(Reading time: 11 - 22 minutes)

கோபாலும், ஸ்வேதாவும் வீட்டிற்குள் நுழைவதைப் பார்த்த பத்து, “என்னம்மா சாயங்காலம் நாங்க வந்து உன்னைக் கூப்பிட்டுக்கறதாத்தானே சொன்னோம். நீயே   இத்தனை சீக்கிரம் வந்துட்ட.”, என்று கேட்டார்.

“இல்லைப்பா முக்கியமான விஷயம் பேசணும். அம்மா எங்க ஆத்துல இல்லையா? இவர் கோபால். ஹேமாவோட அண்ணா. உள்ள வாங்கோண்ணா”, என்று தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த கோபாலை அறிமுகப்படுத்தியபடியே உட்கார்ந்தாள் ஸ்வேதா.

“அம்மா வெளில ஏதோ வேலையாப் போனா. வர்ற நேரம்தான். வாப்பா உக்காரு. இவளைக் கொண்டு விடன்னு வந்தியா என்ன. ஒரு ஆட்டோ ஏத்தி விட்டிருந்தா அவளே வந்திருப்பாளே.”

“இல்லை சார். நான் உங்கக்கிட்ட முக்கியமா ஒரு விஷயம் பேசணும். அதுதான் ஸ்வேதாவை விட்டுட்டு அப்படியே பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன்.”

“என்னப்பா ஏதானும் ப்ரோப்லம்மா. ரெண்டு பேரும் பேசணும்ன்னு சொல்றேள்.”

“ஹ்ம்ம் ஆமாம் சார். நான் ஹரி, கௌரியோட friend. Friend அப்படின்னு சொல்றதை விட அவாளுக்கு ஒரு மூத்த சகோதரன்னு சொல்லலாம். அவாப் பொறந்ததுலேர்ந்து தெரியும். சோ இப்போ அவாத்து சார்பா பேசத்தான் வந்திருக்கேன். Infact நான் வந்தது அங்க யாருக்கும் தெரியாது.”

“நீ சொல்றது எனக்குப் புரியலை. அவா சார்பா எதுக்கு நீ பேசணும். எதுவா இருந்தாலும் அவாளே சொல்லலாமே. இத்தனை நாள் அப்படித்தானே நடந்தது. அவா பேச முடியாதபடி என்ன பிரச்சனை.”

“இல்லை சார். இப்போவும் அவா விஷயமா பேசப்போறேனே தவிர, அவா சொல்லி இல்லை.”, என்று கூறிவிட்டு ராமன் சிட்ஃபன்டில் பணத்தைப் போட்டு ஏமாந்த கதையைக் கூறினான்.

“சார், இப்போக்கூட அவா பணத்துக்காகத்தான் எல்லா இடத்திலும் அலைஞ்சுண்டு இருக்கா.   நானும் எனக்குத் தெரிஞ்ச இடத்துல கேட்டுப் பார்க்கப் போறேன். சோ நீங்க கல்யாணம் சரியா நடத்த மாட்டாளோ என்று கவலைப் படாதீங்கோ.”, என்னதான் கௌரி வாயிலாகவும், ஹரி வாயிலாகவும் பத்மநாபன் குடும்பத்தைப் பற்றி நல்ல விதமாக கேட்டிருந்தாலும் அவர் எங்கே தவறாக நினைக்கப் போகிறாரோ என்று சமாதானப் படுத்த ஆரம்பித்தான்.

“ச்சே ச்சே என்னப்பா இது இப்படி சொல்ற. நான் கவலைப் படலை. அதே மாதிரி அவா எங்ககிட்டக்க சொல்லாததைப் பத்தியும் என்னால புரிஞ்சுக்க முடியறது.   பண விஷயமா இருக்கறதால அவாளுக்கும் எங்க கிட்ட பேச கஷ்டமாதான் இருக்கும். சரி இரு, நான் கௌஷிக்குக்கு போன் பண்றேன். அவன் என்ன சொல்றான்னு கேக்கலாம்.”

த்து கௌஷிக்கை அழைத்து விஷயத்தை விளக்கினார்.

“கௌரிக்கு பயங்கர வேலைப்பா. நான் அவளோட சாட் பண்ணியும் ரொம்ப நாள் ஆயிடுத்து. அதனாலதான் எனக்கும் ஒண்ணும் தெரியலை. ஆனால் நீங்க சொல்றதைப் பார்த்தா அவளுக்கும் ஒண்ணும் தெரியாது போல இருக்கே. சரி நீங்க சொல்லுங்கோ. இப்போ என்ன பண்ணலாம்.”

“கௌஷிக் நீ என்ன நினைக்கறேன்னு முதல்ல சொல்லு. அதே மாதிரி உன் மனசுல தோணறதை உண்மையா சொல்லு. அப்பாக்கு பிடிக்குமா, அம்மா ஒத்துப்பாளா அப்படின்னு எல்லாம் யோசிக்காம சொல்லு.”

