாம்...என்ன வேணும்னாலும் செய்யலாம்...” அவன் அணைப்பின் இறுக்கம் கூடி, வதுவை முறை காண களம் தேடி, கணவன் காதல் கரம் நீட்டுவதை புரிவித்தது கன்னி அவளுக்கு.

வெட்கம் சம்மதம்.

தாளிட்டு தன்னவளை அள்ளினான் தலைவன்.

சுருக்கென்றது அவளுக்கு. எங்கென்று சொல்லாமல் எங்கோ வலி.

“ஷ்... ஆ” அன்னிச்சையாய் வந்தன வலியொலி.

“ஹேய் ..என்னாச்சு சுகா...” பதறிய படி அவளை படுக்கையில் விட்டான் படு பத்திரமாய்.

வலிக்கும் படி எதுவும் செய்துவிட்டேனோ? தவித்தான். பெண்மையின் மென் ஸ்பரிசம் அவனுக்கும் புதிதல்லவா?

“ஒன்னுமில்லபா...எதோ வலிச்ச மாதிரி... ஷ்... ஆ” மீண்டுமாய் முனங்கினாள். இம்முறை வலியின் ஆழம் அதிகம். அதன் பிறப்பிடமும் பிடிபட்டது. வலபுற வயிறு.

அடுத்தடுத்து அதன் தாக்கம் கூட, வலியை வெளி காட்டகூடாது என நினைத்த அவளால் அதை செயல் படுத்த முடியவில்லை.

தன் அண்ணனை அழைத்தான் மஹிபன். சில நிமிட செலவில் மருத்துவமனையில் இருந்தாள் திருமதி மஹிபன்.

சி.டி ஸ்கேன், எம் ஆர் ஐ, என ஃஸ்கேன் களின் வரிசைகள் தொடர அனைத்து பரிசோதனைகளும் வலியின் காரணத்தை கண்டு பிடிக்க போதவில்லை. கொடுத்த எந்த வலி நிவாரணிக்கும் அவ்வலி கட்டுபடவும் இல்லை.

இரண்டு மணி நேரம் துடித்து துவண்டுவிட்டாள் சுகந்தினி.

அதன்பின் மெல்ல இறங்க தொடங்கிய வலி, மூன்றாம் மணி நேரம் முற்றிலுமாக முடிந்திருந்தது. அப்பொழுதே வீடு திரும்பியும் விட்டனர் அதன்பின் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால்.

இரவு மணி ஒன்றை தொட்டுக் கொண்டிருந்தது. பச்சை கரை வத்த அந்த க்ரீம் நிற பட்டு புடவை சற்றே கசங்கி இருக்க படுக்கையில் சாய்ந்தவள் தன் துணைவனைப் பார்த்தாள். பாசமாக பரிவாக இவளைப் பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.

“இவ்ளவு அவசரபட்டு கல்யாணம் வச்சிருந்திருக்க வேண்டாம்...ஏற்கனவே கொஞ்ச நாளா ரொம்ப ஸ்ட்ரெஸ்...நேத்தும் சரியா ரெஃஸ்ட் இருந்திருக்காது...இன்னைக்கும் ரொம்ப ஃஸ்ட்ரெயின்... அதான்...சாரிடா...” அவள் அருகில் அமர்ந்து அவன் பாவ அறிக்கை சமர்ப்பிக்க அவளோ

“கல்யாணத்தில் காமிச்ச அவசரத்தை வேற எதிலும் காண்பிக்ற மாதிரி ஐடியா இல்லையோ” என்றாள் கண்சிமிட்டி.

புரிந்த நொடி” ஏய்...” என குறும்பாய் தொடங்கியவன்”...இல்லடா உனக்கு உடம்பு முடியலை...இன்னைக்கு ரெஃஸ்ட் எடு...” என்றான் பரிவுபட.

“இல்ல.. மஹி...நவ்...அ’ம் பெர்ஃபெக்ட்லி ஆல் ரைட்...” எனக்காக வருந்தாதே என்ற தொனியில்தான் அவள் சொன்னது. ஆனாலும் சொல்லி முடிக்கும்போது அதன் அடுத்த பொருள், உள் ஏவல் புரிய அவளை வெட்கம் தன் வசமாக்கியது. தலையணையில் முகம் புதைத்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.