“அப்பா, எனக்கு அவா வெளிலேர்ந்து கடன் வாங்கி இந்தக் கல்யாணத்தை நடத்தறது பிடிக்கலைப்பா. என்னதான் ஹரி வேலைக்குப் போனா எல்லாத்தையும் சமாளிக்கலாம் அப்படின்னு சொன்னாலும், அவர் அந்த ஆத்துக்கு EMI யே கிட்டத்தட்ட பதினைஞ்சாயிரம் கட்டிண்டு இருக்கார். கல்யாணம் முடிஞ்சாச்சுன்னா கௌரியோட பணத்தையும் வாங்கிக்க மாட்டா. மாசா மாசம் வட்டிக்கு கட்டிண்டு குடும்பத்தையும் நடத்தறதுங்கறது மாமாக்கு ரொம்ப கஷ்டம். இப்போதைக்கு நம்மக்கிட்ட பணம் இருக்கு. அதை அவாளுக்குக் கொடுத்தா என்ன.”

“ஹ்ம்ம் நீ சொல்றா மாதிரி பணம் கொடுக்கறது பெரிய விஷயம் இல்லை கௌஷிக். ஆனா நாம கொடுக்கறதை அவா எப்படி எடுத்துப்பான்னு தெரியலையே.”

“அதுவும் சரிதான். கௌரிக்கே   விஷயம் தெரியக் கூடாதுங்கற பட்சத்துல உங்ககிட்ட வாங்கிக்க கஷ்டப்படுவாதான். வேற ஏதானும் யோசிக்கலாம்ப்பா. ஏம்ப்பா பாலு அங்கிள் இப்போ ACPயாதானே இருக்கார். அவர்க்கிட்ட கேஸ் எந்த அளவுக்கு மூவ் ஆகி இருக்குன்னு கேட்டுப் பாருங்கோளேன்.”

“நானுமே இவர் வந்து சொன்ன உடனே அவனைத்தாண்டா நினைச்சேன். இப்போ வேலையா இருப்பான். நான் ராத்திரி அவனுக்குப் போன் பண்ணி என்ன விஷயம்ன்னு கேக்கறேன்.”

“சரிப்பா. அம்மா எங்க?”

“அம்மா வெளில போய் இருக்கா. இப்போ வந்துடுவா.”

“ஓ சரி. அம்மாகிட்டயும் என்னப் பண்ணலாம்ன்னு கேளுங்கோ. நாளைக்குக் கார்த்தால நான் திரும்பப் போன் பண்றேன். அங்கிள்கிட்டயும் அதுக்குள்ள பேசிடுங்கோ. நாளைக்கு என்ன பண்றதுன்னு முடிவு பண்ணலாம். சரிப்பா, எனக்கு இன்னும் பத்து நிமிஷத்துல மீட்டிங் இருக்கு. நான் கட் பண்றேன். கார்த்தால பேசலாம்.”

“நாளைக்கு கார்த்தால வேண்டாம் கௌஷிக். சாயங்காலமாப் பண்ணு. அதுக்குள்ள நான் நேரவேப் போய் பாலுவைப் பார்த்து பேசிட்டு வந்துடறேன். அப்பறம் முடிவு செய்யலாம். அம்மாகிட்டயும் பேசி வைக்கிறேன். அவளும் நீ சொன்னதையேதான் சொல்லப் போறா. முடிஞ்சா இன்னைக்கே அவாத்துக்குப் பணத்தைத் தூக்கிண்டு போய்க் கொடுத்தாலும் கொடுத்துடுவா.   சரிடா நீ வேலையைப் பாரு. நாளைக்குப் பேசலாம்.”.

கௌஷிக்குடன் தொலைபேசி அழைப்பை முடிக்கும் நேரம் சரியாக லக்ஷ்மி உள்ளே நுழைந்தார்.

“யாருன்னா கௌஷிக்கா. என்ன இப்போ போன் பண்ணி இருக்கான்?”, என்று கேட்டவர் உள்ளே புதியதாக உட்கார்ந்திருந்த கோபாலை அப்பொழுதுதான் பார்த்தார். அவனிடம் ஒரு சிரிப்பை உதிர்த்தபடியே பத்துவிடம் யார் என்று கண்களாலேயே கேட்டார்.

பத்து கோபாலை லக்ஷ்மிக்கு அறிமுகப்படுத்தி அவன் வந்த நோக்கத்தைக் கூறினார். பின்னர் தான் கௌஷிக்கிடம் பேசியதையும் அவன் அதற்க்குக் கூறிய பதிலையும் சொன்னார்.

நடுவில் எந்தக் கேள்வியும் கேட்க்காமல் அமைதியாக அனைத்தையும் கேட்ட லக்ஷ்மி, “ஹ்ம்ம் கஷ்டம்தான். ஆனால் நாம கௌரி ஆத்துக்குப் பணம் கொடுக்க வேண்டாம்.”, என்று கூறி அனைவர் தலையிலும் பெரிய கல்லாகத் தூக்கிப் போட்டார்.

தொடரும்

Episode # 13

Episode # 15

{kunena_discuss:780}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.